இது தான் காலேஜா – நிஜங்கள்

This entry is part 19 of 33 in the series 11 நவம்பர் 2012

 

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அடிக்கடி பிரச்சனை வருவதுண்டு… வெளித் தோற்றத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்தப் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஊழலும்..அராஜகமும்…வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் நடக்காது.
இந்தக் காலேஜில் மருத்துவராக வெளி நாட்டிலிருந்தும்  மாணவர்கள் சேர்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். அதிலும் குறிப்பாக…இந்தோனேஷியா, உக்ரைன், உகாண்டா,மத்தியப்  பிரதேசம் , உத்திரப் பிரதேசம்  ,ஆந்திரா…கேரளா, என்று பல இடங்களிலிருந்தும் பல மொழிகள் பேசும் மாணவர்களைக் காணலாம்.இது வரவேற்கப் படவேண்டிய விஷயம் தான்.
இங்கு வருகைப் பதிவிலிருந்து அனைத்துக்கும் விலை உண்டு.
ஒவ்வொரு செமஸ்டரில் ஒரே ஒரு தேர்வு தோல்வியானாலும் அந்த செமஸ்டருக்கு வேண்டிய மொத்தத் தொகையை  செலுத்தி விட்டால் போதும்…ஃபெயிலான  மாணவர் பாசாகி விடுவார். எல்லாம் மேசைக்குக் கீழ்
கொடுப்பதைப் பொறுத்து இருக்கிறது.
இப்படி உருவாகும்  எஞ்சினீயரும் , டாக்டரும் தான் வருங்காலத்தை ஆள  வருகிறார்கள்.
இந்த பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பனி செய்ய வேண்டுமென்றால் கூட அதற்கும் ஒரு விலை உண்டு. தகுதி பற்றி அக்கறை இல்லை. பணம் பணம்…பணம்….! மட்டுமே சின்ன வேலையிலிருந்து பெரிய வேலை வரைக்கும் பேசும்.
அதுமட்டுமா…..இருப்பதில் கொஞ்சம் பணக்காரப்  பையனாகப் பார்த்து அவன் விடைத் தாளில் கைவைத்து அவனிடம் பணம் கறந்து….அவர்கள் தங்களின் வேலைக்காகக் கொடுத்த பணத்தை நாசூக்காக பறிக்கும் வழி.
இது தனியாக நடப்பது.
எல்லாவற்றையும் கண்டும், காணாமல் இருந்து இருந்து…இது வரையில் “இங்கு இப்படி தான் “என்று அவர்களே இதையெல்லாம் வழக்கமாக்கி கொண்டு தலை நிமிர்ந்து இருக்கும்போது….அங்கு சேர்பவர்களும்…இது நமக்கு வசதியா போச்சு என்ற எண்ணத்தில் இருந்து விடுகிறார்கள்.
இதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே அறியாமல் வந்து சேர்த்துவிட்டு…..”இதென்ன இப்படி இருக்கு..”என்று அவதிப் படுபவர்களும் உண்டு.
நினைத்தால் கோபம் வரும் சில விஷயங்கள்..
– புத்தகனகளை வாங்கினாலும்…வெளியில் ஒரு நகல் எடுக்கும் கடையில்  வரிசையில் இரவு பகலாக நின்று அவர்கள் நகல் எடுத்துத் தரும் (புத்தகம் போல செய்து கொடுப்பார்கள்) புத்தகத்தைத் தான் வாங்க வேண்டும் என்ற கட்டளை. அனைத்துப் பிரிவுக்கும் ஒரே ஜெராக்ஸ் கடை தான்.. இதுக்குள்ளே என்ன பெரிய விஷயம் என்று யோசித்தால்..அந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் அந்த காலேஜில் வேலை பார்க்கும் லெக்ட்சரர் .
– என்ன தான் அயல் மாநிலத்திலிருந்து படிக்க வந்தாலும்…அவர்களால் தான் தங்களின் காலேஜுக்கு வரவு அதிகம் என்று புரிந்தாலும்…அதை ஏற்றுக் கொள்ளாமல், அந்த மாணவர்களை மிகவும் அவமரியாதை செய்வது. ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களை இரவோடு இரவாகத் துரத்துவார்கள். எங்கே போவார்கள்…? என்று யோசைனே இல்லாமல்….துரத்துவார்கள்..அதுவும் எப்படி.கையில் ஒரு உருட்டுக் கட்டையை வைத்துக் கொண்டு….” காலி பண்ணி போ…என்று சுவற்றில், கதவில் ஓங்கி அடித்து (ஏதோ ஆடு மாடுகளை ஓட்டுவது போல) . அன்று இரவே அத்தனை மாணவர்களுக்கும்  அடைக்கலம் தருவது அந்த சிறிய பஸ் ஸ்டாண்டும், ரயிவே ஸ்டேஷனும்  தான்.
அங்கு பணி  புரியும் அநேகம் லெக்சரருக்கு  ஏதாவது ஒரு பிசினஸ் இருக்கும். அவர்கள் தினம் ஒரு கையெழுத்தை மட்டும் போட்டு விட்டு அவர்கள் பிசினசைப் பார்க்கச் செல்லலாம்.வெறும்  கையெழுத்து வருகைப் பதிவாகி அவர்களுக்குச் சம்பளம் வாங்கித் தந்து விடும்.
இங்கிருக்கும் பிரசித்தி பெற்ற சபாநாயகர் கோவிலில் அர்ச்சகராக இருப்பவர்கள் கூட அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்  பல் வேறு பிரிவுகளில் வேலை செய்பவர்கள் தான். அங்கு சென்று கையெழுத்துப் போட்டு வர வேண்டும். இல்லாவிட்டால் கோவிலில் கையொப்பம் (…??!!! – இதற்குள் நடக்கும் ஊழல் அது தனி…) செய்து விட்டு காலேஜுக்கு சென்று வரவேண்டும்.
இரண்டு நாள் முன்பு செமஸ்டர் பரீட்சை நடந்து கொண்டிருக்கும்போதே…..பரீட்சை ஹாலில் நிறைய பேர்கள் உருட்டுக் கட்டையோடு வந்து யாரும் பரீட்சை எழுதக் கூடாது…என்று மிரட்டி விட்டு…நீங்க எழுதினா யாரு திருத்துவாங்க….நாங்க திருத்தமாட்டோம்.போங்கடா…..எந்திரிச்சு…..நீங்க பரிச்சை எழுதினது போதும்…என்று. மாணவர்களை மிரட்டி இருக்கிறார்கள்.
வேறு யாராக இருக்கும்..???? பாடம புகட்டுபவர்கள்…தான்…!
பிரச்சனை இது தான்… அங்கு வேலை செய்பவர்களுக்கு ஒரு  முழு மாத போனஸ் தர வேண்டுமாம். அதில்  பாதி சம்பளம் வரை தான் தர முடியும் என்று மானேஜ்மென்ட் சொன்னதால்..செய்த அதிரடி நடவடிக்கை தான் மேலே நடந்தது.
பரிச்சை தடைபடவே ….. மேற்கொண்டு காலேஜ் காலவரை இன்றி முறையற்ற அளவில் ஒரு மாத காலம் விடுமுறை அறிவிப்பு செய்து விட்டு அத்தனை மாணவர்களையும் வெளியேற்றியது நிர்வாகம்.
மாதக் கடைசியில் எங்கிருந்தெல்லாமோ வந்து சேர்ந்த மாணவர்கள்….கையில் காசில்லாமல் ஹாஸ்டலில் இருந்து விரட்டப் பட்டு தெருவில் அலையும் காட்சி….மனதை வேதனைப் படுத்தியது
ஆசிரியர்களே இப்படி நடந்து கொண்டால்..மாணவர்கள்  கொதித்தெழலாம்  அதற்கும் முன்பாக மாணவர்களை வெளியேற்றினால் பிரச்சனையை திசை திரும்பும் என்ற சூழ்ச்சியில்…இரு கோடுகள் தத்துவத்தை சாமர்த்தியமாகப் புகுத்தி இருக்கிறது நிர்வாகம்.
சொல்வதற்கு இன்னும் நிறைய இருந்தாலும் ஒரு சோறு பதமாக, இதுவும் சமுதாயத்தை ஓர் ஓரமாக அரிக்கும் வைரஸ் தான்….மிகவும் மோசமாகப் பரவவிட்ட .புற்று தான்.
என்றாலுமொரு சிறு தீக்குச்சி கூட ஒரு காட்டை சாம்பலாக்கி விடும்.
இத்தனை ஆண்டுகள் புகைந்து புகைந்து  புகைந்து….கொழுந்து விட்டு ஏறிய ஆரம்பிக்கும்போது தான் நீர் விட்டு அணைக்க முடியும்.

இது போன்ற ஒரு பல்கலைக்கழகத்தை வேறு எங்கும் கண்டதில்லை

——————————————————————————————

Series Navigationவீதிமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -2
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

16 Comments

  1. Avatar
    Bala says:

    கல்லூரிக்கும் பல்கலைக் கழகத்துக்கும் வேறுபாடு இல்லையா?
    ஒரே நிறுவனத்தைக் குறிக்க இரண்டு சொற்களையும் பயன்படுத்துவது தவறு.

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    மதிப்பிற்குரிய பாலா அவர்களுக்கு.

    மன்னிக்கவும். இங்கு மின்வெட்டு அதிகம். எப்போ பவர் போகுமோ என்ற பயத்தில் எழுதியது.. தவறுகளைத் திருத்தும் நேரத்தில் கூட மின்வெட்டு ஆகும். அந்த அவசரத்தில் இந்தத் தவறும் இருக்கிறது. பல்கலைக் கழகம் தான். விரிவுரையாளர் தான். ஒரு நாளைக்கு இங்கு 16 மணி நேர மின்வெட்டு அதையும் விட்டு ஒவ்வொரு அரை மணிக்கும் மின்வெட்டு. அதற்குள் எழுதி அனுப்ப நினைத்தேன்.
    படித்ததற்கு நன்றி .

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  3. Avatar
    Paramasivam says:

    This University was started by a very well known family with good motive and its past students were/are experts in their fields.Really sad to know the present status of this institution.The descendants of this illustrious family should introspect in this matter.Already,some politicians have appealed to TN Govt to take over the management.

  4. Avatar
    Sundar says:

    I studied civil engineering in the college. Wasted 4 years of my life there. No teacher worth the salt and no facilities. Only money speaks. If you are ready to pay with one hand you can get degree in other hand. Thank god I escaped from there.

  5. Avatar
    Dr.G.Johnson says:

    ஜெயந்தி ஷங்கரின் அறைகூவல் கண்டு என்னைப்போல் பலரும் வியப்படைவர் என்பது திண்ணம். ஒரு காலத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கா இந்த அவல நிலை என்பது வியப்பையே ஊட்டுகின்றது! அதில் படித்து பட்டம் பெற்று வாழ்க்கையில் வெற்றிகண்ட பலருக்கும் இது பெருத்த தலைகுனிவு!
    இந்த கூற்றின் படி பார்த்தால் அனைத்து தனியார் பல்கலைக் கழகங்களும் இது மாதிரிதானோ என்ற ஐயமும் எழவே செய்கிறது! இதன்படி பார்த்தால் நமது கல்வியின் தரமும் அதில் பெறும் பட்டங்களும் கேலிக் கூத்தாகி வருகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.முன்பே ஊழலுக்கு பெயர் பெற்றுள்ள நாட்டில் ஊழலில் உழன்று பட்டம் பெறுபவர்களால் ஊழலை எவ்வாறு ஒழிக்க இயலும்?
    இதற்கு விமோசனம் இல்லையா? இருந்தால் யாராவது கூறுவார்கள?…டாக்டர் ஜி.ஜான்சன்.

  6. Avatar
    K M vijayan says:

    annamalai university is just a prototype of tamil society and politics. caste politics rowdism false claims uncultured mass mentality tamilnadu will turnout like this only in 10 years. credit goes to dravidan parties which spoiled tamil society in 40 years beyond repair.

    1. Avatar
      K A V Y A says:

      It is interesting to c how two disparate things can b yoked together, in Vijayan’s.

      Here s a University which was completely privatised. For many many decades. No matter which party came to power, none touched the mighty Chettiars of this University. Their clout and influence run upto Delhi and even beyond.

      How Vijayan links the political party culture to this private university. If at all such a culture has entered this university, then tell me which college and which university, in India, or in TN, esp., that has not been spolit by entry of political party in the disguise of student unions. BJP and Congress and Left in JNU and Delhi University; and in Universities of Kerala. Here, except BJP, other parties.

      Student politics and the teacher union politics are different, which does not affect financial management or general management of the University for which only the management is responsible, here, the Chetttiars family. As hinted out in many newsreports appearing in TOI and the Hindu, the family has almost abandoned the versity, or, interested in keeping it in constant repair.

      If political party culture can spoil a University, then, none can deny that all Universities in Kerala would have collapsed and closed down – SUCH IS THE AGGRESSIVE Left party culutre there in the disguise of SFI.

      விஜயன் பேசுவது, ஆடத்தெரியாதவள் மேடை கோணலாக இருக்கிறது என்றாளாம்!

      Vijayan wants to convey that it is not the management i.e. the Chettiars who shd be held responsible for the fall of this University, but C N Annaathurai, Mu Ka and other DMK ppl.

  7. Avatar
    Ram says:

    When I was studying ( in the fifties) in a college affiliated to the madras University students studying in Annamalai were looked up as untouchables with low standard of qualification when came out because of very small number of students and the subsequent valuation by the University which was considered as sub standard. Only after the self financing colleges sprang up its value(in terms of money ) went up Even in respect of Engineering colleges only a fraction or nil number got into All India services

  8. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தமிழகத்தில் அண்ணாமலைப் “பல்கலைக் கலகம்” சீர்கெட்டுப் போனதற்குக் கண்காணிப்பில்லாத, கட்டுப்பாடு செய்யாத தமிழகக் கல்வித்து துறை அரசாங்கமும், தமிழகத்தின் தரங் கெட்ட கல்வி அதிகாரிகளும்தான் முதல் காரணம்.

    தமிழகத்தில் நீதி நெறித் துறை, காவல் துறை, கல்வித் துறை ஆகியவற்றில் சுயநலப் பணாதிபத்திய வைரஸ்கள் புகுந்து மக்களுக்குப் புற்றுநோய் பரப்பி வருகின்றன.

    இதைக் குறைக்கவோ, தடுக்கவோ தமிழகக் கல்வித்துறை அமைச்சரே சட்டங்கள் இட்டுக் கட்டுப்பாடு செய்ய முடியும்.

    சி. ஜெயபாரதன்

  9. Avatar
    Dr.G.Johnson says:

    Why bring in the Dravidian parties for this mess in our Universities? The credit goes only to the people of Tamil Nadu who prefer to vote for the Dravidian parties.Prior to this they were voting foor the Congress since Independence.What was the situation then? Any better? It was even worse with caste differences and the domination of one caste in all aspects of adinistration and society. Furthermore Rajaji tried to implement the caste oriented education ( KULATH THOZHIL KALVI ) and Bhakthavatchaalam tried to impose compulsory Hindi. It was the Dravidian movement under Anna that got rid of the Congress once and for all from Tamil Nadu politics. Now the impact is such that the people of Tamil Nadu prefer only one of the Dravidian parties as seen in the last 40 years. Such is the mentality of the people of Tamil Nadu.
    So what is the solution? Corruption has become part and parcel of of politicians all over the world. And India and Tamil Nadu are no exception! And I am sure Annamalai University was governed by a particular community of people ( Chettiara ) who were not staunch supporters of Dravidian parties. They were more pro-Congress. How vcome such nasty corruption has errupted under their able administration?
    Hence the Dravidian parties should not be a scapegoat for all the ills in the present Tamil society…Corruption is a vicious cycle which will go on without end in this world where only attaining wealth has become the prime norm for all!…Dr.G.Johnson.

  10. Avatar
    K M vijayan says:

    It is misconception to think that I support chettiars who founded the college. No one denies the commercialisation of education which enriches the college administrators. The History is when Srinivasastry was made as VC the very same Annamalaichettiars brought great intellectuals to the college to make an endevour to glorify its atmosphere. The decline started when Hindi agitation started Mk beaten Udayakumar to death, naxal movement for sometime and now vanniar dalit unrest. All these things diverted the atmosphere of learning into a den of caste based rowdism.The commercialisation of Managers is entirely different matter. If chettiars dont make money will anyone assure that the intellectual atmosphere will redeem in Annamalai university? JNU also the students may have political affliation but can anyone say JNUs intellectual atmospher had dimnished? When I say dravidan party I meant a cult. Today even a congress party is having the same cult. That cult had made the whole lot…When last deepavali 100 times the add in tv repeated udayanidhi stalinin n 7m arivu everyone started believing that there was a man by name udayanidhi who had 7m arivu It may even be recorded in wikipidia. It is this kind of Propaganda knowledge that tamil society started believing that as their pride. When I criticise them i dont say the dravidanised congress party is alternate. Tamil society had gone to the hands of idiots and rowdies and castist, which plagued the entire country

    1. Avatar
      K A V Y A says:

      It is a common refrain to blame the fall in cultural values of Tamils on DMK and DK. Values have fallen all around, not in TN alone. All professionals, and the lay ppl too, dont care for values. Their own interests, ovewhelming public interests, throwing all human values to the air – is today the only value. If DMK and DK is to blame for this, how to account for such fall in all other States where it is red tooth and claw? Vijayan should have lived in many States as I have which wd have broadened his mind.

      Time is never at stand still. If no DMK or DK were, still the fall in values of life are bound to come. Cong ruled TN for long and today they are at the vanguard of cultural fall, arent they?

      Vijayan cleaverly adds them too in his black list. Then, he must tell us who is left in the white list?

      I have the answer: None.

      Annamalai University tarnishes itself because all those connected with it, commercialised it. Where wealth accumulates, men decay. More true where Saraswathi is rated in terms of money and money only.

  11. Avatar
    Paramasivam says:

    Here we are talking about a private university run by a wealthy family.The commercial ambitions of the management and mismanagement only led to the decline in standard.Vijayan talks about JNU”s standard.What happened to JNU”s standard when Ramanujam”s essays on Ramayana was removed from the syllabus due to rowdism by right fundamentalists?In Chennai also,standard institutions are there like Loyola College,MCC etc.Only because of Dravidian parties,post graduate admissions on the basis of caste and community in Annamalai University stopped.One famous VC used to admit students on the basis of their names like Bashyam.He did not know that Naidus also have this name apart from Ayyangars and one such Naidu who got admission was my friend.It has become the fashion to criticize Dravidian parties for every ill found in TN.

  12. Avatar
    Arun Narayanan says:

    Universities themselves do not produce good or bad that prevails in a society. It is the people who provide the services there make all the difference. The professors, the intellectuals who impart their valuable knowledge and share their experiences with their students, and the way in which this transaction takes place between the giver and taker- this is what differentiates one university from another. Unfortunately, in our country, there has not been a consistent policy towards bettering our universities. JNU had a glorius tradition of freethinking, knowledge spreading and provided an ideal ground for testing intellectual competency of all people and places. JNU was trying to imbibe a tradition/culture that could pervade all compartmental thinking and finally leads the individual to a state of higher consciousness. But, the university could never make an impact, even in its hey-days, on the overall academic scenario in our country. It lived as an aloof, an island in itself. It treated other universities as if they are very low in standards. Consequently, it got isolated from the main stream, and its products amalgamated so well with every other institutions/universities that Jnuites thought they were low. There are many jnuites here in Tamilnadu holding high positions in various fields, including eduction and alligned themselves with political affiliations of all the parties of Tamilnadu (both within and outside Tamilnadu). But they could not deliver anything that JNU was known for. On the other hand, quitely they have contributed to the declining standards of education, both in higher and school education. So, let us not blame Annamalai university, it so happened that the affairs there has come out openly, while in various other cases, the issues are comforatable suppressed and one tend to think that things are going well.

  13. Avatar
    K A V Y A says:

    A point missing in AN’s comments is that JNU is not commercialised. It is the only University in India which has not been touched by the cruel nails of crass commercialisation.

    It has a sprawling campus, adequate hostel facilities and intermingling of sexes for erudite conversations. More importantly, it is only for PG and Research both in Liberal Arts and Sciences. Only IIMs offer PG courses. No others, as far as I know. IITs have damaged their image by producing graduations for market, just like TN versities. IITs say their research departments and PG classes lack students. They are known for producing graduates only.

    The Chettiar did bring in the eminent scholars as teachers to various departments; but that is history. Today, to mint money through education is the only thing that matters. No scholar of international repute is found in the faculty there. But in JNU, you can find many. JNU is a Mecca for scholars and teachers who want serious students to interact with. Please note a good teacher needs proper environment to get job satisfaction. That does not refer only to salary. Just enter its new campus in Vasanth Kunj and you know.

    Universities do not bother what their alumni are going to become in future. Its concerns should be: to provide such a campus in which free thinking flourishes by providing necessary infrastructure and offering handsome salaries to those employed as teaching and non teaching staff. My alma mater does not know what I am doing…fighting and quarrelling! They wd be ashamed of me. But it is none of their business. They wd say we didn’t expect him to become a rascal but he did. We cant b held responsible. We did our best to him: that’s all.

    After gurukulam, one can become a terrorist too if he falls into bad co. The education in gurukulam does not intend to make him so, does it? One becomes a good man and to make him so, there are many overt and covert cooparative causes, of which his education plays just a part.

    An e.g. of gurukulam student (Jiddu Krishnamoorthy’s flagship school at Madanapalli)commanding people from a public stage in UP durng an election campaign to cut off the hands of a particular community people, is a well known shocking example of a student debaucherising his education he got at Madanapalli. He studied there from nursery to higher secondary residing there.

    Can we say that Madanapalli made him so? A cruel joke indeed if one says yes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *