குழல்வேந்தன்
அன்றைக்கு எங்க ஹாஸ்ட்டல்ல நடந்த அந்த சம்பவத்த நெனச்சா? அடேயப்பா! இப்போ அந்த அனுபவத்த நெனச்சாலும் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போகுதுடா சாமி. நாங்க உசுரு பொழச்சது அந்த ஏசுவோட கருணையாகவோ மரியன்னையோட அருளாகவோ சூசையப்பரோட விருப்பமாகவோத்தான் நிச்சயம் இருந்திருக்கணும் என்கிறது என்னோடமன சாட்சியின் ஒரு பகுதி.
இப்படி சொல்லரதால என்னை யாரும் ஒரு கிறித்தவன் என்றோ ஆத்திகனென்றோ நாத்திகனென்றோ தயவு செஞ்சி முத்திரைக் கித்திரை குத்திப்புடாதிங்க. உங்க முத்திரைகளுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன்.
ஆமாங்க நாங்க ஒரு பத்துப் பேரு காத்தால டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோமுங்க. எங்களுக்கு காத்தால ஹாஸ்ட்டல்ல தர டிபன்னா அது தோசை, ஊத்தப்பம், இடியாப்பம், பூரி, பொங்கல், உப்புமா, இட்டலி-வடை இப்படின்னு எல்லாம் பொதுவா கெடையாதுங்கோ. அதெல்லாம் எப்போவாச்சும் ஈஸ்ட்டரோ, கிறிஸ்மஸ்ஸோ, நன்றி செலுத்தும் ஆராதனையோ இத்தியாதி இத்தியாதி நல்ல நாளுங்களோ அல்லது எங்க பங்களாஸ்க்கூலைநடத்துற பெரியப்பாவோட பிறந்த நாளோ அவங்க பில்ளைங்களோட கல்யாண வைபவங்களோ வந்தாவோ இல்லைனா யாராச்சும் வெளிநாட்டுல இருந்து தொரைமார்களோ மிசியம்மாக்களோ வந்தாவோதான் வாடனோ எங்க ஹாஸ்ட்டல நடத்துர அன்புக்கு உரிய பெரியப்பாவோ மனசு வெச்சா தருவாங்க. ஆனா நானு சொல்லப்போர சம்பவம் நடந்த அன்றைக்கி அப்படி எந்த விசேஷ நாளும் இல்லை. ஆனா என்னைப் பொருத்தவரைக்கும் தப்பு! தப்பு|எங்களைப் பொருத்தவரைக்கும் (எங்களைனா) கூட படிக்கிற இல்ல இல்ல படிச்ச அண்ணாமாருங்க, அக்காமாருங்க, தம்பி, தங்கச்சிமாருங்க அப்புரம் வாடன், எங்க உதவிக்கு இருந்து எங்களை கண்ணும் கருத்துமாக பாத்துக்கிட்ட ஹௌஸ்மதர்கள், பெரியப்பா, ஹெட்மாஸ்ட்டர், டீச்சருங்க, சாருங்க எல்லாத்துக்கும்தான். அன்றைய நாள் நிச்சயம் ஒருபோதும் மறக்கவே முடியாத நாளாத்தான் அந்த நாள் இருந்துச்சி. ஆனா அவங்க யாரும் இதுமாதிரியான அதிசய நாட்களைப் பத்தி எல்லாம் பேசவோ எழுதவோ அட தங்களோட டைரிலகூட குறிச்சி வைக்கவோமாட்டாங்க. அப்படின்னா நீ என்ன பெரிய இவனானு கூட நீங்க என்னை கேட்க்கலாம். அதுக்கு உங்களுக்கு உரிமையும் உண்டுங்க. ஆனா வாழ்க்கைல சுவாரசியமான நாட்களும் சுவாரசியமற்ற நாட்களும் இருத்தலென்பது எதைப் பொருத்தது? அந்த வாழ் நாளைக் குறித்த நம்முடைய அந்தராத்மாவோட புரிதலைப் பொருத்ததுதானே? எப்படி இப்படி எல்லாம் உன்னால பேசமுடியிதுன்னுகூட நீங்க கேட்கலாம். ஆனா எல்லாம் நம்மோட அனுபவத்தையும் அந்த அனுபவத்தை நாம் சொல்லரதை அல்லது சொல்லாமல் நமக்குள்ளேயே அசைப்போட்டுப் பார்த்தலையும் பொருத்ததுங்க. சரிங்க. தத்துவம், விசாரனை அப்படின்னு எந்த புண்ணாக்கும் நமக்கு வேண்டாம். விட்டுடுங்க. நேரடியாவே விஷயத்துக்கு வந்திடுறேனுங்க. அதுதாங்க காத்தால எட்டர மணிக்கு சாப்பிடருதுக்கான பெல்லு அடிச்சிச்சி. நாங்க எல்லாரும் தேவாமிர்தத்தை எதிர்ப்பார்த்து ஏங்கும் தேவர்கள்போல{ஒருவர்மேல் ஒருவர் மோதாமல் கைகளால் தேவிக்கொண்டேசெல்லும் நிலையால் நாங்களும்} _(கண்டிப்பாக தேவர்கள்தான்.)எல்லா புள்ளைங்களும் அவங்க அவங்க தட்டுக்களை பேரு இல்லைனாலும் பேரு போட்டிருந்தாலும் அத படிக்கத் தெரியலநாலும் தட்டுக்களைத் கைவிறல்களால் தட்டிப் பார்த்து அந்த தட்டிலிருந்து எழும்பும் ஓசையின் வித்தியாசத்தைக் கொண்டே அவரவர் தம் தட்டுக்களை அடையாளப்படுத்தி எடுத்துக்கொள்ளுவோம். அப்படி எடுத்துக்கிட்டு ஒருவர்மேல ஒருவர் இடிச்சிக்காம இருக்க எங்க தட்டுக்களை டிங் டிங்னு பஞ்சுமிட்டாய்க்காருங்கமாதிரி தட்டிக்கிட்டும் {வழி, வழி! வழி} னு சத்தம் போட்டுக்கிட்டும் எல்லாரும்டைனிங் ரூமுல போய் வரிசை வரிசையா ஆம்பிள்ளை புள்ளைங்க தனியாவும் பொம்பளை புள்ளைங்க தனியாவும் சாப்பாட்டுப் பாய்ல ஒழுங்கா ஒக்காந்துட்டோம். அப்புரம் ஹௌஸ்மதர்னு சொல்லக்கூடிய எங்க அக்காமாருங்க டிபனை பரிமாரினாங்க. அந்நைய டிபன் இனிப்பு சேர்த்த இராகி கூழ். எங்களோட அந்தரங்க அகராதில அந்த இராகி கஞ்சிக்கு நாங்க பாயாசம்னு தனி அர்த்தம் வெச்சி இருப்போம். யாராச்சும்அதாவது சாப்பிட முடியாம சிக்கா படுத்தவங்களோ அல்லது அவங்க வீட்டுல இருந்து அம்மாவோ அப்பாவோ பாக்க வந்திருந்தா அன்னைய டிபனை அவங்களால அனுபவிச்சி அருந்தமுடியாம போகும் இல்லையா?அப்படி அந்த தேவாமிர்தத்தை தவரவிட்டவங்களோ [இன்நைக்கு ஹாஸ்ட்டல்ல என்ன டிபன்] னு கேட்டா நாங்க ரொம்ப குதுகுலமா {அட இன்னைக்கி நீ மிஸ் பண்ணிட்ட இராகி பாயாசம்} னு சொல்லுவோம்முங்க. இப்படி எங்களுக்கு இராகி பாயாசம் மட்டும் இல்லைங்க. ரவா பாயாசம், கோதுமை பாயாசம் கம்பபாயாசம்கூட தருவாங்க. சில நாட்கள்ள சக்கரைக்கு பதிலா எங்களுக்கு வழங்கும் மேர்ப்படி கஞ்சி வகைகளில்உப்பை சேர்த்து தருவாங்க. கஞ்சி ருசிக்கமுந்தின நாள் இரவு சாப்பாட்டுக்கு பயன்படுத்தின மிளகு ரசத் திப்பியைக் கொண்டோகடலையைக் கொண்டோ துவையல், அல்லது சட்டினி பண்ணித் தருவாங்க. ஒரு நாள் நாங்களும் ஒரு சுவாரசியமான பட்டி மன்றம் வெச்சோம். அட அந்த அதிசய நாளிலதான் பட்டிமன்றமும் வெச்சோம். பட்டிமன்றத்தின் தலைப்பு இதுதான். காலை கஞ்சி வகைகளுக்கு ஏத்தது உப்பா? சக்கரையா? நாங்க வெச்ச பட்டிமன்றத்துக்கு இன்னையநாளா இருந்திருந்தா நம் தொலைக்காட்சிகளில் தோன்றி வாதிடும் ஏதாவது ஒரு பிரபலமான குழுவினரை அழைத்து வாதிடச் சொல்லி அவர்களுக்கும் உப்போ உடன் தொட்டுக்கொள்ள மேர்ப்படி சட்டினியுடன், அல்லது சர்க்கரையோ சேர்த்த பாயாச கஞ்சி வகைராக்களை பரிமாரி இருப்போம். ஆனால் அப்படியான ஒரு நாள்அதாவது சம்பவம் நடந்த அன்று வைத்த கஞ்சி வகைகளுக்கு ஏற்றது உப்பா? சக்கரையா? என்ற எங்களது பட்டிமன்ற நிகழ்ச்சியை எங்கள் ஹாஸ்ட்டல் வாடனே நடுவராக இருந்து தீர்ப்பளித்தார். ஆனால் நாங்கள் பேசாமலே எங்கள் பட்டிமன்றத்தினை நடத்தினோம் என்பதும், வாடன் அம்மையாரும் பேசாமலே பட்டிமன்றத்துக்கு நடுவராக இருந்து தீர்ப்பினை வழங்கினார் என்பதும், பட்டிமன்றத்தில் உப்பு கோஷ்டியினரின் வாதம் உப்புச் சப்பு இல்லாமல் தோற்றுவிட்டது என்பதும் வெற்றி பாயாச வகைராக்களாகிய எங்களுக்கே மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய வாடன் அம்மையாரால் ஜனநாயக முறைப்படி அளிக்கப்பட்டது என்பதும் வெற்றி பெற்ற எங்களால் எப்படி பரைசாற்றாமல் இருக்கமுடியும்? அச்சச்சோ! மன்னிப்பு, மன்நிப்பு.
அட நடந்த அந்த அற்புதத்தை நானு சொல்லாமவேறு வேறு எதை எதையெல்லாமோ என் பாட்டுல பேசிக்கிட்டே போரேனே. ஊம்! ஊம். ஊமையைப்போல இருக்கிற எனக்கு இப்படி சொல்ல ஒரு சந்தர்ப்பம் கெடச்சா? சரி, சரி. அன்னைக்கு எங்களுக்கு இரட்டை மடங்கு அதிஷ்ட்டம்னுதான் சொல்லனும். காரணம் எங்க டிபன் பட்டிமன்றத்துல எங்களுக்கள்லவா வெற்றி கெடச்சது? மேலும் அன்று பரிமாரப்பட்ட ரவா பாயசம் ஏனோ வழக்கத்தைவிடவும் அதிக ருசியா வேறு இருந்துச்சி. ருசி கண்ட இல்லை இல்லை காணாத பூனை இல்லையா நான்? அந்த டிபன் செய்த கைகள் நல்லா இருக்கணும். பீமனைப்போல என்னால் சாப்பிட முடியாவிட்டாலும் வழக்கமா நான் சாப்பிடர அளவைவிடவும் இரண்டு மடங்குரவா பாயசத்தை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தேன். என்னோடு சேர்ந்து ஐந்தாறு அண்ணன்மார்களும் அக்காமார்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாங்க.
அப்போ பார்த்து (ஓடுங்க, ஓடுங்க, ஓடுங்கடா டேய்) னு பெருங்குரலுல அபசொரத்துல அலரிக்கிட்டே எங்களையெல்லாம் சுசி அக்கா கைய்யைப் புடிச்சி இழுத்துக்கிட்டு தலை காலு தெரியாம டைனிங் ரூமைவிட்டு வெளியே ஓடினாங்க. நானுகூட (என்னடா இந்த அக்காவுக்கு ஏதாச்சும் பைத்தியம் கிய்த்தியம் புடிச்சிக்கிச்சா? நாங்க எல்லாம் சாப்பிடலனாகூட நல்லா சாப்பிடுங்கடா தம்பிகளா. சாப்பாட்ட வீணடிக்கக்கூடாது. அது நமக்கு சாமியோட கருணையாலையும் எத்தனையோ நல்லவங்களோட ஒழைப்பாலையும் கிடைக்கிறதுன்னு சொல்லுவாங்களே. இந்த அக்கா எதுக்கு இப்படி நல்ல சாப்பாட்ட தின்னக்கூட ுடாம இப்படி பண்ணராங்க) னு எனக்கு கோவம் கோவமா வந்துச்சி. அவசர அவசரமா கூட்டிட்டு போயி தட்டுல இருக்கிற ரவைக்கஞ்சியையெல்லாம் கொட்டிப்புட்டு தானே எங்களோட தட்டுக்களையும் கழுவிப்புட்டு எங்களை காலை பிரேயருக்கு கூட்டிட்டு போனாங்க. எங்க ஹாஸ்ட்டல்ல ஒரு நாளைக்கு கொறஞ்சது அஞ்சு தடவ பிரேயர் இருக்கும். காத்தால அஞ்சு மணிக்குமொதல் பிரேயரும், ஸ்க்கூலு தொடங்கும் முன்ன இரண்டாம் முறையும், மத்தியானம் சாப்பிட்டு ஸ்க்கூல் தொடங்கும் முன்ன மூன்றாம் தரமும், சாயங்காலம் ஆறு மணிக்கு புல் தரையில நாலாந்தரமும், இராத்திரி சாப்பிட்டுட்டு தூங்குரப்போ அஞ்சாம் முறையுமா நாள் தவறாம் அஞ்சு தடவ பிரேயர் இருக்குமுங்க. இது தவிற சாப்பிடரப்போ குட்டி ஜெபங்களும் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ஜெபத்துல என்னன்னா குட்டி ஜெபந்தான். அந்த ஜெபத்தக்கூட சில அண்ணாக்களும் அக்காக்கலும் கால்மணி அரைமணி ஜெபமா மாத்திப்புடுவாங்க. ஆனா அப்படி அவங்க செய்யரப்போதான் எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கும். காரணம் பசி வந்தா?பெருங்கொடல சிருகொடலோ அல்லது சிறுங்கொடல பெருங்கொடல தின்னுமாமே!அப்படி இருக்கிறப்போ அந்த நெடும் ஜெபத்த எப்படி என்னால வெறுக்காம இருக்கமுடியும்? நான்கூட சாமிக்கிட்ட {சாமி இவங்க எப்போதான் இந்த ஜெபத்த முடிப்பாங்களோ? சீக்கிரமா முடிக்க வையப்பா சாமி} என்று வேண்டிக்குவேன். பெரும்பாலும் சாப்பாட்டு ஜெபத்துல நாங்க பிரேயர் முடிஞ்சதும் “இந்த நல்லாகாரத்தை
தந்த தேவ தயவை
நன்றியோடே நினைப்போம்
என்றும் உம்மை சேவிப்போம்
ஆமேன்.” என்ற பாட்டைப் பாடியும் தேங்கியூ ஜீசஸ் என மூன்று முறை சொல்லியும் சாப்பாட்டு ஜெபத்தை முடிப்போம். அண்ணைக்கும் மேர்படி ஜெப பாட்டும் தேங்கியூ ஜீசஸும் சொல்லிட்டுதான் சாப்பிட்டோம். ஆனா ஏனோ இப்படி நடந்துபோச்சி. எனக்கோ ஒண்ணுமே புரியல. கூட வந்த மத்த புள்ளைங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கணும்னு என்னோட நெனைப்பு.
காலை பிரேயர் நடந்துகிட்டிருந்துச்சி. எங்க பெரியப்பாதான் பைபில் படிச்சி பிரசங்கமும் ஜெபமும் செஞ்சாங்க. (தேவன் என் அடைக்கலமும் பெலமுமானவர். ஆபத்துக்காலத்தில் அணுகூலமான துணையுமானவர்.
.)சங்கீதம் 46-1 என்பதாக அந்த வேத வசனம் இருந்துச்சி. அந்த வசனத்துக்கான அர்த்தத்த விரிச்சி சொன்னப்போதான் அன்றைய நாளின் உன்னதம் எனக்கு உண்மையா புரிந்தமாதிரி இருந்துச்சி. எங்க டைனிங் ரூமுல நாங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்த எடத்துல சாப்பாடு சூடு ஆறவேணும்கிறதுக்காக போடப்பட்டஃ ஃபேன் வேகமா சுத்திக்கிட்டு இருந்தப்ப என்னமோ ஏதோ கோளாறு காரணமா அந்த ஃபேனின் ரெக்கை கழண்டு கீழ உழுந்திருக்கு. சத்தம் கேட்ட அப்போதான் சுசி அக்கா வந்து எங்களுக்கு ஆபத்து ஏதும் வந்துறகூடாதுன்னு எங்களை வெளியே அழச்சிட்டு போயிருக்காங்க. ஆனா அது நடக்குறதுக்கு முன்ன தற்செயலா கீழ உழுந்த ஃபேனின் ரெக்கை சாப்பிட்டுக்கிட்டிருந்த எங்கமேல உழாம, ஒருத்தருக்கும் ஒரு துளியூண்டு காயத்தகூட உண்டாக்காம தரையில உழுந்ததுதான் ஆச்சரியமும் அதிசயமுமான செய்தி. அந்த சம்பவத்ததான் பெரியப்பா தன்னோட பிரசங்கத்துல சொன்னதில்லாம (இந்த காரியம் கடவுளே நீர் எம்மோடு இருக்கிறீர் என்பதற்கு சாட்சி!இன்றைக்கு எம்மைக் காத்ததுபோல என்றும் துணை இருந்து நீரே எம்மை காத்தருள்க. உமக்கே துதி, கனம், மகிமை யாவும். ஆமேன். என்னு சொல்லி ஜெபத்தை முடிச்சாங்க. நாங்களும் பரமண்டல ஜெபத்தை சொல்லி பிரேயரை முடிச்சிக்கிட்டு எங்க க்லாசுங்களுக்கு போனோம். இந்த அனுபவத்த ஒரு 30 வருஷம் கழிச்சி இப்போ நான் அசை போட்டுப் பாக்கிறேனெ. இப்படியெல்லாம் நடந்துச்சின்னு நெனைக்கிறப்போ அட பகவானே வாழ்க்கை என்ற நதியில எத்தன எத்தன விதமா அலையும் நுங்கு நுறையும் புரண்டு புரண்டு வந்திருக்குதுடப்பா சாமி. இந்தக் கட்டையும் இதையெல்லாங்கூட நெனச்சி பாக்கவும் முடிஞ்சிருக்கே. சொல்லரதுன்னா இப்படி ஒவ்வொரு உசுருக்கும் இப்படி இப்படி எத்தன எத்தன விசேசம் இருக்கும்? இயர்க்கையோட பெரிசானவிளையாட்டுல இந்த வாழ்க்கை என்னும் நதிதான் எத்தனை எத்தனை விந்தையானது! அந்த நதியோட வெள்ள சுழிப்புல நம்ம அனுபவங்கிறது? அடேயப்பா! அதப்போயி சொல்லிப் பாக்க ஆசப்படரதுங்கிறது அருகம்புல்லோட வேறோடமொதோ எது கடைசி எதுன்னு சும்மா கெடந்த சோம்பேரி தேடிப் பாக்கிறமாதிரி இல்ல இருக்கும்?
————————
- கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -4 பாகம் -10 [முடிவுக் காட்சி]
- என் பார்வையில் தமிழ் சினிமா
- STOMA presented by Agni Koothu (Theatre of Fire) & The Substation
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )
- வால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்
- மனத்தில் அடையாத ஒரு காகம்
- இரவு விழித்திருக்கும் வீடு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….. 11. கல்கி – விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
- வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2
- நதி வெள்ளத்தின் துளி!
- வலி
- இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்
- அக்னிப்பிரவேசம்-17
- ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4
- தவம்
- “தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்
- அம்முவின் தூக்கம்
- மகாலட்சுமி சுவாமிநாதன்
- தமிழ் ஆவண மாநாடு 2013
- அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா
- எரிதழல் கொண்டு வா!
- பெண்ணே !
- இரு கவரிமான்கள் –
- திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு
- மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)
- பத்து நாட்கள்
- காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு
- அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?