சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்

author
0 minutes, 10 seconds Read
This entry is part 1 of 26 in the series 9 டிசம்பர் 2012

 

இங்கிலாந்தில்,  பைக்ண்டன் ஜூ – வில் நட்டக்குத்தலாக இருக்கும் ஹைட்ரோபோனிக்  விவசாய பண்ணை. இது  முட்டைக்கோஸ் வகையான லெட்டூஸ் பயிரை விளைவிக்கிறது. இருக்கும் இடத்தை முழுவதும் உபயோகப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தொட்டிகளில் மண் இல்லாமல் கன்வேயர் பெல்ட் மூலமாக  எப்போது சூரிய வெளிச்சம் வேண்டுமோ அப்போது தரும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. முழு விவசாயமும் கணினி மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு சதுர மீட்டரில் 112 லெட்டூஸ்களை உற்பத்தி செய்யப்படுகிறது.

 

 

ஜெர்மனியில் ஒரு தக்காளி பண்ணை. சூடாக்கப்பட்ட கண்ணாடி வீடுகளில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.  (சூடாக்கப்படும் கண்ணாடி வீடுகளில் பனிக்காலங்களில் கூட உற்பத்தி செய்யலாம்) இங்கே தேவையான மின்சக்தியை சேமிக்க வேண்டியும், விலையை குறைவாக்கவும் , அருகேயுள்ள அணுமின்சாலையிலிருந்து வீணாக்கப்படும் வெப்பத்தை இங்கே உபயோகப்படுத்துகிறார்கள்.

 

 

க்ரஸ் தாவரம், தக்காளி, வெள்ளரிக்காய், லெட்டூஸ் போன்ற பயிர்கள்  LED ஒளி மூலம் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கே சூரிய வெளிச்சமே இல்லை. இங்கிருக்கும் காற்று கூட வெளியே செல்ல முடியாது.  இந்த இடத்தின் சூழ்நிலை தட்பவெப்பத்தை ஒரு பனிபிரதேசம் போலவோ அல்லது பாலைவனம் போலவோ பொறியியலாளர்களால் மாற்றமுடியும்.

 

 

இந்த கத்திரிக்காய் பயிர்களது தேவையான தண்ணீர், சத்து, தட்பவெப்பம் ஆகியவற்றை இந்த கண்ணாடி வீட்டின் ஜன்னல்கள், சூரிய ஒளி வரும் அளவு ஆகியவற்றை கொண்டு கணினி சமாளிக்கிறது. வீணாகும் தண்ணீர், சத்துப்பொருட்கள்,  கழிவு ஆகியவை சேமிக்கப்பட்டு மீண்டும் சரி செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது.

 

 

வருடம் முழுவதும் உற்பத்தி செய்வதற்காக, காளான்கள்  இருக்கும் அறையின் தட்பவெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. அடுக்கு அடுக்குகளாக தட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதால், குறைந்த நிலத்தில் அதிக உற்பத்தி.

 

 

உக்ரேனின் கோழிப்பண்ணை. இது  50,000 கோழிகளை வளர்க்க சத்தியுள்ளது.

 

 

இங்கே கோழிகள் 42 நாட்கள் வளர்க்கப்பட்டு தேவையான அளவு எடை போட்டதும் அருகே உள்ள கசாப்பு  அறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் உபயோகப்படுத்தப்படுகிறத.

 

 

பேரிக்காய் தோட்டம். மரம் வளரும் ஆரம்ப காலத்திலேயே மரம் இரண்டாக சமமான வலுவுள்ள கிளைகளாக பிரிக்கப்படுகிறது. இதனை கம்பிகள் மூலம் மேலே கட்டிவிடுகிறார்கள். இது வெகுவிரைவிலேயே அதிக எடையுள்ள பேரிக்காய்களை உற்பத்தி செய்ய வழி வகுக்கிறது.

 

 

 

விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியே கிளம்ப கிளம்ப (செவ்வாய் 2030இல் என்று கூறுகிறார்கள்) உணவு பற்றிய கேள்வி முக்கியமானதாக ஆகிவருகிறது. தற்போது விண்வெளி வீரர்கள் உண்ணும் உணவு பூமியில் தயாரிக்கப்பட்டு பொட்டலங்களாக கட்டப்பட்டு அனுப்பப்படுகிறது. ஆனால், நாஸா அமைப்பின் Advanced Food Technology Projectஇன் படி, எதிர்கால திட்டங்களில் ஓரளவுக்கு உணவு பயணத்தின் போதே தயாரிக்கப்படும் என்றும், அல்லது அங்கேயே உற்பத்தி செய்து சமைக்கப்படும் என்றும் கூறுகிறது.

ஏற்கெனவே அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பம் பூமியில் பல இடங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த புகைப்படங்களை எடுத்தவர் ஃப்ரேயா நாஜாடே.

நஜாடே கடந்த இரண்டு வருடங்களாக ஐரோப்பாவின் விவசாயப்பண்ணைகளை சுற்றிப்பார்த்துகொண்டு வருகிறார். இந்த விவசாயப்பண்ணைகளில் உயர்ந்த தொழில்நுட்பத்தில் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஜெர்மனியில் கண்ணாடி வீடுகளில் உருவாக்கப்படும் தக்காளிகள் பனிக்காலத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அருகே உள்ள அணுமின் நிலையங்களிலிருந்து வீணாகும் வெப்பத்தை உபயோகப்படுத்திகொள்கின்றன.  ரஸ் தாவரம், தக்காளி, வெள்ளரிக்காய், லெட்டூஸ் போன்ற பயிர்கள்  LED ஒளி மூலம் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கே சூரிய வெளிச்சமே இல்லை. இங்கிருக்கும் காற்று கூட வெளியே செல்ல முடியாது.

“எவ்வாறு மனிதர்கள் தங்களது கட்டுப்பாட்டையும் இயற்கையின் மீதான மேலாதிக்கத்தையும் அதிகரித்துகொண்டே வருகிறார்கள் என்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. இரவு,பகல், கோடைக்காலம், குளிர்காலம்,  தட்பவெப்பம், புவியியல் ஆகிய அனைத்துமே விவசாயத்துக்கு தேவையில்லாத விஷயங்களாக ஆகிவிட்டன” என்று நஜாடே கூறுகிறார். இவர் ஜெர்மனியை சேர்ந்தவர். இப்போது லண்டனில் வசிக்கிறார். “கடந்த 400 வருடங்களில் விவசாயம் மாறியதை விட கடந்த 40 வருடங்களில் மாறியது அதிகம்” என்று கூறுகிறார்.

நம்மைப்பொறுத்தமட்டில், அவரது புகைப்படங்கள் தானியங்கி சூழ்நிலை அமைப்புகளாக, விண்வெளியில் உணவு உற்பத்தி செய்யக்கூடிய தளங்களாக காட்சியளிக்கின்றன. ஆனால், நஜாடே மதில்மேல் பூனையாக இருக்கிறார்.

”சந்திரனில் உணவு உற்பத்தி செய்வதா?. நிச்சயம் முடியும். ஆனால், நான் அதனை பார்க்க இருப்பேனா என்று தெரியாது.  அது இயற்கைக்கு முழுதும் மாறானது என்று நினைக்கிறேன். அது தவறு என்றுதான் தோன்றுகிறது. ஆனால், வீணாகும் சக்தியை உபயோக்கிறீர்களா என்று பார்த்தால், அது அவ்வளவு தவறானதாக தோன்றவில்லை” என்கிறார்.

இந்த மாற்றங்களை பொறுத்தமட்டில், இவை பூமியிலேயே செய்யப்பட்டாலும், மனிதர்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை தோற்றுவிக்கின்றன. ஒரு சிலர் வீணாகும் வெப்பத்தை இப்படி மறு உபயோகம் செய்து உற்பத்தி செய்வதை வரவேற்கிறார்கள்.  அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுக்கு பனிக்காலத்தில் வரும் தக்காளிகள்  ஏறத்தாழ 1500 மைல்கள் பயணம் செய்து வந்தடைகின்றன. மற்ற சிலரோ, நமது வசதிக்காக இயற்கையின் சுழற்சியை கட்டுப்படுத்துவதும், அதனை மாற்றுவதும், சரியல்ல என்றும், “இதற்கான விளைவுகள் என்னவென்று தெரியாமல் நாம் இதில் இறங்குகிறோம்” என்று நஜாடே போன்றவர்கள் கூறுகிறார்கள்.

அவரது ஸ்ட்ராபெர்ரீஸ் Strawberries புகைப்படங்களில் புதிய அத்தியாத்துக்கான புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அதன் பெயர் ”தகுதிபெறாதவை” என்பது. இந்த காய்கறிகளும் பழங்களும் சூப்பர் மார்க்கெட்டுக்கு போகாதவை. ஒரு சில குறைபாடுகள் கொண்டவை. ராயல் கலா ஆப்பிள்கள் உருண்டையாக இருக்க வேண்டும். அவற்றின் உருண்டை வடிவத்தில் ஐந்து சதவீதத்துக்கு மேல் குறைபாடு இருந்தால், அவை சாறாக பிழியப்பட்டுவிடும். கம்பரி தக்காளிகளில் இரண்டு மில்லி மீட்டருக்கு மேல் உருண்டை வடிவத்தில் மாற்றம் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அவை குப்பையில் போடப்பட்டுவிடும்.

”இவை எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக எனக்கு தோன்றுகிறது என்பது இந்த “தகுதி பெறாதவை”களை பார்க்கும்போது தெரிகிறது” என்கிறார்.

All Photos: Freya Najade

 

மூலம்

 

Series Navigationமலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *