தாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை !

This entry is part 24 of 26 in the series 24 பிப்ரவரி 2013

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

நிரம்பப் பேசி விட்டாய் நீ இங்கு வந்து

ஒரு வார்த்தை சொல்லாது !

உன்வாய் மொழியைப் புரிந்து கொள்ளும்

நம்பிக்கை இழந்து விட்டேன் !

புன்னகை அம்பை என்மேல் ஏவி

புகுந்து கொண்டாய் நீ

என் ஆத்மாவில் ஆழ்ந்திருக்கும்

ஏதோ ஒன்றில் !

உடனே ஆர்வமோடு உற்று நோக்குவாய்

என் முகத்தினை !

ஆகவே

உன்னைத் தவிர்க்க முனைகிறேன்

என் புற முதுகு காட்டி !

கண்ணீர் கழுவிய என் கண்களின்

கனிவு நோக்கால் ஊடுருவி

உன்னுள்ளே

காண முடியும் என்னால் !

என்னால் இயல்வது உன்னால் முடியாது !

பனி மூட்டம் மூண்டுள்ளது

உனது மனத்தில் ! அதன் மூலம்

புதைந்து போய் விட்டாய்

உன்னுள்ளே நீ !

இல்லையேல்

ஏமாற்றுவாய் நீ என்னை

உணராமலே ! ஆகவே

உன்னைத் தவிர்க்க முனைகிறேன்

என் புற முதுகு காட்டி !

+++++++++++++++++++++++++

பாட்டு : 147 1926 ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி சாந்திநிகேதனத்தில் தாகூர் 64 வயதினராய் இருந்த போது எழுதிப் பிரபாசியில் [Pirabasi in Badra 1333 BS] வெளியானது.

+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] February 19, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationசிலம்பில் அவல உத்திமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *