ஈரானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

author
4
0 minutes, 1 second Read
This entry is part 3 of 31 in the series 16 டிசம்பர் 2012

விவியன் ட்ஸாய்

child_brides

child-brideகுழந்தைகள் உரிமைகளுக்கான ஈரானிய அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 15 வயதுக்குள்ளான சிறுமிகளின் திருமண எண்ணிக்கை 2006இல் 33,383 இலிருந்து 2009இல் 43,459ஆக உயர்ந்துள்ளது. இது 30 சதவீத உயர்வாகும்.

மேலும், 2009இல் 449 குழந்தைகள் 10 வயதாவதற்கு முன்னரே, திருமணம் செய்விக்கப்பட்டிருக்கிறார்க்ள். 2010இல் 716 குழந்தைகள் திருமணம் செய்விக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே வருடத்தில் 59 சதவீத அதிகரிப்பு.

அந்த அதிர்ச்சியடைய வைக்கும் எண்ணிக்கைகளோடு கூடவே, ஈரானிய பாராளுமன்றத்தின் சட்ட பிரிவு கமிட்டி, இஸ்லாமிய குடியரசு பெண்களுக்கான சட்டப்பூர்வமான திருமண வயதை தற்போதைய 13 வயதிலிருந்து 9 வயதாக குறைக்கப்பட முயற்சிகளை முன்னெடுப்பதாக செய்தி வந்துள்ளது.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பாராளுமன்ற சட்ட கமிட்டி தற்போதைய சட்டம் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் திருமணம் செய்வதை தற்போதைய சட்டம் தடுக்கிறது. அவ்வாறு தடுப்பது இஸ்லாமுக்கு புறம்பானது, சட்டத்துக்கு புறம்பானது என்று கூறியிருக்கிறது. முகம்மது அனைத்து முஸ்லீம்களுக்கும் முன்மாதிரியாக கருதப்பட வேண்டியவர் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்திருப்பதை இஸ்லாமிய புனித நூல்கள் கூறுகின்றன. அவர் தன் திருமணத்தை அந்த மணப்பெண் 9 வயதானபோது பூர்த்தி செய்தார்.

முகம்மது அலி இஸ்பெனானி, சட்ட கமிட்டியின் சேர்மனாக உள்ளார். “நமது இஸ்லாமிய சட்ட அமைப்பின் கீழ், நாம் ஒன்பது வயதான சிறுமி பருவம் அடைந்துவிட்டதாகவும், அவர் திருமணம் செய்ய தகுதி உள்ளவராகவுமே கருதப்பட வேண்டும். இதற்கு மாறாக செய்வது, இஸ்லாமிய ஷரியா சட்டத்தை எதிர்ப்பதற்கு ஒப்பானது” என்று கூறுகிறார்.

13 வயதுக்கு கீழான சிறுமிகளும் 15 வயதான சிறுவர்களும் தங்கள் தந்தையாரின் சம்மதத்துடனும் நீதிமன்றத்தின் அனுமதியுடனும் திருமணம் செய்வது சட்டப்பூர்வமானது என்று 2002இல் மிகுந்த அதிகாரம் படைத்த Expediency Council தீர்ப்பளித்தது.

ஆனால், ஈரானிய பாராளுமன்றம் மணப்பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயதை குறைக்க முயற்சிப்பதால், 9 முதல் 13 வயதான சிறுமிகளுக்கு இருக்கும் குறைந்த பட்ச பாதுகாப்பும் நீக்கப்பட்டுவிடும்.

அதைவிட முக்கியமாக, தந்தையாரின் சம்மதம் என்றகுறைந்த பட்ச பாதுகாப்பும் நீக்கப்பட்டுவிடுவதால், இந்த இளம் சிறுமிகள் பாதுகாப்பான பாலுறவுக்கோ, அல்லது தேவையற்ற கர்ப்பத்துக்கோ தடை இல்லாமல், 14 வயதான பல சிறுமிகள் குழந்தை பிறப்பின்போது மிகுந்த துன்பம் அடைவதும், இறக்கவும் நேரிடும்.

இப்படிப்பட்ட குழந்தை மணப்பெண்கள் தங்களது கல்வியை பெரும்பாலும் தொடர முடியாது. ஆகவே இவர்கள் தங்களது கணவர்களின் சம்பாத்தியத்தையே சார்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட குழந்தை மணப்பெண்களின் வாழ்நாளும் மிகவும் குறுகியது. இதற்கு காரணம் குழந்தை பிறப்பின்போது இப்படிப்பட்ட குழந்தை தாய்களின் இறப்பும் அதிகம். 15 வயதுக்கு குறைவான தாய்கள் 5 மடங்கு அதிகமாக குழந்தை பிறப்பின்போது இறக்கிறார்கள்.

பெரும்பாலான இப்படிப்பட்ட குழந்தை மணப்பெண்கள் கடன்களை அடைக்க திருமணம் செய்விக்கப்படுகிறார்கள். ஈரானில் அதிகரிக்கும் ஏழ்மை ஏராளமான குழந்தைகள் கொண்ட குடும்பங்களை வேறுவழி இல்லாமல் ஆக்கிவைத்திருக்கிறது. மணப்பெண் இளம்பெண்ணாக இருந்தால், அப்படிப்பட்ட சிறுமிகளுக்கான விலையும் அதிகம் என்பது அறிந்த விஷயமே.

மேலும், இப்படிப்பட்ட குழந்தை திருமணங்கள் அடிக்கடி விவாகரத்துக்களில் முடிவடைவதால், மன வியாதிகள், தற்கொலைகள், இளம்பெண்கள் வீட்டை விட்டு ஓடுதல், விபச்சாரம் போன்றவைகள் அதிகரிக்கும் என்று குழந்தை பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ஈரான் குழந்தைகள் உரிமை அமைப்பின் பேச்சாளரான, பார்ஸித் யாஜ்தானி Farshid Yazdan சமூகத்தில் படிப்பறிவின்மை, போதை மருந்து உட்கொள்ளும் பிற்பட்ட கிராமப்புறங்களில் இப்படிப்பட்ட குழந்தை திருமணங்களும் அதிகம் என்று கூறுகிறார்.

“குடும்பங்களில் நிலவும் பொருளாதார ஏழ்மை குழந்தை திருமணங்களுக்கு இட்டுச்செல்கிறது. எனினும், கலாச்சார ஏழ்மையும், அறியாமையும் கூட இதில் பங்கு வகிக்கிறது” என்று யாஜ்தானி கூறுகிறார்.

இருப்பினும், ஈரான் மட்டுமே இந்த பிரச்னையில் இருக்கும் நாடு அல்ல.

எதியோப்பியா, பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான், நைஜர் ஆகிய நாடுகள் குழந்தை திருமணங்களில் ஈடுபடுத்தப்படும் சிறுமிகளுக்கு தகுந்த பாதுகாப்பின்றி இருக்கும் நாடுகளில் சில.

பெண்கள் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தை பொறுத்த மட்டில், இப்படிப்பட்ட நிலைமை தொடர்ந்தால், வளரும் நாடுகளில் 18 வயதுக்கு குறைந்த 100 மில்லியன் சிறுமிகள் இன்னும் 10 ஆண்டுகளில் கட்டாய திருமணம் செய்விக்கப்படுவார்கள். அதாவது ஒவ்வொரு நாளும் 25000 முதிரா சிறுமிகள் திருமணம் செய்விக்கப்படுகிறார்கள்.

நன்றி மூலம்

புகைப்படங்கள் கேலரி

Series Navigationசாஹித்ய அகாடமியில் கிடைத்த ஒரு நட்பு – பேராசிரியர் மோஹன்லால்மாறும் வாழ்க்கை – செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது சிங்கம்
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    ஷாலி says:

    பாண்டியன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துவிட்டார்.இனி புனல்பெயரில்,தங்கமணி,க்ருஷ்ண குமார்,ஸ்மிதா என்று வருசையா வந்து இறங்கிவிடுவார்கள். அசத்தப்போவது யாரு?…பார்ப்போம். உலகத்திலே 187 நாடுகளுக்கு மேல் உள்ளது.ஆனால் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,ஈரானை சுற்றியே திண்ணை திரிவது ஏன்?..புரிகிறது கனி மரம் தான் கல்லடி படும். …ம்ம் அடிச்சு விளையாடுங்க… நல்லது நடந்தே தீரும்!

  2. Avatar
    suvanappiriyan says:

    ஒரு சில தினங்களுக்கு முன் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள ஒரு பட்டறையில் பல இளம் சிறார்களைக் கொத்தடிமைகள் போலப் பணியில் அமர்த்தி வேலை வாங்கியுள்ளனர் இரக்கமற்ற கொடூரர்கள். காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் மீட்கப் பட்டனர். அவர்களில் ஒரு சில குழந்தைகள் 8 வயதே நிரம்பிய பச்சிளம் பிஞ்சுகள் என்பது வேதனையான உண்மையாகும்.

    அவர்கள் பணியாற்றிய பட்டறை என்பது விலங்குகள் கூடத் தங்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமான சுகாதாரமற்ற, காற்றோட்டம் இல்லாத, இருளறை ஆகும். அவர்கள் யாவரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்து வந்துள்ளனர். கிறிஸ்மஸ் சீசன் நெருங்கிவிட்டதால் அவர்கள் இராப் பகலாகச் சுமார் தினமும் 15 – 19 மணி நேரம் வரை பணியாற்ற கட்டாயப்படுத்த பட்டுள்ளனர்.

    அக்குழந்தைகள் அனைவரும் போதிய ஊட்டச்சத்து இல்லாதத்தால் நோஞ்சான்களாகத் தென்ப்பட்டனர் எனவும், பலர் பலத்த மனநலம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தனர் எனவும் அறிய முடிகின்றது.

    http://www.huffingtonpost.com/2012/12/07/delhi-14-freed-raid-frees-enslaved-indian-children-forced-christmas-decorations_n_2258698.html

    http://www.telegraph.co.uk/news/worldnews/1567849/Gap-sweatshop-children-saved-in-India-raid.html

    http://www.kodangi.com/2012/12/child-labor-problems-in-india.html

  3. Avatar
    Dr.G.Johnson says:

    இது படிக்கவே மிகவும் அருவருப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இத்தகைய முட்டாள்தனமான மூடப்பழக்கம் நிலவி வருவது வேடிக்கையும் விசித்திரமாகவும் உள்ளது.இதை உலக நாடுகள் பார்த்துக்கொண்டு வெறுமனே இருப்பது நியாயமா? பாவம் அந்த பச்சிளம் குழந்தைகள்.திருமணம் என்ற பெயரில் இது பாலியல் வன்கொடுமையும் கற்பழிப்புமாகும்.இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாள் ஒன்றுக்கு இருபத்து ஐந்தாயிரம் முதிரா சிறுமிகள் திருமணம் என்ற பெயரில் கற்பழிக்கப்படுவார்கள் என்ற புள்ளிவிவரம் பேரதிர்ச்சியை உண்டுபண்ணுகிறது.மதம் இப்படித்தான் கூறுகிறது என்ற பொய்யான பிரச்சாரம் செய்து இக்கொடுமையைச் செய்யும் கொடூரமானவர்களை அந்த நாட்டுச் சட்டம் பாதுகாக்கின்றது என்பது வேடிக்கையிலும் வேடிக்கையே! இவர்களில் எத்தனை சிறுமிகள் கர்ப்பமுற்று பிரசவ வேளையில் சாவார்களோ என்பது அவர்களின் ஆண்டவருக்கே வெளிச்சம்!இப்படி சாகப்போகிற இக் குழந்தைகளுக்காக நாம் பிரார்த்திப்பதைவிட வேறு வழி இல்லை!
    ” பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்களே! “…சிலுவையில் இயேசு கூறிய ஜெபம்……டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *