விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்

This entry is part 17 of 28 in the series 27 ஜனவரி 2013
ஜனவரி 26, 2013 குடியரசு தினத்ததை முன்னிட்டு
cover-bangla-desh

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

 

இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப் பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டுத்
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின் றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!

***********
Series Navigationவிற்பனைக்குப் பேய்ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    பாராட்டுக்கு நன்றி நண்பர் மணிகண்டன்.

    கீதாஞ்சலிக் கீதங்கள் முழுவதும் பழைய திண்ணையிலும், என் வலைப் பூங்காவிலும் [https://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/] உள்ளன.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *