ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு பங்களாதேஷிய இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஆறு கோவில்களை இடித்துள்ளது.

author
7
0 minutes, 5 seconds Read
This entry is part 23 of 28 in the series 10 மார்ச் 2013

பங்களாதேஷின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமி கட்சியும் அதன் மாணவர் பிரிவு இஸ்லாமி சாத்ரா ஷிபிர் அமைப்பும் சென்ற வியாழக்கிழமையிலிருந்து அந்நாட்டின் சிறுபான்மை இந்துக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன.

1971இல் சிறுபான்மை இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை போன்று ஜமாத்- ஷிபிர் ஆட்கள் ஆறு கோவில்களை இடித்து உடைத்துள்லனர். நவகாளி, கைபந்தா, சிட்டகாங், ரங்கபூர், ஸில்ஹைட், சைபனாவாபிகஞ்ச், ராஜ்கன்ஞ் இடங்களில் ஏராளமான இந்துக்களது வீடுகளையும் வியாபார தளங்களையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் என்று பங்களாதேஷ் தினசரி பத்திரிக்கை டெய்லிஸ்டார் தெரிவித்துள்ளது.

ஜமாத்தே ஷிபிர் ஆட்களுக்கும் போலீஸுக்கும் இடையே நடந்த சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

sayedeeதெலாவர் ஹூசைன் ஸையதி என்ற ஜமாத்தே இஸ்லாமி தலைவருக்கு தண்டனை கொடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாக ஜமாத்தே ஆட்கள் ராஜ்கஞ்சில் உள்ள ஹரிஷிவா கோவிலுக்கு தீவைத்தனர்.

“அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துதிரும்பி வந்தனர். இப்போது எங்களுக்கு எந்தவிதமான வேறு வாய்ப்பும் தெரிவ்யவில்லை. அவர்கள் எங்களது வீடுகள் மீதுகெரசீனை ஊற்றி கொளுத்தினார்கள். “ என்று பள்ளிக்கூட ஆசிரியர் ஷங்கர் சந்திரா தெரிவித்தார். இவர் இந்த தாக்குதலில் வீட்டை இழந்துள்ளார்.

சுமார் 50 இந்துக்கள் இவ்வாறு வீட்டுக்குள்ளேயே வைத்து எரிக்கப்பட்டுவிட்டார்கள். சிலர் பாதுகாப்பாக ஓடிவிட்டார்கள். அவர்கள் விட்டுச்சென்ற வீடுகள் எல்லாம் எரிக்கப்பட்டுவிட்டன என்று அறிக்கை கூறுகிறது.

“நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிடு ஓடிவிட்டோம். 1971இல் எனது வயது ஏழுதான். ஆனால் அப்போது கூட இந்த மாதிரி பாதுகாப்பின்றி உணர்ந்ததில்லை” என்று சங்கர் சந்திரா கூறினார்.

ராஜ்கஞ்சில் போலீஸ்காரர்களைவிட ஜமாத்தே ஷிபிர் ஆட்கள் அதிகமாக இருந்தார்கள். போலீஸ் வன்முறையை குறைக்க முயற்சித்ததும், ஜமாத்தே ஷிபிர் 

 

ஆட்கள் போலீஸை நோக்கி சுட்டார்கள். இதில் ஒருவர் இறந்தார்.

இந்த கலவரத்தில் எந்த புகைப்படமும் எடுக்கக்கூடாது என்று போட்டாகிராபர்களையும் பத்திரிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

சிட்டகாங்க் பகுதியில் இந்து பெரும்பான்மையாக உள்ள பகுதிகளான 

_66282856_hindutempleattacked

பன்ஷ்காலி உபஜில்லாவை தாக்கியிருக்கிறார்கள். அருகே சத்கானிய உபஜில்லாவில் உள்ள பௌத்த கோவிலுக்கு தீவைத்துள்ளார்கள். அங்கு இந்து வியாபாரிகளின் கடைகளுக்கும் தீவைத்து அங்குள்ள இந்துக்களை தடிகளாலும், இரும்பு கம்பிகளாலும் அருவாட்களாலும் தாக்கியுள்ளார்கள் என்று போலீஸ் தெரிவிக்கிறது.

_66283043_saraswathiranidas2

கைபந்தாவில் ஜமாத்தே ஷிபிர் ஆட்கள் வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள கோவிலையும் இந்துக்களின் கடைகளையும் தாக்கியுள்ளார்கள். பிறகு ஷோவாகஞ்ச் பகுதியில் உள்ள வீடுகளை தாக்கியிருக்கிறார்கள்.

_66279013_hinduvillage1
ஸில்ஹட், ரங்கபூர், தாகுர்காவ், லக்‌ஷ்மிபூர் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்குள் புகுந்து கொள்ளையடித்து பிறகு அங்குள்ள இந்துக்களின் கடைகளையும் நாசம் செய்திருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. ரங்கபூர் நடுவே இருக்கும் காளி கோவிலையும் சபான்ய்வாபகஞ் பகுதி கோவிலையும் கொள்ளையடித்து இடித்துள்ளார்கள்.

நன்றி மூலம்

http://www.niticentral.com/2013/03/02/jamaat-terrorises-bangladesh-hindus-burn-6-temples-51497.html

 

இன்னொரு செய்தி

http://www.bbc.co.uk/news/world-asia-21712655

 

Series Navigationசெவ்வாய்க்கிரகத்தின் நிலத்தின் கீழே பல பில்லியன் வருடங்களுக்கு முந்திய வெள்ளத்தின் தடயங்கள் கண்டுபிடிப்புலாகூர் (பாகிஸ்தானில்) நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர் வீடுகள் மீது தாக்குதல், எரிப்பு
author

Similar Posts

7 Comments

  1. Avatar
    paandiyan says:

    இந்திரா காந்தி அன்ர விட்டு தொலைத்து இருந்தால் அவனுக்குல்லய அடித்து செத்து இருப்பான். காந்தி என்று பெயர் இருந்தால சொந்த மததிர்க்கு சூன்யம் வைப்பவன் என்று அர்த்தம் போல. அது சரி அங்கு இருப்பது பெரும்பாலும் தமிழர்கள் என்று ஒரு ஆதாரத்துடன் செய்தி வந்தது . தமிழன் தான் பொங்குவான , அங்கு உள்ள தமிழன் எப்படியோ ஒழியட்டும் என்று பொங்காமல் இருந்துவிட்டான் . அது ஏன்

  2. Avatar
    ரவீ says:

    இந்துக்கள் மீது நடக்கும் அழிவுகளையும் கொடுமைகளையும் கண்டுகொள்ளாத ஜெயபாரதன், ஷாலி, சுவனப்பிரியன், ஜான்ஸன், பூவண்ணன் ஆகியோர் ஒரு விஷயத்தை சொல்லாமல் சொல்கிறார்கள்.

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் ரவீ,

    என் கட்டுரை “மகாத்மா காந்தியின் மரணம்” பற்றி வந்த வேறிழைப் பின்னோட்டங்களை இந்த இழையில் கொண்டு வந்து உங்கள் கருத்தை நியாயம் ஆக்காதீர்கள். அவை இந்து கிறித்துவர், சீக்கியர் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் தர்க்கமிடுகின்றன.

    800 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே கஜினி முகமது போன்ற முகலாய மூர்க்கப் படையெடுப்பாளிகள் பன்முறை இந்தியா மீது படை யெடுத்துக் கோயில் சொத்துக்களை கொள்ளை யடித்துச் சென்றார்கள். அதைப் பற்றி விவாதிக்க தனியிழை ஒன்று ஆரம்பித்து வையுங்கள் நான் கலந்து கொள்கிறேன்.

    சி. ஜெயபாரதன்

  4. Avatar
    ஷாலி says:

    paandiyan says: //அது சரி அங்கு இருப்பது பெரும்பாலும் தமிழர்கள் என்று ஒரு ஆதாரத்துடன் செய்தி வந்தது . தமிழன் தான் பொங்குவான , அங்கு உள்ள தமிழன் எப்படியோ ஒழியட்டும் என்று பொங்காமல் இருந்துவிட்டான் . அது ஏன்//
    பாண்டி அண்ணே! என்ன இன்னும் கைப்புள்ளே ரேஞ்சிலேயே இருக்கீங்க! பத்து மைலுக்கு பக்கமுள்ள பாக் ஜல சந்தி ஹிந்து தமிழன் செத்துக்கொண்டிருக்கான்.இந்த ஹிந்து அகதியை சீண்ட சேர,சோழ,பாண்டிய எந்த ஆண்டையும் வரவில்லை.நீங்கள் என்னடான்ட பங்களா தேஷ் தமிழனை பேசுகிறீர்கள்.அண்ணே! நம்மளாலே கூரை ஏறி கோழி புடிக்க முடியல்லே.வானம் ஏறி வாத்தா புடிக்க முடியும்?….சும்மா காமெடி பண்ணாதிங்கண்னே!

  5. Avatar
    paandiyan says:

    அப்படி இல்லை ஷாலி . அங்கு இறுப்பது இளித்தவாய் பௌத்தம் இல்லை அதுதான் உணமையான காரணம். இருதால் இந்நீரம் பொங்கி இறுக்க மாட்டிர்கலா என்ன?

  6. Avatar
    kargil_jay says:

    பாண்டியனும் ரவியும் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை. ஐம்பது ஹிந்துக்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட செய்தி வெளிவந்திருக்கிறதே, அதைப் பார்த்தாலே தெரியவில்லையா பங்களாதேஷ் நேர்மையான நாடு என்று? இதே இந்தியாவில் நடந்திருந்தால், முஸ்லீம்கள் மட்டுமே ஹிந்துக்களால் தாக்கப்பட்டார்கள் என பத்திரிகைகள் எழுதி இருக்கும். இலங்கையை இருந்தால் முஸ்லீம்களுடன் பௌத்தர்களும் சேர்ந்து கொண்டு ஹிந்துக்களை எரித்திருப்பார்கள்.

    1. Avatar
      paandiyan says:

      இங்கு இருக்கும் நக்கலான கருத்துக்கள், இந்த கட்டுரை சம்பதபட்டவை அல்ல அது வேறு ஒன்றின் தொடர்ச்சி அதை படிக்காமல் இங்கு வந்தால் குழப்பம்தான் மிஞ்சும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *