தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்

This entry is part 8 of 28 in the series 5 மே 2013

 
தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன்முறை இந்தியாவை மட்டு மல்ல, உலகத்தையே உலுக்கியது எனலாம். அந்த ஃபிஸியோதெரபி மாணவி யின் அக புற வலியை எண்ணியெண்ணி அலைக்கழிந்தது மனம். அவளைக் காப்பாற்றவியலாத கையறுநிலையில் அவளுடைய தோழனின் மனம் எப்படி யெல்லாம் தவித்திருக்கும்.

இப்போது, ஐந்து வயதுச் சிறுமி தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்.

 

இத்தகைய சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து பொதுமக்கள் அணிதிரண்டு போராட முன்வருவது நல்ல அறிகுறி. ஆனால், வட இந்தியாவில் இப்படி எத்தகைய மக்கள் எழுச்சி நடந்தாலும் அதை விமர்சனம் செய்வதும், நையாண்டி செய்வ துமே தமிழகத்தில் சில சமூகப் பிரக்ஞையாளர்கள்/போராளிகளின் வழக்கமாக இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது.

 

தில்லி மாணவியின் குடும்பநிலை, சாதி முதலிய விவரங்கள் ஊடகங்கள் வழி தெரியவராத நிலையில் அவரைப் பற்றித் தாங்களாக சில அனுமானங்களைக்

கற்பித்துக்கொண்டு [மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம், அன்னபிற], அவற்றின் அடிப்படையில், ‘இந்தியாவில், முக்கியமாக தமிழகத்தில் தினந்தினம் எத்த னையோ அடித்தட்டுப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரை விடுகிறார்கள். அவற்றிற்கெல்லாம் அணிதிரள்கிறார்களா? இந்த தேசிய ஊடகங் கள் அவற்றை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிடுவதில்லையே’ என்றெல் லாம் ஏளனமாய் ஒலித்த விமர்சனக்குரல்களை இங்கே கேட்க முடிந்தது. இங்கு, அதாவது தமிழகத்தில் இருக்கும் ஒளி-ஒலி, அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் நேரடியான அளவிலேயே அரசியல் கட்சிகளுடையவைகளாக இருக்கையில் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் மனம்வைத்தால் முக்கியத்துவம் தரலாமே, தொடர்ந்த ரீதியில் இத்தகைய எதிர்ப்பியக்கங்களைப் பற்றிய விவரங்களைத் தரமுடியுமே.  அப்படிச் செய்யாதது ஏன்? தில்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, அது தொடர்பான மக்கள் எழுச்சி, அது ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றிற்குப் பிறகே இங்கே தலித் பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து தி.முக பேரணியொன்றை நடத்தியது. [சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் எப்பொழுதுமே கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்திவந்திருக்கின்றன. அவற்றை மற்ற அரசியல்கட்சி களின் ஒளி-ஒலி ஊடகங்கள் போதிய அளவுக்கு முன்னிலைப்படுத்துவ தில்லை].அதற்கு முன்பும் பாலியல் வன்கொடுமைக்கு எத்தனையோ அடித் தட்டுப் பெண்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால், அவை குறித்து, அவை தொடர்பான மக்கள் போராட்டங்கள் குறித்து ஆங்கில ஒளி-ஒலி ஊடகங்கள் ஏன் செய்தி வெளியிடவில்லை என்று அங்கலாய்ப்பதற்கு பதிலாக நம்மூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் வெளியிடுவதில்லை என்று எண்ணிப் பார்ப்பதும் கேள்விகேட்பதும் அவசியம்.

 

கொடூரமான  விதத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் – நிர்பயா, என்றும் தாமினி என்றும் ப்ரேவ் ஹார்ட் என்றும் ஊடகங்களால் அழைக்கப்பட்டவள்; உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே – அந்தப் பெண் குறித்து அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த பிற்போக்குத்தனமான கருத்துகள் எந்த அளவுக்குக் கண்டனத்திற்குரியவையோ அதேயளவு கண்டனத்திற்குரியவை அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக் காகக் குரல் கொடுப்பவர்களைக் கொச்சைப்படுத்துவதாய் ‘மற்ற அநீதிகளுக்கு அவர்கள் குரல் கொடுத்தார்களா’, என்று விமர்சனம் செய்து மட்டம் தட்டுவதும். இப்படி எதிர்விமர்சனம் செய்வது சுலபம். அப்படிச் செய்பவர்கள் ஒன்று சேர்ந்து அநீதிகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் எதிர்ப்பியக்கங்களையும் கட்டமைக்கலாம்; அப்படித் தாங்கள் கட்டமைக்கும் எதிர்ப்பியக்கங்களுக்கு எல்லாத் தரப்பு மக்களும் வருவதில்லை யென்றால் அதற்கான காரணங்களை பரிசீலனை செய்துபார்க்க முன்வரலாம்.

 

பிறகு, தில்லிப் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே என்பதும், அவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பம் என்பதும், பிற்படுத்தப்பட்ட வகுபைச் சேர்ந்தது என்றும், அந்த மாணவியின் தந்தை விமான நிலையத்தில் சரக்கு களை ஏற்றியிறக்கும் தொழிலாளி என்பதும், தன்னுடைய மகளைப் படிக்க வைப்பதற்காக அவர் தனக்கிருந்த கொஞ்சநஞ்ச சொத்தை விற்றிருந்ததும்       [பெண்ணின் படிப்புக்கான செலவை சமாளிப்பதற்காக எங்கள் குடும்பம் பல நாட்கள் வெறும் உருளைக்கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்ந்திருக்கிறது என்று அந்த மாணவியின் தந்தை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்], தில்லியில் ஒரே அறை கொண்ட குடியிருப்பில் அந்தக் குடும்பம் வாழ்ந்துவந்ததும், தன்னுடைய படிப்புச்செலவுகும் குடும்பச் செலவுக்குமாய் அந்த மாணவி ஓய்வுநேரங்களில் ‘ட்யூஷன்’ எடுத்துவந்ததும் தெரியவந்தது. உடனே அகில உலக அறிவுஜீவியாகக் கொண்டாடப்படும் அருந்ததி ராய் ‘தில்லிப் பேருந்தில் அந்தக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் தில்லியில் அத்தனை பெரிய கொந்தளிப்பு எழக் காரணம். இதுவே, இராணுவத்தாரும், காவல்துறையினரும் நடத்தும் பாலியல் அத்துமீறல்களுக்கு இவர்கள் இப்படி எதிர்ப்பு காட்டுவதில்லையே’ என்று கருத்துரைத்தார். முதலில், இராணுவத் தாரும், காவல்துறையினரும் நடத்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மக்கள் கொந்தளிப்பதில்லை என்பது தவறு. வெவ்வேறு விதங்களில் மக்களின் கொந்தளிப்பு வெளிப்படத்தான் செய்கிறது. அதேபோல், சீருடையணிந்த காவல்துறை. ராணுவத்தில் பணிபுரியும் அத்தனை பேரும் பெண்களை வன்கொடுமை செய்பவர்கள் என்று பொதுப்படையாகப் பழித்தலும் த்வறு. முன்பு இத்தகைய மக்கள் எழுச்சி இயக்கங்கள் கட்டமைக்கப்படவில்லையே என்று விமர்சிக்கும் சமூகப் பிரக்ஞையாளர்கள் அதைக் காரணமாகக் காட்டி இப்போது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்ப்பியக்கத்தைக் கொச்சைப்படுத் துவது எந்தவகையில் நியாயம்? குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையா? அவர்கள் பெண்களைக் கேவலப்படுத்தி னால் அது பரவாயில்லையா? இதை குடிசைவாழ் பகுதி மக்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தில்லி பேருந்துக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குடிசைவாழ் பகுதி மக்களில் விதிவிலக்குகள் மட்டுமே என்பதை நாம் மறந்து விடலாகாது.

 

அடித்தட்டு மக்களுக்கு இந்தச் சமூகத்தில் நீடிக்கும் அவலநிலைமைகளை எடுத்துரைத்து அவற்றால் அவர்கள் உளவியல் ரீதியில் அடையும் பாதிப்புகளை அகல்விரிவாய் பேசவேண்டியதும், அலசியாராய வேண்டியதும் கண்டிப்பாக அவசியம். அதற்காக, மேற்கண்டவிதமான வாதத்தை, அதுவும் ஒரு கொடூர நிகழ்வை அறிவுபூர்வமாக அலசுவதான பாவத்தில் முன்வைப்பது height of insensitivity, to say the least.

 

இத்தகைய எதிர்ப்பியக்கங்களை மட்டந்தட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று middle class mentality [ மத்திய தர வர்க்க மனோபாவம்] என்று முத்திரை குத்துவது. இந்த அடைமொழி இலக்கற்றவர்கள், இறுதிவரை ஒரு போராட் டத்தை நடத்தத் திராணியில்லாதவர்கள், ஒரு பிரச்னையை நுனிப்புல் மேய்வ தாய் அணுகுபவர்கள், முற்போக்குச் சிந்தனையற்றவர்கள், உணர்ச்சி வேகத் தில் சில வீரவசனங்களை முழங்குபவர்கள், பயந்தாங்கொள்ளிகள், சொரணை யற்றவர்கள், சுயநலவாதிகள், ஏட்டுச்சுரைக்காய்கள் என மிகப் பல எதிர்மறைப் பொருள்களை உள்ளடக்கியதாய் பயன்படுத்தப்பட்டுவரும் சொற்றொடர். அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மட்டந்தட்ட இந்த அடை மொழியைத் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், அந்த இயக்கக் கூட்டங்களை நேரில் சென்று பார்த்தவர்கள் அங்கே அடித்தட்டு மக்கள் உட்பட பலதரப் பினரும் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டினார்கள்.

 

எனில், தாங்கள் இழுத்த இழுப்புக்கு மந்தைத்தனமாக வராமல் கேள்விகேட்கத் தெரிந்தவர்களும், மாற்றுக்கருத்துகளை முன்வைக்கக்கூடியவர்களும் மத்திய தர வர்க்க மனோபாவக்காரர்களாய் மதிப்பழிக்கப்படுகிறார்கள் என்பதே பல நேரங்களில் நடப்புண்மையாக இருக்கிறது.

 

இது கூட்டணி அரசுகளின் காலம். இரு துருவங்களாக இயங்கிவருபவர்கள் கூட ஒரு common minimum programme–ன் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவது இன்றைய காலகட்டத்தின் தேவையாகியிருக்கிறது. சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், தமிழகச் சூழலில் சமூகச் சீர்கேடுகள் சார்ந்த எதிர்ப்பியக்கங்களை பல தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் கட்டமைப்பது ஏன் சாத்தியமாக வில்லை? இதற்கு middle class mentality தான் காரணம் என்று சொல்லி விடுவதோ, அல்லது, படித்த வர்க்கம் இங்கே சொரணையற்று இருக்கிறது என்று சொல்லிவிடுவதோ சுலபம். ஆனால், அதுவா உண்மை?

 

ஒரு குறிப்பிட்ட சமூகச் சீர்கேடு தொடர்பாய் எதிர்ப்பியக்கங்களைக் கட்டுபவர் களில் பெரும்பாலோர் package deal என்பதாய் பல்வேறு விஷயங்கள் தொடர் பான அவர்களுடைய கருத்துகள், நிலைப்பாடுகள் எல்லாவற்றிற்கும் ‘கட்டாய ஆதரவு’ திரட்டும் வாய்ப்பாகவும் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘ஈழத்தமிழர்களுக்கு நீதிவேண்டும்’ என்று கோரும் இயக்கத் திற்கான ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களால் நடத்தப்படும் கூட்டத்திற்குச் சென்றால் ‘இந்தியா ஒழிக’ என்றோ, ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது சரியே’ என்றோ குறிப்பிடும் வாசகங்களும் அடங்கிய தீர்மான அறிக்கையில் செய்து கையெழுத்திடும்படி கோரப்படுகிறது. மறுப்போர் middle class mentalityக்காரர்களாக மதிப்பழிக்கப்படுகிறார்கள்.

 

இன்னொன்று, மாற்றுக்கருத்துகளை சாதியின் பெயரால் புறமொதுக்கிவிடுவது, அல்லது, அதற்கு சாதிச் சாயம் பூசிவிடுவது. சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போயிருந்த போது அப்படித்தான் ஒரு ‘மெய் இலக்கியவாதி’ [அவரைப் பொறுத்தவரை அவருக்கு முன்பிருந்த  இலக்கியவாதிகளும், அவரு டைய கருத்துகளை ஏற்காத, எதிரொலிக்காத, அடியொற்றி நடக்காத, அவர் கூப்பிட்ட கூட்டத்திற்கு  குபீரென்று போய் பங்கேற்காத சமகால இலக்கிய வாதிகளும் ‘பொய் இலக்கியவாதிகள்’ என்பதால் அவருக்கு இந்த அடைமொழி] முந்தைய தலைமுறை இலக்கியவாதிகளெல்லாம் ஆதிக்கசாதியினர். எனவே, அவர்களுக்கு சமூகப்பிரச்னைகளைப் பற்றிய அக்கறை கிடையாது என்று ஒரே போடாகப்போட்டு, எழுத்தை தவமாகக்கொண்டு வறுமையில் உழன்றவர்களை யெல்லாம் ஒரே மிதி, காலால் மிதித்துத் தள்ளிவிட்டார். அதனால்தானோ என்னவோ, ’நட்சத்திரப் பேச்சாளராக’ நடத்தப்பட்ட அவர் முதலில் பேசிவிட்டு சக-பேச்சாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கும் அக்கறை யின்றி போயே போய்விட்டார். அவரால் மட்டுமே தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்னைகள் எத்தனையோ இருக்கின்றனவே!

 

இது ஒரு அனுபவமென்றால் வேறு சில கூட்டங்களுக்கு சமூகப் பொறுப் போடும், அக்கறையோடும் மூன்று பேருந்துகள் மாறி [தமிழகப் பேருந்துகளில் பயணமாவோர் சம்பளமில்லாத தாற்காலிக உதவி நடத்துனர்களாகக் கட்டாயம் பணியாற்றியே தீரவேண்டும். ஒரு கையால் அலைபேசியில் பேசிக்கொண்டே மறு கையால் நாணயத்தை நீட்டுபவர்களிடம் பவ்யமாக அதை வாங்கி, பத்து கரங்கள் வழியாக அது பத்திரமாகக் கடத்தப்பட்டு நடத்துனரைச் சென்றடைந்து பின் அந்த அதி மெல்லிய துண்டுக் காகிதம் – டிக்கெட் எனப்படுவது – பறந்துவிடாமல், நழுவிவிடாமல், அதேவிதமாய் நம் கையை அடைய, அதீதப் பதற்றத்தோடு அதை வாங்கி, இன்னும் அலைபேசியில் மும்முரமாய் அளவ ளாவிக்கொண்டிருப்பவரிடம் ஒப்படைக்கும்போது மிகவும் பலவீனமாக உணரும் மனது] சென்றடைந்தால் ‘மேல் சாதியினர்’, ஆதிக்க சாதியினர்’ என்று எல்லாப் பிரச்னைக்கும் இப்படிச் சாடுவதே ‘சகல ரோக நிவாரணி’ என்ற கண்ணோட் டத்தைக் கொண்ட ’நட்சத்திரப் பேச்சாளர்கள்’, காரிலும் விமானத்திலும் விழா அரங்கிற்கு வருகைதந்திருப்பவர்கள் மேடையில் முழங்கிக்கொண்டிருப்பார்கள். மேலும், கூட்டத்தில் ‘நட்சத்திரப் பேச்சாளர்கள்’ முன்வைக்கும் கருத்துகள், தீர்மானங்களில் ஏதேனும் ஒன்றோடு நாம் முரண்பட்டாலும் கூட ஆதிக்க வாதிகள், பழமைவாதிகள், அடிப்படைவாதிகள், சமூகப்பிரக்ஞையற்றவர்கள்,  போன்ற  முத்திரைகள் சரமாரியாக நம்மீது குத்தப்பட்டுவிடும். இந்தப் போக்கின் காரணமாகவே ’கூட்டங்களுக்குப் போகாமலிருந்துவிடுவதே மேல் என்று ‘மத்திய தர மனோபாவக்காரர்கள்’ பலருக்குத் தோன்றிவிடுகிறது.

 

இப்பொழுது ஐந்து வயதுச் சிறுமி ஒருத்தி தில்லியில் நினைத்துப்பார்க்கவே முடியாத அளவு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். குழந்தையின் பிறப்புறுப்பில் மெழுகுவர்த்தி, சிறிய புட்டி என்று செருகப்பட்டு, அவள் கழுத்து நெரிக்கப்பட்டு 40 மணிநேரங்கல் சோறு, தண்ணியில்லாமல் துடித்துக்கிடந்திருக்கிறாள் சிறுமி. இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறாள். இந்தக் கொலைபாதகச் செயலில் ஈடுபட்டி ருப்பவர்கள் இருபது இருபத்திரண்டு வயதான இளைஞர்கள். அந்தச் சிறுமிக்காக தில்லியில் மீண்டும் மக்கள் திரண்டெழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கொண்டி ருக்கிறார்கள். பிரதமர், சோனியா காந்தி வீடுகள் முற்றுகையிடப்பட்டிருக் கின்றன. காவல்துறையினரின் தடுப்புகளையும், தடியடிகளையும் மீறி மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள்.

 

‘இதற்கு முன் எத்தனையோ சிறுமிகளுக்கு இத்தகைய கொடுமை நிகழ்ந்தபோதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று இப்பொழுதும் சில சமூகப் பிரக்ஞையாளர்கள் தமிழ் மண்ணிலும், பிறவேறு நிலங்களிலும் கூட அறிவுபூர்வமாகக் கேள்வியெழுப்பக் கூடும். May be, with the best of intentions or may be with some hidden agenda. எப்படியாயினும், பாலியல் வன்கொடுமைகளில் எது அதிகக் கொடூரமானது என்பதான பட்டிமன்றங்கள் நடத்தப்படும் நிலை எத்தனை அபத்தமானது; அவலமானது…

 

சமீபத்தில் நடந்தேறியுள்ள ஆய்வொன்றின்படி  ’சிறுவர்-சிறுமியரு’க்கான காப்ப கங்கள் பலவற்றில் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் வாடிக்கையாக, அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள  காப்பகம் ஒன்றில் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் அவ்வாறு தனக்கிழைக்கப்பட்ட கொடுமை குறித்துப் பேசுவதையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலைவரிசையின் ‘ரௌத்ரம் பழகு’ நிகழ்ச்சி ஒளிபரப்பியது. ஒவ்வொரு காப்பகத்திலும் அவசியமாக இருக்கவேண்டிய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்ற  ‘கண்காணிப்புக் குழு’ அறவேயில்லாத நிலையை அந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். சமீபத்தில் CNN-IBN செய்தி அலை வரிசையில் தில்லியில் ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஒளிபரப்பப்பட்ட விவாதத்தில் ‘வளரிளம் பருவத்தினரையும் சரி, வளர்ந்த ஆண்களையும் சரி, இத்தகைய கொடூரச் சிந்தனைகளை யும் செயல்களையும் மேற்கொள்ளத் தூண்டுவதில் சின்னத்திரை, வெள்ளித் திரைகள் முன்வைக்கும் பெண் பிம்பங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று பங்கேற்ற உளவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தது கவனத்திற்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ஊடகவியலாரை அங்கிருந்த ஒரு பள்ளிப் பேருந்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கொச்சையாக கேலிசெய்து சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் ஒளிபரப்பட்டது. இதிலிருந்து, பள்ளிகளில் பெண் குறித்த, நல்லொழுக்கம் குறித்த விழிப்புணர்வும், நுண்ணுணர்வும் மாணவர்களிடையெ பரவலாக்கப்படப் போதுமான கவனமும், முயற்சிகளும் கல்விக்கூடங்களில் மேற்கொள்ளப்படு கின்றனவா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

 

பெண் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம். அவ்வாறே அரசியல் சார், சமூகம் சார் சீர்கேடுகளும். இந்நிலையில், இவற்றைக் கண்டித்து உருவாகும் எதிர்ப்பியக்கங்களை அக்கறையோடல் லாமல், எள்ளிநகையாடுவதாய், மதிப்பழிப்பதாய் விமர்சனம் செய்வதைக் காட்டிலும், இவற்றை ஒரு தொடக்கமாகக் கொண்டு, தில்லியில் நடந்த வன்கொடுமை போன்ற சமூகச் சீர்கேடுகளை வேரறுப்பதற்கான வழிவகைகளை முனைப்போடு கண்டறிந்து prevention is better than cure என்ற அளவில், இனி இத்தகைய வன்கொடுமைகள் நடவாதிருக்க சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து குரலெழுப்பத் தேவையான அணுகுமுறைகளைக் கைக்கொள்வதே ஏற்புடையது; இன்றியமையாதது.

0

Series Navigationஅப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 5. உலகத்தி​லே​யே அதிக நூல்க​ளை எழுதிய ஏ​ழை!
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

48 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    எதிர் விமர்சகர்கள் வைப்பது, ஏளனம், நையாண்டி, கொச்சைபடுத்துதல், மட்டம் தட்டுதல், என்கிறார் கட்டுரையாளர்.

    ஐயோராம் சர்மிளாவின் சத்யாஹிரஹத்தைத்தான் அருந்ததி குறிப்பிடுகிறார் என்பதை மறந்து விட்டு, அவரை, அகில உலக அறிவு ஜீவி என்று நகையாடுகிறார் லதா ராமகிருஷணன். பல்லாண்டுகளாக தம்மினப்பெண்களுக்கும் தனக்கும் நடந்த பாலியல் கொடுமைகளுக்கெதிராக இந்திய இராணுவம் நடந்துகொண்டதை உலகுக்குத் தெரிவிக்கவே அப்போராட்டம். இன்னும் கண்டுகொள்ளவிலலை. இல்லையா?

    கொல்லப்பட்ட பெண்ணான பாண்டே பிறபடுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர். என்கிறார். தவறு. அவர் முற்படுத்தப்ப்பட்ட பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவர்குடும்பத்தாரின் வாழ்க்கையை விவரிக்கும் ராமகிருஸ்ணன் அப்படிப்பட்ட குடும்பங்கள் கோடிக்கணக்கில் தில்லியில் வாழ்கின்றன என்றறிவாராக.

    வறுமையில் தன் பெண்ணைப் படிக்கவைத்ததாக‌ அத்தந்தை சொன்னதை இராமகிருஸ்ணன் எப்படி நம்புகிறார்? பேட்டியில் இரக்கத்தைச்சம்பாதிக்க எதையும் சொல்வார்கள். அப்படிப்படியே உண்மையாக இருப்பின், இரவில் தன் ஆண் நண்பருடன் கேளிக்கை விரும்பிச்செல்வாரா ஒரு ஏழை குடும்பத்துப்பெண்?

    இராம கிருஷ்ணன் சிறிதளவாவது தில்லி வாழ்க்கையைப்பற்றி அறிந்த பின்னரே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதவேண்டும். The society is Delhi is not uniform and the poorer sections there are differnt from their counterparts in other metros.

    விமர்சகர்களெல்லாம் தெருவில் இறங்கி கொடிபிடித்துப் போராட வேண்டுமென்கிறார். தேவையில்லை. முடிந்தவர்கள் மட்டும் செய்யலாம். The pen is mightier than the sword. எதிர் விமர்ச்கங்களைப் பார்த்துப் பயந்து அரசும் மற்றோரும் தங்களை மாற்றிக்கொண்டனர் என்பது வரலாறு.

    தமிழக ஊடகங்கள் ஏன் தூத்துக்குடியில் பவானி வன்புணரப்பட்டு கொலைசெய்யப்பட்டதை பெரிதாக எடுக்காமல் தில்லிச்சம்பவத்தை மட்டும் எடுத்தன ? என்று கேட்ட இராமகிருஸ்ணன், பதிலையும் சொல்லவேண்டும். ஆனால் அக்கேள்வியை இவர் கண்டிக்கும் எதிர்விமர்சகர்களுக்கு வைத்து அவர்கள் பதில் சொல்லவேண்டுமென நினைக்கிறார்.

    தமிழக ஊடகங்கள் மட்டுமல்ல, மற்ற மாநில ஊடகங்களும் அதைத்தான் செய்தன. ஏனெனில் தில்லிச்சம்பஙங்களுக்கும் டி வி ரேட்டிங்க்ஸ் அதிகம். ஊடகங்கள் வியாபாரம். Media is a business first. பிசின்ஸ் சென்ஸ் இருக்கவேண்டும். பவானியில் கொலை, பிசினஸ் சென்ஸ் அன்று. பாண்டேயின் கொலையில் நிரம்ப.

    இராமகிருஸ்ணன் கூட தில்லிச்சம்பவத்தைப்பற்றித்தானே அரக்கபரக்க பேசுகிறார். பவானி என்று எவராவது அவருக்குத் தெரியமா? தெரிந்தாலும் ஏன் எழுதவில்லை? காரணம். தன் எழுத்துக்கள் படிக்கப்படவேண்டும். வாதிக்கப்படவேண்டும். ரேடிங்க்ஸ் முக்கியம்.

    இன்னொன்றையும் குறிப்பிடாக வேண்டும். அதாவது நகை முரண்.

    எதிர்விமர்ச்கர்களுக்கு ரொம்ப‌ ” சிறப்பான ” முத்திரைகளையிடும் இராமகிருஸ்ணன், அம்முத்திரைகள் தன்னைப்போன்றோருக்கு இடப்படும்போது மட்டும் கோபம் கொள்கிறார். சாதிகளைப்பற்றியும் எழுத்தாளர்களுக்கிருக்கும் அப்பற்று, வெறுப்பைப்பற்றியும் இவர் எழுதிய பத்திகளைப்படியுங்கள். புரியும். எனக்கு நினைவுக்கு வரும் ஆங்கிலச் சொற்றொடர்; The left hand does not know what the right is doing.

    As usual with a lot of essays on topical issues appearing in Thinnai nowadays, this essay, too, is written passionately. Disappointing.

    I plead for sober essays with good intellectual analysis. Lets think. not feel, here.

  2. Avatar
    புனைபெயரில் says:

    பவானி என்று எவராவது அவருக்குத் தெரியமா?– உங்களுக்குத் தெரியுமல்லவா, எழுதலாமே.. அவர்கள் அவர்களுக்கு போராடுகிறார்கள். நீங்களும் போராடுங்கள், வேண்டாம் என்று யாரும் செல்லவில்லை. இதே போனால் ,காலையில் மலச் சிக்கல் என்றால் அதற்கும் ஜாதி சதி என்பீர்கள் போலிருக்கு…

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      ஜாதிச்சதி என்று லதா இராமகிருஷ்ணன் சொல்கிறார். நான் சொல்லவில்லை.

      கட்டுரையை நன்றாகப் படிக்கவும். கட்டுரைக்குச் பொருத்தமில்லாக்கருத்தான சாதி, இலக்கியம் என்று சில பத்திகளை நிரப்பியிருக்கிறார். படியுங்கள் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

      ஒருவிரலைக் காட்டி அங்கேதான் சாதித் துவேடம் என்பவர்கள், நான்கு விரல்கள் உங்களையே காட்டுகின்றன என்பதை மறவாதீர். உங்களுக்கு சாதி அபிமானமும், பற்றும், சிலரிடம் வெறியும் இருப்பதால் எதிர்வினை வந்தது.

      மடியில் கனமிருந்தால் வழியில் பயமில்லை. எப்படி? இப்படி… If I don’t have consciousness of my caste…i.e to the extent that even if someone launches an irresponsible attack on the caste in which I happen to have been cursed to have been born by the religion in which I happen to have been blessed to have been born – I don’t care even a little bit about who attacks what and how ! அப்படிப்பட்ட எனக்கு எந்த இலக்கியவாதி எந்த மேடையில் என் சாதியை வைதான் என்று பார்க்க தோன்றுமா? ஆனால், லதா இராமகிருஷ்ணனுக்குத் தோன்றியிருக்கிறது. காரணம். கொழ்ந்துவிட்டு எரியும் சாதித்தீயை அவ்விலக்கியவாதி மூட்டிப்பார்த்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

      என் கருத்து பொதுவானது. அதாவது, எவருமே எதில் தமக்கு ஏதாவது ஆதாயம் கிட்டுமா என்றுதான் பார்ப்பார்கள். ஊடகங்கள் பார்க்காமல் விடுமா? எனவே ஒரு கூலித்தொழிலாளியின் மகளான பத்தாம் வகுப்பு மாணவி பவானி பள்ளிமுடிந்து வீடு திரும்பு போது வன்புணரப்பட்டு கொல்லப்பட்டாள். சம்பவம் நடந்த நாள் பாண்டேக்கு தில்லி மத்தியதரவர்க்கமும் இராமகிருஷ்ணன்களும் குடம் குடமாக கண்ணீர் வடித்தகாலைபோதே. எந்த அரசு எத்தனை இலக்கங்களை பவானியின் குடும்பத்தினருக்குக் கொடுத்தது? எவர்தான் கேட்பார்? ஆனால் 25 லட்சங்களும் ஒரு வீடும் தில்லியில் கொடுக்கப்பட்டன பாண்டேயின் பெற்றோருக்கு. அனுபவிப்போர் அவளின் தமையனும் பெற்றோரும்.

      நம் வீட்டுக்குப் பக்கத்து வீடு பற்றி எரிகிறது. ஆனால் 2000 மைலகளுக்கப்பால் நடக்கும் தீவிபத்தைப் பற்றி பேசுகிறோம். நீண்ட கட்டுரைகளை வரைகிறோம்.

      நீங்கள் செய்யலாமே என்ற கேள்வியைக்கேட்டால், உங்கள் வீட்டு மேஜை சரியாகச்செய்யப்படவில்லையென்று கூட நீங்கள் சொல்லமுடியாது. கேட்பவர்கள், ஏன் நீங்கள் செய்திருக்க வேண்டியதுதானே? என்பார்கள். மன்மோஹனின் ஆட்சி சரியில்லையென்று நான் திண்ணையில் எழுத முடியாது. ஏன் நீங்கள் ஆட்சி செய்ய வேண்டியதுதானே என்பார்கள்.

      எனவே இக்கேள்வி பல கசப்பான உண்மைகளை போர்த்திமறைக்க முயலும் சூழ்ச்சியென்பது தேற்றம்.

  3. Avatar
    புனைபெயரில் says:

    இந்தப் பெண்களின் போஸ்டருக்கு ஒரு பதில், எந்த பெற்றோரும் ஆண் பிள்ளைகளை இன்றைக்கு ரெண்டு ரேப் பண்ணி விட்டு வா என்று சொல்வதில்லை. மனித மனம் குரங்காய் குதித்தாடி நாசம் செய்ய, குடி போதை என்று இருக்கிறது. இருண்ட நேரங்களில் தனியாக போவேன், இல்லை அர்த்த ராத்திரியில் நண்பருடன் போவேன் , பெண்ணை பார்த்தால் ஒரு குறிப்பிட்ட வயதில் பாலுணர்வு வருவது இயற்கை, அப்போது சூழலில் எதேச்சிகாரம் நடக்க, குற்றமேயெனினும், வாய்ப்புள்ளது. அதற்கு நாமும் கொஞ்சம் முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    வன்புணர்வு எனபது முழுக்கமுழுக்க ஆணாதிக்கச்செயல். குடிபோதையில் செய்வோரும் போதையில்லாதோரும் வாய்ப்பில் செய்வதும் – எப்படியிருந்தாலும் அஃதொரு ஆணாதிக்கச்செயல். எப்படி என்று விரிப்பின் பின்னூட்டமே ஒரு கட்டுரையாகும் ஆபத்திருக்கிறது. விரிவஞ்சி விடலாயிற்று.

    இரவில பெண் வெளிசென்றால் ஆபத்து; பெண் தனியாக எங்கும் செலலக்கூடாது. ஆண்களிடம் ஜாக்கிரதையாக ஒரு வரம்புக்குள் இருந்துகொண்டே பழகவேண்டும் என்று ஒரு சமூகம் சொன்னால் – அச்சமூகம் பயங்கரமானது. அதன் வாழ்க்கை நெறிமுறைகள் ஆணுக்குதான் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள்.அவன் வைத்த நெறிமுறைகளை அவள் கடைபிடித்தால் மட்டுமே அவள் பிழைப்பாள் என்று பொருள்.

    அப்பொருளை நீங்கள் புனைப்பெயர் எனபவர் மேலே எழதிய பின்னூட்டத்தில் படித்து இன்புறுவதோ துன்புறுபவதோ நீங்கள் எப்படிப்பட்டவர் எனபதைப்பொறுத்தது. I don’t hope you will feel ‘disturbed’ on reading the comments. Only because almost all men believe in fettering woman in all kinds of chains – religious and social – such horrific incidents of rape and murder are committed. I am not playing with words. If you analyse the mind of the driver, his brother and his co accomplices in the crime on the bus, you will know they are the died-in-the-wool producets of the ‘dangerous’ society I am talking about.

    காந்தியார் சொன்னார்: ஒரு இளமங்கை தன் மேல் பெருமதிப்புள்ள ஆபரணங்களை அணிந்து தனியே இரவில் நடந்து போய் பயமில்லாமல் வீடு போய்ச் சேருகிறாளோ அச்சமூகமே உயர்ந்தது.

    பெண் அச்சமில்லாமல் பொது வாழ்க்கை வாழ முடியவில்லையென்றால், பழியை அப்பெண்ணின் மேலே போடுவது நான் சொல்லும் பயங்கரமான சமூகத்தைவிட அதி பயங்கராமான ஆணகளைக்கொண்டது. A burning hell !

    மேலே உள்ள பின்னூட்டம் என்னை நடுங்க வைக்கிறது.

    தில்லிச்செயலகள் பலபல சிந்தனைகளியும் நல்ல முடிவான கருத்துக்களையும் முன்வைத்திருக்கவேண்டும் லதா இராமகிருஷ்ணனால். அவரால் முடியவில்லையென்றே எனக்குத் தோன்றுகிறது. That way I termed the essay: DISAPPOINTING.

  5. Avatar
    புனைப்பெயரில் says:

    காந்தியார் சொன்னார்: ஒரு இளமங்கை தன் மேல் பெருமதிப்புள்ள ஆபரணங்களை அணிந்து தனியே இரவில் நடந்து போய் பயமில்லாமல் வீடு போய்ச் சேருகிறாளோ அச்சமூகமே உயர்ந்தது -> இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். பொய் பேசாத சமூகமே, கள்ளக்கணக்கு எழுதாத சமூகமே, நாளைக்கு என்று ஸ்டாக் வைக்காத சமூகமே உயர்ந்தது என்றும் சொல்லலாம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இலண்டனில் நள்ளிரவுக்கு மேலும் பெண்கள் வேலை முடிந்து தாராளமாக தனியே பயணித்து வீடு போய்ச்சேரலாம்.

      தில்லியில் முடியாது. இந்திய நகரங்கள் எதிலுமே முடியாது.

      செல்வி விசுவநாதன் NDTV பத்திரிக்கையாளர் முனிர்க்கா நெலசன் மண்டேலா சாலையில் தன் வாகனத்தில் வேலை முடிந்து திரும்பும் போது சுட்டுக்கொல்லப்பட்டார். இரவு 1 மணி. கொலைகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை.

      சிரிபோர்ட் ஆடிட்டோரியத்தில் தேசிய விருது பெற்ற திரைப்படம் ஒன்றைப்பார்த்து இடையில் வீடு திருமப் ஆசைப்பட்ட பெண், தன் வாகனத்தை எடுக்க பார்க்கிங்க் ஏரியாவுக்கு வந்தபோது அங்கிருந்து கடத்தப்பட்டு வன்புணரப்பட்டார். வன்புணர்ந்தோர் படித்த (?) வாலிபர்கள். அவர்கள் என்ன சொல்லிவிட்டு அவளை விட்டார்கள் தெரியுமா? இந்திய கலாச்சாரப்படி பெண்கள் தனியாக வெளியே வரக்கூடாது என்று நீண்ட கலாசசார விளக்கத்தைப் பெருமையாகச் சொன்னார்களாம். அப்பெண் சுவிஸ் டிப்ளோமாட். பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி.

      வடகிழக்கு மாநில பெண்ணொருத்தி, கால் சென்டர் வேலை முடித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடுதிரும்பும்போது காரில் கடத்தப்பட்டு வன்புணரப்பட்டு மீண்டும் அதே இடத்தில் கொண்டுவிடப்பட்டாள். ஏனெனில், அவள் அவர்களிடம் என்னை உயிரோடு விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியதால். நடந்த இடம், தில்லி மோடி பாக், தவுலா கான் அருகில்.

      பெண் தனியே வரக்கூடாது. வேலை முடிந்து இரவில் திரும்பினால் வன்புணரப்படுவாள். அஃது இந்தியக்கலாச்ச்சாரமாகாது. இதைத்தான் புனைப்பெயரில் பின்னூட்டம் சொல்கிறது.

      சில வேளைகளில் நள்ளிரவுக்கு மேல்தான் முடியும். அவற்றில் வேலை செய்யும் பெண்கள் அப்போதுதான் திருமப முடியும். இந்தியாவில் முடியவில்லை.

      இதற்கென்ன காரணம்? அக்காரணத்தை அலச வேண்டியது தைரியம்.

  6. Avatar
    latha ramakrishnan says:

    மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,

    வணக்கம். திரு. கணபதி ராமனின் [அது என்ன IIM அடை மொழி?!} பின்னூட்டங்களைப் படித்தேன். ஒரு கொடூர நிகழ்வை எத்தனை முன்நிபந்தைனைகளோடும், உள்நோக்கங்களோடும் அணுகுகிறார்கள் என்ற என் வருத்தத்தை உறுதிசெய்வதாகவே அமைந்திருக்கிறது இந்தப் பின்னூட்டம்.

    அந்தக் கொடூர நிகழ்வால் பாதிக்கப்பட்ட பெண் “முற்படுத்தப் ப்பட்ட பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்” என்று கூறுவது தவறான தகவல். விவரங்களை அவர் சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால், நடந்த கொடூர நிகழ்வைப் பொறுத்த அளவில் இந்தத் தகவல் முக்கியமானதா? இந்த விவரத்தின் அடிப்படையில் தான் நடந்த கொடூரத்தின் தன்மை உள்வாங்கப்பட வேண்டுமா?

    ”வறுமையில் தன் பெண்ணைப் படிக்கவைத்ததாக‌ அத்தந்தை சொன்னதை இராமகிருஸ்ணன் எப்படி நம்புகிறார்? பேட்டியில் இரக்கத்தைச் சம்பாதிக்க எதையும் சொல்வார்கள். அப்படிப் படியே உண்மையாக இருப்பின், இரவில் தன் ஆண் நண்பருடன் கேளிக்கை விரும்பிச்செல்வாரா ஒரு ஏழை குடும்பத்துப் பெண்?” என்று கேட்கிறார் திரு.கணபதிராமன். இந்த வரிகளில் இறந்த பெண் குறித்த, அவளுடைய குடும்பத்தார் குறித்த, அவர்களைப் பற்றி தகவல் வெளியிட்ட ஊடகவியலாளர்கள் குறித்த எத்தனை மோசமான அவதூறான பார்வை முன்வைக்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவளைப் பழிக்கும் போக்கில் மொத்த பெண்ணினத்தையுமே கேவலப்படுத்தும் இந்த மனிதர் ’புனைப்பெயரில்’ என்பவர் இட்ட பின்னூட்டம் பெண்ணை இழிவுபடுத்துவதாகப் பொங்கியெழுவது எத்தனை பாசாங்குத் தனம்.

    இங்கே சாதியின் பெயரால் இருபது பேருந்துகளுக்கு மேல் தீக்கிரையாகியிருக்கின்றன. கௌரவக் கொலைகள் எனப்படும் படுகொலைகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு கொடூரமான பாலியல் வன்புணர் வும் படுகொலையும் அது சார்ந்த அக புற பாதிப்புகளும் எதிர்ப்பியக்கங்களும் கொச்சைப் படுத்தப்பட்டது குறித்து தனி மனுஷியாக சில கேள்விகளை எழுப்பியுள்ள நான் கொழுந்து விட்டு எரியும் சாதித்தீயை மூட்டிப் பார்த்திருக்கிறேனாம்!

    “சாதிகளைப்பற்றியும் எழுத்தாளர்களுக்கிருக்கும் அப்பற்று, வெறுப்பைப்பற்றியும் இவர் எழுதிய பத்திகளைப்படியுங்கள். புரியும்” என்று என்னைப் பற்றிப் பொத்தாம்பொதுவாகப் பழி சொல்லியிருக்கிறார் இந்தப் பின்னூட்டவாதி. எங்கே, எதன் பொருட்டு, என்ன எழுதியிருக்கிறேன் என்று குறித்துக்காட்டுவதே முறையான செயல்.

    ”I plead for sober essays with good intellectual analysis. Lets think. not feel, here“ என்கிறார் திரு.கணபதிராமன். ஹப்பா, என்னவொரு அறிவுபூர்வமான, ஆய்வுபூர்வமான பார்வை!

    ”நம் வீட்டுக்குப் பக்கத்து வீடு பற்றி எரிகிறது. ஆனால் 2000 மைலகளுக்கப்பால் நடக்கும் தீவிபத்தைப் பற்றி பேசுகிறோம். நீண்ட கட்டுரைகளை வரைகிறோம்”. என்கிறார். விட்டால், ‘நம் வீட்டிலிருந்து எத்தனை மைல்களுக்குட்பட்ட பரப்பில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நாம் பேசலாம், எழுதலாம், எத்தனை மைல்களுக்கு மேல் நடப்பவை குறித்து நாம் பேசலாகாது அக்கறை கொள்ளலாகாது’ என்று வகுத்துரைத்துத் தந்துவிடுவார்’ போலும்.

    என் விஷயத்தில் அவர் அப்படியெல்லாம் சிரமம் எடுத்துக் கொள் ளத் தேவை யில்லை என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், திரு.கணபதி ராமன் போன்றவர்களின் அங்கீகாரத்தை எதிர் பார்த்து நான் எழுதவில்லை. எனக்கு நியாயம் என்று தோன்று வதைத் தான் இத்தனை காலமும் எழுதிவருகிறேன். இனியும் எழுதுவேன்.

    நன்றி

    தோழமையுடன்

    லதா ராமகிருஷ்ணன்

  7. Avatar
    IIM Ganapathi Raman says:

    //திரு. கணபதி ராமனின் [அது என்ன IIM அடை மொழி?!} //

    வாட் இஸ் இன் எ நேம் என்றார் செகப்பிரியர். அவரின் கருத்து, “பெயரன்று, செயலே ஒருவனைக்காட்டும்”

    என் எழுத்துக்களை விமர்சியுங்கள். போதும்.

  8. Avatar
    IIM Ganapathi Raman says:

    ஒரு சோகமான நிகழ்ச்சி. ஒரு பெண் பயங்கரமான ஆண்களின் கூட்டத்தினால் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்ட நிக்ழவு. அங்கே இப்படி எழுதவேண்டியது அவசியமா?

    //இன்னொன்று, மாற்றுக்கருத்துகளை சாதியின் பெயரால் புறமொதுக்கிவிடுவது, அல்லது, அதற்கு சாதிச் சாயம் பூசிவிடுவது. சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போயிருந்த போது அப்படித்தான் ஒரு ‘மெய் இலக்கியவாதி’ [அவரைப் பொறுத்தவரை அவருக்கு முன்பிருந்த இலக்கியவாதிகளும், அவரு டைய கருத்துகளை ஏற்காத, எதிரொலிக்காத, அடியொற்றி நடக்காத, அவர் கூப்பிட்ட கூட்டத்திற்கு குபீரென்று போய் பங்கேற்காத சமகால இலக்கிய வாதிகளும் ‘பொய் இலக்கியவாதிகள்’ என்பதால் அவருக்கு இந்த அடைமொழி] முந்தைய தலைமுறை இலக்கியவாதிகளெல்லாம் ஆதிக்கசாதியினர். எனவே, அவர்களுக்கு சமூகப்பிரச்னைகளைப் பற்றிய அக்கறை கிடையாது என்று ஒரே போடாகப்போட்டு, எழுத்தை தவமாகக்கொண்டு வறுமையில் உழன்றவர்களை யெல்லாம் ஒரே மிதி, காலால் மிதித்துத் தள்ளிவிட்டார். அதனால்தானோ என்னவோ, ’நட்சத்திரப் பேச்சாளராக’ நடத்தப்பட்ட அவர் முதலில் பேசிவிட்டு சக-பேச்சாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கும் அக்கறை யின்றி போயே போய்விட்டார். அவரால் மட்டுமே தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்னைகள் எத்தனையோ இருக்கின்றனவே!//

    சரி போகட்டும். அப்பெண்ணின் பெயர் ஜோதி பாண்டே சிங். பாண்டே எனபது யுத்ரான்ஞ‌சல் மாநிலத்து பிராமணர் பெயர். இது தவறென்பதற்கு உங்களுக்கு அம்மாநிலத்தைப்பற்றியும் அங்குள்ள சாதிகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் எழுதியது:

    // அவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பம் என்பதும், பிற்படுத்தப்பட்ட வகுபைச் சேர்ந்தது என்றும், அந்த மாணவியின் தந்தை விமான நிலையத்தில் சரக்கு களை ஏற்றியிறக்கும் தொழிலாளி என்பதும், தன்னுடைய மகளைப் படிக்க வைப்பதற்காக அவர் தனக்கிருந்த கொஞ்சநஞ்ச சொத்தை விற்றிருந்ததும் //

    பொருளாதார ரீதியில் நலிந்த குடும்பம் என்றால் சரி. அஃதென்ன பிறப்டுத்தப்பட்ட வகுப்பைச்சேர்தவர்? பாண்டேக்கள் உயர் ஜாதியினர். ஓபிசிக்கள் கிடையா. இதைத் தவறென்றால் ஆதாரத்தோடு சொல்லுங்கள். அறிந்து நன்றி சொல்கிறேன்.

    ஏழ்மை நிலையை அவர் சொன்னதால்தான் அவருக்கு 25 லட்சம் பணமும் 50 லட்சம் பெருமான வீடும் தில்லியில் கிடைத்தன. ஆக, உங்கள் கருத்தென்ன? பணக்காரப்பெண்களை வன்புணர்ந்து கொலை பண்ணலாம். ஏழைப்பெண்களைக்கூடாதென்பதா? விளக்கவும்.

    என் கருத்தின் படி, பொருளாதார நிலைக்கும் அச்செயலுக்கும் தொடர்பேயில்லை. அப்படியே தொடர்பென்றால், அவள் ஏழை என்று தெரிய வந்திருந்தால் அவர்கள் விட்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களும் சேரி மாந்தர்களே. அதே சமயம், பணக்காரப்பெண்களைக்கண்டால் அவர்கள் வெறுப்புக்கொள்வார்கள்.

    கொஞ்சம் சோஷல் சைக்காலஜி தெரிந்தே இப்படிப்பட்ட கட்டுரைகள் எழுதினால் நலம் இராமகிருஷ்ணன் அவர்களே. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வராது.

    திண்ணை ஆசிரியரின் வேலை கட்டுரைகளைப்போடுவது. நமது வேலை படித்து கருத்துகளை ஒட்டியும் வெட்டியும் வைப்பது. கட்டுரையாளரின் வேலை தன்னிலை விளக்கம் கொடுப்பது.

    இவைதான் இணையதள வாத மேடைகளின் இலக்கணங்கள்.

    இஃது இவ்வாறிருக்க நீங்கள் இப்படி எழுதி திண்ணை தளத்தாரிடம் முறையிடுகிறீர்கள்.

    //மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,
    வணக்கம். …//

    தேவையில்லை. U could have directly dragged me and launched a virulent attack on my ‘diabolical’ views on this issue; one my misogyny; on my lack of consideration and compassion; on my stone hardheartedness. Why to drag the Editor? He does not have all these vices, does he?

    (More to come) Thanks now.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “அவள் ஏழை என்று தெரிய வந்திருந்தால் அவர்கள் விட்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களும் சேரி மாந்தர்களே. அதே சமயம், பணக்காரப்பெண்களைக்கண்டால் அவர்கள் வெறுப்புக்கொள்வார்கள்.”

      இதற்கு என்ன ஆதாரம் ? சம்பந்தப்பட்டவர்கள் உங்களிடத்து சொன்னார்களா, உங்களது விருப்பக்கற்பனையா அல்லது “சோஷல் சைகாலஜி” படித்துவிட்டு எழுதுகிறீர்களா ?

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        முதல்லே படிங்க…புரியும். வானத்தில் பறந்து கொண்டு பார்த்தால் எல்லாம் பொடிப்பொடியாகத்தான் தெரியும். இறங்கி வந்து பார்த்தாலே உண்மை உருவம் தெரியவரும்.

  9. Avatar
    DR.LAKSHMI says:

    பெண்களின் இருப்புநிலை பலரால் அறியப்பட்டும், கேலிக்கும் ஆட்பட்டும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்தாக வேண்டிய நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இன்னமும் வேதநாயகர், மாதவையா காலத்தில் நாம் இல்லை.ஆண்கள் சமுதாயம் உணர்ந்து திருந்த அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பது தான் அடுத்த கேள்வி?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      U r on the spot. Fantastic.

      இன்றைய பெண்கள் வாழ ஆசைப்படுகிறார்கள். கூடியவரையில் தன்காலிலேயே நிற்க ஆசைப்படுகிறார்கள். தற்காத்த் தற்கோண்டான் பெணி என்றார். ஆதி தமிழர். அதன் பொருள்.

      தன்னை முதலில காக்க.
      தன்னைக்காத்து அதோடு நின்று விட்டால் சுயநலம். வாழ்க்கை முழுமையன்று.
      தன்னை நம்பி வாழ்வோர் – கணவன், பெற்றோர், குழந்தைகள – அவர்களையும் காக்க. .

      அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ ஆசைப்படும் பெண் இரவு வீடு திரும்பும்போது சுட்டுக்கொல்லப்படுகிறார். அவள் ஏன் இரவில் திரும்பவேண்டுமென்றால் நீ அவளுக்கு 9 டு 5 வேலை கொடுப்பாயா/ செவிலியர், பத்திரிக்கையாளர், பிபோ தொழிலாளிகள் இன்னபிற – மாலையில் திருமப முடியுமா?

      ஆக, மருத்துவர் சொன்னது போல, நாம்தான் மாறவேண்டும். மாதவையா காலத்துப்பெணகள் இன்றில்லை. மாதவிலக்கு மூன்று நாட்களில் வீட்டுத்திண்ணையில் வைத்து நாய்க்குத் தீனிவைப்பது போல தனித்தட்டில் இன்று வைக்கபடுவதில்லை. (திருவல்லிக்கெணியில் இன்றும் அத்திண்ணைகளக்காணலாம்) அந்நாட்களில் இராணவத்தில் கூட வேலை பார்க்கிறாள் பெண்.

      நாம் மாற வேண்டும். பெண் மாறிவிட்டாள். அம்மாற்றம் அவளுக்கும் அவளைச்சார்நதோருக்கும் நல்லது.

      பெண் என்றவுடன் ஐ ஏ எஸ் ஆஃபிசரையும் பைலட்டையும் மட்டும் பார்க்கக்கூடாது.

      மதுரையில் பெண்கள் ஓட்டல் சர்வர்கள். பெட்ரோல் பங்க் தொழிலாளிகள். இன்று. அதுதான் முக்கியம். அதைப்போல எல்லாவேளைகளும். செயுயும்போது எந்தக்குடுமபமும் பட்டினி கிடக்காது.

  10. Avatar
    புனைப்பெயரில் says:

    அவள் ஏழை என்று தெரிய வந்திருந்தால் அவர்கள் விட்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களும் சேரி மாந்தர்களே. அதே சமயம், பணக்காரப்பெண்களைக்கண்டால் அவர்கள் வெறுப்புக்கொள்வார்கள்.”–> கோமாளித்தனமாக இருக்கிறது. அப்ப நடக்கிற கிரைம், கொள்ளை எல்லாம் இன , ஏழை-பணக்கார பாகுபாடு, மதவித்தியாசம் பார்த்துத் தான் பண்ணுறாங்களோ?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      பலவிடங்களில் அப்படித்தான் நடக்கின்றது.

      ஏழைப்பெண் கடத்தப்பட்டாள் என்று வைத்துக்கொள்வோம். பெற்றொர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று முறையிடுகிறார்கள்:

      காவலர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? ” போடா போ. உன் பொண் எவனோடாவது ஓடியிருப்பாள். உனக்கு எஃப் ஐ ஆர் போட்டு நாங்க தேடனுமா?”

      இதே வசனத்தைப் பணக்காரர்களிடம் பேச மாட்டார்கள்.

      எ.கா நித்தாரி கொலைகள்.

      சேரிப்பெண்கள், குழ்ந்தைகள் ஒவ்வொருவராக தொடர்ந்து காணாமல் போனார்கள். சேரிப்பெற்றோர் நோய்டா காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டார்கள். காவலர்கள் மேலே குறிப்பிட்ட வசனத்தையே பேசினார்கள்.

      பின்னர் பலவாண்டுகளுக்குப்பின்னெரே பெண்களின் சடலங்கள் எலும்புத்துண்டுகளாகக் கிடைத்தன. எப்படி? அப்பெற்றொர் அப்பகுதியில் தொண்டாற்றிக்கொண்டிருந்த நிருவனத்து தலைவி (ஜோஷி) யிடம் முறையிட்டார்கள். அவர் களத்தில் இறங்கினார். பின்னர் நடந்தது எல்லாருக்கும் தெரியும்.

      ஆனால் ஆருஷி என்ற ஒரே பெண் கொலை. அதுவும் அவள் வீட்டிலே. காவலர்கள் தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். சி பி ஐயும். ஏன் பணக்காரர்கள்.

      தமிழ்நாட்டிலும் அதே கதைதான்

      எ.கா பத்மினிக்கும் நிகழ்ந்தது. ஜனநாயகப்பெண் இயக்கம் உறுதியாகச் செயல்பட்டதாலே பத்மினிக்கு கடைசியில் நீதி கிடைத்தது.

      பத்மினி சிதம்பரம் காவல் நிலையத்தில் முறையிட்ட போது, காவலர் நிராகரித்ததால் வாக்குவாதம் வந்து அப்பெண் லாக்கப்பில் இரவில் போடப்பட்டாள்.

      வாக்குமூலத்தில் அப்பெண் நிறையச்சொன்னார்: அதையெல்லாம் திண்ணை ஆசிரியர் போடமாட்டார்: எனினும் சொல்கிறேன்:

      அந்தக்கிழட்டுப்போலீசுகாரன் என்னை அடித்தபின் இன்னொரு போலீசுகாரனிடம் சொன்னான்: லத்தியை உள்ளே விடுடா எவ்வளவு ஆழம் போறதுன்ன பார்க்கலாம்!”

      பத்மினியின் சாதியும் ஏழ்மையும் அப்போலீசுகாரனை அப்படிப்பேசவைத்தது.

      சட்டமும் நீதியும் பணக்காரர்களுக்கு. ஏழைகளுக்கல்ல.

      “…சட்டம் ஏழைகளை நசுக்க
      ப‌ணக்கார்கள் அதைவைத்து மற்ற்வர்களை அடக்க… ”

      என்றான் கோல்டுசுமித்து என்ற ஆங்கிலக்கவி, காலியான கிராமம் என்ற கவிதையில்.

      Law grinds the poor
      The rich men rule the law.

      Goldsmith in Deserted Village

      பெண்களைப்பற்றி எழுதினால் பாசாங்கு என்று சொல்லி நகட்டப்பார்க்கும் கட்டுரையாளருக்கு ஒன்று சொல்வேன்:

      ஒரு உயர்ஜாதிப்பெண்ணும் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிப்பெண்ணும் ஒரே கொடுமையை அவரவர் வழியில் அனுபவிப்பர்: ஆணாதிக்க வன்கொடுமைதான் அது. நாம் என்ன எதிர்பார்ப்போம்: “அடடே இருவரும் பெண்கள். ஒரு துயரம் மற்றவருக்குத் தெரியும். ஒரு சிமப்தியாவது இருக்குமென்றுதானே?

      கிடையாது. உயர்ந்தோர், பணம்படைத்தோர் பெண்கள், கீழ் நிலையில் உள்ள பெண்களின் துயரத்தைக் காணாதிருப்பது மட்டுமன்று: அவர்கள் ஆண்களிடம் சேர்ந்து அதைச்சரியென்பார்கள். உலகம் இப்படித்தான் இருக்கிறது. பல எ.காவுக்களை சொல்லலாம். அதிலொன்று:

      தில்லி இந்தியாகேட் மாலை வேளையில் கலகலப்பாக இருக்கும். ஒரு நாள் அங்கிருந்த பெண்ணை ஜீப்பில வந்தோர் இழுத்துக்கொண்டு போக அவள் கதற அவளை வெகு தூரம் தரதரவென ஓட வைத்து இழுத்துக்கொண்டு போனார்கள். போலீசு விரைந்துவந்து அவளைக்காப்பாற்றியது. அவர்கள் பிடிபட்டார்கள்.

      டிவி அன்றிரவே பேட்டியெடுப்பதில் இறங்கியது. குற்றவாளியகள் பெரும் பணக்கார இளைஞர்கள். அவ்விளைஞர் ஒருவரின் அக்காள் பேட்டியில் சொன்னாள்:

      அவள் ஒரு விபச்சாரப்பெண். அவளை இழுத்ததில் தப்பென்ன?”

      இது ஏழ்மை நிலை. இனி, மதம்…இனம்…அவற்றையெடுத்து நான் பேசினால் இன்னொரு கட்டுரையே போட வரும்.

      சாதி, மதம், இனம், பணம் என்று பகுத்துப்பார்த்து கண்ணீர் வடிக்கும் கேடுகெட்டவர் நாம். அப்படிச்சொன்னதற்காக அருந்ததி ராய்க்கு கட்டுரையாளர் வைக்கும் அர்ச்சனைகளப்படித்து இன்புறுங்கள்.

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ஏனெனில், திரு.கணபதி ராமன் போன்றவர்களின் அங்கீகாரத்தை எதிர் பார்த்து நான் எழுதவில்லை.\

    அம்மணி! ஸ்ரீமதி லதா ராமகிருஷ்ணன் அவர்களே,

    ஜோ வெனத் தமிழில் / தமிங்கிலத்தில் பொழிந்து தள்ளப்படும் த்வேஷங்கள் மதமாத்சர்யங்கள் மட்டிலுமே.

    விமர்சனம் வேறு. மதமாத்சர்யம் வேறு. இதையெல்லாம் ஒரு அலகீடாகக் கொள்ளாதீர்கள்.

    நீங்கள் நாலிரண்டு எட்டு என்று பொத்தாம் பொதுவாக ஏதும் எழுதினாலும் கூட ஜாதித்வேஷ வாதிகள் அதில் ஜாதியை நுழைத்து விமர்சனம் செய்வார்கள்.

    அமரர் மலர்மன்னன் மஹாசயர் இருந்தவரை அவர் அச்சுமிஷனைப் பற்றி எழுதினாலும் சரி ஆன்மீகத்தைப்பற்றி எழுதினாலும் சரி தமிங்கிலத்தில் ஜாதிக்கூச்சல் ஓயாது இருந்தது.

    என்னதான் புதுசு புதுசான பெயர்களில் எழுதினாலும் ஒரே மாதிரியான தமிங்கில நடையும் காரம் குறையாத த்வேஷமும் பெயர்கள் மாறினாலும் பெயரின் பின் இருக்கும் எழுத்தாளரைப் பறைசாற்றிக்கொண்டு தானே இருக்கும்

    துவளாதீர்கள். ஞாயம் என்று உங்களுக்குப் படுவதை தைரியமாக எழுதுங்கள்.

    நல்ல விமரிசனம் வந்தால் உத்சாஹம் கொண்டு இன்னமும் நன்றாக எழுதுங்கள்.

    தவறுகள் சுட்டப்பட்டால் உங்கள் கருத்துக்களில் தவறு இருந்தால் அவற்றை மறுபரிசீலனை செய்து கருத்துக்களை மெருகேற்றிக்கொள்ளுங்கள்.

    சாரமற்ற த்வேஷ விமர்சனங்களை அதில் உள்ள த்வேஷத்தை இனம் கண்டு ஒரு முறை சாடுங்கள். பின்னர் புறந்தள்ளி முன்னகர்ந்து தொடர்ந்து எழுதுங்கள்.

    ஞாயத்தைத் தொடர்ந்து எழுதி வாருங்கள்.

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அய் அய் எம் அவர்களே, நீ………………ண்ட உத்தரங்களைப் பற்றி முன்னொருகாலம் தாங்கள் சுருக்கமாக ப்ரவசனம் செய்ததாக நினைவு.

    எட்டு இஞ்சு வ்யாசத்திற்கு எம்ப்ளது இஞ்சு உத்தரங்களை சளைக்காது எழுதி வந்தீர்களானால் அதை என்னென்று சொல்வது. (தமிங்கிலம் உங்கள் உரிமை. உங்கள் சைலி)

    ப்ரவசனம் ஊருக்கு மட்டிலும் என்றிருக்கக்கூடாது. உங்களிடமிருந்து செயல்பாடுகளைத் துவக்குங்கள்.

    ஜாதித்வேஷத்தையே எழுத முனைந்தீர்களென்றாலும் சரி; நறுக்கென்று நாலு வரியில் எழுதப்பழகுங்களேன்.

    கெஜம் கெஜமாக எழுதும் இம்சையைத் தவிர்க்கலாமே.

    ஸ்ரீமான் புனைப்பெயரில் இந்த விஷயத்தில் எனக்கு ஆதர்சம். ராம்சரித் மானஸ் மாதிரி ரெண்டு ரெண்டு வரியில் நறுக் நறுக்கென கருத்துக்கள்.

  13. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ பாண்டே எனபது யுத்ரான்ஞ‌சல் மாநிலத்து பிராமணர் பெயர். இது தவறென்பதற்கு உங்களுக்கு அம்மாநிலத்தைப்பற்றியும் அங்குள்ள சாதிகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். \

    உங்களுக்கு எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என ஏன் நினைத்துக் கொள்கிறீர்கள்?

    மாகாணத்தின் முந்தைய பெயர் (‘யு”-இல்லை) உத்தராஞ்சல். தற்போதைய பெயர் உத்தராகண்ட்.

    பாண்டே என்பது உத்தராஞ்சல் மாகாணத்தில் இருக்கும் ப்ராம்மணர்களும் உபயோகிக்கும் சர்நேம். சர்யுபாரி மற்றும் கான்யகுப்ஜ் ப்ராம்மணர்களிடையேயும் இந்த சர்நேம் உண்டு.

    வேறு எந்த ஜாதியினரும் பாண்டே என்ற சர்நேம் உபயோகிக்கக்கூடாது என்று அரசியல் சாஸனத்தில் சட்டம் ஏதும் இல்லை.

    ஷர்மா, உபாத்யாய் போன்றவை ப்ராம்மணர்களின் சர்நேம் என்றாலும் இவற்றையெல்லாம் ப்ராம்மணர் அல்லாதவரும் உபயோகிக்கின்றனர். அய் அய் எம்முக்கு ஏதும் ஆக்ஷேபம்? பெயரில் என்ன இருக்கிறது என நீங்கள் தானே சற்று முன் ப்ரவசனம் செய்தது?

    சர்னேமை வைத்து ஜாதியைத் தேட முனைவது ஜாதிவெறி.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      உதராஞ்சல் முன்பு உ பிதான். இன்று தனி மாநிலம். பாண்டெ என்பது பிராமணப்பெயர். அதில் மாற்றுக்கருத்தில்லை.

  14. Avatar
    IIM Ganapathi Raman says:

    /சர்னேமை வைத்து ஜாதியைத் தேட முனைவது ஜாதிவெறி// Krishna Kumar

    /ஜாதி வெறி என்பதை லதா இராமகிருஸ்ணனுக்குத்தான் வைக்கவேண்டும்.

    இலக்கிய கூட்டத்தில் ஒரு இலக்கிய வாதி இவரது ஜாதியை இழிவாகப்பேசியதற்கும் இக்கட்டுரைப்பொருளுக்கும் என்ன தொடர்பு என்பதை ஒன்று கிருஸ்ணகுமார் விளக்கவேண்டும். அல்லது, லதா இராமகிருஸ்ணன் விளக்க வேண்டும்.

    எக்கட்டுரையை எடுத்தாலும் அங்கே தன் ஜாதியுணர்வு புணப்டுத்தப்பட்டதே என்று ஏன் அழ வேண்டும்?

    நீண்ட பத்தியில் அவர் எழுதியதை நான் மீட்டி போட்டதை கிருஷணகுமார் படிக்கட்டும்.

    ஜாதித்துவேசம் என்று எப்படிக்கண்டுபிடிக்கிறார்கள் ? ஏற்கன்வே நான் சொன்னதுதான்.

    அதற்கு முதலில் வேண்டுவது கண்டு பிடிப்போருக்கு தன் ஜாதிப்பற்று. அதீத பற்று. A thin partition divides caste affection and caste fanaticism.

    அதைத்தான் லதா இராமகிருஸ்ணன் இக்கட்டுரையில் ஒரு இலக்கியக்கூட்டத்துக்குப் போனேன். அங்கே என் ஜாதியைத்திட்டினார்கள் என்று தொடர்பில்லாமல் இரக்கத்தைச் சம்பாதிக்கிறார் கொல்லப்பட்ட பாண்டேக்கு சம்பாதிக்கவேண்டிய இடத்தில். Is it ethical to abuse the context to project your caste feeling?

    சில தாய்மார்கள் தங்கள் பெண்களை இப்படித்திட்டுவதை நான் கேட்டதுண்டு:

    பெண்: அம்மா…அவன் என்னைப் பார்க்கிறான்

    தாய்: அவன் பார்க்கிறான் என்று உனக்கு எப்படித்தெரிந்தது? நீ உன் வேலையைப்பார்த்துக்கொண்டு போயிருந்தானால் எப்படி அவன் பார்க்கிறான் என்று தெரியும்?

    அதே இங்கேயும்.

    மதப்பிரச்சாரம் என்ற போர்வை போர்த்திக்கொண்டு சாதிப்பிரச்சாரம் செய்வதானால் மதம் வெகுவாக விமர்சிkkaப்படுகிறது. அதையே இப்படிப்பட்ட கட்டுரைகளில் காட்டுவது நன்றனறு

    சாதியைத்தாண்டிவாருங்கள். ப்ளீஸ். You cant point an accusing finger at me:unless you explain why she wrote about her caste in this essay on Pandey’s killing.

  15. Avatar
    ஷாலி says:

    o //குற்றவாளியகள் பெரும் பணக்கார இளைஞர்கள். அவ்விளைஞர் ஒருவரின் அக்காள் பேட்டியில் சொன்னாள்:
    அவள் ஒரு விபச்சாரப்பெண். அவளை இழுத்ததில் தப்பென்ன?”// திரு.IIM கணபதி ராமன் கூறியது சரிதான்.ஏழைகள் என்றால் பணம் படைத்தவர் வாயும், அதிகாரம் படைத்தவர்கள் வாயும் ஒரே குரலைத்தான் ஒலிக்கும்.சமீபத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்கு சென்ற ஏழைப் பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் கேட்டு விரட்டிய பின்பு கழிவறையில் பிரசவம் நடந்த அவலம் அனைவரும் அறிந்ததே.தன்னை நியாயப்படுத்த மருத்துவமனை தலைவர் கூறிய பதில்.”பிரசவ நேரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டு பேசுவார்கள்.அதைக் கணக்கில் கொள்ளக்கூடாது.”நடக்கிற க்ரைம்,கொள்ளை,கொலைகளில் ஏழைகளுக்கு என்றுமே தனி நீதிதான்.இதுதான் இன்றைய பாரதம்.

  16. Avatar
    ஷாலி says:

    திண்ணையில் இடம்பெறும் தமிங்கில பின்னூட்டத்தை ஓரளவிற்காவது சகித்துக்கொள்ள முடிகிறது.நண்பர் திரு.க்ருஷ்ணகுமாரின் மணிப்பிரவாள தமிழ்ஸம்சுகிரத திமிங்கிலத்தை விழுங்குவதுதான் பெரும் இம்சையாக உள்ளது.தேவர்களைக்காக்க ஆலகாலத்தை சிவபெருமான் விழுங்கியதுபோல் நண்பருக்காக நாமும் விழுங்குவோம்.

  17. Avatar
    தேமொழி says:

    நல்ல கட்டுரை லதா ராமகிருஷ்ணன். பாராட்டுக்கள்.

    பாதிக்கப் பட்டது ஒரு மனித உயிர். பாதிக்கப் பட்டவர் யார் என்ற பின்புலம் அவசியமற்றது.

    துடிதுடித்த உயிருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது அநீதியைக் கண்டு குமுறுபவர்கள் விரும்புவது. அவர்களது அக்கறையை அரசியலாக்கிப் பார்ப்பவர்களும், இது போன்ற செய்திகளை வணிக கண்நோட்டத்துடன் தவிர்க்கவோ அல்லது வெளியிட்டு ஆதாயம் தேட நினைக்கும் ஊடகங்களோ கண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

    உங்கள் சமுதாய அக்கறை பாராட்டப் படவேண்டிய ஒன்றாகும்.

    அன்புடன்
    ….. தேமொழி

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      //இது போன்ற செய்திகளை வணிக கண்நோட்டத்துடன் தவிர்க்கவோ அல்லது வெளியிட்டு ஆதாயம் தேட நினைக்கும் ஊடகங்களோ கண்டிக்கப் பட வேண்டியவர்கள்.//

      ஊடகங்களை எப்படி கண்டிக்க முடியும்? இஃதன்ன ஆபாச சினிமாவா? அரசு தடையுத்தரவு போட? எந்தச்செய்தி மிகைப்படுத்தவேண்டுமென்பது ஊடகங்களின் ஏக போக உரிமை.

      திண்ணை போல இலாப நட்ட நோக்கமின்றி எவரும் ஊடகம நடாடத்தவில்லை. வணிக நோக்கில்தான் நடாத்துக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோருக்கு சம்பளம் கொடுத்தபின் இலாபம் பார்க்கவேண்டும். டி ஆர் பி ரேடிங்க்ஸ் முக்கியம். அப்போதுதான் விளம்பரங்கள் வரும். வருமானம் பெருகும்.

      எனவே ஊடகங்களை விட்டுத்தள்ளுங்கள்.

      நாம் ஏன் பாரபட்சம் பார்க்கிறோம் என்பதுதான் கேள்வி. அதற்கு விடை சொல்லுங்கள்.

  18. Avatar
    பூவண்ணன் says:

    http://online.wsj.com/article/SB10001424127887323829504578271810720960682.html

    But the two friends felt their relationship would always be a friendship and not a marriage, he says. He came from a high-caste Brahmin background. His father is a prominent lawyer. His family lives in a three-story home with servants’ quarters.

    By contrast, his friend hailed from a Kurmi agrarian caste that is lower on the Hindu hierarchy. Her family lives in a small concrete-and-brick house near the Delhi airport, where her father works as a laborer.

    பெயர் என்ன என்று வெளியே வரகூடாது என்பதால் பல பெயர்கள் சூட்டப்பட்ட பெண்.
    இங்கு அருந்ததி ராயை இழுத்து கிண்டல் செய்வது சரியான ஒன்றாக தெரியவில்லை.முன்பு ஒரு மருத்துவ கல்லூரி மாணவி டெல்லியில் பாலியல் வன்முறை செய்யப்பட்டது பெரிதும் கோவத்தை கிளப்பியது.ஆனால் அதுவே மெட்ரோ போடுவதற்காக தங்கி இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்ணுக்கு நடந்து இருந்தால் இந்த கோவம் இருக்காது என்ற வாதத்தில் தவறு எங்கே வருகிறது
    துணை மருத்துவ மாணவி ,நண்பரோடு செல்லும் போது பாலியல் வன்முறைக்கு ஆட்படுவது உயர்வகுப்பினருக்கும் நடக்க கூடிய குற்றம் என்பதால் அதன் மீது கோவம் அதிகம்.குடிசைகளில் தங்கி இருக்கும் பெண் பாலியல் வன்முறை செய்யபட்டால் இந்த எழுச்சி வராது.இது மிடில் கிளாஸ் apathy தான்
    பல குழந்தைகள் அடிப்படை வசதி இல்லாமல் இறப்பது பெரிய செய்தி ஆகாது.ஆனால் swine ஃப்ளு தாக்கி ஒரு இறப்பு ஏற்பட்டாலும் ஊரே அமளி துமளி ஆகும்.அரசு மருத்துவமனையில் பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லாத குழுக்கள் அதை பற்றி கவலைப்படுவது வெகு குறைவு.ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் நேர கூடிய swine ஃப்ளு அனைவரையும் துடி துடிக்க வைக்கும்
    இங்கு வகுப்பும் சாதியும் குழப்பி கொள்ளப்பட்டதால் தான் அருந்ததி ராய் மீது கோவமும் வெறுப்பும்,அவரின் கோவம் தவறு இல்லை என்று வரும் வாதங்களும்

  19. Avatar
    Indian says:

    “வாட் இஸ் இன் எ நேம் என்றார் செகப்பிரியர்”
    Who the heck is this “செகப்பிரியர்”? My head spins on this weird usage of Tamil to denote Shakespeare’s name. Why cannot people write name as it is in Tamil? Who made the decision that “செகப்பிரியர்” is the right name in Tamil for Shakespeare and on what authority? The DMK/DK mob? Height of weirdness!
    Kudos to the author Lalitha Ramakrishan. Carry on please. The caravan got to move on!!!

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      இந்தியனின் பின்னூட்டக்கேள்விகளுக்கு செகப்பிரியர் அந்த வரிகளே சிறப்பான பொருத்தமான பதிலாக இருக்கும்.
      அது வருமாறு.
      பெயரில் என்ன இருக்கிறது?
      ரோஜாவை வேறுபெயரிட்டழைத்தால்
      அது மணம்தராதா?

      “What’s in a name? That which we call a rose
      By any other name would smell as sweet.”

      Romeo and Juliet (II, ii, 1-2)

      அதனால் திண்ணையில் தங்கள் பெயர்களை கண்டிப்ப்பாக வெளியிடவேண்டுமென நிர்ப்பந்தம் செய்யலாகாது. இஃதில் இன்னொரு சிரமமும் இருக்கின்றது. பெயரை வைத்து ஆளை விமர்சிக்கும் அல்லது விரும்புவதும் (சப்போர்ட் செய்வது) நிகழும்.

      லதா இராமகிருஸ்ணன் ஒரு புனைப்பெயரில் எழுதியிருந்தால், அல்லது லதா செழியன் லதா கந்தசாமி, லதா கருப்பசாமி என்றிருந்தால், கிருஸ்ணகுமார், பாண்டியன், புனைப்பெயரில் இந்தியன்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருக்க மாட்டார்கள். அல்லது கட்டுரையில் ஒரு இலக்கியவாதி தன் சாதியை இகழ்ந்தார் என்று எழுதாமல் விட்டிருந்தால் அவரைப்பற்றி இவர்கள் சட்டை பண்ணியிருக்க மாட்டார்கள்.

      எனவே நான் எழுதியதை திரும்ப எடுத்துக்கொண்டு செகப்பிரியரின் பெயரில் என்ன இருக்கிறது? எனபது பொய்.

      பெயரில்தான் எல்லாமே இருக்கிறது. அட்டா எனக்கு இப்போதாவது தெரிந்ததே.

      இந்தியனுக்கு நன்றிகள்.

  20. Avatar
    பூவண்ணன் says:

    ‘ஈழத்தமிழர்களுக்கு நீதிவேண்டும்’ என்று கோரும் இயக்கத் திற்கான ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களால் நடத்தப்படும் கூட்டத்திற்குச் சென்றால் ‘இந்தியா ஒழிக’ என்றோ, ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது சரியே’ என்றோ குறிப்பிடும் வாசகங்களும் அடங்கிய தீர்மான அறிக்கையில் செய்து கையெழுத்திடும்படி கோரப்படுகிறது. மறுப்போர் middle class mentalityக்காரர்களாக மதிப்பழிக்கப்படுகிறார்கள்.

    மரண தண்டனை வேண்டாம் என்ற கோரிக்கையை மனம் ஏற்க மறுப்பதை சப்பை கட்டு கட்டும் வரிகள் தானே இவை.அரசுகள் மரண தண்டனை தர கூடாது.அது தவறு.அதை பெரும்பாலான நாடுகள் ஒழித்து விட்டன என்ற வாதத்திற்கு எதிராக இருப்பது மிடில் கிளாஸ் mentality தான்.அதை நேரடியாக கூறாமல் சுற்றி வளைத்து,இலங்கை தமிழர் ,ராஜீவ் கொலை என்று பூசி மெழுகுவது தான் மிடில் கிளாஸ் mentality

    தான் பாதிக்கபடும் வாய்ப்புள்ள சூழல்களுக்கு மட்டும் பொங்குவதை மிடில் கிளாஸ் mentality என்று அழைப்பதில் உள்ள உண்மை சுடுவதால் தான் கோவம் வருகிறது.ஒரு நாளைக்கு பல பாலியல் வன்முறைகள்,கொலைகள் நடைபெறும் நாட்டில் தன மனைவி,சகோதரி,மகள் கூட பாதிக்கப்படும் வாய்ப்புள்ள நிகழ்வு தான் அதிக கோவத்தை உண்டாக்குகிறது.
    நேற்று கூட இருவர் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளனர். ஒருவர் காப்பற்ற சென்ற சக தொழிலாளி.அது கொந்தளிப்பை ஏற்படுத்தாது.ஆனால் அசிஸ் பேங்க் வங்கியில் தீ விபத்தில் நான்கு பேர் மரணம் எனபது நாடு முழுவதும் பேசப்படும்,அலசப்படும்,உடனடியாக நடவடிக்கை என்ற நாடகங்கள் நடக்கும்.பாதாள சாக்கடை சுத்தம் செய்வது எனபது அனைவரையும் பாதிக்கும் ஒன்று கிடையாது.ஆனால் வங்கியில் விபத்தில் மரணம் வரும் வாய்ப்பு எல்லாருக்கும் (குறிப்பாக மிடில் கிளாஸ் ) உண்டு ஆயிற்றே

  21. Avatar
    பூவண்ணன் says:

    எல்லாரும் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும் என்ற கோரிக்கையில் துளி கூட ஞாயம் கிடையாது. என்னை பாதிக்கும் விஷயங்களுக்கு மட்டும் தான் நான் அதிகம் கவலைபடுவேன் என்பதில் தவறு கிடையாது.ஆனால் நான் அப்படி இல்லை ,அனைத்துக்கும் பொங்குவேன் ,என்னை அப்படி சொல்ல கூடாது என்று வாதிடுவது கூட மிடில் கிளாஸ் mentality தான்.நான் அப்படி தான் என்று ஒத்து கொள்ள மறுக்கும் குணம்.
    எனக்கு மரண தண்டனை வேண்டும்.நான் ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டேன் என்று நேரடியாக எழுத முடியாத நிலை தான் மிடில் கிளாஸ் mentality .கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை இது தான்.
    நானும் நல்லவன் தான்,மனிதர்களை கொள்வது தவறு என்று நினைப்பவன் தான்,பொண்டாட்டியை துண்டு துண்டாக வெட்டி கொன்றவனின்,சொத்துக்காக பங்காளி குடும்பத்தை உயிரோடு கொளுதியவனை,வேறு சாதியில் திருமணம் செய்ததற்காக தங்கையையும் ,அவள் குடும்பத்தையும் வெட்டி கொன்றவனின் கருணை மனுவை ஏற்று கொள்வதை எதிர்க்க மாட்டேன்,ஆனால் பாராளுமன்றத்தை தாக்க வந்தவர்களுக்கு தங்க இடம் கொடுத்தவனை ,தனுவுக்கு பாட்டரி வாங்கி கொண்டு கொடுத்தவனை தூக்கில் தொங்க விடாமல் ஓய மாட்டேன் என்பதில் உள்ள HYPOCRISY உரைப்பதால் வரும் சப்பைக்கட்டுகள் மிடில் கிளாஸ் MENTALITY தான்

  22. Avatar
    IIM Ganapathi Raman says:

    //துடிதுடித்த உயிருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது அநீதியைக் கண்டு குமுறுபவர்கள் விரும்புவது. அவர்களது அக்கறையை அரசியலாக்கிப் பார்ப்பவர்களும், இது போன்ற செய்திகளை வணிக கண்நோட்டத்துடன் தவிர்க்கவோ அல்லது வெளியிட்டு ஆதாயம் தேட நினைக்கும் ஊடகங்களோ கண்டிக்கப் பட வேண்டியவர்கள்….//

    அற்புதமான வரிகள். ஆனால் சங்கடமான கேள்விகள உதைக்கின்றனவே!

    துடிதுடித்த உயிருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் அநீதியைக் கண்டு குமுறுவது ரொமப நல்லது. ஆனால் ஏன் துடிதுடித்த உயிர் இன்னாருடயதற்தான் குமுறுவோம்; அன்னாருடையதற்கு குமறமாட்டோம் என்பது சரியா?
    அரசியலாக்கல் என்பதற்கு புதுப் பொருளைத் தருகிறாரா?
    அரசியலாக்கல் என்றால் என்ன?

    எ.கா திருமாவளவன் ஒரு கட்சி நடாத்துகிறார்; ராமதாசும் அவ்வாறே. இவர்கள் ஜாதிக்கார்கள் மோதிக்கொள்கிறார்கள். செத்த பிணத்தை வைத்துக்கொண்டு நாட்கணக்கான போராடுவதும் பேசுவதும் எதற்காக? அவரவர் ஜாதி ஓட்டுக்களைப்பெறுவதறகாக. மதக்கட்சிக்ள் மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டு அதில் கொல்லப்பட்ட பிணங்களை வைத்து மக்களை மேலும்மேலும் தூண்டிவிட்டு, ஒரு எம்பி பதவிக்காவது தம் மத்வரின் வாக்குகளை அள்ளத்துடிப்பதும்.
    இவையே அரசியலாக்கல் என்பது.

    இங்கே துடிதுடித்து இறந்த பெண்ணுக்கு தில்லியையே கலக்கியவர்கள் ஏன் ஓராண்டுக்கும் மேலான மணிப்பூர் பெண்மனிக்காக ஒன்றும் செய்யவைல்லை? அவரினப்பெண்கள் இராணுவத்தால் வன்புணரப்பட்டதை எதிர்த்தானே நீண்ட போராட்டம்? ஏன் நேற்று பஞ்சாபில் அம்மணப்படுத்தப்பட்டு வன்புணரப்பட்ட தலித்து பெண்ணுக்க்காக கலக்கவில்லை? Please all newspapers of yesterday to see the news.

    இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டோர் கட்டுரையாளர் ‘உலக மஹா அறிவு ஜீவி’ எனவிகழும் அருந்த்த்ராயும் மற்றவர்களும்.

    இவர்கள் எந்த கட்சித்தலைவர்கள்? எந்தக்கட்சிக்காக உழைக்கிறார்கள்? எந்த தேர்தலில் எவர் வாக்குகளை அள்ளத் திட்டம்போட்டு செய்கிறார்கள் என்ற மர்மத்தை ‘அரசியலாக்குகிறார்கள்’ என்ற மொழிந்த திருமதி தேமொழி அவர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    Thanks in advance, Madame

  23. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \பாண்டெ என்பது பிராமணப்பெயர்.\சரி போகட்டும். அப்பெண்ணின் பெயர் ஜோதி பாண்டே சிங். பாண்டே எனபது யுத்ரான்ஞ‌சல் மாநிலத்து பிராமணர் பெயர்\

    அய் அய் எம், மேலே நீங்கள் இஷ்டத்துக்கு அடித்து விட்ட வாக்யங்களில் முரண்கள் உள்ளதை யாரும் வாசிக்க மாட்டார்கள் என நினைக்கிறீர்கள்?

    அம்மணி அவர்கள் கொடுத்துள்ள பெயர் ஜோதி சிங்க் பாண்டே. செருப்புக்குத் தகுந்த படி பாத்தைச் செதுக்குவது ஒன்றும் உங்களுக்குப் புதிதல்லவே. இதற்கு அனுமார் வால் அளவுக்கு நீளமாக உத்தரமும் அளிப்பீர்கள்

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      சுருக்கமாக….பாண்டே என்பது உத்ராஞ்சல் ஜாதிகளுள் பிராமணர்களின் சர்னேம். மற்ற பிற பிராமணச்ச்ர்னேம்கள்: டண்டன், பஹுகுணா, ஜோஷி.

      இம்மூவருள் பெரிய ஆட்கள்:

      இந்தியை ஆட்சிமொழியாக்க பாராளுமன்றத்தில் பேருரை நிகழ்த்தி ஒரே வாக்கில் இந்தி ஆட்சிமொழியாக்கிய டண்டன்..
      மத்திய மந்திரியாக இருந்த சுந்தர்லால் பஹுகுணா (இவரைப்பற்றி சேசன் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்)
      இராணுவ தளபதியாக இருந்து பதிவியிலேயே மாரடைப்பால் மரணம்டைந்த ஜோஷி. இம்மரணத்துக்குப்பின் தெரிய வந்தது மருத்துவச்சான்றிதழில் தன் மார்பின் சக்தியைபப்ற்றிய உண்மையை மறைத்தார் என்ற விமர்சனம் எழுந்தது.

      இன்னும் சில பிராமண குழுக்கள் இருக்கலாம். எனக்குத்தெரிந்தவை எழுதிவிட்டேன். ஏனெனில் இந்த நான்கு பிராமணக் குழ்ப்பெயர்களில் என் நெருங்கிய நணபர்கள் உண்டு.

      நீங்கள் எதைச் சொன்னாலும் என் கருத்தில் – அதாவது, பாண்டே என்பது பிராமணப்பெயர் – என்பதில் மாற்று இல்லை என்னால் பொய் சொல்ல முடியாது.. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி நான் சட்டை செய்வதில்லை. எனக்கு உண்மையெனத் தெரிந்ததை உரக்கச்சொல்வேன்.

      கிருஷ்ணகுமார் ஜாதியைத்தாண்டி வந்தவராயிருந்திருந்தால், கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு மட்டுமே எதிர் வாதமே நேர்வாதமோ வைத்திருப்பார். மாறாக தனிநபர் தாக்கலில் இறங்கி விட்டார். ஜாதியுணர்வு அதைச்செய்ய வைக்கிறது எனப்து சொல்லாம்லேயே விளங்கும். கட்டுரையாளரின் தப்பு வாதங்களைச் சுட்டிக்காட்டி நிறைய வாதங்களை வைத்துள்ளேன். ஆனால் அதைப்பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் தனிநபர் விமர்சனம் மட்டுமே செய்யக்காரணமென்?

      படித்தவர்களிடமிருந்தாவது அவ்வுணர்வு போக வேண்டுமேன்பது என் அவா. நிராசை என்று கூட சொல்லலாம்.

  24. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \சாதியைத்தாண்டிவாருங்கள். ப்ளீஸ்.\

    ஐயன்மீர், உங்களைப் போன்று ஜாதித்வேஷம் பேசமுனைபவருக்காகத் தான் அம்மணி அவர்களின் கீழ்க்கண்ட வாசகம்.

    \பாலியல் வன்கொடுமைகளில் எது அதிகக் கொடூரமானது என்பதான பட்டிமன்றங்கள் நடத்தப்படும் நிலை எத்தனை அபத்தமானது; அவலமானது…\

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      ஜாதி உணர்வு இருப்பவருக்கே ஜாதித்தூடணை எஃதெனபது தெரியும். உரைக்கும் என்பது என் வாதம்.

      பொதுவுடைமைக்கட்சியில் கிருஸ்ணகுமாரின் ஜாதியினர் பலருண்டு. மக்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாது. எ.கா. அமிர்தலிங்க ஐயரின் மகனார் முன்னாள் தீக்கதிர் ஆசிரியர் முத்தையா.

      அவர்கள் எவரையும் எந்தத் தூடணையும் ஒன்றும் செய்யாது. ஏன் கிருஸ்ணகுமார்? உங்களாலும் லதா இராமகிருஸ்ணனாலும் முடியாதா? கண்டிப்பாக முடியும். வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  25. Avatar
    தேமொழி says:

    IIM Ganapathi Raman,

    நீங்கள் என்னிடம் விளக்கம் கேட்கும் … இந்நிகழ்சிகளை அரசியலாக்குவது மற்றும் ஊடகங்களின் பொருப்பற்றத் தன்மை ஆகியவற்றை அவர் கட்டுரையில் கீழ் கண்ட வரிகளில் லதாவே அழகாக விளக்கியுள்ளார். இவைகளைச் சுட்டிக்கட்டிய அவருடைய சமுதாய அக்கறையைப் பாராட்டினேன்.
    அவர் கட்டுரைக்கு நான் விளக்கம் அளிப்பது முறையல்லவே.

    ….. தேமொழி
    __________

    //// தில்லி மாணவியின் குடும்பநிலை, சாதி முதலிய விவரங்கள் ஊடகங்கள் வழி தெரியவராத நிலையில் அவரைப் பற்றித் தாங்களாக சில அனுமானங்களைக் கற்பித்துக்கொண்டு [மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம், அன்னபிற], அவற்றின் அடிப்படையில், ‘இந்தியாவில், முக்கியமாக தமிழகத்தில் தினந்தினம் எத்த னையோ அடித்தட்டுப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரை விடுகிறார்கள். அவற்றிற்கெல்லாம் அணிதிரள்கிறார்களா? இந்த தேசிய ஊடகங் கள் அவற்றை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிடுவதில்லையே’ என்றெல்லாம் ஏளனமாய் ஒலித்த விமர்சனக்குரல்களை இங்கே கேட்க முடிந்தது. இங்கு, அதாவது தமிழகத்தில் இருக்கும் ஒளி-ஒலி, அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் நேரடியான அளவிலேயே அரசியல் கட்சிகளுடையவைகளாக இருக்கையில் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் மனம்வைத்தால் முக்கியத்துவம் தரலாமே, தொடர்ந்த ரீதியில் இத்தகைய எதிர்ப்பியக்கங்களைப் பற்றிய விவரங்களைத் தரமுடியுமே. அப்படிச் செய்யாதது ஏன்? தில்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, அது தொடர்பான மக்கள் எழுச்சி, அது ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றிற்குப் பிறகே இங்கே தலித் பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து தி.முக பேரணியொன்றை நடத்தியது. [சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் எப்பொழுதுமே கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்திவந்திருக்கின்றன. அவற்றை மற்ற அரசியல்கட்சி களின் ஒளி-ஒலி ஊடகங்கள் போதிய அளவுக்கு முன்னிலைப்படுத்துவ தில்லை].அதற்கு முன்பும் பாலியல் வன்கொடுமைக்கு எத்தனையோ அடித் தட்டுப் பெண்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால், அவை குறித்து, அவை தொடர்பான மக்கள் போராட்டங்கள் குறித்து ஆங்கில ஒளி-ஒலி ஊடகங்கள் ஏன் செய்தி வெளியிடவில்லை என்று அங்கலாய்ப்பதற்கு பதிலாக நம்மூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் வெளியிடுவதில்லை என்று எண்ணிப் பார்ப்பதும் கேள்விகேட்பதும் அவசியம்.////

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      தமிழகத்தில் தமிழ் இதழ்கள் ஜாதிகளை இன்று குறிப்பிட முடியா. காரணம் தலித்துகளுக்குச்சார்ப்பாக என்றால் தேவர்களும்,வன்னியர்களும் கொங்கு வேளாளரும் அவ்விதழை நேரடியாகத் தாக்கவருவார்கள். ஆங்கிலஇதழான தி ஹிந்து, டி ஓ இ மட்டும் இப்போது அவர்களுக்கெல்லாம் பயப்படுவதில்லை. அவர்கள் துணிந்து தலித்துகள் என்று சொல்லும். இன்றைய டி.ஓ இவைப்பார்க்கவும். லதா இராமகிருஸ்ணன் தொ0லைக்காட்சி ஊடகங்களப்பற்றி மட்டும் எழுதுகிறார். தொலைக்காட்சி ஊடகங்களைப் பற்றி பேசவே கூடாது: அவை முழுக்கமுழுக்க வணிக ஸ்தாபனங்கள்.

      தமிழரின் அடிப்படை வாழ்க்கைக்கொள்கை வர்க பேதத்தையும் ஜாதிபேதங்களையும் வைத்தே.

      இதை லதா இராமகிருஷ்ணன் நோக்க விரும்பவில்லை. அதோடு விட்டால் பரவாயில்லை. அப்படி பேதங்கள் நம்மிடையே புரையோடிக்கிடக்கின்றன. அதிலொரு வெளிக்காட்டலே பாண்டேக்கு மத்தியதர வர்க்கம் சென்னையில் மெழுகு வர்த்தி ஊர்வலம் போ0கிறது. என்று சுட்டிக்காட்டுவோரையும் பலபல சொல்லி ஏசுகிறார். ஆனால் இன்றை உணமை நிலவரம் வர்க்க பேதங்கள் பெருகிக்கொண்டே போகின்றன. ஒரு கால கட்டத்தில் ஜாதிகள் என்பதனை பூதாகாரமாக்கிக் கொள்கிறார்கள் என்றவர்கள் தர்மபுரியை மரக்க்காணத்தையும் பார்த்துவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு கிடக்கிறார்கள்.

      பாண்டேயின் மரணத்திற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்தில், வணிக நோக்கும் (டி ஆர் பி ரேடிங்ஸ்), வர்க்க பேதமும் இருக்கின்றன. அவற்றைச்சுட்டிக்காட்டியவரை நான் மனதார பாராட்டுகிறேன். அவர்களை ஏளனம் செய்த இக்கட்டுரையாளர் எப்படி பாராட்ட முடியும்?

  26. Avatar
    புனைபெயரில் says:

    ஈழத்தமிழர்களுக்கு நீதிவேண்டும்’ என்று——-மறுப்போர் middle class mentalityக்காரர்களாக –> உண்மை, இதில் கடைந்தெடுத்த முட்டாள்தனம், இலங்கையின் யாழ்ப்பாண தமிழ் பெண்மேயரே “தனி ஈழம்” கேட்கும் இங்கிருக்கும் உணர்ச்சிக் கும்பலுக்கு “அய்யா, எங்களை ஆளை விடுங்கள்” என்கிறார். இந்தியா நமது நாடு.. முதலில் நம்மை செதுக்குவோம். ராஜீவ் காந்தியை கொன்றால் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு தலைமையின் தவறுக்கு நாம் ஏன் நம்மை குழப்பிக்கொள்ள வேண்டும்.

  27. Avatar
    Indian says:

    As usual, Thinnai is trying to be politically correct by not publishing my comments.My comments are not offensive.

    1. Avatar
      admin says:

      தமிழில் எழுதுங்கள். பிரசுரிக்கப்படும்.

  28. Avatar
    புனைபெயரில் says:

    சில பேருக்கு மட்டும் தான் இந்த கண்டிஷனா..?

  29. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \பொதுவுடைமைக்கட்சியில் கிருஸ்ணகுமாரின் ஜாதியினர் பலருண்டு\

    அமரர் மலர்மன்னன் மஹாசயரின் கருத்துக்களுக்குப் பதில் தெரியாது அவர் ஜாதியைத் தூஷணை செய்ததை இந்த தளத்தில் வாசிப்பவர் யாரும் மறக்கவில்லை. என் ஜாதி என்ன என்பதை அய்…………. என்ன ஜாதி சான்றிதழ் பார்த்திருக்கிறாரா? என்னை நேரில் பார்த்திருக்கிறாரா? ம்………தடம் புரளல் என்பது பெயர் மாறினாலும் போகாத வ்யாதி.

  30. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \சுருக்கமாக….பாண்டே என்பது உத்ராஞ்சல் ஜாதிகளுள் பிராமணர்களின் சர்னேம்.\

    அந்தக் கதையெல்லாம் சரி; வ்யாசம் பேசுவது பாண்டே வைப் பற்றியல்ல மாறாக ஜோதி சிங் பாண்டே.

    சிங் பாண்டே எந்த ஜாதியின் சர்னேம் என எல்லாம் தெரிந்த அய்……. சொல்லலாமே.

    \ஆனால் அதைப்பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் தனிநபர் விமர்சனம் மட்டுமே செய்யக்காரணமென்?\

    ஆஹா! தனிநபரான உங்கள் ஜாதிபற்றி நான் ஏதும் கேழ்வி கேட்டுள்ளேனோ?

    உங்கள் ஜாதியென்ன என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. உங்கள் கருத்து என்ன என்பது தான் முக்யம்.

    கருத்துக்களுக்குப் பதிலாக தடம்புரளல்; கதை விடல் என்பதில் தானே உங்களுக்கு நாட்டம்.

  31. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி நான் சட்டை செய்வதில்லை\

    அய்………..வன் கொடுமைக்கு ஆளாகுபவர்கள் எந்த ஜாதியைச் சார்ந்தாலும் அதனை எதிர்ப்பது மானுடம்.

    கொடுமைகளில் கூட ஜாதிபார்த்து கும்பல் சேர்த்து கூச்சல் போடுவது ஜாதிவெறி.

    மைசூர் போண்டா பற்றிய வ்யாசமானாலும் அதில் ஜாதியை நுழைத்தே தீருவேன் என்று ஹடம் பண்ணுபவர்களால் மானுடத்திற்காக குரலெழுப்ப முடியாது. சரிதானே?

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      எத்தனை தடவை விளக்க வேண்டும் உங்களுக்கு?

      லதா இராமகிருஸ்ணன் எழுதுகிறார்:

      //…அவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பம் என்பதும், பிற்படுத்தப்பட்ட வகுபைச் சேர்ந்தது என்றும், //

      இங்கே ஏன் ஜாதி சொல்லப்பட்டதா இல்லைய? பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்றால் ஜாதியா இல்லையா?

      இக்கேள்விக்கு என்ன பதிலைச் சொல்கிறார் கிருஸ்ணகுமார்?

      (பாண்டே என்பது பிராமணப்பெயர் என்பதை நான் அப்போது முடித்துவிட்டேன். அதாவது மாற்றுக்கருத்தில்லை. கிருஷ்ணகுமார் எக்கருத்தைக் கொண்டாலும் அது அவரோடு முடிந்தது. இது என்னோடு முடிந்தது. That matter is finished.)

      இக்கட்டுரைக்கும் தன் ஜாதியைப் பற்றி ஒரு இலக்கியவாதி ஒரு இலக்கியக் கூட்டத்தில் குறைத்துச் சொன்னதால் தான் மனம் வருந்தினேன் என்று லதா இராமகிருஸ்ணன் எழதியதற்கும் என்ன தொடர்பு?

      கட்டுரையில் பேசப்பட்ட பல வாதங்கள், தப்பு வாதங்கள் இவைகளையெல்லாம் விட்டுவிட்டு அல்லது அவை பற்றிய தமது கருத்துக்களைச் சொல்லாமல் மைசூர் போணடா என்றெல்லாம் தனிநபர் விமர்சனத்தில் இறங்கக் காரணமென்ன?

      சரி போகட்டும். இப்போதாவது சொல்லட்டும்:

      ஏன் அப்பெண்ணில் ஜாதியைக் குறிப்பிட்டார்?

      ஏன் தன் ஜாதியைக் குறிப்ப்ட்டார்?

      ஏன் வர்க்க பேதம் இங்கே புரையோடிக்கிடக்கிறது என்று சுட்டிக்காட்டுபவர்களை ‘உலக மஹா அறிவு ஜீவி’ என்றும் இன்னபிற அர்ச்சனைகள்?

      கிருஷ்ணகுமார் கட்டுரைப் பொருளைப் பற்றி இனியாவது பேசலாம்.

  32. Avatar
    பூவண்ணன் says:

    வெ சா ஐயா பின்னூட்டத்தை இப்போது தான் பார்த்தேன்.குறிப்பிட்ட எழுத்தாளர்களை பெயரை சொல்லி எப்படி விருது வாங்கினார்கள் ,எப்படி நெருங்கி பழகினாலும் அவர்களுக்குள் விருதுகளை பகிர்ந்து கொண்டார்கள் என்று எழுதுவது வன்மம் இல்லையா.அதை குறிப்பிட்டால் கோவம் வருவது ஞாயமா
    நட்பை பற்றிய கட்டுரையில் பஞ்சாபி நண்பன் மற்றும் இவரிடம் இட ஒதுக்கீடு உயர் அதிகாரி எப்படி தன மகனும் இட ஒதுக்கீடு மூலம் அதிகாரியாகி விடுவான் என்று சொல்லி சொல்லி மகிழ்ச்சி அடைவார் என்று எழுதிய கைகள் சாதியால் செல்லப்பா மறைக்கப்பட்டார் என்று எழுதவில்லை,அகிலன்,வல்லிகண்ணன் போன்ற தகுதியற்றோர் சாதியால் விருது பெற்றார்கள் என்று கூறவில்லை எனபது போல பின்னூட்டம் இடுவது வேதனை தான்

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      என்ன பூவண்ணன் சார், கட்டுரை மாற்றி பின்னூட்டம் இட்டுவிட்டீர்களா ? :))

  33. Avatar
    Venkat Swaminathan says:

    நான் எங்கும் சாதி பற்றி எழுதவில்லை. செல்லப்பா காலத்த்ல் அவர் வாழ்ந்த வரை அவரை ஒதுக்கியவர்கள், பாராட்டியவர்கள், கேலி செய்தவர்கள் யாரும் சாதி சொல்லிச் செய்யவில்லை. அவரவர் மனப் போக்கு அபபடி.

    சாதியை நான் காரணமாகக் காட்டினேன் என்பது இங்கு சிலர் செய்யும் சாதி அரசியல். அதனால தான் எண்கணித வாய்ப்பாடு எழுதினாலும் அதில் சாதி காணும் கீழ்த்தர மன அமைப்பு இவர்களது என்று எழுதினேன்.வல்லிக்கண்ணன் செல்லப்பாவை ஒரு கட்டத்தில் ஒதுக்கியதும், திகசியை பரிந்துரைத்ததும் சாதி காரணமாக இல்லை. அவர்களது நட்பின் நெருக்கம் இலக்கிய மதிப்பீட்டை அறவே ஒதுக்கியது. அதில் இலக்கிய மதிப்பீடு இல்லை. என் கருத்து, இலக்கிய மதிப்பீட்டில் சாதியும் இல்லை. நட்பும் இல்லை. வேறு எதுவும் இல்லை. இலக்கிய மதிப்பீட்டைத் தவிர. வேறு எதுவும் அறியாத ஜீவன்கள் சாதியை மற்ற எல்லாவற்றிற்கும் முன்னதாக வைக்கு. அது தான் இங்குள்ள சில ஜீவன்களில் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *