தாகூரின் கீதப் பாமாலை – 58
தனிமை விளிம்பிலே வனிதை !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பரந்த இருள் மூட்டத்தில் தவறிப் போய்
இரவு மலர் விழுந்தது
உறக்கத்தின் வேலி ஓரத்தில் !
காலை இளம் பரிதி வீசும் முதல்
கதிர்ச் சுடரை வணங்கு தற்கு
குருட்டுத் தனமாய்
இருட்டில் வெளியேறித் தவறுதலாய்
தன்னந் தனியாய் அவள்
வந்திருக் கிறாள் !
வெகு துணிச்சலில் மெல்லுடல் மேனியாள்
வீணான முயற்சியில்
இப்படி நளினமாய் முனைந்தது
எத்தகை வியப்பு !
என் கண்கள் காணத் தவறின அவள்
உடல் அங்கங்களின்
எடுப்பான இளமை வனப்பை !
வந்தவள் முன் நிற்பதை
வணக்கத்துக் குரிய முறையில்
என்ன பெயரிட்டு அழைப்ப தென்று
எனக்குத் தெரிய வில்லை,
இருள் வானில்
திரள் திரளாய்ப் பயணம் செய்யும்
வானத்து மீன்களுடன்
வந்தாள், மீண்டும் போனாள் அவள்
ஏகாந்த வேலியின் ஓரத்தில் !
அவள் விட்டுச் சென்ற
அகந்தை நளினத் தூண்டலுக்கு
தகவல் கூறத் தெரிய வில்லை :
இரவின் மூடிய வாசல் வழியே
ஏனிவள் வந்தாள் என்று ?
+++++++++++++++++++++++++
பாட்டு : 278 தாகூர் தன் 64 வயதில் [ஏப்ரல் 1925] எழுதிச் சாந்திநிகேதன இதழில் வெளியிடப் பட்டது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 26, 2013
http://jayabarathan.wordpress.
- காவல் நாய்
- ரேபீஸ்
- ‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’
- “சூது கவ்வும்” இசை விமர்சனம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடக
- கந்தா ( தமிழ் )
- தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்
- பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?
- கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…
- கவிதைகள்
- நாகூர் புறா.
- நம்பிக்கை
- விவசாயிகள் போராட்டமா?
- அமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா
- கேள்
- ஆத்தா…
- போதிகை (Bearing)
- பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!
- ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’
- ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்”
- தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14
- புகழ் பெற்ற ஏழைகள் – ஷேக்ஸ்பியர்
- தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று.
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4
- அக்னிப்பிரவேசம்-28
- விஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்
- குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….