அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )

This entry is part 6 of 34 in the series 6 ஜனவரி 2013

பத்து நிமிடங்களில் ஒரு திரில்லரைச் சொல்ல முடியும் என்று நிருபித்திருக்கிறார் அனில்.

மூன்றே பாத்திரங்கள். இரண்டு ஆண், ஒரு பெண். இடையில் நுழையும் காதல். அதனால் ஏற்படும் மரணங்கள்.

வேலை தேடிக் கொண்டிருக்கும் ரியாவுக்கு ஒரு செல்பேசி அழைப்பு.

“என் பி கம்பென்¢யில் உன் ரிசூயுமைப் பார்த்தேன். உன்னை தேர்ந்தெடுத்து விட்டார்கள். உடனே வேலையில் சேர்ந்து விடு “

“ மை காட்.. தாங்க்யூ.. எங்கே வர வேண்டும் ?”

“ இந்திரா நகர் எக்ஸ்டென்சனில் பூலுவப்பட்டி “

ரியா தன் நண்பன் சஞ்சீவுடன் பேசுகிறாள்.

“ சஞ்சீவ்.. ரியா.. எனக்கு வேலை கிடைத்து விட்டது! என் பி கம்பெனி.. இந்திரா நகர், பூலுவப்பட்டியாம்.. அங்கேதான் போறேன்.. ஒங்கிட்ட அப்புறம் பேசறேன் “

0

தார் சாலையில்¢ருந்து மண் சாலையில் பிர்¢யும் பூலுவப்பட்டிக்கு ரியாவின் கார் போகிறது. ஒரு சிகப்பு கட்டிடத்தின் உள்ளே அவள் நுழைகிறாள். அங்கிருக்கும் மேசையில் ஒரு செல்பேசி, அதில் அவள் செல்பேசி எண்!

சஞ்சீவ் வேலை முடித்துக் கொண்டு, ரியாவின் பேசியை அழைக்கிறான். ‘சாரி அந்த செல்பேசி சுவிட்ச்  ஆப் செய்யப்பட்டிருக்கிறது’ என்கிற தகவல் ஒலிக்கிறது. சிறிது நேரம் படுத்து உறங்குகிறான். மீண்டும் ரியாவுடன் பேச முயற்சி, அதே தகவல்!

அப்போது அவனது செல்பேசிக்கு ஒர் குறும்செய்தி வருகிறது. ‘ என் கார் பழுதாகிவிட்டது. நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்னை வந்து அழைத்துப் போ ‘

சஞ்சிவின் பைக் பூலுவப்பட்டி நோக்கி பயணிக்கிறது. அதே சிகப்பு கட்டிடம். ஒரு அறை மூலையில் ரியா மயக்கத்தில்.. கைத்தாங்கலாக அவளைக் கூட்டிக் கொண்டு போகும்போது, அவன் கண்ணில் படும் ஒர் செல்பேசி, அதில் ஒளிரும் ஒர் மொட்டைத் தலை ஆள்.

0

பின் நோக்கு காட்ச்¢களில் ர்¢யாவும், மொட்டையும் காதலர்கள். அவர்களைப் பொறாமையுடன் பார்க்கும் சஞ்சீவ்.

மொட்டை மாடியில், செல்பேசியில் ரியாவுடன் பேசிக் கொண்டிருக்கும் மொட்டையும், அவனைத் தேடி வந்து, சஞ்சீவ், ரியா மீது தனக்குள்ள காதலைச் சொல்லி, மொட்டையை விலகச் சொல்வதும், ராகுல் என்கிற மொட்டை, நடந்த கைகலப்பில் மாடியிலிருந்து கீழே விழுந்து இறப்பதும், சஞ்சீவின் மனதில் நிழலாடும் எண்ணங்கள்.

0

மயக்கத்திலிருந்த ரியா, திடீரென சஞ்சீவை விட்டு நடக்க ஆரம்பிக்கிறாள். பல படிகள் ஏறி மேலே.. துரத்தி வரும் சஞ்சீவ் அவளை இழுக்க, ஒரு அசுர பலத்தோடு அவள் அவனனத் தள்ளி விடுவதும், அவன் கீழே விழுந்து இறப்பதும் நிகழ்  சம்பவங்கள்.

0

சில நாட்களுக்குப் பிறகு, ரியாவின் செல்பேசிக்கு ஓர் அழைப்பு. பேசுபவன் சஞ்சீவ்!

“ உடனே வரேன் “ என்று கிளம்பும் ரியா.

0

முக்கோணக் காதலை, ஆவிகளின் மரணப் பழிவாங்கலாக தந்திருக்கும் அனில் கிருஷ்ணனிடம் திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. ரியா காதலித்த ராகுலை, மரணத்திற்குத் தள்ளும் சஞ்சீவ். ராகுல் இறந்த பின், சஞ்சீவுடன் நெருக்கம் காட்டும் ரியா. தன் மரணத்திற்குக் காரணமான சஞ்சீவை, ரியாவைக் கொண்டே போட்டுத் தள்ளும் ராகுலின் ஆவி. ரியா கிடைக்காத சஞ்சீவின் ஆவி, அவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று, ரியாவை அழைப்பது என பல யூகங்களை பார்வையாளனுக்கே விட்டு விடுகிறார் இயக்குனர்.

ராகுலின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட ரியாவுக்கு, சஞ்சீவின் மரணம் தெரியவில்லை என்பதும், அவள் பழைய நிலைமைக்கு வந்து சஞ்சீவின் அழைப்பை ஏற்று புறப்படுவதும் ரசிகனின் திகிலை இன்னமும் கூட்டுகின்றன. ஆனால் பல விசயங்கள் சின்ன கோடிட்டுக் கூடக் காட்டப்படவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷாலிட்டி.

கூடிய சீக்கிரம் அனுஷ்காவை வைத்து ‘ ஆவியின் அழைப்பு ‘ என்று தெலுங்கு படமாக வரலாம். அதை ராமநாராயணன் வாங்கி “ ஆவீ ..” என்று தமிழில் டப்பலாம்.

0

Series Navigationசங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்வால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *