சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அடிக்கடி பிரச்சனை வருவதுண்டு… வெளித் தோற்றத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்தப் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஊழலும்..அராஜகமும்…வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் நடக்காது.
இந்தக் காலேஜில் மருத்துவராக வெளி நாட்டிலிருந்தும் மாணவர்கள் சேர்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். அதிலும் குறிப்பாக…இந்தோனேஷியா, உக்ரைன், உகாண்டா,மத்தியப் பிரதேசம் , உத்திரப் பிரதேசம் ,ஆந்திரா…கேரளா, என்று பல இடங்களிலிருந்தும் பல மொழிகள் பேசும் மாணவர்களைக் காணலாம்.இது வரவேற்கப் படவேண்டிய விஷயம் தான்.
இங்கு வருகைப் பதிவிலிருந்து அனைத்துக்கும் விலை உண்டு.
ஒவ்வொரு செமஸ்டரில் ஒரே ஒரு தேர்வு தோல்வியானாலும் அந்த செமஸ்டருக்கு வேண்டிய மொத்தத் தொகையை செலுத்தி விட்டால் போதும்…ஃபெயிலான மாணவர் பாசாகி விடுவார். எல்லாம் மேசைக்குக் கீழ்
கொடுப்பதைப் பொறுத்து இருக்கிறது.
இப்படி உருவாகும் எஞ்சினீயரும் , டாக்டரும் தான் வருங்காலத்தை ஆள வருகிறார்கள்.
இந்த பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பனி செய்ய வேண்டுமென்றால் கூட அதற்கும் ஒரு விலை உண்டு. தகுதி பற்றி அக்கறை இல்லை. பணம் பணம்…பணம்….! மட்டுமே சின்ன வேலையிலிருந்து பெரிய வேலை வரைக்கும் பேசும்.
அதுமட்டுமா…..இருப்பதில் கொஞ்சம் பணக்காரப் பையனாகப் பார்த்து அவன் விடைத் தாளில் கைவைத்து அவனிடம் பணம் கறந்து….அவர்கள் தங்களின் வேலைக்காகக் கொடுத்த பணத்தை நாசூக்காக பறிக்கும் வழி.
இது தனியாக நடப்பது.
எல்லாவற்றையும் கண்டும், காணாமல் இருந்து இருந்து…இது வரையில் “இங்கு இப்படி தான் “என்று அவர்களே இதையெல்லாம் வழக்கமாக்கி கொண்டு தலை நிமிர்ந்து இருக்கும்போது….அங்கு சேர்பவர்களும்…இது நமக்கு வசதியா போச்சு என்ற எண்ணத்தில் இருந்து விடுகிறார்கள்.
இதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே அறியாமல் வந்து சேர்த்துவிட்டு…..”இதென்ன இப்படி இருக்கு..”என்று அவதிப் படுபவர்களும் உண்டு.
நினைத்தால் கோபம் வரும் சில விஷயங்கள்..
– புத்தகனகளை வாங்கினாலும்…வெளியில் ஒரு நகல் எடுக்கும் கடையில் வரிசையில் இரவு பகலாக நின்று அவர்கள் நகல் எடுத்துத் தரும் (புத்தகம் போல செய்து கொடுப்பார்கள்) புத்தகத்தைத் தான் வாங்க வேண்டும் என்ற கட்டளை. அனைத்துப் பிரிவுக்கும் ஒரே ஜெராக்ஸ் கடை தான்.. இதுக்குள்ளே என்ன பெரிய விஷயம் என்று யோசித்தால்..அந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் அந்த காலேஜில் வேலை பார்க்கும் லெக்ட்சரர் .
– என்ன தான் அயல் மாநிலத்திலிருந்து படிக்க வந்தாலும்…அவர்களால் தான் தங்களின் காலேஜுக்கு வரவு அதிகம் என்று புரிந்தாலும்…அதை ஏற்றுக் கொள்ளாமல், அந்த மாணவர்களை மிகவும் அவமரியாதை செய்வது. ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களை இரவோடு இரவாகத் துரத்துவார்கள். எங்கே போவார்கள்…? என்று யோசைனே இல்லாமல்….துரத்துவார்கள்..அதுவும் எப்படி.கையில் ஒரு உருட்டுக் கட்டையை வைத்துக் கொண்டு….” காலி பண்ணி போ…என்று சுவற்றில், கதவில் ஓங்கி அடித்து (ஏதோ ஆடு மாடுகளை ஓட்டுவது போல) . அன்று இரவே அத்தனை மாணவர்களுக்கும் அடைக்கலம் தருவது அந்த சிறிய பஸ் ஸ்டாண்டும், ரயிவே ஸ்டேஷனும் தான்.
அங்கு பணி புரியும் அநேகம் லெக்சரருக்கு ஏதாவது ஒரு பிசினஸ் இருக்கும். அவர்கள் தினம் ஒரு கையெழுத்தை மட்டும் போட்டு விட்டு அவர்கள் பிசினசைப் பார்க்கச் செல்லலாம்.வெறும் கையெழுத்து வருகைப் பதிவாகி அவர்களுக்குச் சம்பளம் வாங்கித் தந்து விடும்.
இங்கிருக்கும் பிரசித்தி பெற்ற சபாநாயகர் கோவிலில் அர்ச்சகராக இருப்பவர்கள் கூட அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பல் வேறு பிரிவுகளில் வேலை செய்பவர்கள் தான். அங்கு சென்று கையெழுத்துப் போட்டு வர வேண்டும். இல்லாவிட்டால் கோவிலில் கையொப்பம் (…??!!! – இதற்குள் நடக்கும் ஊழல் அது தனி…) செய்து விட்டு காலேஜுக்கு சென்று வரவேண்டும்.
இரண்டு நாள் முன்பு செமஸ்டர் பரீட்சை நடந்து கொண்டிருக்கும்போதே…..பரீட்சை ஹாலில் நிறைய பேர்கள் உருட்டுக் கட்டையோடு வந்து யாரும் பரீட்சை எழுதக் கூடாது…என்று மிரட்டி விட்டு…நீங்க எழுதினா யாரு திருத்துவாங்க….நாங்க திருத்தமாட்டோம்.போங்கடா…..எந்திரிச்சு…..நீங்க பரிச்சை எழுதினது போதும்…என்று. மாணவர்களை மிரட்டி இருக்கிறார்கள்.
வேறு யாராக இருக்கும்..???? பாடம புகட்டுபவர்கள்…தான்…!
பிரச்சனை இது தான்… அங்கு வேலை செய்பவர்களுக்கு ஒரு முழு மாத போனஸ் தர வேண்டுமாம். அதில் பாதி சம்பளம் வரை தான் தர முடியும் என்று மானேஜ்மென்ட் சொன்னதால்..செய்த அதிரடி நடவடிக்கை தான் மேலே நடந்தது.
பரிச்சை தடைபடவே ….. மேற்கொண்டு காலேஜ் காலவரை இன்றி முறையற்ற அளவில் ஒரு மாத காலம் விடுமுறை அறிவிப்பு செய்து விட்டு அத்தனை மாணவர்களையும் வெளியேற்றியது நிர்வாகம்.
மாதக் கடைசியில் எங்கிருந்தெல்லாமோ வந்து சேர்ந்த மாணவர்கள்….கையில் காசில்லாமல் ஹாஸ்டலில் இருந்து விரட்டப் பட்டு தெருவில் அலையும் காட்சி….மனதை வேதனைப் படுத்தியது
ஆசிரியர்களே இப்படி நடந்து கொண்டால்..மாணவர்கள் கொதித்தெழலாம் அதற்கும் முன்பாக மாணவர்களை வெளியேற்றினால் பிரச்சனையை திசை திரும்பும் என்ற சூழ்ச்சியில்…இரு கோடுகள் தத்துவத்தை சாமர்த்தியமாகப் புகுத்தி இருக்கிறது நிர்வாகம்.
சொல்வதற்கு இன்னும் நிறைய இருந்தாலும் ஒரு சோறு பதமாக, இதுவும் சமுதாயத்தை ஓர் ஓரமாக அரிக்கும் வைரஸ் தான்….மிகவும் மோசமாகப் பரவவிட்ட .புற்று தான்.
என்றாலுமொரு சிறு தீக்குச்சி கூட ஒரு காட்டை சாம்பலாக்கி விடும்.
இத்தனை ஆண்டுகள் புகைந்து புகைந்து புகைந்து….கொழுந்து விட்டு ஏறிய ஆரம்பிக்கும்போது தான் நீர் விட்டு அணைக்க முடியும்.
இது போன்ற ஒரு பல்கலைக்கழகத்தை வேறு எங்கும் கண்டதில்லை
——————————————————————————————
- ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 44) கவலைச் சின்னம்
- பூனை மகாத்மியம்
- விடுமுறை நாள்
- கண்காணிப்பு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா
- பழமொழிகளில் ‘காடு’
- வீடு
- நைலான் கயிறு…!…?
- நம்பிக்கை ஒளி! (6)
- க.நா.சு.வும் நானும்
- அவம்
- என்னை மன்னித்து விடு குவேனி
- சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.
- அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….
- நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்
- தலைதப்பிய தீபாவளி
- வீதி
- இது தான் காலேஜா – நிஜங்கள்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -2
- தீபாவளியின் முகம்
- அகாலம்
- நுகராத வாசனை…………
- குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்
- தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்
- களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
- குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்
- மணலும் நுரையும்! (3)
- நானும் அவனும்
- தீபாவளிப் பரிசு!
- கடிதம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – செவ்வாய்க் கோள் இழந்த சூழ்வெளிப் புதிரை விடுவிக்கப் போகும் நாசாவின் தளவுளவி
- அக்னிப்பிரவேசம் -9