நாத்திகர்களும் இஸ்லாமும்.

author
89
0 minutes, 6 seconds Read
This entry is part 39 of 42 in the series 25 நவம்பர் 2012

கடவுள் இல்லை. அல்லாஹ்வும் இல்லை.
முன்னாள் முஸ்லீம்களான நாத்திகர்கள் வெளிப்படையாக பேசத்துவங்கியிருக்கிறார்கள். இருப்பினும், சகிப்புத்தன்மை இன்னும் அரிதாகவே இருக்கிறது.

இந்தோனேஷிய நீதிமன்றம் அலெக்ஸாந்தர் ஆன் Alexander Aan) அவர்களுக்கு “மத வெறுப்பை தூண்டியதற்காக” இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை கொடுக்கும் முன்னரே, ஒரு கும்பல் அவரை தாக்கி விட்டது. உலகத்தின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் உள்ள மினாங் பிரதேசத்தில் உள்ள நாத்திகர்களுக்காக அவர் ஆரம்பித்த முகநூல் குழுமத்தில் (Facebook group) கடவுள் இல்லை என்று எழுதியதுதான் அவரது குற்றம். இஸ்லாமிய பிரதேசங்களில் உள்ள பெரும்பாலானவர்களை போலவே அவரும் முஸ்லீமாகவே வளர்க்கப்பட்டார். தான் நாத்திகன் என்று பகிரங்கமாக சொல்லும் பலரை போலவே அவரும் தண்டிக்கப்பட்டார்.

மிக குறைந்த முஸ்லீம் நாடுகளிலேயே நாத்திகர்கள் பாதுகாப்புடன் வாழமுடியும். அதுவும் வாயைபொத்திகொண்டிருந்தால்தான். துருக்கி, லெபனான் ஆகிய இரண்டு நாடுகளை குறிப்பிடலாம். இந்த இரண்டு நாடுகளிலும் நாத்திகவாதம் ஒரு குற்றம் அல்ல. ஆனால், எந்த நாடும் நாத்திகர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பும், அங்கீகாரமும் தருவதில்லை. உதாரணமாக இந்தோனேஷியாவில் மக்கள் ஆறு மதங்களில் ஒன்றைச்சார்ந்தவர்களாக அறிவித்துகொள்ளலாம். அவற்றில் நாத்திகவாதமும், அஞ்ஞானவாதமும் சேர்த்தி அல்ல. எகிப்து கொண்டுவர இருக்கும் சட்டத்தில் மூன்று மதங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட இருக்கின்றன. கிறிஸ்துவம், யூதமதம், இஸ்லாம்.

ஷரியா சட்டம், பிள்ளைகள் பெற்றோரின் மதத்தை சார்ந்தவர்களாகவே கருதுகிறது. ஆகவே முஸ்லீம் நாத்திகர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்களாக கருதப்பட்டு கடவுளுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களாக கருதப்படுகிறார்கள். இதற்கான தண்டனை மிகவும் தீவிரமானது. ஈரான், சவுதி அரேபியா, மௌரிட்டானியா, சூடான் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இந்த குற்றத்துக்கு மரண தண்டனை என்பது சட்டப்புத்தகங்களிலேயே எழுதப்பட்டுள்ளது.

நடைமுறையில், அப்படிப்பட்ட தண்டனைகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன. பெரும்பாலான நாத்திகர்கள் மதநிந்தனை என்ற குற்றத்தின் அடிப்படையிலும் வெறுப்பை தூண்டுதல் என்ற குற்றத்தின் அடிப்படையிலும் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள். (முஸ்லீமல்லாதவர்களுக்கு பிறந்த நாத்திகர்களை “நிராகரித்தவர்கள் apostates” என்று கருதப்படுவதில்லை. இருந்தாலும், அவர்கள் மதத்துக்கு எதிரான மற்ற குற்றங்களின் கீழ் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள்) சட்டங்கள் கடுமையாக இல்லாத இடங்களிலும், மத குருக்களும், அதிகாரிகளும், சமூக நடைமுறைகளும் கடுமையாகவே இவர்களை எதிர்கொள்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக இல்லாமல், ஒரு சில மதத்தீவிரவாதிகளும், நாத்திகர்களை அடிப்பதும் தலையை துண்டிப்பதும் நடக்கிறது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த காசெம் எல் -காஸெல்லி என்பவர் தப்பிக்க ஒரே வழி வெளிநாட்டுக்கு தப்பித்து ஓடுவதுதான் என்று கூறுகிறார். இந்த 23 வயது இளைஞர் Atheistica.com என்ற அனாமதேய தளத்தை நடத்தியது இவர்தான் என்று தெரிய வந்ததும், ஸ்விட்சர்லாந்துக்கு தப்பி ஓடினார். முஸ்லீம் பெரும்பான்மை இல்லாத நாடுகளில் கூட முஸ்லீம் நாத்திகர்கள் தைரியமாக வெளியே வந்து கூற அஞ்சுகிறார்கள். நஹ்லா மஹ்மது என்ற 25 வயது சூடானிய நாத்திகர் 2010இல் பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். “முஸ்லீம் சமூகத்தினர் முன்னாள் முஸ்லீமுடன் பேசுவதை தவிர்க்கிறார்கள்” என்கிறார். மேற்கு நாடுகளில் வாழும் முஸ்லீம் தீவிரவாதிகள் முன்னாள் முஸ்லீம்களை தொந்தரவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.

நாத்திகர்களுக்கான முகநூல் குழுமங்கள் எல்லா முஸ்லீம் நாடுகளிலும் அனாமதேயமாக இருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் முன்னாள் முஸ்லீம்களுக்கு குரலை தந்தாலும், அவர்களை வெளிப்படுத்தவும் உதவிவிடுகின்றன. ஆகையால் இவர்களை பாதுகாப்பில்லாதவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஆனால், மத சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கும் சமூகங்களே இங்கே குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். 1950களிலும் 1960களிலும் பெரும்பாலான முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் மதச்சார்பின்மையும், சகிப்புத்தன்மையும் பரவலாக இருந்தன. அதே நாடுகளில் இன்று மதம் பொதுவெளியிலும் அரசியல்வெளியிலும் மதம் நீக்கமற நிறைந்துள்ளது. லண்டன் பிர்க்பெக் கல்லூரியை சேர்ந்த சமி ஜுபைதா என்ற ஆய்வாளர்க், “ஒரு புறம் தீவிரமான மத உணர்வும் மறுபுறம் நாத்திகமும் மதசார்பின்மையுமாக” சமூகம் தீவிரமாக பிளவுபட்டுள்ளது என்கிறார்.

அரபு நாடுகளில் நடந்துவரும் புரட்சிகளால் ஆட்சிக்கு வரும் இஸ்லாமிய கட்சிகளால், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களின் நிலைமை இன்னும் மோசமாகும். துனிஷியாவிலும், எகிப்திலும் புதிய ஆட்சியாளர்கள், நாத்திகம் பேசிய பல இளைஞர்களை சிறைப்படுத்தியுள்ளார்கள். இந்த புரட்சிகளுக்கு முன்னாலும் இப்படிப்பட்ட நிலைமை இருந்தாலும், இப்போது அதிகரித்துள்ளது. அல்பெர் சபர் அயத் என்ற எகிப்திய கிறிஸ்துவர் நாத்திகர்களுக்கான முகநூல் குழுமத்தை நடத்தியதற்காகவும், “மதத்தை அவமரியாதை செய்ததற்காகவும்” கடந்த செப்டம்பரிலிருந்து சிறையில் இருக்கிறார். இஸ்லாமிய உலகத்தில் கடந்த மாதம் புயலடிக்க வைத்த யூட்யூப் வீடியோவை தனது முகநூல் குழுமத்தில் இணைப்பு கொடுத்ததுதான் அவர் செய்த குற்றம். அவரை கைது செய்தது கிறிஸ்துவ போலீஸ்காரர்களே. எகிப்தின் காப்டிக் கிறிஸ்துவ சர்ச்சும், நாத்திகவாதத்தை கருணையுடன் நோக்குவதில்லை.

நல்ல செய்தி உண்டா?

அரபு கொந்தளிப்புகளும், அதிகரித்துவரும் பகிரங்கமாக வெளிவரும் நாத்திகர்களும் ஓரளவு விவாதத்தை உருவாக்கியுள்ளார்கள். எகிப்தில், காமெடியனும் மருத்துவருமான பாஸம் யூசூப் இவர்களிடம் கடுமையை காட்டுவதை விட விவாதத்தை முன்னெடுக்கலாம் என்று கூறுகிறார். இஸ்லாம் தனது உச்சக்கட்ட அதிகார காலத்தில் விக்கிரகவழிபாட்டாளர்களுடனும் நாத்திகர்களுடனும் இருந்தது என்று எழுதுகிறார். மத்திம காலத்தின் மிகச்சிறந்த அரபிய, பெர்ஷிய கவிஞர்களும், இலக்கண ஆசிரியர்களும் நாத்திகர்களே (இவர்களில் பலர் மரண தண்டனை விதிக்கப்பட்டுகொல்லப்பட்டனர்)

கஸால்லி போன்ற இளம் செயல்வீரர்கள் எந்த கடவுளையும் நம்பாமல் இருப்பதற்கு உரிமை உண்டு என்று உரத்து கூறூகிறார்கள். வெளிநாடுகளில் முன்னாள் முஸ்லீம்களுக்கான அமைப்புகள் மேலும் மேலும் வளர்கின்றன. Council of Ex-Muslims of Britain என்ற அமைப்பு இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதையும், இஸ்லாமை விட்டு வெளியேறுவது ஒரு சாதாரண விஷயமாக்கப்பட வேண்டும் என்பதிலும் செயலாற்றுகிறது.

இஸ்லாமை விட்டு வெளியேறுவதை மரணதண்டனை குற்றமாக்கும் ஒரு சட்டத்தை ஜூன் மாதத்தில் குவாய்த் நாட்டின் அமீர் தடுத்து நிறுத்தியதால், பல நாத்திக செயல்பாட்டாளர்களால் பாராட்டப்படுகிறார். இருப்பினும், இது பிரச்னையின் மூலாதாரத்தை கவனிக்கப்படாமல் போகிறது என்று இபின் வாரக் என்ற புனைபெயர் கொண்டுள்ள எழுத்தாளர் கூறுகிறார். இவர் வெளிநாட்டில் வசிக்கிறார். இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு ஆதரவாக பேசுவதால், கொலைமிரட்டல்களை எதிர்கொண்டு வருகிறார். தற்போதைய இஸ்லாமிய புரிதலின் கீழ் அது முஸ்லீம் நாத்திகர்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறுகிறார். ஒரு ஹதீஸின் அடிப்படையிலேயே நாத்திகர்களுக்கு மரணதண்டனை வாதம் வைக்கப்படுகிறது. “The Prophet said: whoever discards his religion, kill him.”

இருப்பினும், வேறு பல புத்தகங்கள் வேறு செய்திகளை தருகின்றன. குரானின் சகிப்புத்தன்மையை காட்டுவதாக குறிப்பிடப்படும் சுரா 109இல் “உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்” போன்ற வார்த்தைகள் காணப்படுகின்றன. ஒரு சில சமாதானவாத முஸ்லீம்கள், மதநிந்தனையாளர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று குரான் கூறினாலும், அதற்கு மரணதண்டனையை பரிந்துரைப்பதில்லை என்று கூறுகிறார்கள். ஒருசிலர், இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் மதநிராகரிப்பு ராஜ துரோகத்துக்கு சமானமாக இருந்தது, அதனால் கடுமையான தண்டனைகளை பரிந்துரைத்தது. ஆகவே அத்தகைய தண்டனைகள் தற்போது சரிப்படாது என்கிறார்கள்.

ஒருசில இஸ்லாமிய சிந்தனையாளர்கள், இஸ்லாமை நிராகரிப்பவர்கள் மறுமையில்தான் தண்டிக்கப்படுவார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று கோரினாலும், முன்னாள் முஸ்லீம்கள் மரண தண்டனை கொடுத்து கொல்லப்பட வேண்டும் என்றே பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். சுன்னி இஸ்லாமிய சட்டத்தின் நான்கு பிரிவுகளிலும் ஆண் நாத்திகர்கள் கொல்லப்பட வேண்டும் என்றே போதிக்கின்றன. இரண்டு பிரிவுகள் பெண் நாத்திகர்கள் சிறைவைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. எகிப்து தலைமை முஃப்டியும், கட்டார் நாட்டு யூசூப் அல் கரளாவி என்பவரும் குற்றம் சாட்டப்பட்ட நாத்திகர் சமூகத்தை கெடுத்தாலோ அல்லது இஸ்லாமை காயப்படுத்தினாலோதான் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் எல்லோருமே, மனம் வருந்தி திருந்திய நாத்திகர் கொல்லப்படக்கூடாது என்று சொல்கிறார்கள். எவ்வளவு நேரம் இவ்வாறு மனம் திருந்த கொடுக்க வேண்டும் என்பதில் விவாதம் உள்ளது.

ஷரியாவின் படி, நாத்திகவாதமே கொலையை விட முக்கியமான நம்பர் ஒன் குற்றம் என்று இபின் வாரக் கூறுகிறார். நாத்திகவாதத்தை பற்றிய ஒரு மத விவாதம் இன்னும் நடக்கவில்லை. பொதுமக்கள் கருத்துக்கள் வெவ்வேறுவிதமாக உள்ளன. ப்யூ ரிசர்ச் செண்டர் என்ற அமெரிக்க ஆய்வு மையம் எகிப்தில் உள்ள 84 சதவீத முஸ்லீம்கள் நாத்திகருக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று கூறியதாக கண்டறிந்தது. ஜோர்டன் நாட்டில் 86 சதவீத முஸ்லீம்கள் அவ்வாறு கூறுகிறார்கள். 51 சதவீத நைஜீரிய முஸ்லீம்களும், 30 சதவீத இந்தோனேஷிய முஸ்லீம்களும் அவ்வாறு கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் நாத்திக உணர்வை வளர்ப்பதற்குத்தான் தூண்டுகின்றன. ஓவிய வகுப்பில் அல்லாவின் படத்தை வரைந்ததற்காக (அல்லாவுக்கு படம் வரைவது இஸ்லாமில் தடுக்கப்பட்டது) அவரது ஆரம்ப பள்ளி ஆசிரியர் அவருக்கு தண்டனை கொடுத்ததை மஹ்மூது நினைவு கூர்ந்தார். பரிணாமவியலை கற்றுகொள்வதற்கு தடை இருந்ததாலும், ஆண்களை விட பெண்களுக்கு மிகக்குறைந்த உரிமைகள் இருந்ததாலும், தான் தள்ளி வைக்கப்பட்டதாக உணர்ந்ததாக கூறினார். “இந்த நிகழ்ச்சிகள் என்னை மெதுவாக இஸ்லாமிலிருந்து தள்ளின. ஒரு சமயத்தில் முழுவதுமாக அதனை நிராகரித்து நான் நாத்திகப்பெண்ணானேன்” என்று இவர் கூறினார்.

எகானமிஸ்ட் பக்கம்

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் 70வது சிறப்புப் பட்டிமன்றம் 02 டிசம்பர் 2012 ஞாயிறு மாலை மணி 6.30
author

Similar Posts

89 Comments

 1. Avatar
  பா. ரெங்கதுரை says:

  நல்ல கட்டுரை. இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் நாத்திகத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும். இல்லையேல் அவற்றுடனான உறவை இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும்.

  1. Avatar
   சி. ஜெயபாரதன் says:

   தமிழ் நாட்டைக் கடந்த 45 வருடங்களாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளின் நாத்திகக் கூட்டத்துக்கு “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” போன்ற ஒழுக்க நெறி கூறும் ஓர் எளிய பைபிள் கிடையாது. திருக்குறள் எழுதிய வள்ளுவரைக் கடலில் போட்டு விட்டார்.

   சி. ஜெயபாரதன்.

 2. Avatar
  Indian says:

  Now wait for SP and co coming out with( as usual)fairy tales that there is no compulsion in Islam, etc quoting ad nauseum verses from Koran.Conveniently they will ignore all those verses which imposes death to Kaffirs. Or worse still, they will denigrate Hinduism citing some obscure evidence!!( usually it will also be a cut and paste job!)

 3. Avatar
  Ram says:

  முகநூல்?? அப்போ Google ன் தமிழாக்கம் என்ன? பொருளியல் பக்கம் என்று ஏன் economist ஐ tamil படுத்தவில்லை ?

 4. Avatar
  Vidyasakaran says:

  சி. ஜெயபாரதன், உங்கள் கருத்து இந்தக் கட்டுரைக்குரியதுதானா?

 5. Avatar
  suvanappiriyan says:

  தமிழ் நாட்டில் நாத்திகர்கள் இந்துக்களாகவே கருதப்படுகின்றனர். அவர்களின் குடும்ப பெண்களிலிருந்து பிள்ளைகள் வரை இந்து மத பழக்க வழக்கங்களை விட்டு விடுவதில்லை. பெயருக்கு நாத்திகர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த சமூகத்தில் வாழ வேண்டுமாயின் ஏதாவதொரு மதத்தை அல்லது மார்க்கத்தை பின் பற்றியே ஆக வேண்டிய கட்டாயம்!

  எனது சொந்தத்திலேயே ஒரு நாத்திகர் உள்ளார். அதற்காக அவரை யாரும் துன்புறுத்தவில்லை. அவர் பாடு அவர் கடவுளின் பாடு. இஸ்லாத்தை விட்டு ஒருவர் செல்வதால் இந்த மார்க்கத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. நஷ்டம் இஸ்லாத்தை விடுபவருக்கே!

 6. Avatar
  டோண்டு ராகவன் says:

  //ஒருசில இஸ்லாமிய சிந்தனையாளர்கள், இஸ்லாமை நிராகரிப்பவர்கள் மறுமையில்தான் தண்டிக்கப்படுவார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று கோரினாலும், முன்னாள் முஸ்லீம்கள் மரண தண்டனை கொடுத்து கொல்லப்பட வேண்டும் என்றே பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். சுன்னி இஸ்லாமிய சட்டத்தின் நான்கு பிரிவுகளிலும் ஆண் நாத்திகர்கள் கொல்லப்பட வேண்டும் என்றே போதிக்கின்றன. இரண்டு பிரிவுகள் பெண் நாத்திகர்கள் சிறைவைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. எகிப்து தலைமை முஃப்டியும், கட்டார் நாட்டு யூசூப் அல் கரளாவி என்பவரும் குற்றம் சாட்டப்பட்ட நாத்திகர் சமூகத்தை கெடுத்தாலோ அல்லது இஸ்லாமை காயப்படுத்தினாலோதான் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் எல்லோருமே, மனம் வருந்தி திருந்திய நாத்திகர் கொல்லப்படக்கூடாது என்று சொல்கிறார்கள். எவ்வளவு நேரம் இவ்வாறு மனம் திருந்த கொடுக்க வேண்டும் என்பதில் விவாதம் உள்ளது.

  ஷரியாவின் படி, நாத்திகவாதமே கொலையை விட முக்கியமான நம்பர் ஒன் குற்றம் என்று இபின் வாரக் கூறுகிறார். நாத்திகவாதத்தை பற்றிய ஒரு மத விவாதம் இன்னும் நடக்கவில்லை. பொதுமக்கள் கருத்துக்கள் வெவ்வேறுவிதமாக உள்ளன. ப்யூ ரிசர்ச் செண்டர் என்ற அமெரிக்க ஆய்வு மையம் எகிப்தில் உள்ள 84 சதவீத முஸ்லீம்கள் நாத்திகருக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று கூறியதாக கண்டறிந்தது. ஜோர்டன் நாட்டில் 86 சதவீத முஸ்லீம்கள் அவ்வாறு கூறுகிறார்கள். 51 சதவீத நைஜீரிய முஸ்லீம்களும், 30 சதவீத இந்தோனேஷிய முஸ்லீம்களும் அவ்வாறு கூறுகிறார்கள்.//
  முசல்மான்கள் மைனாரிட்டியாக இருக்கும் இடத்தில் அடக்கித்தான் வாசிப்பார்கள். அதைத்தான் நீங்கள் சொன்ன உதாரணமும் கூறுகிறது.

  மேலே நான் தந்த உதாரணங்களுக்கான பதிலைக் கூறுங்களேன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  1. Avatar
   K A V Y A says:

   உங்கள் இக்கருத்தைச் சொல்ல விகதங்களைப்பற்றிய கட்டுரைக்குறிப்பு மட்டும் போதுமே. நீண்ட கோட் எதற்கு? இந்தோனிசியாவிலும் மலேசியாவிலும் இசுலாமியர்கள் மினார்ட்டியல்ல. அவர்கள் மெஜாரிட்டியே. இருப்பினும் 30 விகதமே இந்தோனேசியாவில். ஏன் என்று நீங்கள்தான் சொல்லனும்.

 7. Avatar
  Indian says:

  @ SP
  எனது சொந்தத்திலேயே ஒரு நாத்திகர் உள்ளார். அதற்காக அவரை யாரும் துன்புறுத்தவில்லை. அவர் பாடு அவர் கடவுளின் பாடு.
  This is because your relative lives in India. He/she will lose his/her head if they leave Islam in other Islamic countries. You will also lose your head in these countries if you keep harping lies about non compulsion in Islam and how Muslims have the liberty to leave Islam if they so desired.
  Now, please spare us all those Koranic verses that extol personal liberty in Islam.We know there are few verses to that effect in Koran.
  Please, also, do not lecture about these countries being misguided and interpreting Koran wrongly. That will be an insult to our intelligence.

 8. Avatar
  punaipeyaril says:

  ஒருவன் ஒரு நம்பிக்கையை மாற்றினதன் காரணமாக அவனைக் கொல் என்று ஒருவர் சொல்லியிருந்தால் அவர் பயப்படுகிறார் என்று அர்த்தம். எங்கே தனது போதனைகளை அவர் ஆராய்ந்தால் இது பூமி தட்டை எனும் போன்ற தத்துவம் என்றாகி விடுமோ என்று. இந்து மதத்தினருக்கு நிலவும் சுதந்திரம் முஸ்லீம் மதத்தினருக்கு இருப்பின், இந்நேரம் கூடாரத்தில் ஒட்டகம் கூட இருக்காது. இந்தியாவில் இருப்பவர்கள் முஸ்லீம்களே இல்லை… அவர்கள், இந்துமதத்தில் பிரிவினையால் மனம் நிலை பாதிக்கப்பட்டவர்களே… இந்துக்களில் அனைவரும் சமம் இல்லை.. முஸ்லீம்களில் அனைவரும் சமம் எனில் , எங்கே ஒரு மஸ்கட் அல்லது ஜித்தா முஸ்லீம் வீட்டில் பெண்ணோ பிள்ளையோ மணமுடிக்கட்டும். அது இயலா போது ஏன் பின், நீ யார் என்று கேட்டால், “இந்தியன்” தமிழன், மலையாளி, அமெரிக்கன் என்றெல்லாம் சொல்லாமல் “முஸ்லீம்” என்று சொல்லிக் கொள்ள வேண்டும். மன ரீதியான அரேபிய அடிமைகள் என்பதே உண்மை…

 9. Avatar
  suvanappiriyan says:

  இந்தியன்!

  //Now, please spare us all those Koranic verses that extol personal liberty in Islam.We know there are few verses to that effect in Koran.
  Please, also, do not lecture about these countries being misguided and interpreting Koran wrongly. That will be an insult to our intelligence.//

  இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்லச் சொல்லி எந்த இடத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது? காண்பித்தால் நானும் தெரிந்து கொள்வேன்.

  ஆனால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி சமூகத்தில் பொய்களை பரப்பி குழப்பம் உண்டாக்குபவர்களை நாம் தடுக்க வேண்டும். ஏனெனில் இந்த இஸ்லாத்தால் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவது கொலையை விட கொடியதாகும்.

  குர்ஆனின் வார்த்தைகள் இறைவனால் அருளப்பட்டது என்று நம்புபவர்கள் முஸ்லிம்கள். எனவே அதில் எந்த வார்த்தையையும் நீக்குவதற்கு உலகில் வாழும் எந்த முஸ்லிமும் விரும்ப மாட்டார். குர்ஆனில் விளங்கியதில்தான் பலரிடம் குறை இருக்கிறது. அது சரியானாலே பல பிரச்னைகள் தீர வழியுண்டு.

 10. Avatar
  punaipeyaril says:

  இந்த இஸ்லாத்தால் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தில்—> பின்லாடன் மட்டும் இருந்திருந்தால் , சிரித்து சிரித்தே செத்திருப்பான்…

 11. Avatar
  suvanappiriyan says:

  புனை பெயரில்!

  //எங்கே தனது போதனைகளை அவர் ஆராய்ந்தால் இது பூமி தட்டை எனும் போன்ற தத்துவம் என்றாகி விடுமோ என்று.//

  பூமி தட்டை என்று குர்ஆனில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? ஆதாரம் தர முடியுமா? சும்மா அடித்து விடக் கூடாது.

  //இந்தியாவில் இருப்பவர்கள் முஸ்லீம்களே இல்லை… அவர்கள், இந்துமதத்தில் பிரிவினையால் மனம் நிலை பாதிக்கப்பட்டவர்களே…//

  திலிபனாக இருந்து ஏ.ஆர்.ரஹ்மானாக மாறியுள்ளவரிடம் போய் சொல்லிப் பாருங்கள். பெரிய லெக்சரே நடத்துவார் :-)

  //எங்கே ஒரு மஸ்கட் அல்லது ஜித்தா முஸ்லீம் வீட்டில் பெண்ணோ பிள்ளையோ மணமுடிக்கட்டும்.//

  இப்பொழுதும் திருமணம் நடந்து வருகிறதே! கேரள மற்றும் பாகிஸ்தானிய முஸ்லிம்கள் திருமணம் முடித்து சவுதி குடியுரிமையும் பெற்றிருக்கிறார்களே! அந்த பெண்கள் கேட்கும் மஹர் தொகையை கொடுக்க வசதியிருந்து முஸ்லிமாகவும் இருந்தால் நீங்கள் கூட பெண் எடுக்கலாம். :-)

 12. Avatar
  தங்கமணி says:

  சவுதி பெண்கள் மற்ற நாட்டு ஆண்களை திருமணம் செய்ய இருந்த தடையும், அவ்வாறு திருமணம் செய்தவர்களது குழந்தைகளையும் உறவினர்களையும் அரசாங்கம் பாரபட்சமாக நடத்தி வந்ததையும் சமீபத்திய சட்ட மாற்றம் திருத்தியிருக்கிறது என்று இந்த எமிரேட்ஸ் செய்தி கூறுகிறது
  http://www.emirates247.com/news/region/saudi-law-approves-marriage-with-foreigners-2011-06-28-1.404884

 13. Avatar
  தங்கமணி says:

  இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரண தண்டனை கிடையாது என்று சொல்பவர்கள் இரண்டே இரண்டு பிரிவினர்தான்.

  ஒன்று காதியானி என்று சொல்லக்கூடிய அஹ்மதியா முஸ்லீம் பிரிவினர்.

  மற்றொன்று ஜெயினுலாபுதீனை பின்பற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரிவினர்.

  இவர்களே நடத்தும் ஆன்லைன்பிஜே என்ற பக்கத்தில்
  இவ்வாறு காணப்படுகிறது.

  http://onlinepj.com/buhari_thamizakam/athiyayam88/

  6922 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
  …நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். மாறாக, நபி (ஸல்) அவர்கள், எவர் தமது மார்க்கத்தை மாற்றிக்கொள் கிறாரோ அவருக்கு மரணதண்டனை அளியுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்தி ருப்பேன் என்று சொன்னார்கள்.8

  இந்த பக்கத்தில்
  6923அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
  ….
  அபூமூசா (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.ன பிறகு அபூமூசா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்றபோது (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூமூசா (ரலி) அவர்கள் எடுத்துவைத்து வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்) என்று சொன்னார்கள். அப்போது அபூமூசா (ரலி) அவர்களின் அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, இவர் யார்? என்று முஆத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள் இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டுவெளியேறி) யூதராகி விட்டார் என்றார்கள். ளமீண்டும் அபூமூசா (ரலி) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்ன அமருங்கள் என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், இல்லை. அல்லாஹ் வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்) என்று மூன்று முறை சொன்னார்கள். எனவே, அவருக்கு மரண தண்டனையளிக்கும்படி (அபூமூசா -ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.

  முகம்மது அதிகாரத்தில் பலவீனமாக இருந்த காலத்தில் சமாதானமாக எழுதி வைத்த குரான் வசனங்களையும், ஹதீஸ்களையும் வைத்து பிரச்சாரம் செய்பவர்கள், அவர் பலம் வாய்ந்தவராக ஆன பின்னால் எழுதி வைத்த குரான் வசனங்களையும் போதனைகளையும் பூசி மொழுகுகிறார்கள். (இப்போது)

  மெஜாரிட்டி வந்ததும், இந்த கட்டுரை சொல்வதைத்தான் இஸ்லாமை மறுப்பவர்கள் அனுபவிக்க வேண்டும்.

 14. Avatar
  punaipeyaril says:

  தங்கமணி, அது வடிவேலு சொல்ற மாத்ரி, “ இருக்கு…. ஆனா இல்லை….” … உலகின் மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலை , சௌதி.

 15. Avatar
  punaipeyaril says:

  பூமி தட்டை என்று குர்ஆனில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? —> ஹூரான் என்று சொல்லவில்லை. அந்த மாதிரி முன்பு சிலர் சொன்னது போல்… இவர்கள் தத்துவங்களும் என்று பொருள்.
  திலிபனாக இருந்து ஏ.ஆர்.ரஹ்மானாக மாறியுள்ளவரிடம் போய் சொல்லிப் பாருங்கள். பெரிய லெக்சரே நடத்துவார் :-)–> உடல் நலம் சரியாச்சு என்றதால் மதம் மாறியவர் அவர். தத்துவங்களால் அல்ல. அப்படியெனில், உடல் நலம் சரியானவர்கள் “அப்போலோ ஹாஸ்பிடல் மதம்” “மியாட் ஹாஸ்பிட்டல் மதம்” “அல் சௌதி கிளினிக் மதம்” என்று ஆஸ்பத்திரி பெயரில் மதங்களும், டாக்டர் தேவ தூதுவர்களாகவும் தான் இருப்பர். அதுவும் போக, அவர் என்ன இந்துவாகவா மாறியிருக்கார், சுதந்திரமாக கருத்துச் சொல்ல… “தந்திரமாக” கூட தப்பிக்க முடியாத லேப்ரந்த்ல் அல்லாவா மாட்டிக் கொண்டுள்ளார். பரிதாபம் விடுங்கள் அவரை. அவருக்கு வேராக, கருவாக , உருவாக இருந்தது இந்து மதமே… அது பாலவனத்தில் போய் ஓயாஸிஸில் ஆட்டம் போட்டாலும் குடித்த தாய்ப் பால் இந்துமதத்தினுடையதே…
  திருமணம் பற்றிய உங்கள் கூற்று மொரோக்கோ வகையானது. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
  சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டதால் தான் எந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் பாலவன தேசத்தில் நடப்பதில்லை.

 16. Avatar
  suvanappiriyan says:

  புனை பெயரில்!

  //உடல் நலம் சரியாச்சு என்றதால் மதம் மாறியவர் அவர். தத்துவங்களால் அல்ல. அப்படியெனில், உடல் நலம் சரியானவர்கள் “அப்போலோ ஹாஸ்பிடல் மதம்” “மியாட் ஹாஸ்பிட்டல் மதம்” “அல் சௌதி கிளினிக் மதம்” என்று ஆஸ்பத்திரி பெயரில் மதங்களும், டாக்டர் தேவ தூதுவர்களாகவும் தான் இருப்பர். அதுவும் போக, அவர் என்ன இந்துவாகவா மாறியிருக்கார், சுதந்திரமாக கருத்துச் சொல்ல… “தந்திரமாக” கூட தப்பிக்க முடியாத லேப்ரந்த்ல் அல்லாவா மாட்டிக் கொண்டுள்ளார். பரிதாபம் விடுங்கள் அவரை.//

  உடல் நிலை சரியானவுடன் திரும்பவும் பழைய மதத்துக்கே திரும்பி விட வேண்டியதுதானே! அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லையே! பல தலைமுறைகளாக ஒருவர் இஸ்லாத்தில் காட்டும் ஈடுபாட்டை விட அதிகமாகவல்லவா காட்டுகிறார்? படத்தின் ஆரம்ப பூஜைகளுக்கு இவர் வருவதில்லை. ஏனெனில் அங்கு விக்ரக ஆராதனை இருப்பதால் தவிர்ந்து கொள்கிறார். ஒரு முறை மெக்காவில் கஃபாவின் உள் மெய் மறந்து தொழுகையில் ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தேன். காலை தொழுகை தவறி விடக் கூடாது என்பதற்காக ரெகார்டிங் அதிகமாக இரவு எட்டிலிருந்து விடி காலை 3 மணி வரை வைத்துக் கொள்கிறார். மேலும் மேலும் இவரது ஈடுபாடு அதிகரிக்கிறதே ஒழிய குறையவில்லை.

  //அவருக்கு வேராக, கருவாக , உருவாக இருந்தது இந்து மதமே… அது பாலவனத்தில் போய் ஓயாஸிஸில் ஆட்டம் போட்டாலும் குடித்த தாய்ப் பால் இந்துமதத்தினுடையதே…//

  எனது மூதாதையர்களும் அந்த வழியில் வந்தவர்களே! இரண்டு தலைமுறைக்கு முன்னால் எனது உறவினர்களும் ராமசாமியாகவோ ராகவனாகவோ இருந்திருக்கலாம்.

  //சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டதால் தான் எந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் பாலவன தேசத்தில் நடப்பதில்லை.//

  “நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை” — BBC

  அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை — Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.

  மேலும் விபரங்கள் அறிய…

  http://www.ethirkkural.com/2010/03/blog-post_04.html

 17. Avatar
  bala says:

  Charles DARWINS evolution and natural selection is it also athiest concept?. why inINDIA it is not widely discussed as in western countries as church (creation) against DARWINISM. IN US SOME STATES TILL RECENTLY BANNED TEACHING EVOLUTION AND NATURAL SELECTION IN SCHOOLS. TEACHERS HAVE BEEN PROSECUTED. w hat is the position in islamic countries. We have a misguided notion crudely man descended from monkeys. but primates had a common ancestors

 18. Avatar
  மலர்மன்னன் says:

  ரஹ்மான் திலீப்குமாராக இருந்தபோது அவரிடம் ரேடியோ ஜிங்கிள் செய்து வாங்கியவன் நான். நிபந்தனையின் பேரிலேயே அவர் மதம் மாறினார் என்பதும் இன்று சூஃபி வழியில் ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதும் எனக்குத் தெரியும். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டந்தான். டைரெக்ட் ஆக்‌ஷன் டே என்றால் என்ன என்றே தெரியாமல் பாகிஸ்தான் பிரிவினை பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி விமர்சனம் செய்தாகிறது. சாவர்கர் 1917ல் ஆர் எஸ் எஸ் சார்பில் சொன்னதாக… என்று முன்பு ஒரு தடவை எழுதியதும் நினைவு வருகிறது. ஆனால் ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டதே 1925-ல்தான்! ஹிந்து, இஸ்லாம் இரண்டும் முரண்பட்ட இருவேறு கலாசாரங்கள் என்று அவர் சொன்னார் தான். அது உண்மைதானே? அதற்காக ஹிந்துஸ்தானத்தை இரு கூறுகளாகப் பிரிக்க வேண்டும் என்றா சொன்னார்? காங்கிரஸுக்கும் முஸ்லிம் லீகுக்கும் கருத்து வேறுபாடு என்றால் ஹிந்துஸ்தானத்தைப் பிரிக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? எதைப்பற்றியும் நீள நீளமாக விமர்சிப்பதற்குமுன் அது பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் மெளல்விகளையும் மவுலானாக்களையும் ஒப்புக் கொள்ள வைத்தபின், அவர்களின் அங்கீகாரத்துடன் குரானுக்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கம் அளித்தால் போதும். தன்னிஷ்டத்துக்கு மனதில் தோன்றியபடியெல்லாம் விளக்கம் அளிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மவுல்விகளுக்கும் மவுலானாக்களுக்கும் தெரியவந்தால் ஒட்ட நறுக்கி விடுவார்கள்!
  -மலர்மன்னன்

 19. Avatar
  மலர்மன்னன் says:

  டைரெக்ட் ஆக்‌ஷன் டே என்பது பாகிஸ்தான் பிரிவுனையை வலியுறுத்த இந்திய முஸ்லிம் லீக் பகிரங்கமந்த் தீர்மானம் போட்டு ஆனால் ரகசியமாகத் திட்டம் தீட்டி ஹிந்துக்களைக் கொன்று கொலை வெறி ஆட்டம் ஆடிய தினம். 1946 ஆகஸ்ட் 16 அன்று நடந்தது. போதுமா?
  -மலர்மன்னன்

 20. Avatar
  K A V Y A says:

  Whether primates had a common ancestor, or whether man descended from the ape – are questions that have not been conclusived proved. On the basis of such uncertain science, you cant juxtapose religion and science. Better to treat them as two water tight compartments. As a well known religious hero put it, Give Ceaser what is his due; Give God what is His due? He made it clear thus: Two divisions. Viva la the division.

  1. Avatar
   Needhidevan says:

   Genetic science,DNA, Fossil findings have irrevocably proved evolution. It is no longer a postulate theory. Read RICHARD D OWNING books

 21. Avatar
  suvanappiriyan says:

  மலர் மன்னன்!

  //முதலில் மெளல்விகளையும் மவுலானாக்களையும் ஒப்புக் கொள்ள வைத்தபின், அவர்களின் அங்கீகாரத்துடன் குரானுக்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கம் அளித்தால் போதும். தன்னிஷ்டத்துக்கு மனதில் தோன்றியபடியெல்லாம் விளக்கம் அளிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை.//

  மௌலவிகள் மௌலானாக்கள் என்ற கான்செஃப்டே இஸ்லாத்தில் கிடையாது. குர்ஆனிலோ ஹதீதிலோ இந்த அர்த்தத்தில் வார்த்தைகளும் கிடையாது. இதற்காக ஒரு மதரஸாவில் சேர்ந்து பாடம் படித்து பட்டம் பெற்றவர்தான் இஸ்லாத்தை பற்றி பேச வேண்டும் என்ற எந்த சட்டமும் இஸ்லாத்தில் கிடையாது. எனது கிராமத்தில் நான் சில மௌலவிகளிடம் கேட்ட கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. எங்கள் ஊர் பள்ளி வாசலில் நடந்த மூடப் பழக்கங்களை நண்பர்கள் துணை கொண்டு எதிர்த்தவன் நான்.

  முகமது நபியிடம் பயிற்சி பெற்ற அவரது தோழர்கள் முறை வைத்து கொள்வார்களாம். ஒரு நாள் வேலைக்கு செல்வார்கள். மறுநாள் முகமது நபியோடு இருந்து இஸ்லாத்தை படிப்பார். மறுநாள் தங்கியிருந்தவரிடம் பாடம் படிப்பார். எனவே அறிஞர்கள் கூட்டம் என்று தனியாக ஒன்று கிடையாது. அனைவரும் உழைத்து சம்பாதிக்க வேண்டும். முகமது நபியே நூறு ஆடுகள் கொண்ட ஒரு ஆட்டுப் பண்ணையை வைத்திருந்தார். அதைக் கொண்டே தனது குடும்ப செலவுகளை பார்த்துக் கொண்டார். எனவே புரோகிதம் இஸ்லாத்தில் கிடையாது. புரோகிதர்களுக்கு தனி மரியாதை செலுத்துவதும் கூடாது. குர்ஆனையும் ஹதீதையும் நீங்களும் தெளிவுற படித்து தெரிந்து கொண்டால் இஸ்லாமிய பார்வையில் நீங்களும் ஒரு அறிஞரே.

  //மவுல்விகளுக்கும் மவுலானாக்களுக்கும் தெரியவந்தால் ஒட்ட நறுக்கி விடுவார்கள்!//

  தமிழகத்தில் மதரஸாவில் படித்து காலம் தள்ள முடியாது என்று தற்போது யாரும் மௌலவி ஆவதற்கு விருப்பப்படுவதில்லை. மதரஸாக்கள் அனைத்திலும் ஆங்கிலம், கணிணி, அறிவியல், கணிதம் போன்ற படிப்புகளை கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே பல மதரஸாக்கள் ஓரியண்டல் பள்ளிகளாக மாற்றம் அடைந்து குர்ஆன் ஹதீஸ் இரண்டு பாடங்களாகவும் மற்ற உலக கல்வி நான்கு பாடங்களாகவும் பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது.

  வஹாபியம்(தவ்ஹீத்) அதிகம் வளர்ந்ததால் புரோகிதம் இன்று ஓடி விட்டது. எனவே யாரும் யாரையும் நறுக்க துணிய மாட்டார். கவலை வேண்டாம், :-)

 22. Avatar
  மலர்மன்னன் says:

  கணிதம், விண்வெளி இயல் எல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து அரேபியா வழியாக மேற்கே போனதால் எல்லாம் அரேபியாவிலிருந்து வந்ததாக எண்ணி விட்டார்கள். அவ்வளவு ஏன், மிளகுகூட அரேபியாவில் விளைவதாகத்தான் ஐரோப்பியர்கள் முதலில் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அரேபிய வணிகர்கள் மூலமாகச் சென்றதுதான் காரணம். அதன் பிறகுதான் விவரம் புரிந்தது. அவர்களாகவே வர ஆரம்பித்தார்கள். இதேதான் கணிதம், வானசாத்திரம் விஷயத்திலும். பல தரப்புகளிலிருந்தும் படித்துப் பார்த்தால்தான் இதுபற்றி எல்லாம் விவாதிக்க முடியும்.
  -மலர்மன்னன்

 23. Avatar
  மலர்மன்னன் says:

  ஹிந்து மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது ஐன்ஸ்டைன் கண்டுணர்ந்து பதிவும் செய்துள்ள உண்மை. இறைவன் சொக்கட்டான் ஆடுவதில்லை என்று அவர் சொன்னதும் இந்தப் பின்னணியில்தான்!
  -மலர்மன்னன்

 24. Avatar
  மலர்மன்னன் says:

  Dance of Shiva என்பது மிகப் பிரபலமான பெளதிகக் கண்டுபிடிப்பு!
  -மலர்மன்னன்

 25. Avatar
  மலர்மன்னன் says:

  தேவ்பந்த் ஸுன்னிகள் பெரும்பன்மை வகிக்கிற அகில பாரத முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்திற்கோ, அல்லது தேவ்பந்த் தாருல் உலூமுக்கேவோ சுவனப் பிரியன் போன்றவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மத சம்பந்தமான விளக்கம் அளிப்பது தெரிய வந்தால் சங்கடத்தில் சிக்கிக் கொள்வார்கள். பண்டிகை நாளைத் தீர்மானிப்பதற்கே ஒரு சிலருக்குத்தான் இஸ்லாத்தில் அதிகாரம் உள்ளது. எந்தவொரு தனி நபர் முஸ்லிமும் நான் பிறை பார்த்துவிட்டேன், ஆகையால் வாருங்கள் கொண்டாடுவோம் என்று புறப்பட முடியாது! இந்தச் சாதாரண விஷயத்திற்கே ஒரு தனி நபருக்கு அதிகாரம் இல்லாதபோது மத சம்பந்தமான விளக்கங்கள் அளிக்க ஒருவருக்கு எங்கிருந்து அதிகாரம் இருக்க முடியம்? இவர்கள் அளிக்கும் சமாதானங்கள் செல்லுபடியாகக் கூடியவை என மற்றவர்கள் எப்படி ஏற்க முடியும்?
  ஸுன்னிகள் கேட்டவர்கள், ஷியாக்கள் பார்த்தவர்கள். பார்த்தவரையே சகிக்க மாட்டாத கேட்பவர்கள் ஆளாளுக்கு மத சம்பந்தமகவோ சமூக சம்பந்தமாகவோ விளக்கம் அளிப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்வார்கள்? எல்லாம் கவனத்துக்கு வராதவரை கதைத்துக் கொண்டிருக்கலாம் அவ்வளவுதான்!
  -மலர்மன்னன்

 26. Avatar
  Indian says:

  Sp
  You wanted the proof.
  I gave you the link. Now your silence is deafening.As usual, you have switched over to some other topics instead of addressing the accusations.Taqiya or whatever they call it in Islam at it’s best.

 27. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //கணிதம், விண்வெளி இயல் எல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து அரேபியா வழியாக மேற்கே போனதால் எல்லாம் அரேபியாவிலிருந்து வந்ததாக எண்ணி விட்டார்கள். அவ்வளவு ஏன், மிளகுகூட அரேபியாவில் விளைவதாகத்தான் ஐரோப்பியர்கள் முதலில் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அரேபிய வணிகர்கள் மூலமாகச் சென்றதுதான் காரணம். அதன் பிறகுதான் விவரம் புரிந்தது.//

  எனது தாய் நாட்டிலிருந்து இந்த அரிய பொக்கிஷங்கள் வணிகர்கள் மூலமாக அரபு நாடுகளுக்கு சென்றது என்ற உங்கள் வாதம் உண்மையாக இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் எனக்கு பெருமையே. இந்த அறிவை கிரகிப்பதற்கு ஒரு சமூகத்துக்கு அறிவு சார் சூழல் இருந்தாலே சாத்தியப்படும். இவை அனைத்தையும் அரபியில் மொழி பெயர்க்க அனைத்து துறைகளிலும் அரபுகள் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். அரபுகளிடமிருந்து கடன் வாங்கிய ஐரோப்பியர்கள் அந்த அறிவை தங்களாதாக ஆக்கிக் கொண்டனர். எனவே இந்த கண்டு பிடிப்புகள் அனைத்திற்கும் உரிய பெருமை இந்திய நாட்டுக்கும், அரபு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சமமாக பிரித்தளிக்க வேண்டும்.

  தற்போது நாம் பயன்படுத்தும் ஒன்று, இரண்டு என்ற இலக்கங்கள் கூட அராபிய எண்ணுருக்கள் என்றுதான் நான் சிறு வயதில் பாடப் புத்தகங்களில் படித்துள்ளேன். பூஜ்யத்தை கண்டு பிடித்து அதனை இலக்கங்களில் முதன் முதலாக சேர்த்ததும் அராபியர்களே! எனவே இந்த முன்னேற்றங்களில் அனைத்து தரப்பு மக்களும் சரிசமமாக பங்கெடுத்து உள்ளனர். இதில் அரபு நாடுகள் அறிவியலுக்கு எதுவும் செய்யவில்லை என்பது தவறான வாதம் என்பது உங்களது பின்னூட்டத்தின் வாயிலாகவே வெளி வந்துள்ளது. நன்றி!

  1. Avatar
   கிருஷ்ணா says:

   suvanappiriyan says:
   //எங்கே தனது போதனைகளை அவர் ஆராய்ந்தால் இது பூமி தட்டை எனும் போன்ற தத்துவ
   பூமி தட்டை என்று குர்ஆனில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது? ஆதாரம் தர முடியுமா? சும்மா அடித்து விடக் கூடாது.// குரானை அறிவியல் புத்தகமாக சித்தரிக்க நினைப்பவர்கள் இதையும் படிக்கலாமே.
   http://www.islam-watch.org/Amarkhan/Miracles-of-Quran-Exposed.htm#1

 28. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //ஹிந்து மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது ஐன்ஸ்டைன் கண்டுணர்ந்து பதிவும் செய்துள்ள உண்மை. இறைவன் சொக்கட்டான் ஆடுவதில்லை என்று அவர் சொன்னதும் இந்தப் பின்னணியில்தான்!//

  இதையும் நான் மறுக்கவில்லை. ஏனெனில் இந்து மத வேதங்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறைவனால் அருளப்பட்டது என்றுதான் நானும் பல பதிவுகளில் எழுதியுள்ளேன். இடையில் பல இடைச் செருகல்கள் நுழைந்து விட்டதை நாம் படிக்கும் போதே உணரலாம். மனிதர்கள் சமம் என்று சில இடங்களிலும். மனிதர்களில் ஏற்ற தாழ்வு உண்டு என்றும் சில இடங்களில் வரும். அதே போல் ஓரிறைக் கொள்கையை சொல்லும் இந்து மத வேதங்கள் மற்ற சில இடங்களில் இந்திரன் போன்ற பஞ்ச பூதங்களை இறைவனாக உருவகப்படுத்துவதையும் பார்க்கிறோம். இவை எல்லாம் பின்னால் வந்தவர்களின் இடைச் செருகல்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். சமீபத்தில் இறைவனால் அருளப்பட்ட பைபிளில் ஏசு சொன்ன கருத்துக்கு மாற்றமாக எத்தனை இடைச் செருகல்கள் அவரது சீடர்களால் புகுத்தப்பட்டுள்ளது என்பதை படிக்கும் போதே நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

  உலக மூல மொழிகள் அனைத்திற்கும் வேதங்களும் தூதர்களும் வந்திருப்பதாக குர்ஆன் கூறுகிறது. நமது தமிழ் மொழிக்கும் வேதம் வந்திருக்கலாம். அது திருக்குறளாகவும் இருக்கலாம்.

 29. Avatar
  மலர்மன்னன் says:

  திண்ணை ஆசிரியர் குழுவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

  இங்கு கருத்துத் தெரிவிப்பவர்களில் ஸ்ரீ பரமசிவம், ஸ்ரீ ராமா போன்றவர்களுக்குத் தமிழில் எழுதப்படுவதைப் படிக்க இயலும் ஆனால் தமிழில் எழுதிப் பழக்கமில்லை என்று தெரிகிறது. டாக்டர் ஜான்சன் கூட அழகாகத் தமிழில் எழுதத் தொடங்கி விட்டார். தமிழில் எழுதியே பழக்கமில்லாதவர்கள் ஆங்கிலத்தில் கருத்துத் தெரிவிக்க ஒரு விதி விலக்குப்போல அனுமதிக்கலாம். ஆனால் தமிழில் எழுதத் தெரிந்தும் தங்கள் ஆங்கிலப் புலமையைக் காண்பிப்பதாக நினைத்துக்கொண்டு திடீர் திடீர் என்று ஆங்கிலத்தில் எவரேனும் எழுதுவார்களே யானால் தயை தாட்சண்யமின்றி அதனை வெட்டி விடலாம் என யோசனை தெரிவிக்கிறேன். நான் எந்த மொழியையும் வெறுப்பவன் அல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியில் வெளிவரும் இதழ் இணைய இதழாகவே இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட மொழியில் கட்டுரைகள், கடிதங்கள், கருத்துகளைத் தெரிவிப்பதே முறையாக இருக்கும். தமிழில் எழுதியே பழக்கமில்லாத தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு விதி விலக்கு அளித்துவிட்டுத் தமிழில் எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் தமிழில் எழுதுவதை நிறுத்திவிட்டு ஆங்கிலத்துக்குத் தாவுவதைத் தடுத்தால் நல்லது. இல்லையேல் யார் யாருக்கு எந்தெந்த மொழிகளில் புலமை உண்டோ அந்த மொழிகளில் எல்லாம் அவரவர் விருப்பம் போல் கருத்துத் தெரிவிக்கலாம் என்றாவது சலுகை கொடுத்து விடலாம். ஆங்கிலத்துக்கு ஐரோப்பாவிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆஃப்ரிக்காவிலும்கூடச் செலாவணி இல்லை. எனவே தமது காலனி ஆதிக்க அடிமைத்தனத்தை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வது போல் தமிழில் எழுதத் தெரிந்திருந்தும் ஆங்கிலத்தில் வலிந்து எழுதுவதற்கு தமிழின் முதல் இணைய இதழான திண்ணை இடம் அளிப்பது சரி அல்ல என்றே திண்ணையின் நீண்ட கால வாசகன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். நம் ஜயபாரதனும்தான் இருக்கிறார். எவ்வளவு நுட்பமான சொல்லாடல்களையுங்கூட எத்தனை அற்புதமாகத் தமிழில் தெரிவித்துவிடுகிறார்! அவர்போல் இல்லாவிடினும் தமிழில் எழுதத் தெரிந்தும் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தவிர்க்கலாம் அல்லவா? -மலர்மன்னன்

 30. Avatar
  மலர்மன்னன் says:

  சுன்னமும் ஹிந்துஸ்தானத்தின் கண்டுபிடிப்புதான். ஆதாரத்துடன்தான் சொல்கிறேன். அதற்காக நான் பாடம் நடத்திக்கொண்டிருக்க முடியாது. அதிலும் மலர்மன்னன் சொல்லித் தெரிந்துகொண்டேன் என்று தெரிவிப்பதையே கேவலம் என்று எண்ணி மறைப்பவர்களுக்கு ஆதாரம் தர வேண்டிய அவசியமும் இல்லை. அரபி ஓர் இனிய மொழி. சொல்லாடலே கவிதை நடையாக இருக்கும். சாதாரணப் பேச்சுகூட குறியீடுகளால் நிரம்பியிருக்கும். நாம் சாதாரணமாக வாருங்கள், உட்காருங்கள் என்பதைக் கூட அழகான கவிதைபோலச் சொல்வார்கள். உருதுவில் உள்ள அழகே அரபியிலிருந்து வந்ததுதன் என்பது என் எண்ணம். ஆனால் அதையே கருத்தில்கொண்டு அரேபியர் அனைத்தும் அறிந்த சான்றோர் எனக் கொண்டுவிட முடியுமா? ஒரு சந்தேகம்: ஹஜ் கடமையாற்ற சவூதியில் விசேஷ ரயில் விடுகிறார்களே, அதில் அரபிகள் மட்டுந்தான் ஏறலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லையாமே, உண்மையா? உங்களுக்கு அதில் பயணிக்க அனுமதி உண்டா? அல்லது வேடிக்கை பார்க்க மட்டுந்தான் முடியுமா? ஓர் அரேபியன் தட்டிலிருந்து நீங்கள் பிரியாணி எடுத்து உண்ண அனுமதிக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் தட்டிலிருந்து ஓர் அரேபியன் எடுத்து உண்ணமாட்டானாமே அதுவும் உண்மையா? போய் வந்தவர்கள் சொல்லக் கேள்வி.
  -மலர்மன்னன்

 31. Avatar
  punaipeyaril says:

  அதனால் எனக்கு பெருமையே. இந்த அறிவை கிரகிப்பதற்கு ஒரு சமூகத்துக்கு அறிவு சார் சூழல் இருந்தாலே சாத்தியப்படும்.–> அப்ப புத்தக கடை வைத்திருப்போர் எல்லாம் பெரிய படிப்பாளிகள்…. லேப் மெட்டீரியல் விற்பவர்கள் எல்லாம் விஞ்ஞானிகள்… அடடா என்ன புரிதல்…

 32. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!
  //ஒரு சந்தேகம்: ஹஜ் கடமையாற்ற சவூதியில் விசேஷ ரயில் விடுகிறார்களே, அதில் அரபிகள் மட்டுந்தான் ஏறலாம் மற்றவர்களுக்கு அனுமதி இல்லையாமே, உண்மையா? உங்களுக்கு அதில் பயணிக்க அனுமதி உண்டா? அல்லது வேடிக்கை பார்க்க மட்டுந்தான் முடியுமா?//

  பல தவறான புரிதல்களில் இதுவும் ஒன்று. முதல் வெள்ளோட்டம் விட்ட பொழுது மன்னர், மந்திரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பயணித்தனர். அதன் பிறகு முழுக்க வெளி நாட்டினர் வசதிக்காகவே இந்த ஏற்பாடு. வருடந்தோறும் ஹஜ் செய்பவர்களில் 10 சதம் கூட சவுதிகள் இருக்க மாட்டார்கள். மக்கா மதினாவில் செய்யப்படும் அனைத்து வசதிகளும் வெளி நாட்டு ஹாஜிகளின் நலனைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது. இதற்காக சவுதி அரசு வருடந்தோறும் பல மில்லியன் ரியால்களை செலவு செய்து வெளி நாட்டினருக்கு வசதி செய்து கொடுக்கிறது.

  http://www.emirates247.com/news/region/muslim-pilgrims-to-ride-first-makkah-metro-2010-10-10-1.301747

  //ஓர் அரேபியன் தட்டிலிருந்து நீங்கள் பிரியாணி எடுத்து உண்ண அனுமதிக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் தட்டிலிருந்து ஓர் அரேபியன் எடுத்து உண்ணமாட்டானாமே அதுவும் உண்மையா? போய் வந்தவர்கள் சொல்லக் கேள்வி//

  அடுத்த தவறான புரிதல். எனது வீட்டுக்கு எனது ஓனர் சில நேரங்களில் வந்தால் ஆண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிட்டுள்ளோம். இது பல முறை நடந்துள்ளது. தொட்டால் தீட்டு என்று இன்றும் நம் நாட்டில் சொல்லி வரும் சூழலில் நான் கை வைத்த பிரியாணியை அவரும் அவர் கை வைத்த பிரியாணியை நானும் சாப்பிட்டுள்ளோம்.

  இவ்வாறு ஒரே தட்டில் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. விருப்பமில்லாதவர்கள் தனி தட்டிலும் சாப்பிடலாம். இவ்வாறு ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பொதும் சில ஒழுங்குகளை முகமது நபி கற்றுக் கொடுத்துள்ளார். ஓரத்திலிருந்து சாப்பிட வேண்டும். மற்றவர் முகம் சுழிக்கும் அளவுக்கு தட்டின் எல்லா இடத்திலும் கைகளை போட்டு துழாவக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உண்டு.

 33. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!

  //அரபி ஓர் இனிய மொழி. சொல்லாடலே கவிதை நடையாக இருக்கும். சாதாரணப் பேச்சுகூட குறியீடுகளால் நிரம்பியிருக்கும். நாம் சாதாரணமாக வாருங்கள், உட்காருங்கள் என்பதைக் கூட அழகான கவிதைபோலச் சொல்வார்கள். உருதுவில் உள்ள அழகே அரபியிலிருந்து வந்ததுதன் என்பது என் எண்ணம்.//

  அரபியையும் பார்சி மொழியையும் கலந்து மொகலாயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய மொழி உருது. உருது மொழி தெரிந்தவர் அரபி மொழியை மிக இலகுவாக கற்றுக் கொள்ளலாம். எழுத்துக்களும் ஓரளவு ஒன்றாகவே வரும்.

  //ஆனால் அதையே கருத்தில்கொண்டு அரேபியர் அனைத்தும் அறிந்த சான்றோர் எனக் கொண்டுவிட முடியுமா?//

  ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒரு கதையை எவரும் மொழி பெயர்த்து விடலாம். ஆனால் விஞ்ஞான கண்டு பிடிப்புகளை ஒருவர் மொழி பெயர்க்க முனைந்தால் விஞ்ஞானத்தில் ஓரளவாவது பரிச்சயம் இருக்க வேண்டும். இல்லை என்றால் மொழி பெயர்ப்புக்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய் விடும். அடுத்து குர்ஆனையே எடுத்துக் கொள்ளுங்களேன். வெறும் வணக்கத்தை மட்டும் சொல்லவில்லை. கோள்களின் சஞ்சாரம். சூரியனும் நகர்தல். புவியீர்ப்பு விசை. மனிதனின் கரு உருவாதல். பெரு வெடிப்புக் கொள்கை என்று அனைத்து துறைகளையும் சர்வ சாதாரணமாக கையாள்கிறது குர்ஆன். அந்த காலத்திலேயே அந்த மக்கள் பலவற்றிற்கு பொருள் உணர்ந்து அதற்கு விளக்க உரையும் எழுதி வைத்துள்ளார்கள். எனவே அறிவில் குறைந்தவர்களாக அவர்களை எண்ண வேண்டாம். தற்போது பணம் வந்து விட்டதால் சிந்தனை குறைந்து விட்டது. எங்கு பொருளாதாரம் மித மிஞ்சி இருக்கிறதோ அங்கு மனிதனின் சிந்தனை மழுங்கடிக்கப்படும். அதுதான் தற்போது அரபுகளிடம் நடந்து வருகிறது. இநத நிலை வருங்காலத்தில் பெட்ரோல் குறைந்தால் மாறலாம் :-).

 34. Avatar
  punaipeyaril says:

  வருடந்தோறும் ஹஜ் செய்பவர்களில் 10 சதம் கூட சவுதிகள் இருக்க மாட்டார்கள்.—> இது தான் நிதர்சனம். வெளிநாட்டுக்காரர்களை ஒரு பிணைப்பால் அடிமையாக்கும் நிலையே ஹஜ் யாத்திரை. அவர்களுக்கு அது பற்றி தெரிவதால் தான் அவர்கள் அதை ஒரு கடமை என்று நினைப்பதில்லை.

 35. Avatar
  R Venkatachalam says:

  நான் கூறுவது எந்த அளவுக்கு இங்கு பொறுத்தமாக இருக்கும் எனத்தெரியவில்லை.
  திருவள்ளுவர் கடவுளை ஒருவன் தினமும் வணங்கவேண்டும் என்றோ அன்றாடம் பூஜை மற்றும் பிற சடங்குகளில் ஈடுபடவேண்டும் என்றோ கூறவில்லை. கடவுளை வணங்கினால் வேண்டியது கிட்டும். தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டனை கிட்டும் என்பது போன்ற கருத்துக்கள் எதுவும் திருக்குறளில் இல்லை. ஆனால் கடவுள் உண்டு மறு பிறவி உண்டு வீடு பேறு உண்டு என்று கூறுகிறது திருக்குறள். இவற்றை என்னுடைய திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தில் விளக்கி உள்ளேன். ”திருவள்ளுவர் மதம் அல்லது வாழ்க்கையே வழிபாடு” என்ற புத்தகத்தை எழுதி வருகிறேன். அதில் திருவள்ளுவ மதம் என்பது மற்ற மதங்களைப்போலவே ஒரு மதம் என்ற கருத்தைச் சொல்ல விருக்கிறேன்.

  1. Avatar
   R Venkatachalam says:

   மற்ற மதங்களைப்போல ஆனல் அவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட மதம் என்று இருந்து இருக்க வேண்டும்

  2. Avatar
   punaipeyaril says:

   ஆனா, அவரையும் இவங்க முஸ்லீம் என்பார்கள். ஆதிபகவன் என்றொரு சினிமா டைட்டிலின் நோக்கமே இது மாதிரி… திருவள்ளுவர் வாழ்வு நெறி வழிகாட்டி. இங்கு மதம் என்பது நில பரப்பின் ஆளுமைக்காக ஏற்படுத்தப்பட்ட பய உணர்வு வெளிப்பாடாகவே கிறிஸ்துவ, முஸ்லீம் மதங்கள். பௌத்தம், இந்துமதம் போன்றவை தான் தத்துவங்களின் அடிப்படையில் – குறள் உட்பட…

  3. Avatar
   Paramasivam says:

   Thiruvalluvar never talked about God,Rebirth,Religion or Motcham.All these things were brought in by Parimelazhagar only.You may read “Thirukkuralum Parimelazhagarum” by Pulavar Kuzhandai and “Thirukkural” by Paavendar Bharadhidaasan

   1. Avatar
    கிருஷ்ணா says:

    அடிச்சான் பலேன்னானாம். ஆமாங்கய்யா. வேதத்தில் கூட கடவுளைப் பத்தி ஒண்ணுமே இல்லையாம். எல்லாம் பார்ப்பானோட புளுகுன்னு நாயக்கர் சொல்றார். கேட்டுக்குவோம். பகவன்னா யாரையா. இறைவன் என்றால் யாரையா. அறவாழி அந்தணன் யாரையா, இந்திரன்னா யாரையா, மால்ன்னா யாரையா, செய்யாள்ன்னா யாரையா, மூத்தோள்ன்னா யாரையா….எழுபிறப்புன்னா என்னையா, இதேல்லாம் மதமில்லையாய்யா. வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு போசப்படாதூங்கையா

 36. Avatar
  U.VENKATESAN says:

  இஸ்லாத்தில் நாத்திகம் இருப்பதை இஸ்லாமியர்கள் உணர்கிறார்கள் ஆனால் வீரமணி போன்றோர் உணரவில்லை.

 37. Avatar
  suvanappiriyan says:

  புனை பெயரில்!

  //இது தான் நிதர்சனம். வெளிநாட்டுக்காரர்களை ஒரு பிணைப்பால் அடிமையாக்கும் நிலையே ஹஜ் யாத்திரை. அவர்களுக்கு அது பற்றி தெரிவதால் தான் அவர்கள் அதை ஒரு கடமை என்று நினைப்பதில்லை.//

  அடுத்த தவறான புரிதல். இந்தியாவின் முஸ்லிம் மக்கள் தொகை 35 கோடி என்றால் அதில் 20000 ஆயிரம் அல்லது அதற்கு கூடுதலாகத்தான் சவுதி அரசு அனுமதிக்கிறது. அதே போல் சவுதியில் மொத்த மக்கள் தொகையில் 2 சதமே அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளூரில் இருக்கும் நான் ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் ஹஜ் செய்ய முடியும். மதிலும் இரண்டாவது முறை செய்ய அதிக பணமும் கட்ட வேண்டும். கூட்டத்தை கூடிய வரை குறைக்க இந்த ஏற்பாடுகள். சட்டங்களை தளர்த்தினால் வருடா வருடம் ஹஜ் செய்யும் சவுதிகளின் எண்ணிக்கை அதிகமாகும். வெளி நாட்டவர்களுக்கு இதனால் பிரச்னை. எனவேதான் சவுதி அரசு கட்டுப்பாடுகளை விதித்து தனது நாட்டு மக்களை வருடந்தோறும் ஹஜ் செய்வதை தடுத்து வருகிறது.

  இந்த ஹஜ்ஜினால் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ‘நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்’ என்ற புரிதலுக்கு வருகின்றனர்.

 38. Avatar
  மலர்மன்னன் says:

  கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்று வள்ளுவர் கேட்கிறார். இங்கு வாலறிவன் என்பதை இறைச் சக்தி என்று கொள்வதே முறை. ஏனெனில் நற்றாள் என்று மிகவும் உயர்த்திப் பேசுகிறார். மேலும் இறைச் சக்தியை வணங்கும் இயல்பு இல்லை எனில் கல்வி கற்றதனால் என்ன பயன் எனக் கேட்கிறார். இதற்குக் கடவுளை வணங்குதலே கல்வி கேள்விகளைப் பெற்றமைக்கு உரிய அடையாளம் எனப் பொருள் கொள்வதே சரியாக இருக்கும். இறைச் சக்தியை வணங்கு என்று நேரடியாகச் சொன்னால்தான் அப்படிச் சொன்னதாக அர்த்தம் என்று கருதுவது ஆபிரகாமிய மாதங்களின் நடைமுறை. அங்கேதான் அப்படியெல்லாம் உத்தரவுகள் போடப்படும்.
  -மலர்மன்னன்

 39. Avatar
  suvanappiriyan says:

  திரு வெங்கடாசலம்!

  //திருவள்ளுவர் கடவுளை ஒருவன் தினமும் வணங்கவேண்டும் என்றோ அன்றாடம் பூஜை மற்றும் பிற சடங்குகளில் ஈடுபடவேண்டும் என்றோ கூறவில்லை.//

  ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீத்தார்
  இறைவன் அடிசேரா தார்’
  குறள் 1:10

  இறைவனின் திருவடிகளை மனதில் பதித்து அவனை நினைத்து வாழும் அன்பர்களே பிறப்பு இறப்பு எனும் கொடிய அலைகள் மோதும் கடலை நீந்திக் கரை சேர்வார். மற்றவர் இறைவன் அருள் இல்லாததால் துன்பமெனும் கடலில் மூழ்கி சிரமத்தை எதிர் கொள்வர்.

  //தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டனை கிட்டும் என்பது போன்ற கருத்துக்கள் எதுவும் திருக்குறளில் இல்லை.//

  பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
  இகவாவாம் இல்லிறப்பான் கண்
  குறள் 15:146

  காம வெறியால் கள்ள தொடர்பு கொண்டு ஒழுகும் கயவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கும் ஒருங்கே வந்து சேரும். இதனால் இம்மை மறுமை ஆகிய இரு வகை பயனையும் இழத்தல் உறுதி என்கிறார் வள்ளுவர்.

  //மற்ற மதங்களைப்போல ஆனல் அவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபட்ட மதம் என்று இருந்து இருக்க வேண்டும்//

  அடிப்படையில் வேறுபடவெல்லாம் இல்லை. இந்த உலகில் நற்கருமங்கள் புரிந்து இறைவனை வணங்கி உயிரினங்களிடத்தில் அன்புடன் நடந்து கொலை, பொய், திருட்டு, விபசாரம் போன்றவற்றிலிருந்து விலகி தூய வாழ்வு வாழும் ஒருவனுக்கு மறுமை வாழ்வு சுகமாக இருக்கும் என்பதைத்தான் பல குறள்களில் வள்ளுவர் கூறுகிறார். இதைத்தான் உலக மதங்களும் சொல்கின்றன. எனவே எல்லா வேதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான்.

  1. Avatar
   NEEDHIDEVAN says:

   TRUE.We in the universe in a tiny planet revolving around a tiny star among the billions and billions of stars , one among the multitude of galaxies are arrogant enough to assume to know the external force (give a name god) and fight among ourselves,while we are not sure of the nature and reason for our evolution. physicists discuss parallel universe, wave function of universe, anthropic principle , too many coincidence universal physical constant nearly 0. proton decay time ,distance of earth to sun, tilting23.5 degrees, magnetic field of earth, accidental triplicating of intelligent genes in sea vertiberates precursor to man etc. why fight giving names to supposed god . ACT as per thirukkural doctrine. DARK ENERGY DARK MATTER YET UNEXPLAINED PERVADING THE UNIVERSES do not live in middle ages

  2. Avatar
   R Venkatachalam says:

   அன்பு மலர்மன்னன் ஐயா அவர்களுக்கு தங்கள் மறுமொழிக்கு நன்றி. நான் இறைவனுடைய எட்டு தன்மைகள் முதல் எட்டு குறட்பாக்களில் குறளுக்கு ஒன்றாக இருக்கின்றன என்ற கருத்தை என்னுடைய புத்தகத்தில் முன் வைத்துள்ளேன். வாலறிவன் என்றால் முக்காலத்தின் ஊடே அனைத்தையும் அறிந்தவன் என்று பொருள் கூறி உள்ளேன். அப்படிப்பட்ட ஒருவன் முன்னால் நிற்கும் கற்றவன் தன்னை கடலின் முன்னால் பிரமித்து நிற்கும் ஒருமனிதனைப்போலத்தான் உணர்வான் அல்லவா? அவன் கற்றவன் என்பதால் அவனுக்கு இயல்பாக மேலும் மேலும் கற்க வேண்டும் என்ற வேட்கை எழ அவன் கட்வுளிடம் மேலும் மேலும் கல்வியைத் தர வேண்டுவான். அவ்வையார் சங்கத்தமிழ் மூன்றும் தா என்று கேட்டமாதிரி. திருக்குறளில் எங்கும் நான் அறிந்தவரை கடவுளிடம் வேண்டுகோள் வைத்து பிராத்தனை செய்தால் அவன் வேண்டுகோளினை நிறைவேற்றுவான் என்று கூறப்படவில்லை. பிறவிப்பெருங்கடல் நீந்துவது என்பதற்குப் பொருள் கடவுள் ஒருவனே உண்மையான் பொருள் அவனிடமிருந்து பிரிந்து வந்த நாம் (சுற்றுலா சென்ற ஒருவன் சுற்றுலாவில் இன்புற்று இருக்கும்போதும் தன்னுடைய இல்லத்தின் மீது அவன் சிந்தை நிலைகுத்தி இருப்பது போல) இவ்வுலகம் ஒரு ஆன்மிகப்பயிற்சிக்களம் இங்கே நான் பயிற்சிக்கு வந்து உள்ளேன்.பயிற்சி வெற்றிகரமாக முடிந்தவுடன் நான் கடவுளை அடைந்து விடுவேன். இந்த உலகின் பொருள்களெல்லாம் பயிற்சிக்கான பொருள்கள் என்னுடைய வாழ்வின் நத்தமும் கேடும் என்னுடைய பயிற்சியின் உள்ளீடுகளே என்பதை உணர்ந்து வாழ்வதுதான் சரணாகதி. அச்சரணாகதியில் உள்ளவர்களுக்கு துன்பத்தையும் இன்பத்தையும் எதிர்கொள்வது எளிது. என்பது நான் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் // இறைவன் அடிசேரா தார் என்பதனை நான் புரிந்துகொண்ட விதம். தங்களுடைய மேலான மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.

 40. Avatar
  மலர்மன்னன் says:

  நான் சவூதிகள் மட்டும்தான் அந்த விசேஷ ரயிலில் ஏறலாமா என்று சுவனப் பிரியனிடம் கேட்கவில்லை. அரபிகள் என்றுதான் கேட்டேன். அவர் எழுதுவதைப் பார்த்தால் சவூதி அரபிகள்தான் அரபிகள் என்று அவர் சொல்வதைப் போல உள்ளது. ஆஃப்ரிக்க கறுப்பின இஸ்லாமியர்கள், ஆசிய மாநிற இஸ்லாமியர்கள், ஷியாக்கள் அதில் செல்ல அனுமதி உண்டா என்று தெரிவித்தால் நல்லது. அதேபோல் பொதுவில் நடைபெறும் கூட்டு உண்ணலில் ஆஃப்ரிக்கக் கறுப்பின, ஆசிய மாநிற இஸ்லாமியர் தட்டுகளிலிருந்து அரபிகள் எடுத்து உண்பது உண்டா என்று தெரிவித்தால் தெளிவு பிறக்கும். ஹஜ்ஜுக்குச் சென்று வந்த சில லப்பைகள் சொன்னதால்தான் கேட்கிறேன். ஏனெனில் சரியான ஆதாரம் இன்றி நான் எதுவும் பதிவு செய்வதில்லை. இவை உறுதி செய்யப்பட்டுவிட்டால் எனக்கு வசதியாக இருக்கும்.
  -மலர்மன்னன்

 41. Avatar
  மலர்மன்னன் says:

  அடிப்படையான ஹிந்து தத்துவமும் தர்மம்-கர்மம் என்ற இரு தூண்களின் மேல் நிற்பதுதான்.ிங்கு பாவ-புண்ணியக் கருத்தாக்கங்களே பாமரத் தனமான புரிதலில் உள்ளவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் பாவம் என்ற கருத்தாக்கமோ அஹிம்சை என்ற கருதாக்கமோ ஹிந்து தத்துவ ஞானத்தில் இல்லை. இவற்றை யெல்லாம் ஒப்புக்கொண்டால் பின் சிங்கம், புலிகளை எல்லாம் இறைவன் ஏன் படைத்தான், அவனுக்கு ஈவிரக்கமில்லையா என்ற கேள்வி எழுந்து அதற்கு பதில் சொல்லும்படி ஆகிவிடும். மிகவும் விரிவாகப் பேச வேண்டிய தத்துவம் இது. கீதையைப் படிக்கப் படிக்க, படித்ததையே திரும்பவும் படிக்கப் படிக்க எல்லாம் விளக்கமாகும்.
  -மலர்மன்னன்

 42. Avatar
  punaipeyaril says:

  ‘நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்’ –> இது ஒரு ஜோக்… அரேபிய முஸ்லீம்கள் மற்ற மக்களை மிக மிக கீழாக நடத்துபவர்கள்.

 43. Avatar
  suvanappiriyan says:

  திரு மலர் மன்னன்!
  //ஆஃப்ரிக்க கறுப்பின இஸ்லாமியர்கள், ஆசிய மாநிற இஸ்லாமியர்கள், ஷியாக்கள் அதில் செல்ல அனுமதி உண்டா என்று தெரிவித்தால் நல்லது.//

  இந்த வருடம் ஹஜ் பயணம் மேற் கொண்ட எனது உறவினர் இந்த ரயிலை பயன்படுத்தியதாக சொன்னார். மிக வசதியாக இருந்ததாம். சீசன் டிக்கெட் போல ஒரு முறை எடுத்து விட்டால் அதை காட்டி ஏழு நாட்களும் பயணிக்கலாம். இங்கு நிறத்துக்கோ, மொழிக்கோ, நாட்டுக்கோ, பிரிவுக்கோ எந்த தடையும் இல்லை.

  //அதேபோல் பொதுவில் நடைபெறும் கூட்டு உண்ணலில் ஆஃப்ரிக்கக் கறுப்பின, ஆசிய மாநிற இஸ்லாமியர் தட்டுகளிலிருந்து அரபிகள் எடுத்து உண்பது உண்டா என்று தெரிவித்தால் தெளிவு பிறக்கும்.//

  இங்கு சவுதி அரசு சார்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குர்ஆன் வகுப்பு நடக்கும். அரபி மொழியும் பயிற்றுவிக்கப்படும். இதில் அதிகமாக ஆப்ரிக்க கறுப்பு இனத்தவர், இந்தியா, பாகிஸ்தான், பங்களாNதுஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருப்பர். ஆசிரியர்களாக சவுதிகள் உண்டு. பார்வையாளர்களாக ஆர்வத்தில் சில சவுதிகளும் வருவதுண்டு. வகுப்பு முடிந்தவுடன் அரவு செலவில் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்படும். பெரிய தட்டில் நான்கு பேர் உட்காருவோம். சிலர் அரபுகளாகவும், ஆப்ரிக்கர்களாகவும், ஆசியர்களாகவும் பிரிந்து உட்காருவர். இதனை கவனிக்கும் சில சவுதிகள் ஆட்களை மாறி உட்கார சொல்வார்கள். அதுபோல் ஒரு சவுதி, ஒரு ஆப்ரிக்கன், ஒரு பானிஸ்தானி, ஒரு இந்தியன் என்று ஒரு தட்டில் ஒன்றாக உட்கார வைப்பார். பல முறை இவ்வாறு நான் சாப்பிட்டுள்ளேன்.

  சவுதி அமைச்சர் இளவரசர் தலாலின் தம்பி எங்களோடு ஒரு முறை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளார். நான் கொடுத்த லெக்சரும் சவுதி டிவியிலும் ஒளிபரப்பானது.

  http://www.quranreading.com/blog/ramadan/get-prepared-to-gather-blessings-in-ramadan/
  http://www.youtube.com/watch?v=5t9hLoqFdJM

  //ஹஜ்ஜுக்குச் சென்று வந்த சில லப்பைகள் சொன்னதால்தான் கேட்கிறேன்.//

  லெப்பை, ராவுத்தர் என்றால் அரபுகள் சிரிப்பர். ஏனெனில் அப்படி ஒரு பிரிவு இஸ்லாத்திலேயே கிடையாது. இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷில் மட்டுமே இந்த சொல்லாடல். ஆதியில் இந்துவாக இருந்து மதம் மாறியதால் அங்குள்ள பழக்கம் இங்கும் வந்திருக்கலாம். நம் தமிழகத்திலேயே தப்லீக் ஜமாத் நடத்தும் கூட்டத்தை நீங்களும் சென்று அங்கு எவ்வாறு சாப்பிடுகிறார்கள் என்று பார்கலாம்.

 44. Avatar
  Ram says:

  சுவனபிரியன், லப்பை என்போர் கடல் வணிகம் மூலம் மேற்கு நாடுகளில் இருந்து இங்கு குடி அமர்ந்தோர் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். அவர்கள் கடலோர பட்டினங்களிலேயே பல தலை முறையாக வசிப்பதையும் காணலாம். நீங்கள் அவர்கள் மதம் மாறியவர்கள் என்கிறீர்களா?

 45. Avatar
  suvanappiriyan says:

  திரு ராம்!

  //சுவனபிரியன், லப்பை என்போர் கடல் வணிகம் மூலம் மேற்கு நாடுகளில் இருந்து இங்கு குடி அமர்ந்தோர் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். அவர்கள் கடலோர பட்டினங்களிலேயே பல தலை முறையாக வசிப்பதையும் காணலாம். நீங்கள் அவர்கள் மதம் மாறியவர்கள் என்கிறீர்களா?//

  கடற்கரையோரம் வந்து தங்கிய அரபுகள் மிக சொற்பமே! இங்குள்ள பெண்களை திருமணம் முடித்து இந்நாட்டு குடிமக்களாகவே ஆகி விட்டனர். மொத்த மக்கள் தொகையில் வெளி நாட்டிலிருந்து குடியேறிய அரபுகள் 2 சதவீதம் கூட தேறாது. ஆனால் இன்று இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை 20 கோடிக்கும் மேல். இவர்கள் எல்லாம் அரபு நாட்டு இறக்குமதியா?

  புரோகித தொழில் செய்பவர்களை லெப்பை என்று அழைப்பர். மரக்கலங்களை செய்து கடல் வியாபாரம் செய்பவர்களை மரக்கலாயர் அதாவது மரைக்காயர் என்பர். குதிரை வியாபாரம் செய்பவர்களை ராவுத்தர் என்பர். இவை எல்லாம் தொழிலை குறிக்க அமைந்த பெயர்கள். திருமணம் போன்ற அனைத்து சம்பந்தங்களும் இவர்களுக்குள் நடந்தேறி வருகிறது. இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இங்கு கிடையாது.

 46. Avatar
  suvanappiriyan says:

  புனை பெயரில்!

  //‘நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்’ –> இது ஒரு ஜோக்… அரேபிய முஸ்லீம்கள் மற்ற மக்களை மிக மிக கீழாக நடத்துபவர்கள்.//

  http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post.html

  கழிவறை முதற்கொண்டு சுத்தம் பண்ணும் ஒரு பங்களாதேஷத்தவருக்கு பின்னால் அரபுகள் நிற்பதை இந்த லிங்கில் சென்று பாருங்கள். நம்மூரில் தோட்டி என்று அவப் பெயர் கொடுத்து சமூகத்திலிருந்து ஒதுக்குகிறோம். ஆனால் அரபு நாட்டிலோ இவரை தொழுகைக்கு தலைவராக நிறுத்தி மற்ற அரபுகள் பின்னால் நிற்பதை பாருங்கள். இந்த நிலை தமிழகத்தில் அதுவும் இந்து மதத்தில் சாத்தியமா? முதலில் கோவிலிலே சாமி கும்பிட அனுமதிப்பீர்களா? ஒரு தோட்டியை புரோகிதராக்கி அழகு பார்க்க நீங்களோ மலர் மன்னனோ தயாராவீர்களா?

  1. Avatar
   paandiyan says:

   //கழிவறை முதற்கொண்டு சுத்தம் பண்ணும் ஒரு பங்களாதேஷத்தவருக்கு பின்னால் அரபுகள் நிற்பதை இந்த லிங்கில் சென்று பாருங்கள்// you are giving all wrong inputs here happily.you think that based on some link inputs we started beleive the contents and not use our brains…
   can you talks about sudan in this senario? and also pakisthan/bangaldesh issue, oman issues??? etc???

   //இந்து மதத்தில் சாத்தியமா?//
   dont ask this questions here. read all our books. cut and paste jobs is very easy for me… and again you are going to repeat the same in other article….

   1. Avatar
    K A V Y A says:

    Maybe u r correct to halt him.

    Still I wd like to know from u whether a man who cleans the toilets can b a priest in a Vedic Hindu temple? Don’t say pl the books permit and he can become one if he follows certain way of life. In reality? And, the way of life I referred to includes his work as a cleaner of toilets?

    1. Avatar
     punaipeyaril says:

     கக்கூஸ் சுத்தம் பண்ணுவது எந்த தொழில் செய்ய தகுதியோ அதைத் தான் செய்ய முடியும். சரி, கக்கூஸ் கழுபுவனுடன் சௌதி ராஜா டின்னர் சாப்பிடுவாரா…? கக்கூஸ் கழுபுவனுபவன் பிளேட்டில் இருந்து மன்னர் பிரியாணி எடுத்துத் துண்ணுவாரா…? இல்லை அவனை கட்டிப் பிடித்து உம்மா கொடுப்பாரா..? ஆனால் இந்துவாகிய காந்தி செய்துள்ளார்…

 47. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன்,

  சகிப்பில்லாத்தன்மை என்பது ஆப்ரஹாமிய மதங்களின் அடிப்படைக் குறைபாடு. ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைக்கும் அனைத்து சமயங்களிலும் தன் சமயத்தைப் பின்பற்றாதவர் மீளா நரகம் புகுவர் போன்ற கோட்பாடுகளைப் பார்க்க இயலாது. மாற்றுச் சிந்தனையை மரண தண்டனை மூலம் எதிர்கொள்ளும் முறை இஸ்லாமிய உலகில் மிகப்பரவலாக உண்டு. இதை நீங்கள் மறுக்க இயலாது. ஆனால் அவ்வாறு இல்லாத அமேரிக்க ஐரோப்பிய தேசங்களில் க்றைஸ்தவ உலகில் மாற்றுச் சிந்தனைகள் துளிர்த்து வளர்ந்து வருவது கண்கூடு. ஹிந்துஸ்தானத்தில் நாஸ்திகம் என்பது காலங்காலமாக தனியொரு கோட்பாடாக சிந்தனைக்கூறாக வளர்ந்து வந்துள்ளது. ஆஸ்திக சிந்தனைக்கூறுகளைக் கொண்ட சமயத்தோரும் பூர்வபக்ஷம் (மாற்றுக்கருத்து) என்ற படிக்கு அதை முறையாக அறிந்து அதற்கு தத்துவார்த்த ரீதியாக தங்களது வேறுபட்ட கருத்தை முன்வைப்பது பல தத்துவார்த்த நூற்களில் காணக்கிட்டும்.

  அனல் ஹக் ( I am the truth ) என்று சொன்ன மன்ஸூர் அல் ஹல்லாஜின் கதி என்னாயிற்று

  சவூதியில் ஷியாக்களின் மஸ்ஜிதுகள் தகர்க்கப்படுகின்றன என்று சமீபத்தில் இதே இணைய தளத்தில் பதிவாகியுள்ளது.

  வன்முறையில் நாட்டம் சகிப்புத்தன்மை அறவே இல்லாமை போன்ற குறைபாடுகள் இஸ்லாமிய சமூஹங்களில் குறைந்தாலொழிய நாஸ்திகமென்ன மாற்றுக்கருத்துக்கள் துளிர் விடுவதற்குக் கூட அப்பொழுது தான் ஒரு துவக்கம் கிட்டும்.

  \உருதுவில் உள்ள அழகே அரபியிலிருந்து வந்ததுதன் என்பது என் எண்ணம். \

  \அரபியையும் பார்சி மொழியையும் கலந்து மொகலாயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய மொழி உருது.\

  அன்பார்ந்த ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய,

  மேற்கண்ட கூற்றுகளில் தாங்கள் அறிந்த ஆனால் மிக முக்யமாக விடுபட்ட விஷயத்தைப் பதிவு செய்கிறேன்.

  அக்ஷரங்களுக்கு பார்ஸி லிபியன்றி காசி நாகரிப்ரசாரணி சபாவின் கருத்தை ஏற்ற சில உருது பாஷை அறிஞர்கள் தேவநாகரி லிபியையும் உருதுமொழிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். பார்ஸி லிபி அறியாது ஆனால் தேவநாகரி லிபி அறிந்து பின்னும் உருது பாஷையை அறியும் அன்பர்களின் சௌகர்யத்திற்காக.

  உருது பாஷையின் க்ரியாபதங்கள் (வினைச்சொற்கள்) அனைத்தும் ஹிந்தி பாஷையினது.

  பெயர்ச்சொற்கள் மட்டும் பெரும்பாலும் பார்ஸி / அரபி பாஷையினது. ஹிந்திச்சொற்களும் கூட விதிவிலக்குகளாக உபயோகத்திலுள்ளன என்பதும் உண்மை.

  கானா (உண்ணல்) பீனா (குடித்தல்) ஆனா (வருதல்) ஜானா (செல்லுதல்) உட்னா (எழுதல்) பைட்னா (அமரல்) என உருதுவில் ப்ரயோகத்தில் உள்ள வினைச்சொற்கள் எல்லாம் ஹிந்தி பாஷையினது.

  பொதுவில் புழக்கத்தில் இருக்கும் ஹிந்தி (இதை ஹிந்துஸ்தானி என்பர்) பாஷையில் உருதுவின் பெயர்ச்சொற்கள் மிக அதிகமாகக் காணக்கிட்டும். உதாரணங்கள் :- உருது – தமிழ்-ஹிந்தியில் – ஆத்மி – ஆண் – புருஷ்; ஔரத் – பெண் – ஸ்த்ரீ; ஸச்- உண்மை- ஸத்ய; ஜூட் – பொய் – அஸத்ய; கிலா – கோட்டை – துர்க்; குஸ்பைட் – வந்தேறி – அநாதிக்ருத் ப்ரவேசி.

  சுருங்கச்சொல்ல வேண்டுமானால் மிகவும் பொலிவான உருது என்ற பதுமைக்கு உயிர் கொடுத்து இயக்குவது ஹிந்தி பாஷை.

 48. Avatar
  மலர்மன்னன் says:

  ஸ்ரீ க்ருஷ்ணகுமார், உர்தூ ஹிந்துஸ்தானத்திலேயே உருவாக்கப்பட்ட மொழி என்பதால் தாங்கள் தெரிவித்துள்ள உண்மைகளை நான் பதிவு செய்யாது விட்டுவிட்டேன். அரபி மொழியைப் பற்றி மட்டுமே பேச வேண்இய அவசியம் இருந்ததால் பாரசீக மொழி குறித்தும் ஏதும் சொல்லத் தோன்றவில்லை. காலஞ் சென்ற என் தந்தையார் 18 மொழிகள் அறிந்தவர். அவரது கால் தூசுக்கும் நான் இணையனவன் இல்லெயெனினும் அவர் வாயிலாகச் சில ஐயங்களைத் தீர்த்துக் கொண்டதுண்டு. தாங்கள் முழுமை செய்தமைக்கு நன்றி.
  -மலர்மன்னன்

 49. Avatar
  suvanappiriyan says:

  திரு க்ருஷ்ணகுமார்!

  //ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைக்கும் அனைத்து சமயங்களிலும் தன் சமயத்தைப் பின்பற்றாதவர் மீளா நரகம் புகுவர் போன்ற கோட்பாடுகளைப் பார்க்க இயலாது.//

  சில ஆண்டுகளுக்கு முன் இந்து மதத்தையும் குர்ஆனின் வசனங்களையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினேன். தவறான நடத்தை உடையவர்களுக்கு நரகம் சித்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்து மத வேதங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. அதையே உங்களுக்கு பதிலாக தருகிறேன்.

  1)’ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்’
  10 : 16 : 5 – ரிக் வேதம்

  ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
  21 : 35 – குர்ஆன்

  2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
  6 : 122 : 3 – அதர்வண வேதம்

  பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
  3 : 133 -குர்ஆன்
  மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
  43 : 70 -குர்ஆன்

  3) சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
  4 : 34 : 6 – அதர்வண வேதம்

  இறைவனை அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் தரப்படும். அதில் மாற்றமடையாத தண்ணீரைக்கொண்ட ஆறுகளும், சுவை கெட்டுப் பொகாத பாலாறுகளும், அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும், தூய்மையான தேன் ஆறுகளும்இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடத்திலிருந்து மன்னிப்பும் உண்டு.
  47 : 15 – குர்ஆன்
  இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற் செய்தி.கீழ்பகுதியில்ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.
  57 : 12 – குர்ஆன்

  4). யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
  4 : 5 : 5 – ரிக் வேதம்

  கெட்டவர்கள் நரகத்தில் வீழ்த்தப் படுவார்கள்
  11 : 106 – குர்ஆன்
  நரகம் மிகக் கெட்ட தங்கும் இடமாகும்.
  67 : 6 – குர்ஆன்

  5). நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

  – ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

 50. Avatar
  punaipeyaril says:

  நரகம் தீவிரவாதிகளின் கைப்பிடியில் இருப்பது போலிருக்கே… அப்ப புஷ் தான் காப்பத்தனும்… :) இதெல்லாம் இம்மையில் நல்லவர்களை பயமுறுத்தி அரசர்களும், அர்ச்சகர்களும், ஆட்சியாளர்களும் நம்மை ஆள கண்டுபிடித்த கட்டுக்கதைகள்…

 51. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  ———திரு க்ருஷ்ணகுமார்!
  //ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைக்கும் அனைத்து சமயங்களிலும் தன் சமயத்தைப் பின்பற்றாதவர் மீளா நரகம் புகுவர் போன்ற கோட்பாடுகளைப் பார்க்க இயலாது.//
  சில ஆண்டுகளுக்கு முன் இந்து மதத்தையும் குர்ஆனின் வசனங்களையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினேன். தவறான நடத்தை உடையவர்களுக்கு நரகம் சித்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்து மத வேதங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. அதையே உங்களுக்கு பதிலாக தருகிறேன்.———

  அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன்,

  நான் சொல்ல வந்த விஷயமும் தாங்கள் அளித்த பதிலில் பேசப்படும் விஷயமும் வேறானது. ஸ்வர்க நரகம் பற்றி விளக்கும் அனைத்து உலக மதங்களும் தவறுக்கு நரகத்தைக் காட்டத்தான் செய்கின்றன. அது ஒற்றுமை.

  வேற்றுமை – தாங்கள் நான் சொல்லிய விஷயத்தை அடைப்புக்குறிக்குள் கொணர்ந்து பதிலிறுக்க விழைந்ததானதில் தெளிவாக உள்ளதே!!!!!

 52. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \ஒரு தோட்டியை புரோகிதராக்கி அழகு பார்க்க நீங்களோ மலர் மன்னனோ தயாராவீர்களா?\

  அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன்,

  ஹிந்து மதம் என்பது ஒரு பெரும் ஆல வ்ருக்ஷம். இதில் சடங்குகளில் நம்பிக்கையற்ற சமயங்களும் அடங்கும்.

  சடங்குகளில் நம்பிக்கை உள்ளது வைதிக சமயம். இதில் சடங்குகளை நடத்தி வைப்பவர் புரோஹிதர். புரோஹிதராவதற்காக ஒருவர் சடங்குகளை நடத்தி வைக்கத் தேவையான சாஸ்த்ராதிகளை வாசிக்க வேண்டும். இன்றைக்கு காசி, புணே போன்ற பெரு நகரங்களில் முறையாகப் பௌரோஹித்யம் கற்று பெண்மணிகளும் புரோஹிதர்களாக உள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் எனக்குத் தெரிந்து ஆரிய சமாஜத்தினர் மற்றும் பல வைதிக அமைப்புகள் சமூஹத்தில் வைதிக வாழ்க்கை முறையில் பற்று உள்ள யாரொருவருக்கும் வேதங்களும் பௌரோஹித்யமும் கற்றுக்கொடுக்கின்றனர். இதில் கற்றுக்கொள்ள வருபவர் ஆணா பெண்ணா தோட்டியா தொண்டைமானா ப்ராம்மணனா ஹிந்துவா முஸல்மானா க்றைஸ்தவனா என்றெல்லாம் கேட்பதில்லை. வைதிக வழிமுறையில் கற்க விழையும் அன்பருக்கு உள்ள பற்று மட்டும் தகுதியாகப்பார்க்கப்படுகிறது.

  ஏன் அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன் அவர்கள் இந்த க்ஷணம் வைதிக வழியைப் பின்பற்றத் தயார் என்றால் சொல்லுங்கள். வேதம் பௌரோஹித்யம் இவையெல்லாம் உங்களுக்கு சொல்லிவைப்பதற்கு அடியேன் ஜவாப்தாரி.

  1. Avatar
   Paramasivam says:

   But 207 TN youth trained by TN Govt were not allowed to become Archagars.Even the Veda teacher who taught these trainees were assaulted.A Dalit youth by name Nagamuthu who was serving as priest in a Theni temple was prevented by caste Hindus from doing priestly work and a Brahmin priest was appointed in his place.Since he and his family was pressurised to withdraw police complaint by powerful people,Nagamuthu has committed suicide(Times of India dt 9-12-12)

 53. Avatar
  suvanappiriyan says:

  திரு க்ருஷ்ண குமார்!

  //ஏன் அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன் அவர்கள் இந்த க்ஷணம் வைதிக வழியைப் பின்பற்றத் தயார் என்றால் சொல்லுங்கள். வேதம் பௌரோஹித்யம் இவையெல்லாம் உங்களுக்கு சொல்லிவைப்பதற்கு அடியேன் ஜவாப்தாரி.//

  குர்ஆன் தவ்ராத்தையும், இன்ஜீலையும், ஜபூரையும், இப்றாஹீமின் ஆகமங்களையும் தவிர்த்து முதல் வேதம் (ஸீஹீஃபில் உலா), முன்னோர்களின் வேதம் (ஜீபூருல் அவ்வலீன்) என்ற பெயர்களையும் குறிப்பிடுகிறது. முதல் வேதம், முன்னோர்களின் வேதம் என்றால் குர்ஆன், பைபிள், தோரா, ஸபூர், ஆப்ரஹாமின் ப்றாகீமின் ஆகமங்களுக்கு முந்தியதாகத்தான் இருக்க வேண்டும்.

  இந்த வேதங்கள் அருளப்பட்ட தூதர்களுக்கு முந்தைய தூதர் நோவா தான். நோவா (நூஹ்) நபியின் சமுதாயம் தான் ஸாபியின்கள். ஸாபியீன்கள் தான் இக்காலத்தில் இந்துக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்துக்கள் தங்களிடையே உள்ள வேதங்களை ‘ஆதிகிரந்தம்’ என்றும் ‘ ஆதி கியான்’ என்றும் கூறுகின்றனர். ‘ஸீஹீபில் உலா’ ‘ஜீபூருல் அவ்வல்’ என்னும் பெயர்களுக்கு இணையான சமஸ்கிரத சொல் ‘ஆதி கிரந்’, ‘ஆதி கியான்’ ஆகும். இதன் மூலம் குர்ஆன் கூறும் முன்னோர்களின் வேதம் என்பது ‘ஆதி கிரந்தம்’, ‘ஆதிகியான்’ என்பது தெளிவாகிறது.

  எனவே இன்று வரை நான் இந்து மதம் கூறும் வைதீக வழியில்தான் சென்று கொண்டிருக்கிறேன். தாங்கள் என்னைப் பற்றி கவலைப்படுவதை விட ஆதி திராவிடர்களுக்கு இந்த வேதங்களை பயிற்று வித்து புரோகிதராக்கினால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அவர்களின் மதமாற்றமும் நிற்கும் வழி உண்டாகும். ஆனால் இவ்வாறு பார்ப்பணர்களை தவிர மற்றவர்களுக்கு வேதம் கற்பிக்கக் கூடாது என்று செந்தில் என்ற பார்பணர் தமிழ் இந்துவில் எழுதியதை இங்கு நான் தருகிறேன். இதற்கு தங்களின் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  இனி செந்தில் என்ற பார்பணரின் பின்னூட்டத்தைப் பார்ப்போம்.

  3. வேதம் கற்பது என்றால் கிறித்துவர்கள் பைபிள் படிப்பது போல எண்ணிக்கொள்வதை நிறுத்துங்கள்.. பைபிளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.. அது போல, வேதத்தையும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதுதான் உங்கள் சித்தாந்தமும் நிலைப்படும்.. இது ஒரு ரியாக்ஷனரி வேலை என்பதை அறிவீர்களா?

  4. வேதத்தை யார் படிக்கலாம்.. படிக்க கூடாது என்பது சாஸ்திரத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.. அதை மாற்ற நீங்கள் யார்.. உங்களுக்கு என்ன தகுதி.. அதை முதலில் சொல்லுங்கள்.. காலம் காலமாக பிராமனர்கள் தான் முறையாக வேதத்தை பயின்று பாதுகாத்து வந்துள்ளார்கள்.. அவர்களுக்கே சாஸ்திரத்தை மாற்றும் உரிமை இல்லதபொழுது, இங்கே இருக்கும் துபாஷி பிராமணர்களுக்கும் மற்ற இந்துதுவவாதிகளுக்கும் எப்படி உரிமை வந்தது..

  1. Avatar
   தங்கமணி says:

   பரவாயில்லையே. எந்த இந்து ஒரு முஸ்லீம் மாதிரி பேசுகிறாரோ அவருடைய பின்னூட்டத்தை நன்றாக நினைவு படுத்திகொள்கிறார். ஆனால், இந்த சமணர்கள் பற்றி பத்தாயிரம் தடவை சொன்னாலும், அவரது நினைவில் தங்கமாட்டேன் என்கிறது.
   இந்து மதத்தில் யார் பிற்போக்காளர்களாக இருக்கிறார்களோ அவர்களையே இந்து மதத்தின் ராயல் அத்தாரிட்டி போல காட்டும் வேலையை சுவனப்பிரியன் போன்றோரும், கிறிஸ்துவ மதமாற்றிகளும் வெகுகாலமாக செய்து வருகிறார்கள்.

   இந்து மதத்திற்கோ யாரும் ”போப்பாண்டவர்” கிடையாது என்பது மட்டுமல்ல, அதற்கு “இறுதி இறைமகன்” என்பது கிடையாது என்பது மட்டுமல்ல, அதற்கு யாரும் ”இறுதி தூதரும்” கிடையாது என்பதும் இவர்கள் மண்டையிலும் ஏறமாட்டேன் என்கிறது.

  2. Avatar
   கிருஷ்ணா says:

   முஸ்லீம்களிடம் ஒரு fashion ஆகிவிட்டது, நாங்கள் வேதத்தைத் தான் பின்பற்றுகிறோம் என்பதும், நம்மைவிட அவர்களுக்குத்தான் வேதமந்திரங்கள் மந்திரஎண் உட்பட தெரியும் என்பதும். அவர்களுக்கு சௌகரியமில்லாத பகுதிகளை இடைச் செருகல் என்பதும். வேதம் பிரம்மா, விஷ்ணு, சிவனைப் பற்றிப் பேசுவது எந்த அளவு வெள்ளிடை மலையோ அந்த அளவு வெள்ளிடைமலை அல்லாவைப் பற்றியோ, ஏசுவைப் பற்றியோ பேசவில்லை என்பதும். (அல்லாவைத் தெய்வமென்று கூறியிருந்தால் ஏசுவை தெய்வமாகக் கூறியிருக்க வழியில்லை. மறுதலையாக ஏசுவைத் தெய்வமாகக் கூறியிருந்தால் அல்லாவைத் தெய்வமாகக் கூறியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இருவருமே உரிமை கொண்டாடுகிறார்கள். ஆகவே வேதம்தான் இறுதி தீர்ப்பு சொல்லமுடியும் என்பதை இருவருமே ஒத்துக்கொள்கிறார்கள்.) அப்படியானால் பேசாமல் சிவனையே, நாராயணனையே வணங்கிவிடுவதுதானே.

  3. Avatar
   ஸ்வாமீ வேதநிஷ்டாநந்த ஸரஸ்வதீ says:

   ஐயா நான் கூட சூத்திரன்தான். நான் எந்த விஷயமும் மறுக்கப்படவில்லை. (மறுக்கிற சிலர் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை மறுக்காதவர்களும் இருக்கிறார்கள் என்பது.) மிலேச்சர்களான வெளிநாட்டவர்கூட உலகெங்கணுமிருந்து என்னுடன் படித்தார்கள். தாங்கள் தமிழில் எளிமையாகப் படிக்க விரும்பினால் இவற்றை அணுகுங்கள்.
   http://vivekanandaashram.org/
   http://vidyapeetamcoimbatore.yolasite.com/
   http://www.hindudharmavidyapitham.yolasite.com
   http://hindudharmavidyapitham.blogspot.com/ 
   http://www.poornalayam.org
   ஸம்ஸ்க்ருதத்திலேயே படிக்க விரும்பினால், ஆங்கில அறிவு அவசியம், இதில் தொடர்புகொள்ளுங்கள்.
   http://www.dayananda.org/
   http://www.sumukam.wordpress.com/discourses/swami-paramarthananda/
   http://www.vedantavidyarthisangha.org/
   மேலும் பல தளங்கள் சின்மயா, இராமகிருஷ்ணமடம் உட்பட உண்டு. கடல்போல. சொல்லித்தருவதில்லை, சமமாக நடத்துவதில்லை என்று பழைய பல்லவியையே எத்தனை நாளைக்குப் படுவீர்கள். வேதத்திலேயே ரைக்வன் என்ற சூத்திரனிடம் போய் உயர்ஜாதிக்காரன் கற்றதாக, மன்னர்களிடம் அந்தணர்கள் போய் கற்றதாக பரக்கக் காணலாம்.

  4. Avatar
   ஸ்வாமீ வேதநிஷ்டாநந்த ஸரஸ்வதீ says:

   விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை என்ற அமைப்பை நடத்தி அவர்களது தரத்தை மேம்படுத்த அறிவு, பொருளாதாரம் என்ற வகைகளிலெல்லாம் முயன்றுவருகிறது. ஆதி இந்துக்களுக்காக செயல்படும் அமைப்பே அது. உங்கள் மொழியில் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

 54. Avatar
  A.K.Chandramouli says:

  சரியாக சொன்னீர்கள் கிருஷ்ணகுமார் .எல்லா ஜாதியினருக்கும் பூஜா விதி முறைகள் சொல்லிக்கொடுக்கும் பாடசாலைகள் உள்ளன. சில சமயங்களில் சுவனப்பிரியன் கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறார். அடக்கி வாசித்தல் நல்லது.

 55. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //பரவாயில்லையே. எந்த இந்து ஒரு முஸ்லீம் மாதிரி பேசுகிறாரோ அவருடைய பின்னூட்டத்தை நன்றாக நினைவு படுத்திகொள்கிறார்.//

  செந்தில் சொல்வது உண்மையா இல்லையா? அதற்கு பதில் சொல்லுங்கள்.

  //இந்து மதத்தில் யார் பிற்போக்காளர்களாக இருக்கிறார்களோ அவர்களையே இந்து மதத்தின் ராயல் அத்தாரிட்டி போல காட்டும் வேலையை சுவனப்பிரியன் போன்றோரும், கிறிஸ்துவ மதமாற்றிகளும் வெகுகாலமாக செய்து வருகிறார்கள்.//

  இந்து மதத்தின் விவேகானந்தரை நான் மிகவும் மதிக்கிறேன். அவரது பல சிந்தனைகள் அருமையானவை. அதே அளவு அத்வானியையும் மோடியையும் வெறுக்கிறேன். காரணம் அவர்களின் செயல்பாடு

  //இந்து மதத்திற்கோ யாரும் ”போப்பாண்டவர்” கிடையாது என்பது மட்டுமல்ல, அதற்கு “இறுதி இறைமகன்” என்பது கிடையாது//

  இஸ்லாத்திலும் எந்த போப்பாண்டவரும் கிடையாது. உலக முஸ்லிம்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பும் கிடையாதே! இறை மகனும் இஸ்லாத்தில் கிடையாது. ‘உங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான் நான். ஒரே வித்தியாசம் எனக்கு இறைச் செய்தி வருகிறது’ என்றுதானே முகமது நபி கூறினார்?

 56. Avatar
  தங்கமணி says:

  //செந்தில் சொல்வது உண்மையா இல்லையா//
  இல்லை.
  //‘உங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான் நான். ஒரே வித்தியாசம் எனக்கு இறைச் செய்தி வருகிறது’ என்றுதானே முகமது நபி கூறினார்?//

  அப்படி இறைச்செய்தி வருகிறது என்று சொல்கிறவர்கள் எல்லாரும் டெம்போரல் லோப் எபிலப்ஸி கொண்ட மரைகழண்டவர்கள் என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

 57. Avatar
  மலர்மன்னன் says:

  //வாலறிவன் என்றால் முக்காலத்தின் ஊடே அனைத்தையும் அறிந்தவன் என்று பொருள் கூறி உள்ளேன். அப்படிப்பட்ட ஒருவன் முன்னால் நிற்கும் கற்றவன் தன்னை கடலின் முன்னால் பிரமித்து நிற்கும் ஒருமனிதனைப்போலத்தான் உணர்வான் அல்லவா? அவன் கற்றவன் என்பதால் அவனுக்கு இயல்பாக மேலும் மேலும் கற்க வேண்டும் என்ற வேட்கை எழ அவன் கடவுளிடம் மேலும் மேலும் கல்வியைத் தர வேண்டுவான். அவ்வையார் சங்கத்தமிழ் மூன்றும் தா என்று… -ஸ்ரீ ஆர். வேங்கடாசலம்//

  முக்காலங்களினூடே அனைத்தையும் அறிந்தவன் சோதிடன் அல்லன். இறைவன் / இறைவியே. அந்த இறைச் சக்தியை உணர்கையில் பிரமிப்போ, மேலும் கற்க வேண்டும் என்ற விருப்பமோ ஏற்படுவது பொருத்தமில்லை. கல்வி கரையில, கற்போர் நாள் சில. வாலறிவனை உணர்கையில் உண்டாவது பேரின்பப் பரவசமான முழுச் சரணாகதி நிலையே. மேலும் வெறும் சாகும் கல்வியால் வாலறிவனை உணர்தல் சாத்தியமுமில்லை. சாகாக் கல்வி என ஒன்று உள்ளது. அதனைக் கற்றுவிட்டால் கேள்விக்கே இடமில்லை. இங்கே வள்ளுவர் குறிப்பிடுவது சாகும் கல்வியை. அதனால்தான் வாலறிவனாகிய கடவுளை வணங்காவிடில் கற்றதனால் பயன் என்ன? என்று கேட்கிறார். அவ்வையாரும் தனக்குத் தமிழ் மூன்றும் தா எனக் கேட்கிறார் என்றால் கடவுள் கற்றுத் தேர்ந்த பண்டிதர், ஆகவே தனக்கு அவர் பாடம் சொல்ல வேண்டும் என்ற கருத்தில் அல்ல. அது தனக்கு ஆற்றலைக் கோரும் வேண்டுதல். தான் வேண்டுவதை இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பதன் நோக்கம் நாமும் அவ்வாறு நமக்கு வேண்டுவதைப் பழகிக் கொள்வதற்கான தூண்டுதல் பெற வேண்டும் என்பதே. கடவுளை வணங்கு, பூசை புனஸ்காரங்கள் செய் என்றெல்லாம் கட்டாயப் படுத்தும் சம்பிரதாயம் நமக்கு இல்லை. அப்படியொரு உணர்வை இயற்கையாக எழச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் மட்டுமே உண்டு. நாதன் உள் இருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ என்றுதான் சிவவாக்கியரும் கேட்கிறார். இதற்கு வழிபாடு செய்யாதே என்றா பொருள் கொள்வது? நாதன் உள்ளே இருக்கிறான் என்கிற சாகாக் கல்வியைப் பெற வேண்டும் என்றல்லவா மகா சித்தன் புத்திமதி சொல்கிறான்? சட்டியிலே அளைந்த சட்டுவமாக இராதே சட்டியில் உள்ளதை உண்டு சுவை உணர்ந்து ஆனந்தி என்று சொல்வதாகப் புரிந்துகொள்வதுதானே புத்திசாலித்தனம்? நாமே சட்டி, அதைக் கிளறும் சட்டுவமே சாகாக் கல்வி. உள்ளே இருக்கும் கறி நாதன் எனப் புரிந்து கொள்வோம்.சட்டியால் மட்டும் கறியின் சுவையை உணர முடியுமோ என்றால் முடியாது. வெறும் சட்டியான அன்ன மய கோச சரீரத்தாலும் அந்தச் சுவையை உணர இயலாது. ஆனால் மண் சட்டியில் இல்லாத கோசங்கள் சரீரமான அன்னமய கோசத்துள் இருப்பதால் சரீர சட்டியால் கறிச் சுவையை உணர இயலும்.
  -மலர்மன்னன்

  1. Avatar
   R Venkatachalam says:

   மலர்மன்னன் சார் தாங்கள் எழுதி இருப்பது ஒன்றும் எனக்குப் புரியவில்லை. திரும்பத் திரும்பப் படித்தால்தான் புரியும் எனத்தோன்றுகிறது. தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 12 13 ல் நான்கு உரைகள் உள்ளன. அவை முடிந்து ஊர் திரும்பிய பிறகு படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். மறு மொழிக்கு நன்றி

   1. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ வெங்கடாசலம்,
    சரி. சட்டுவம் சாகும் கல்வி என இருக்க வேண்டும். அதாவது ஆன்மிக ஈடுபாடு இன்றிச் சரியை, கிரியைச் சடங்குகள் பிரகாரம் வெறுமனே இறைவன் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டும் வழிபாடு செய்து கொண்டும் இடையிடையே சாப்பாடு ஆகிவிட்டதா என்றெல்லாம் கேட்டுக் கொண்டும் இருத்தல். வாயும் புலன்களும் இறைவனைத் துதிப்பதிலும் வழிபடுவதிலும் இருந்தாலும் மனம் அதில் ஒன்றாது இருத்தல் (சட்டுவம் சட்டியில் ஆயத்தமாகும் கறியுடன் நெருக்கமாய் இருந்து புரட்டியும் கிளறியும் போட்டுக் கொண்டு இருந்தாலும் அதன் சுவையை அறிவதில்லை). ஆகவே அது சாகும் கல்வி. நான் எழுதியதில் தவறுதலாகச் சட்டுவம் சாகாக் கல்வி என வந்துவிட்டது. அதிகப் பிரசங்கி, இங்கே இதையெல்லாம் ஏன் எழுதுகிறாய், எல்லாம் தெரிந்தவன் என்பதுபோல் காட்டிக் கொள்ளவா என்று தலையில் அம்பாள் குட்டுவதாக இத்தவறைப் புரிந்துகொள்கிறேன்.
    -மலர்மன்னன்

 58. Avatar
  punaipeyaril says:

  அத மட்டும் ஒத்துக்க மாட்டோம் தங்க மணி, அது நித்தி சாய்பாபா ஆட்களுக்கு மட்டும் தான்… எங்க வழி தனி வழி…

 59. Avatar
  suvanappiriyan says:

  திரு தங்கமணி!

  //இல்லை.//

  பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி? அதற்கு வேதங்களிலிருந்தோ ஸ்மிருதிகளில் இருந்தோ ஆதாரத்தை சமர்ப்பியுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

  //அப்படி இறைச்செய்தி வருகிறது என்று சொல்கிறவர்கள் எல்லாரும் டெம்போரல் லோப் எபிலப்ஸி//

  யார் கூறுகிறார்கள்?

  இஸ்லாமிய எதிரிகள் அதன் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடைசியாக எடுத்த ஆயதமே முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்ததாக கதை கட்டி விட்டது. முகமது நபிக்கு தலையில் எத்தனை நரை முடிகள் இருந்தது என்பதைக் கூட அவரது தோழர்கள் ஹதீதுகளில் குறித்து வைத்துள்ளனர். அது பொல் முகமது நபி எப்பொழுதெல்லாம் நோய் வாய் பட்டார்களோ அவை அனைத்தும் தேதி வாரியாக ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு முறை கூட முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்த ஒரு குறிப்பையும் காணவில்லை. அன்றைய இஸ்லாமிய எதிரிகள் கூட இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தவில்லை. வழக்கமான திசை திருப்பும் வேலையே வலிப்பு நோய் என்பது. இமை எல்லாம தாண்டி இஸ்லாம் இன்று வெகு தூரத்துக்கு வந்து விட்டது.

  1. Avatar
   ஸ்வாமீ வேதநிஷ்டாநந்த ஸரஸ்வதீ says:

   வேதத்தை எழுதியவன், கண்டுபிடித்தவன் அல்லன், ஒரு மீனவன். முக்கியமான காயத்ரீ மந்திரத்தின் ரிஷி விச்வாமித்திரர் என்கிற மன்னராக இருந்தவர். பல இடங்களில் மன்னர்களே ஆசிரியர்கள். இதைக் கண்ணன் கீதாவிலும், விவேகானந்தரும் கூறுகின்றனர். கீதா சொன்ன கண்ணன் துர்யோதனனால், சிசுபாலனால் சூத்திரனாகக் கருதப்பட்டவன். ராஜ சூய யாகம் நினைவு கொள்க. கேட்டவன் மன்னன். எழுதினவன் மீனவன். வேதக் கருத்துக்களையே சொல்லும் அதையோ, இதிஹாஸங்களையோ, புராணங்களையோ எல்லாரும் படிக்கலாம் என்பதில் இந்துக்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. வேதங்களையும் சூத்திரனைத் தவிர எல்லாரும் படிக்கலாம் என்பதில் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. வேதாந்தத்தை எல்லாரும் படிக்கலாம் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆதாரம் போதுமா. மந்திரங்களை மேற்கோள் காட்டவில்லை என்பதற்குக் காரணம் அவை நூற்றுக்கணக்கில் இருப்பதால் தாமே படித்துக்கொள்வது நலம். இருப்பினும் மாதிரிக்கு ஒன்று. பிரம்ம தம் பராதாத் யோ பிரம்மணஹ அன்யத்ர பிரம்ம வேத – பொருள். எவன் தன்னைக் கடவுள் என்று எண்ணாமல் பிராமணன் என்று எண்ணுகிறானோ அவனைக் கடவுள் நிராஹரிக்கிறார். போதுமா.

 60. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன்

  \ தாங்கள் என்னைப் பற்றி கவலைப்படுவதை விட ஆதி திராவிடர்களுக்கு இந்த வேதங்களை பயிற்று வித்து புரோகிதராக்கினால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.\

  \இனி செந்தில் என்ற பார்பணரின் பின்னூட்டத்தைப் பார்ப்போம்.
  3. வேதம் கற்பது என்றால் கிறித்துவர்கள் பைபிள் படிப்பது போல எண்ணிக்கொள்வதை நிறுத்துங்கள்.. பைபிளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்..\

  ஐயா, வைதிக வாழ்க்கை முறையில் பற்று உள்ள அனைத்து சமூஹத்து அன்பர்களும் வேதம் பயின்று வருகிறார்கள். மாற்று மதத்தைச்சார்ந்த அன்பர்களுக்கும் கூட இன்றைக்கு வேதம் கற்க வாய்ப்புள்ளது. கற்றும் வருகிறார்கள். அதைத் தான் தங்களுக்கு அழுத்தம் திருத்தமாகச்சொன்னேன். ஆஸ்தா டிவி ஒளிபரப்பில் இவ்வாறு பயின்ற குழந்தைச்செல்வங்களுக்கு வைதிகப்பயிற்சி நிறைவில் பரிசளித்து கௌரவித்ததை உலகம் பார்த்துள்ளது.

  நடப்பு இப்படி இருக்கையில் இவர் இப்படிச் சொன்னார் அவர் அப்படிச் சொன்னார் என நீங்கள் சொல்வது முறையல்ல. சாரமில்லா வாதம்.

  அப்படியானால் அதே போல் இஸ்லாமியப் பழக்க வழக்கங்களையும் இவர் சொன்னார் அவர் சொன்னார் என பல அன்பர்கள் எதேனும் ஒரு உரல் அல்லது பல உரல்கள் மூலம் தெரிவிக்கலாம்.

  குரான்-ஏ-ஷெரீஃப் பற்றி தாங்கள் மிக அழகாக வ்யாக்யானாதிகள் செய்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தாங்கள் அராபியப் பகுதியிலும் இருப்பதாக நினைக்கிறேன். பாக்கி ஸ்தானம், ஆஃப்கனிஸ்தானம், சிரியா, லெபனான், எகிப்து, ஈராக், சவூதி, பஹ்ரைன் – இந்த நாடுகளையெல்லாம் பாருங்கள். இங்கெல்லாம் முஸமான் சஹோதரர்களை வேற்று மதத்தவர் தாக்குவதில்லை. மாறாக மாற்றுக்கருத்துள்ள சொந்த முஸல்மான் சஹோதரர்களே தாக்குகிறார்கள். இங்கு முக்யமான பேசுபொருள் இஸ்லாமும் நாத்திகமும். நாத்திகமென்ன ஐயா, இஸ்லாமிய சமூஹத்தில் மாற்றுக்கருத்துக்கள் கூட கொலைவெறியுடன் எதிர்கொள்ளப்படும் என்பதை இந்நிகழ்வுகள் காண்பிக்கின்றனவே. இத்தளத்திலேயே சவூதியில் ஷியா முஸல்மான் சஹோதரர்கள் வழிபடும் மஸ்ஜிதுகளை சவூதியினர் இடித்து நொறுக்கியதாக செய்திகள் வந்துள்ளனவே. தாங்கள் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவை முறையானவை என தாங்கள் கருதுகிறீர்களா?

  தங்களைப் போன்ற அன்பர்கள் அங்கே வசிக்கும் அன்பர்கள் இங்கு முன்வைக்கும் வ்யாக்யானாதிகளை அங்கு வழி இடறும் முஸல்மான் சஹோதரர்களுக்கு அளிக்க முயன்றால் இந்நிலை மாறலாம்.

  குதா ஹாஃபீஸ்

 61. Avatar
  suvanappiriyan says:

  திரு க்ருஷ்ண குமார்!

  //இங்கு முக்யமான பேசுபொருள் இஸ்லாமும் நாத்திகமும். நாத்திகமென்ன ஐயா, இஸ்லாமிய சமூஹத்தில் மாற்றுக்கருத்துக்கள் கூட கொலைவெறியுடன் எதிர்கொள்ளப்படும் என்பதை இந்நிகழ்வுகள் காண்பிக்கின்றனவே. இத்தளத்திலேயே சவூதியில் ஷியா முஸல்மான் சஹோதரர்கள் வழிபடும் மஸ்ஜிதுகளை சவூதியினர் இடித்து நொறுக்கியதாக செய்திகள் வந்துள்ளனவே. தாங்கள் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவை முறையானவை என தாங்கள் கருதுகிறீர்களா?//

  ஷிஆக்கள் எனப்படுவோர் யார்? முகமது நபி காலத்துக்கு பின்னால் உருவானதே ஷியா கொள்கை. இவர்கள் முகமது நபிக்கு பிறகு அலிதான் ஜனாதிபதியாக வந்திருக்க வேண்டும் என்பார்கள். அன்னை ஆயிஷா, அபுபக்கர், உமர் போன்ற முக்கிய தலைவர்களை இழிவாக பேசுவர். இறந்த சமாதிகளை கட்டிக் கொண்டு அழுவர். முஹர்ரம் 10 அன்று ஹூசைன் இறந்த நாள் என்று உடம்பை கீறிக் கொண்டு நடப்பார்கள். தீ மிதிப்பார்கள். முகமது நபியின் மருமகன் அலியை தகுதிக்கு மீறி புகழ்வார்கள். சில நேரங்களில் முகமது நபிக்கு சரி சமமான இடத்தை கொடுக்க முயற்சிப்பார்கள். இவை அனைத்தையுமே இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றுவார்கள். மேலே கூறிய அனைத்து நடவடிக்கைகளையும் முகமது நபி கடுமையாக கண்டித்து இருக்கிறார். முகமது நபி சொல்லாத ஒரு செயலை இஸ்லாம் என்று நடைமுறைபடுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. எனவே தான் சவுதி அரசு இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

  ஷியாக்கள் விரும்பினால் தனி மதமாக இருந்து கொள்ளட்டும். இஸ்லாத்துக்குள் புகுந்து குழப்பினால் அதனை கண்டிப்பாக முஸ்லிம்கள் எதிர்ப்பர். ஷியாக்களின் தவறான கொள்கைகளை விளங்கிய பலர் தற்போது சன்னி பிரிவில் சேர்ந்து வருகின்றனர். சவுதியில் தமாம் போன்ற பகுதிகளில் ஷிஆக்கள் கணிசமான அளவு இன்றும் உள்ளனர். அவர்களை யாரும் மிரட்டி அடி பணிய வைக்கவில்லை. இன்றும் பெரும் செல்வந்தர்களாக பலரை வைத்து வேலை வாங்கும் தகுதியில்தான் உள்ளனர்.

  இவர்களுக்கும் குர்ஆன், முகமது நபி, ஐந்து கடமைகள் எல்லாம் ஒன்றாகவே வரும். கர்பலா யுத்தத்தினால் சில நயவஞ்சகர்களின் செயலினால் இன்று ஷியாக்களாக பிரிந்துள்ளனர். காலப் போக்கில் ஒன்றினைவார்கள்.

 62. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன்,

  இந்த விவாதம் சார்ந்து இது எனது கடைசீ உத்தரம்.

  ஷியா, சுன்னி, அஹமதியா என பல இஸ்லாமியப் பிரிவுகள்.

  சுன்னி முஸல்மான் களிலும் பரேல்வி மற்றும் தேவ் பந்தி.

  சமுதாயம் மற்றும் தத்துவார்த்தம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

  எது உண்மை எது பொய் என்ற ஒற்றைச்சொல் தேடல் அல்ல.

  ஒரொரு தத்துவார்த்தமும் அதன் பின் ஒரு பெரும் சமுத்ரத்தை உள்ளடக்கியுள்ளன.

  ஷியா பிரிவைச்சார்ந்த ப்ரசித்தி பெற்ற மௌலானா கல்பே ருஷைத் ரிஜ்வி காலம் சென்ற அஹமத் ராஜா கான் பரேல்வி இப்போது ப்ரசித்தியாகவுள்ள அக்தர் ராஜா கான் பரேல்வி போன்றோர் நீங்கள் சொல்வதை விட பன்மடங்கு குற்றங்களை வஹாபி இஸ்லாத்துக்கு எதிராகச் சொல்லியுள்ளார்கள். அதிலும் காலம் சென்ற அஹமத் ராஜா கான் பரேல்வி அவர்கள் தேவ்பந்தி மற்றும் வஹாபி இஸ்லாத்துக்கு எதிராக ஃபத்வாவும் கொடுத்துள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

  உலகில் எந்த மதமும் அல்லது தத்துவார்த்தமும் ஒற்றைக்கோட்பாட்டில் அடங்காது என்பது உலக இயல்பு.

  பரேல்வி ஸுன்னி முஸல்மான் களை கராச்சி மற்றும் தேரா இஸ்மாயில் கான் போன்ற நகரங்களில் வஹாபி மற்றும் தேவ்பந்தி ஸுன்னியினர் குண்டு வைத்துக் கொலை செய்துள்ளனர். இவற்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

  அஹமதியா என்ற பிரிவு இஸ்லாமே அல்ல என்று paki sthan தேய்ந்து baqi sthan ஆன சர்க்கார் கட்டளையிட்டுள்ளது. இன்னும் அவர்களுக்குக் கூட ஷியா முஸல்மான் கள் பிரிவு இஸ்லாமே அல்ல என்று கட்டளையிட துணிவோ தெம்போ இல்லை. அப்படியெல்லாம் கட்டளையிட்டால் baqi shtan ம் காலியாகி விடும் என அவர்களுக்குத் தெரியும்.

  அஹமதியாக்களும் ஷியாக்களும் அவரவர்கள் தங்களுக்கென்று தனியான மஸ்ஜிதுகளில் தானே தொழுகை நடத்துகிறார்கள். தங்களை தனிக்குழுக்களாகத் தானே தெரிவித்துக்கொள்கிறார்கள். உங்கள் கருத்துப்படிப் பார்த்தால் ஈரான், லெபனான், சிரியா, பாலஸ்தீனத்தின் காஜா பட்டி போன்ற இடங்களில் உள்ள ஷியா முஸல்மான் கள் முஸல்மான் களே அல்ல. ஒன்று இவர்கள் தங்களது வஹாபி கருத்துக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லது வலிமை இருந்தால் அவர்களது வழிபாட்டு இடங்களை தகர்த்து எறிவீர்கள். எப்படி சவூதியில் ஷியா முஸல்மானது மஸ்ஜிதுகளை அதிகாரத்தின் படி தகர்த்து எறிந்ததை ந்யாயப்படுத்துகிறீர்களோ அப்படி?

  க்றைஸ்தவர் என்றால் கத்தோலிக்க, ப்ராடஸ்டெண்ட்

  ரோமன் கத்தோலிக்க, சிரியன் கத்தோலிக்க,

  Russian Orthodox, Slavic Church, Coptic Orthodox church

  பௌத்தம்

  ஹீனயானம், மஹாயானம்

  மஹாயானம் மேலும் மத்யமகம், யோகாசாரம், வஜ்ரயானம், விக்ஞானவாதம்

  இவைதவிர தற்போது நவயானம்

  ஜைனம்

  ஸ்வேதாம்பர, திகம்பர என பிரிவுகள்.

  இவையெல்லாம் தெரிவிப்பது ஒன்று உண்மை மற்றொன்று பொய் என்று அல்ல எனதன்பார்ந்த ஹாஜி அவர்களே.

  மாறாக ஒரே உண்மையை எப்படிப் பல வழிகளில் அடைய இயலும் என்பதைத் தான். இதைச் சொன்னால் நான் ஹிந்து தத்துவத்தைச் சொல்வதாகச்சொல்வீர்கள். ஆம் அது மாறாத உண்மை.

  மீர் தகீ மீர் ஷேர் ஒன்று சொல்லி முடிக்கிறேன்.

  மீர் கே தீன்-ஓ-மஜ்ஹப் கா
  பூச்தே க்யா ஹோ

  உன் ஹே தொகாஷ்கா கைன்சா
  டைர் மே பைடா

  கப் கா தர்க் இஸ்லாம் கியா

  மீர் தகீ மீர் யார் அவரது நம்பிக்கை என்னவென்று கேட்டால் என் சொல்வது

  நெற்றியில் திலகமிட்டுக்கொள்கிறார். கோவிலில் போய் உட்காருகிறார்.

  எப்போதோ இஸ்லாத்தை விட்டு விட்டாரே

  http://en.wikipedia.org/wiki/Mir_Taqi_Mir

  மீர் தகீ மீர் பெரும் இஸ்லாமிய ஸூஃபி மஹான்.

  மேலே சொல்ல ஏதும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *