வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46

This entry is part 14 of 33 in the series 3 மார்ச் 2013

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -46

சீதாலட்சுமி

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

மனிதன் என்பவன் அரக்கனும் ஆகலாம்.

அவன் வாழ்நாளில் அவன் உலா வருவது இந்த மண்ணிலேதான். எனவே சூழ்நிலைத் தாக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது

அனுபவங்களின் படிப்பினைகளைச் சிறப்பாகப் பேசுவோம். ஓர் அனுபவத்தைப் பார்க்கலாம்.

அவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கின்றான். இளமைப் பருவத்தில் முதல் அடி வைத்திருக்கின்றான். காணும் இடமெல்லாம் டாஸ்மார்க் கடைகள்!ஏனித்தனைக் கூட்டம்? ஏதோ இருக்கின்றதால்தான் மனிதக் கூட்டம் அங்கே மோதுகின்றது. அவனுக்கும் அதனைப் பார்க்கும் ஆசை துளிர் விடுகின்றது. கடைக்குச்செல்கின்றான். அவனும் ஒரு பாட்டில் வாங்குகின்றான். பொதுவிடத்தில் குடிக்கத் தயக்கம். என்ன செய்யுமோ, யாராவது பார்த்து அப்பாவிடம் சொல்லி விட்டால்.கடற்கரை சென்று இருளில் ஓர் படகுக்கருகில் மறைவாக உட்கார்ந்து கொள்கின்றான். எதையோ சாதிப்பது போன்று ஓர் உணர்வு. பாட்டிலைத் திறந்து முதலில் ருசிபார்க்கின்றான். அதன் சுவை பிடிக்கவில்லை. முகம் சுளிக்கின்றான். இதையா குடிக்கின்றார்கள்? ஒருவேளை இன்னும் கொஞ்சம் குடித்தால் அதன் அருமை தெரியலாம்என்று நினைத்து மூக்கைப் பிடித்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் குடிக்கின்றான். வயிற்றில் என்னமோ செய்கின்றது. தூரப் போட மனம் வரவில்லை. கஷாயம் குடிப்பதுபோல் இன்னும் கொஞ்சம் குடிக்கின்றான். முடியவில்லை. பாட்டிலை வெறித்துப் பார்க்கின்றான். என்ன இருக்கின்றது, இதைப் போய்க் குடிக்கின்றர்கள் என்றுநினைக்கின்றான். என்னமோ செய்ய ஆரம்பிக்கின்றது. புரியாத உணர்வுகள். இப்பொழுது எரிச்சல் தெரியவில்லை. பறப்பது போன்ற உணர்வு. சிரிக்கத் தோன்றுகின்றது.சிரிக்கின்றான். கடற் கரையில் ஓர் இளம் ஜோடி சென்று கொண்டிருக்கின்றது. தனக்கும் ஜோடி வேண்டும் என்று ஆசை பிறக்கின்றது. ஏதேதோ எண்ணங்களால் அவன்ஆட்டிவைக்கப் படுகின்றான்

 

இன்னும் இதுபற்றி எழுதலாம். அவனுக்குக் கிடைத்த அனுபவத்தில் அவனுக்குக் கிடைத்த படிப்பினை குடித்தால் கற்பனை உலகில், சொப்பன வாழ்க்கையில்மிதக்கலாம். தயக்கம் போய்விட்டது. பயமும் போய்விட்டது. அடேயப்பா, இதற்கு இவ்வளவு சக்தியா? அவன் குடிகார னாகி விட்டான். அவனுக்குக் கிடைத்தஅனுபவத்தில் அவனுக்குக் கிடைத்த படிப்பினை

 

எதையும் பொதுப்படையாகக் கூறமுடியாது. தேடலும் விதிவிலக்கல்ல. புரிதல், தெரிதல், அறிதல் இந்த சொற்கள் அற்புதமானவை. வாழ்வியலில் அமைதிக்குத்தேவையானவை அர்த்தமுள்ள படிப்பினைகள். எல்லோருமே நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் பலவற்றில் தடுமாறுகின்றோம். அதற்கேற்பதான் வாழ்க்கையும்அமைகின்றது

 

வெளிப்படையாக நிறைய எழுதலாம், பேசலாம். ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் முடியுமா?

 

“இன்றைய தினம் படங்கள் எடுப்பது கஷ்டமாக இருக்கின்றது. கதையில் கதாநாயகன் இருந்தால் வில்லனும் இருக்க வேண்டும். ஆனால் வில்லன் எந்த சாதியையும்சார்ந்தவராக இருக்கக் கூடாது. மதத்தைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது. வக்கீலாக,டாக்டராக, போலீசாகவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் சம்பந்தப்பட்டஅமைப்புகளும், சங்கங்களும் எதிர்த்துப் புகார் செய்கின்றன. அப்படியென்றால் வில்லன்களாக யாரை வைத்துதான் படங்கள் எடுப்பது? இந்திரா நகரில் வில்லன்கள்வாழ்வதுபோல் காட்டினாலும் அந்தத் தெருக்காரர்கள் எதிர்க்கிறார்கள். மிருகங்களை வில்லன்களாகக் காட்டினாலும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு குறுக்கேவருகிறது.”

 

இது ஓர் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்.

 

சாதிகளைப் பற்றி, மதங்களைப் பற்றி அலச முடியுமா? திடீரென்று சட்டம் பாயலாம். அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும் கடினமே. ஒன்றா இரண்டா. நமக்கு எவைகளில்சுதந்திரம் இருக்கின்றன என்பதும் திகைப்பாகவே இருக்கின்றது.

 

குழுச் சமுதாயமாக இருந்த காலத்தைவிட இப்பொழுது கொடுமைகள் கூடிவிட்டன. பெண்ணை வதைத்து உயிர்குடிப்பது அரிது. விவசாயம் தொடங்கவும் மனிதசமுதாயத்து நாகரீகத்திற்குப் பல பண்பாட்டு விதிகளைச் சமைத்தான். இப்பொழுது நாகரீகம் என்றால் ஆடைக் குறைப்பும், ஆணும் பெண்ணும் கூடிக் குடிப்பதும்பாலியலுறவு கொள்வதுமென்றெல்லாம் மாறிவரும் காட்சிகளைக் காண்கின்றோம்.

 

மனிதன் காட்டில் வேட்டையாடித் திரிந்த காலத்திலேயே கஞ்சாவின் பழக்கமும் தோன்றி விட்டது. களைப்பைப் போக்க என்று அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.பண்பாட்டு காலத்திலும் விருந்தினர்களுக்கு மது கொடுத்து மகிழ்வான். அப்பொழுது கூட இன்றைய கொடுமைகள் நடந்த தாகச் செய்திகள் அவ்வளவாக இல்லையே!

 

தமிழர்கள் வரலாறு சரியாக எழுத முடியாததற்குக் காரணம், புலவர்களுக்கு மது கொடுத்து எழுதப்பட்ட பாட்டு வரிகளை வைத்து சரித்திரம் எழுத முடியாது என்றார்மதன் அவர்கள்.

 

அன்றும் பெண்கள் கற்பழிப்பு இருந்தது. ஆனால் இபொழுது நடப்பது என்ன? இரண்டு வயது குழந்தைகளைக் கூடக் கெடுத்து கசக்கி கொன்று குப்பையில் போடுகின்றானே!அவனுக்குள் இருக்கும் அரக்கன் இன்று விஸ்வரூபம் எடுக்கக் காரணம் ஊடகங்களும் ஒரு காரணமா? அறிவு வளர்ச்சிக்கும் வாழ்க்கை வசதிக்கும் வந்த விஞ்ஞானஅற்புதங்களான ஊடகங்களிலும் அரக்கன் சிரிக்க ஆரம்பித்து ஈர்க்கின்றதே!

 

மதுவரக்கன் சிரிக்கின்றான்

 

எங்கும் டாஸ்மார்க் கடைகள். எளிதாகக் கிடைக்கும் உற்சாக பானம்

 

ஒரு பக்கம் மதுவிலக்கு பற்றி கோஷம், ஊர்வலங்கள் அதுவும் மனிதன் மேலுள்ள அக்கறையாலா அல்லது அரசியல் விளையாட்டுகளில் ஒரு அங்கமா?

 

மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையைப் பார்த்து குடிகாரர்களுக்குக் கோபம்.

 

அரசுக்கும் தவிப்பு. டாஸ்மார்க் வியாபாரத்தினால் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகம். அதிலிருந்து எத்தனை திட்டங்கள் மக்களுக்காக தோன்றுகின்றன. ஒருநல்லவன் முட்டாள் தனமாக முணங்குகின்றான். குடியினால் குடிகெட்டபின் கிடைக்கும் திட்டங்கள் செத்த பிணத்திற்குச் செய்யும் அலங்காரம் போல் இருக்கின்றதாம்.அச்சத்தில் அடக்கி வாசிக்கின்றான்.

 

குடிகாரர்கள் தங்களுக்கு ஓர் அமைப்பை ஆரம்பிக்க விரும்புகின்றார்களாம். மதுவிலக்குக் கொண்டு வந்தால் அந்தக் கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்களாம். இது குடிகாரன்பேச்சு. தேர்தல் நேரத்தில் காசுக்குப் பதிலாக சில பாட்டில்கள் கொடுத்தால் போதும் அவர்களுக்கு ஓட்டு போட்டுவிடுவான். பெண்டாட்டியையும் பயமுறுத்தி தன்விருப்பதிற்குள் அடக்கிவிடுவான்.

 

அதுசரி மதுவிலக்கு வந்தால் அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வேலை போய்விடுமே. இப்பொழுதே தங்களுக்கும் ஓர் தொழில் சங்கம் தொடங்கயோசிகின்றார்களாம். வேலை போனால் போராட்டம் நடத்தலாமே. அப்பப்பா! அது பெரும் கூட்டமாகத்தான் இருக்கும். ஏற்கனவே வேலை யில்லாத் திண்டாட்டம். 28மில்லியன் பேர்களுக்கு வேலை இல்லையாம். இதுவும் சரியான புள்ளி விபரமா? இவர்களும் கூச்சலிட்டால் அரசியலுக்கு ஆதாயம் இல்லையே! மதுவிலக்குஅரசியலுக்கும், அரசுக்கும் ஓர் பிரச்சனைதான்.

 

பெண்ணின் நிலையென்ன? அரக்கன் அருகில் வந்தால் பாதுகாப்பிற்கு ஓர் புதியரக காலணிகள், அறிமுகமாகின்றதாம். வடக்கே ஒன்று என்றால் தெற்கு சும்மாஇருக்குமா? தலையில் அணியும் ஒரு கருவியின் அறிமுகமும் உண்டாம். இவைகள் பற்றிய செய்திகள் மட்டும் வந்தன. பயன்பாடு பற்றி ஒரு தகவலும் இல்லை.

 

இப்பொழுது இன்னொரு கொடுமையும் சேர்ந்துவிட்டது. உடன்படாதவள் மேல் ஆஸிட் ஊற்றிவிடுவது. கொடுமையிலும் கொடுமை. !

 

அமெரிக்கா மாதிரி துப்பாக்கிகள் மட்டும் எளிதாகக் கிடைத்தால் வெடிச் சத்தம் எப்பொழுதும் கேட்கலாம். பொறுமை இழந்து பெண்ணும் சுட ஆரம்பித்துவிடுவாள்.

 

பெண் ஜென்ம்ம் என்ன பாவம் செய்தது?

 

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம்?

 

சீனாவில் ரோட்டோர தேவதைகளுக்குப் பதிலாக ஆணைத் திருப்திப் படுத்தும் ஓர் ரோபோட் கண்டு பிடித்ததாகச் செய்தி வந்தது. அதுவும் செய்தியுடன் நின்றுவிட்டதா?அப்படி வந்தாலும் இங்கு டஸ்மார்க் கடை மாதிரி ரோபோட் விலைமாதர்கள் மையங்களும் பெரிய தொழிலாகிவிடும்.

 

ஆனால் அதுவும் இந்த அபலைப் பெண்களைக் காப்பாற்ற முடியாது. அவளுக்கு விடிவே கிடையாதா?

 

மற்ற பிரச்சனைகளையும் சிறிது பார்க்கலாம்

 

வன்முறை

 

வீட்டிலிருந்து நாடுவரை வன்முறை; உலகம் முழுமையிலும் வன்முறை . வன்முறை இப்பொழுது விளையாட்டாக ஆகிவிட்டது. திரைப்படக் காட்சிகளைப் பார்த்துப்பார்த்து இன்றைய ஹீரோக்கள் குதிக்க ஆரம்பித்துவிட்டனர் உயிர்வதையில் ஓர் உற்சாகம். பண்பாட்டுக்கு சமாதி கட்டிவிட்டு அதனை மேடையாக்கி ஆடும் கூத்துவன்முறை.

 

ஊர்களில் சாதிகள் பிரச்சனையால் வன்முறை

 

உலக அரங்கில் மதங்கள் போர்க்கொடியுடன் உலா வருகின்றான. மனித உயிர் பாதுகாப்பாற்ற நிலையில் இருக்கின்றது.

 

பேரசையின் பிள்ளைகள் ஒன்றா இரண்டா?

 

தலை மகன் “ஊழல்”

 

இயக்கங்கள் வேகமாகத் தோன்றும் ஏற்றத்தை விட இறக்கத்தில் வேகம் அதிகம். நல்லவைகளுக்கு மனித உணர்ச்சி மழுங்கிவிட்டதா?

 

கடவுளைக் கல்லாக்கி விட்டான். மனமும் மரத்துவிட்டது.

 

மனித இனம் தோன்றிய பொழுது சாதிகள் கிடையா. இருந்தது குழுச் சமுதாயம். புலம் பெயரும் பொழுது வசதியாக இடம் வேண்டின் அந்த இடத்தில் உள்ளஅனைவரையும் கொன்றுவிடுவர். வேளாண்மை காலம் வந்தது .பல குழுச் சமுதாயங்கள் ஓரிடத்தில் தங்கும் பழக்கமும் தோன்றி யது. ஒரே இடத்தில் இருந்தாலும்அந்தந்த குழுக்கள் தங்கள் கொள்கைகளை விட வில்லை. தொன்று தொட்டு வரும் இப்பழக்கம்தான் இன்னும் சமுதாயத்தில் சாதிகளுக்கு மத்தியில் இருக்கின்றது. சிலபழக்கங்கள் ஊரையொட்டியும் இருக்கும்.

 

நிலப் [பிரபுத்துவம்] ஏற்பட்டது. பொருள் படைத்தோன், பலம் படைத்தோன் உழைக்கும் கூட்டத்தை அடிமையாக்கினான். இழிந்த வேலைகள் என்று கருதியவைகளையும்இவர்களைச் செய்யச் சொன்னான். அடங்கி வாழும் மனிதர்கள் கூட்டங்கள் வளர்ந்தன.

 

வாடிப்பட்டியில் நான் வேலைக்குச் சென்றது 1957. அப்பொழுது இப்படிப்பட்ட கொத்தடிமைக் குடும்பங்கள் நிறைய பார்த்திருக்கின்றேன். அவர்களுக்கு கல்விதரப்படவில்லை. வயிற்றுக்கு உணவும் உடுத்த துணி, இருக்கக் குடிசையும் மட்டும் தரப்பட்டன. ஒவ்வொரு பண்ணையாரிடமும் இந்தக் கூட்டம் இருந்தது. இவர்களுக்குஒரு பெயர் இருந்தது. அதுவே சாதிப்பெயராக அமைந்தது. இங்கே தலித் மக்கள் அடிமட்டத்தில் தள்ளப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தனர். மேற்கே கருப்பின மக்கள் துன்பக்குழியில் இருந்தனர். தலித் மக்களைவிட அவர்கள் நிலை மோசம்.

 

வெள்ளை நிறத்தோன், பெரும் பணம் படைத்தோனுக்குப் பல விளையாட்டுக்கள் உண்டு. அவைகளில் ஒன்று கொடூரமானது

 

GLADIATER – இது ஒரு விளையாட்டரங்கம்

 

பசியுடன் இருக்கும் சிங்கங்களுக்கு முன் மனிதனை நிறுத்தி அவன் உயிருக்குப் பயந்து போராடுவதும் ஓடுவதுமாய் இருந்து பின்னர் மிருகங்கள் பாய்ந்து அவனைச்சிறுக்ச் சிறுக சாப்பிடுவதைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம் அங்கே இருக்கும்.

 

புதிய கற்காலத்தில். பானை செய்வது, இன்னும் பல தொழில்கள் வளர்ந்தன. ஒரு தொழில் நசித்துப் போகும் பொழுது இன்னொரு தொழிலை எடுப்பான். அக்காலத்தில்தொழில் கல்லூரிகள் கிடையாது. குடும்பம் குடும்பமாக ஒரு தொழிலைச் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டனர். பேரரசுகள் இருந்த காலத்தில் போர்களும் வாணிபமும்இருந்தன. அப்பொழுது உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் கூட அத்தகைய அரசுகள் இல்லாமல் போகவும் அவர்களூம் ஏதோ ஓர் தொழிலைச் செய்ய ஆரம்பித்தனர்.

 

சமுதாயம் அப்பொழுது அவர்களுக்குக் கொடுத்த பெயர்கள் சாதிப் பெயர்களாயின.

 

உதாரணத்திற்கு நாடார் இனம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது. பின்னர் தொழில் மாறிச் சாணான் என்ற பெயர் பெறப்பட்டு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால்சமுதாயத்தில் உண்டாக்கப் பட்ட அடிமைக் கூட்டம் மட்டும் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உழைத்து வாழவேண்டியநிலை தொடர்ந்தது. அவர்களுக்கு கல்விகூடாது என்பதுடன் ஒற்றுமையும் வரக்கூடாது என்று அங்கும் பிரிவினைகளைத் தோற்றுவித்து செல்வந்தர்களைச் சார்ந்தவர்களாகவே வாழ நேரிட்டது.

 

சாதிகள் தோன்றியதற்கு முக்கிய காரணம் பொருளாதாரத்தின் ஏற்ற தாழ்வும் அதிகார நிலையும் தான். எந்த மதமும் சாதியை உண்டாக்க வில்லை.

 

கற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். பொருள் இல்லாதவர்களாக இருக்கலாம் . அவர்களிடம் அன்பு இருந்தது. களங்கமில்லாத மனம் இருந்தது. மனிதம் காப்பாற்றும்ஓர் இனம்தான் தலித் இனம். எழுத்திற்காக இதனை எழுதவில்லை. நான் பணியாற்றிய 34 ஆண்டுகளில் நான் அதிகம் நேசித்தவர்கள் இவர்கள்தான். பெறாத பிள்ளைகள்,உடன்பிறவா சோதரர்கள், உயிர்காக்கும் நண்பர்கள் இவர்களில் எனக்கு நிறைய உண்டு.

 

அரசியல் இவர்களுக்கும் மூளைச் சலவை செய்துவிட்டது. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற பழ மொழிக்கேற்ப இன்னொரு சாதியினரைக் குற்றவாளிக் கூண்டில்நிறுத்திவிட்டனர். கீழ்வெண்மணிச் சம்பவம் எந்த சாதியரால் நடந்தது? இன்றும் நீதி மன்றங்களில் இருக்கும் வழக்குகளில் தலித் இனம் படும் துன்பங்களைவிளைப்பவர்கள் யார் என்பதனைப் பார்க்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட சாதியைக் காரணமாக்கி காழ்ப்புணர்ச்சியை வளர்த்தது அரசியல்.

 

சாதி பற்றிப் பேசினால் தவிர்க்க முடியாதது பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதார்.

 

NON-BRAHMIN ASSOCIATION

 

தமிழ்நாட்டில் இதற்குத் தலைவராக இருந்தவர் ராமனாதபுரம் மஹாராஜா மதிப்பிற்குரிய பாஸ்கர சேதுபதி அவர்கள். ( இவருடைய பேத்தி என் தோழி).அவர் ஓர்பக்திமான். பல கோயில்கள் கட்டிய குடும்பம். சுவாமி விவேகானந்தரை அமெரிக்கா அனுப்பிவைத்தவர் இவர்தான்.

 

பிராமணன் – கடவுள் இரண்டையும் சேர்த்துப் பிரச்சனையாக்கியவர் இவரல்ல.

 

திராவிட இயக்க வரலாறு பலர் எழுதியிருக்கின்றார்கள். எனவே நீதிக் கட்சிபற்றி எதுவும் குறிப்பிட வில்லை.

 

மனிதர்களைப் பிரிக்கும் சாதிகள் ஒழிக்கப்பட்டு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும். இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நடந்தது என்ன? ஒரு சாதியை மட்டும்சாடல். அத்துடன் நின்றதா? கடவுள் நம்பிக்கை, அதனைச் சார்ந்த மூட நம்பிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று குற்றம் சாட்டப் பட்டனர்.

 

நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும்

 

கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி பாறை ஓவியங்கள் இன்றும் வரலாற்றுச் சாதனங்களாக இருக்கின்றன. அப்பொழுது இருந்தவை குழுச்சமுதாயம்தான். அவர்கள் கடவுளை வடிவமைத்து, பலி கொடுத்து பூசனைகள் செய்வது இருக்கின்றன. இயற்கையில் காணும் ஒவ்வொரு ஆச்சரியத்திற்கும் ஒருபெயரிட்டு வழிபடவும் ஆரம்பித்தனர். மந்திரிப்பது, தாயத்து கட்டுவது எல்லாம் இருந்தன. மாந்த்ரீகத்தையும் நம்பினர்.

 

நான் ஆஸ்திரேலியாவில் ஓராண்டு இருந்தேன். நான் வசித்த இடம் சிட்னி. அங்கிருந்து ஓரிடம் பார்க்கச் சென்றேன். அந்த இடத்திற்குப் பெயர் BLUEMOUNTAIN . அழகானசுற்றுலா இடம். அங்கே மூன்று பாறைகள் மலையில் இருந்தன. அதற்குப் பெயர் THREE SISTERS. இதன் கதை என்ன தெரியுமா?

 

ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர் 40000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கின்றனர். அவர்கள் வழிவந்த குடும்பங்கள் இப்பொழுதும் இருக்கின்றன. அவர்களில்சிலருடன் நான் பேசியும் இருக்கின்றேன். புலம் பெயர்வு காலத்தில் ஓரிடத்தில் நிலை பெற்று வாழ எண்ணவும், பல குழுச் சமுதாயங்கள் ஓரிடத்தில் வாழ ஆரம்பித்தனர்.இடம் அமைந்தது ஒரே இடமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் அன்போ உறவோ கிடையாது. அந்த தனித்துவம் காப்பாற்றப் பட்டு வந்தது. அந்தக் கட்டுப்பாட்டைவெகுவாக மதித்தனர். ( சாதிகளுக்குள் ஓர் கட்டுப்பாட்டுப் பழக்கமும் இப்படித்தான் தோன்றியது)

 

பிறப்பு, அகமணமுறை என்ற சொற்களை நாம் புரிந்துகொண்டது அல்லது அதற்குரிய விளக்க மளித்த விதம் பல குழப்பங்களுக்குக் காரணமாகவும் அமைந்துவிட்டன.பிறப்பு என்பது இந்தக் குடும்பத்தில், இந்த குழு சமுதாயத்தில் பிறந்தவர்கள் என்று அர்த்தம். அவர்களுக்குள்தான் மண உறவுகள் இருக்க வேண்டுமென்பதும் அவர்கள்அமைத்த விதிகளில் ஒன்று. பிறப்பு என்பது உயர் சாதி, கீழ் சாதி என்ற அர்த்தமல்ல.

 

மூன்று சகோதரிகள் கதை பார்க்கலாம். அவர்கள் மூவரும் இன்னொரு குழு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை விரும்பிவிட்டனர். அது சமுதாயத்தால் விரும்பப்படாத ஒன்று. போர் மூண்டது. போருக்குப் புறப்படும் முன்னர் அவர்களில் மாந்திரீகம் தெரிந்த ஒரு பெரியவர், இந்த மூவரையும் கற்சிலைகளாக்கி விட்டார். போர் முடிந்துதிரும்பி வரவிட்டு மீண்டும் கற்சிலைகளுக்கு உயிர் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து போருக்குச் சென்றுவிட்டனர். போரில் இரு சாராரும் இறந்தனர்.சிலகளானவர்களுக்கு மீட்பு இல்லாமல் போய்விட்டது. அவர்கள் இன்னும் கற்சிலை களாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இது கற்பனையா அல்லது உண்மையா என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் கதை மட்டும் இன்றும் சொல்லப் பட்டு வருகின்றது. பழங்குடியினர் அதனைமதிக்கின்றனர்.

 

மாந்திரீகம் கற்பித்தவர்கள் ஆரியர்களல்ல. இப்பொழுது வரலாற்றுலகில் ஒரு செய்தி பரவி வருகின்றது. தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து போனபழங்குடியினத்தவர்தான் ஆஸ்திரேலி யாவில் இருக்கின்றனர் என்று.

 

பழங்காலத்தில் மண்ணுக்குள் புதைக்கும் பிணங்கள் உயிர் பெறலாம் என்ற நம்பிக்கையும் சிலரிடம் இருந்தது. நாம் பிரமிடுகளைப் பார்க்கின்றோம். அங்கேஇறந்தவர்களுடன் சேர்த்து நிறைய பொன்னும் பொருளும் புதைத்திருக்கின்றார்கள். பிரமிட் வரலாற்றைப் பார்த்தால் பல வியக்கத்தக்க செய்திகள் கிடைக்கும்.

 

இன்றும் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் உயர தலித் மக்கள் பிரச்சனைகளை, ஏணிப்படிகளாக வைத்திருக்கின்றனர். இன்னும் அவர்கள் உயர் நிலை பெற சரியானமுறையில் திட்டங்கள் வகுத்து அவர்களை உயர்த்தவில்லை. அவர்கள் நிலைக்குக் காரணமானவர்கள் என்று ஒரு இனத்தை மட்டும் கூறி நிறைய காழ்ப்புணர்ச்சியைவளர்த்துவிட்டது ஒரு கூட்டம்.

 

சென்னைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சென்றிருந்த சமயம் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அன்று பலர் எழுதிய புத்தகங்கள்வெளியாயின. அப்பொழுது ஒருவர் பேசியது கண்டு மனம் வருந்தியது.

 

இந்த உ.வே. சா என்ன கிழிச்சான் ?

 

பாரதி என்ன பாடிட்டான் ?

 

இந்த சாமிநாதன் இந்தியாவையே அமெரிக்காவுக்கு வித்துட்டான்.

 

உ.வே சா இல்லாமல் போயிருந்தால் நம் தமிழ் இலக்கியங்கள் பல கிடைத்திருக்காது. குறிஞ்சிப் பாட்டுத் தொகுப்புக்கு முன்னர் சில பூக்கள் பெயர்கள் கிடைக்கவில்லை.அந்த சுவடிகளுக்காகப் பல மாதங்கள் காத்துக் கிடந்தார். அலைந்தார்.

 

பாரதியின் பாட்டு உணர்ச்சி வெள்ளம்.

 

சுவாமிநாதன் ஓர் விஞ்ஞானி

 

இவர்கள் செய்த பாவம் இவர்கள் பிராமணர்களாய்ப் பிறந்ததுதான் !

 

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடியவன் பாரதி. பேச்சு ஒன்று செயல் ஒன்று என்று வாழ்ந்தவன் இல்லை. இன்று கொள்கைக்காக வாழ்கின்றோம் என்றுசொல்கின்றவர்கள் அதனை வியாபாரமாக்கிக் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததைப் பார்க்கின்றோம். பாரதி பட்டினி கிடந்தான்.

 

பிராமணர்கள் தப்பே செய்யவில்லையா?

 

ஆரியர், அந்தணர்கள், பிராமணர்கள் மூவரும் ஒன்றா அல்லது வேறா?

 

வர்ணாச்ரமம் என்றால் என்ன?

 

இந்த காழ்ப்புணர்சி எப்படி, எப்பொழுது தோன்றியது?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்

 

எல்லோரிடமும் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன். நாளுக்கு நாள் என் உடல்நிலை மோச மாகி வருகின்றது. பிரச்சனைகளை எழுதும் பொழுது மன அழுத்தம்ஏற்பட்டு மயக்கமாய்ப் படுத்து விடுகின்றேன். விரைவில் இத் தொடரைப் பல காரணங்களுக்காக முடிக்க விரும்கின்றேன். இருப்பினும் சில தகவல்களை யாவது பதியவிரும்புகின்றேஎன். சில சமயம் எழுத முடியவில்லை யென்றால் அந்த வாரம் விடுத்து எழுதுவேன். மன்னிக்கவும்.

 

பின்னூட்டங்களுக்கும் என்னால் பதில் கொடுக்க முடியவில்லை. நான் வரலாற்று ஆய்வாளர் அல்ல. நான் ஒரு வரலாற்று ஆர்வலர். என்னைப் போல் நீங்களும் தேடலில்இறங்கலாம். என் கூற்றுகளை நீங்கள் ஏற்கவேண்டும் என்று நான் கூறவில்லை. உங்கள் சிந்தனைக்குச் சில விதைகள் விதைக்கின்றேன். வரலாற்று புத்தகங்களைப்படித்துப் பாருங்கள். கல்வெட்டு ஆய்வாளர்களுடன் பேசுங்கள். பிறகு ஒப்பிட்டுப் பார்த்து உண்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

அரசியல்வாதிகள் எழுதிய வரலாற்று நூல்களைப் படித்து முடிவிற்கு வராதீர்கள். அங்கே வரலாறுகள் வளைக்கப் பட்டிருக்கின்றன. பின்னர் அவைகளுக்கும்உதாரணங்கள் கொடுக்கின்றேன்.

 

ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றேன்.

 

சாதி, மதம். மொழி, அரசியல் கட்சி ,நாடு என்று எனக்குத் தனிப்பட்ட பற்று எதுவும் கிடையாது. இறைவனை நம்புகின்றவள். ஆனால் மதம் கிடையாது. மனித நேயம்தான்என் கொள்கை

 

“நம் செயல்கள் ஆனாலும் சரி மற்றவர்கள் செயல்கள் ஆனாலும் சரி விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்துபவன் வரும் சிக்கல்களை ஆரம்பத்திலேயேஅடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனால் கவனமாகவும் வேகமாகவும், ஆரம்ப நிலையிலேயே அவ்வப் பொழுது அவைகளைத் தவிர்க்கவோ, சரி செய்துகொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாத போதோ அவைகள் பூதாகாரமாகும்வரை கவனிக்கப்படுவதில்லை. பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாடவேண்டிவரும். சில சிக்கல்கள் தீர்க்கமுடியாமல் போகலாம். தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை நாம் ரசிக்க முடியாததாக மாறியும் போகலாம். எனவேவிழிப்புணர்வோடு இருங்கள். என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருங்கள்.”

 

என்.கணேசன்

 

“உலகம் முழுவதும் ஒரு குடும்பமே அனைவருடைய நல்வாழ்வை நாடுங்கள்.

 

இந்த உலகம் கண்ணாடியைப் போன்றது. நீங்கள் சிரித்தால் அது சிரிக்கின்றது. நீங்கள் சீறி விழுந்தால் அதுவும் சீறி விழுகிறது. இந்த உலகம் ஒரு பெரும்பள்ளிக்கூடமாகும் இந்த உலகம் உங்களது மெளன குருவாகும். இனிய வார்த்தைகளும் மன்னிக்கும் பண்பும் உலகனைத்தும் உங்கள் நண்பராக்கும் உங்களதுகடமைகளை ஒழுங்காகச் செய்யுங்கள்

 

உண்மை அன்பே உலகின் மாபெரும் சக்தி”

 

சுவாமி சிவானந்த மகரிஷி

 

[தொடரும்]

Series Navigationமந்திரச் சீப்பு (சீனக் கதை)மார்கழி கோலம்
author

சீதாலட்சுமி

Similar Posts

5 Comments

 1. Avatar
  Adaikalaraj says:

  //“நம்செயல்கள்ஆனாலும்சரிமற்றவர்கள்செயல்கள்ஆனாலும்சரிவிழிப்புணர்வோடுவாழ்க்கையைநடத்துபவன்வரும்சிக்கல்களைஆரம்பத்திலேயேஅடையாளம்கண்டுகொள்ளமுடியும். அதனால்கவனமாகவும்வேகமாகவும், ஆரம்பநிலையிலேயேஅவ்வப்பொழுதுஅவைகளைத்தவிர்க்கவோ, சரிசெய்துகொள்ளவோமுடியும். விழிப்புணர்வுஇல்லாதபோதோஅவைகள்பூதாகாரமாகும்வரைகவனிக்கப்படுவதில்லை. பின்அதன்விளைவுகளில்சிக்கித்திண்டாடவேண்டிவரும். சிலசிக்கல்கள்தீர்க்கமுடியாமல்போகலாம். தீர்க்கமுடிந்தாலும்மீதமுள்ளவாழ்க்கைநாம்ரசிக்கமுடியாததாகமாறியும்போகலாம். எனவேவிழிப்புணர்வோடுஇருங்கள். என்னநடக்கிறதுஎன்பதிலும்கவனமாகஇருங்கள்.”//

  மிக அருமையான வரிகள்

 2. Avatar
  paandiyan says:

  //இப்பொழுது வரலாற்றுலகில் ஒரு செய்தி பரவி வருகின்றது. தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து போனபழங்குடியினத்தவர்தான் ஆஸ்திரேலி யாவில் இருக்கின்றனர் என்று.

  //

  இது சம்பதமாக இந்த செய்தியை நக்கலும் நையாண்டியாக மலேசியாவில் இருந்து ஒரு பத்திரிக்கையில் ஒரு கட்டுரை படிதேன் ஒரு 6 வருடம் முன்பு . எந்த ஆதாரமும் இல்லாமல் கற்பனை வடிவில் எழுதப்பட்டதை நீங்களும் என்காவது கேட்டு இருக்கலாம் இல்லை படித்து இருக்கலம்

  1. Avatar
   seethaalakshmi says:

   அன்பு பாண்டியன் அவர்களுக்கு
   பத்திரிகையில் படித்த செய்திதான். எங்கும் வரலாற்று ஏடுகளில் கிடையாது.
   இது போன்று இன்னும் எத்தனையோ செய்திகள் பத்திரிகையிலும் சினிமாக்களிலும் பார்க்கலாம்.
   உங்கள் பதில் மகிழ்வையும் மன நிறைவையும் கொடுத்தது..நன்றி
   சீதாம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *