கண்ணீர்ப் பனித்துளி நான்

This entry is part 9 of 26 in the series 9 டிசம்பர் 2012

 

மயிர் கூச்செரியும் கடுங்குளிரில்

நிலவுமறியாது

பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும்

கண்ணீர்ப் பனித்துளி நான்

 

ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும்

ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று

சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும்

கண்ணீர்ப் பனித்துளி நான்

 

நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில்

உனது வெளிச்சத்தை முத்தமிட்டு

அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும்

கண்ணீர்ப் பனித்துளி நான்

 

– ரொஷான் தேல பண்டார

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigationவெளிதாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்

1 Comment

  1. Avatar Dinesha

    “சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும்

    கண்ணீர்ப் பனித்துளி நான்…” Superb Roshan

Leave a Reply to Dinesha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *