1)இது சாதாரண பாய்முடையும் இஸ்லாமிய நம்பிக்கையுள்ள முஸ்லிம் சகோதரியின் தீவிரவாதமல்ல. ரோட்டோர கடைகளில் தனது உழைப்பை செலவளிக்கும் ஏழை எளிய முஸ்லிம் சகோதரனின் தீவிரவாதமுமல்ல. இது தலிபான் தீவிரவாதத்தின் ஒரு காட்சி.
2)ஆப்கன் தலைநகர் காபூலிலிருந்து 130கிமீ தொலைவிலுள்ள இரண்டாயிரம் நூற்றாண்டுக்கும் மேலான பழமைவாய்ந்த 175 மற்றும் 120 அடி உயரமுள்ள புத்த சிலைகளை தலிபான்கள் ராக்கெட் ஏவுகணைகளை டைனமேட் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தகர்த்து அழித்தனர். காபூலில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ ஆறாயிரம் புத்தச் சிலைகளையும் அழித்தொழித்தனர்.தலிபானின் உயர்நிலைத்தலைவர் முல்லா முகமது உமரின் ஆணைப்படியே 2001இல்இந்த அழித்தொழிப்பு அரசியல் மேலெழும்பியது.
3)இஸ்லாத்தின் புனிதநூலான குரான் பிற சமய தெய்வங்களை திட்டாதீர்கள் என்று கூறுகிறது…தலிபான்களின் தீவிரவாதம் சரியா?
4)நடிகர் கமலஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தடை மற்றும் தடை நீக்கம்,தீவிரவாதம் குறித்த விவாதங்கள் எதிரும் புதிருமாக நடைபெற்றுவருகையில் தவ்கீது பேசும் முஸ்லிம் தலைவர்களில் சிலர் மிகவும் கீழ்த்தரமான வசவுகளை பகிர்கின்றனர். அதில் ஒன்று நடிகர் கமல்ஹாசனையும் அவர்தம் மகள் சுருதிஹாசனையும் இணைத்து பேசிய பேச்சு. பிஜே எனும் பி.ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் பேசிய இப்பேச்சு உலகின் மிக கீழ்த்தரமான பேச்சுகளில் ஒன்றாகவே இருக்கிறது. இது குரானிய அறவியலுக்கு எதிரான பேச்சு.
இந்நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பு தலைவர்கள் முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவர்களிடமும் இதற்கு இணையாக செய்யவேண்டிய பரப்புரை என்பதே இஸ்லாமும் தலிபானியமும் வெவ்வேறானது என்பதை பரப்புரை செய்ய வேண்டியதே ஆகும். இதை ஏன் அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.
5)தலிபான் என்பதற்கு முஸ்லிம் என்பது பொருளல்ல. மாணவன் என்பதே பொருள்.தாலிப் என்ற அரபுவார்த்தையிலிருந்தே இது உருவாகிறது
6)எழுபதுகளில் ஆப்கன் – சோவியத் முரண்சூழலில் சோவியத்திற்கு,மார்க்ஸிய பின்னணி சார்ந்த ஆப்கன் அரசுக்கும் எதிராக அமெரிக்க உருவாக்கிய முஜாஹிதீன் அமைப்பினரின் வளர்ப்புக் குழந்தையே தலிபானியம்.
7)இது வகாபிய சித்தாந்த அரசியலை உள்வாங்கிய அமைப்பு. முஸ்லிம்பெண்களுக்கு எதிரான கடுமையான வன்முறையை நிகழ்த்தியது.
8)பாமியானின் மிக உயரமான புத்தச் சிலைகளை ராக்கெட் ஏவுகணைகளால் அழித்து ஒழித்தது.
9)முஸ்லிம் பெண்கல்விக்கு ஆதரவாகப் பேசிய மலாலாவை சுட்டுக் கொல்ல முயன்றது.
10)கஞ்சா உற்பத்தியே ஆப்கனின் விவசாயப்பொருளாதாரம்.இதை மேலைநாடுகளுக்கு காபிர்களுக்கும் விநியோகிப்பது ஷரிஆவில் அனுமதிக்கப்பட்ட்து என்று பேசியது.
11)விஸ்வரூபத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சில முக்கியத் தலைவர்கள் இந்தியாவில் தடை செய்யப் பட்ட சிமி அமைப்பில் செயல்பட்டவர்கள். அதன் சித்தாந்த பின்னணியைக் கொண்டவர்கள். இவர்கள் தீவிரவாத்த்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால் எப்படி பிற இஸ்லாமிய அமைப்பினர்கள் இவர்களை நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை.இன்று இவர்கள் ஜனநாயக நடைமுறைக்கு திரும்பி இருப்பது ஒரு நல்ல விஷயம்.
12) உலகாளவில் இயங்கிக்கொண்டிருக்கும் வகாபிய ஆதரவு தீவிரவாத அமைப்புகளின் வன்முறை அரசியல் குறித்தும் இவர்கள் பொதுமக்கள் மத்தியில் தங்கள் பரப்புரையை செய்யவேண்டும்..
13) இஸ்லாத்தின் பெயரை வைத்துக் கொண்டு வகாபிசமோ பிற சமயக் கடவுள்களைத் தாக்குகிறது. புத்தசிலைகளை தகர்க்கிறது. சூபிகளின் சமாதிகளை தரைமட்டமாக்குகிறது.ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடுவதை தவிர்த்த தீவிரவாதத்தை பரப்புரை செய்கிறது..தலிபான் முஜாஹிதீன் இயக்கம்,,லஷ்கர் ஐ தொய்பா,லஷ்கர் ஐ ஜப்பார்,மார்கஸ் தாவா இர்ஷாத், ஜமாஅத் தாவா,ஹரகதுல் முஜாஹிதீன், ஹரகதுல் அன்ஸார், என பல பெயர்களில் நடமாடுகிறது. இவ்வியக்கங்களால்தான் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்கிற ஒரு மாயையான கருத்துருவாக்கம் முஸ்லிம் அல்லாதவர்களின் பொதுப்புத்தியில் உருவாகி இருக்கிறதோ என்கிற சந்தேகம் வலுவடைந்து உள்ளது.
14) ஆபிரிக்கநாடான மாலியில்,மர்றும் சோமாலியாவில் சூபிஞானிகளின் நினைவிடங்களை ஆயுதங்களால் தகர்த்து அழித்துக் கொண்டிருக்கும் வகாபிய இயங்கங்களை ஆதரித்துதமிழ்சூலில் எழுதி முஸ்லிம்களிடம் வகாபிய வன்முறை மனத்தை உருவாக்கும் இயக்கங்களின் நிலைபாடை எதிர்த்தும் இந்த முஸ்லிம் கூட்டமைப்பினர் பரப்புரை செய்யவேண்டும்.இதுவே பல்சமயசூழலில்தமிழக முஸ்லிம்களின் ஜனநாயக உணர்வை சகிப்புத்தன்மையை உலக மக்களுக்கு உணர்த்தும்
- பௌத்த கோவில்கள் மீது கொரிய கிறிஸ்துவர்களின் தொடர்ந்த அட்டூழியம்
- பலுச்சிஸ்தான் இந்துக்களின் வெளியேற்றம்
- மலர்மன்னனுடன் சில நாட்கள்
- அஞ்சலி – மலர்மன்னன்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..16 இந்திரா பார்த்தசாரதி – ‘வேதபுரத்து வியாபாரிகள்’.
- குறும்பட மேதேய் ! அங்காடி தெருவின் குறும்படபோட்டி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 7
- சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு
- நிஜமான கனவு
- வால்ட் விட்மன் வசன கவிதை -10 என்னைப் பற்றிய பாடல் -3 (Song of Myself)
- சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரையும், சுப்ரபாரதிமணியனின் கொஞ்சம் கவிதைகளும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 44
- புதியதோர் உலகம் செய்வோம் . . .
- துயர் விழுங்கிப் பறத்தல்
- பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -5 மூன்று அங்க நாடகம்
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (11)
- குற்றமும் தண்டனையும் – எம். ஏ. சுசீலாவின் மொழிபெயர்ப்பு
- தாகூரின் கீதப் பாமாலை – 51 நேசிப்பது உன்னை !
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -3
- சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்
- நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்
- டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!
- மலர்மன்னன்
- மலர்மன்னன் – மறைவு 9.2.2013
- பெருங்கதையில் ஒப்பனை
- அக்னிப்பிரவேசம்-22
- டோண்டு ராகவன் – அஞ்சலி
- தலிபான்களின் தீவிரவாதம் சரியா
- பூமிக்கு அருகே 17,000 மைல் தூரத்தில் நிலவுக்கும் இடையே முதன்முறைக் குறுக்கிட்டுக் கடக்கப் போகும் முரண்கோள் [Asteroid]
- கூந்தல் அழகி கோகிலா..!