(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
திரும்பி நினைத்து வந்தேன்
மிருகங்க ளோடு நான் வசிப்பதற்கு !
மிகவும் அமைதி யானவை !
தன்னடக்கம் கொண்டவை !
நெடு நேரம் நின்று அவற்றை
நோக்குவேன், ஆம்
நெடு நேரம் !
இழிவு நிலைக்கு அவை
புலம்புவ தில்லை !
புகார் செய்வ தில்லை !
பயத்தால் வேர்ப்ப தில்லை !
இருட்டில் படுத்து
விழித்தி ருப்ப தில்லை !
பண்ணிய பாவங் களுக்கு அவை
கண்ணீர் விடுவ தில்லை !
மனநோய் அளிப்ப தில்லை
எனக்கவை,
கடவுளுக்குச் செய்யும் தமது
கடமை யைப் பற்றித்
துருவி விளக்கி !
திருப்தி அடையாத ஒன்றில்லை !
சொந்தம் கொண்டாடும்
பித்த மில்லை !
மற்ற ஒன்றின் முன்பு
மண்டி யிட்டுத்
தொண்டு செய்வ தில்லை !
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு
வாழ்ந்த அவற்றின்
பூர்வீக இனத்துக்குத்
தலை வணங்குவ தில்லை !
அனைத்துப் பூமிமேல்
மதிப்புள்ளது
வெறுப்பில்லை ஒரு விலங்குக்கு !
விலங்குகள் எனக்குத் தம் தொடர்பை
வெளிப்படுத்தும் !
ஏற்றுக் கொள்வேன்
நானுமதை !
என்னுடம்பின்
முத்திரைச் சின்னங் களை எனக்குச்
சித்தரித்துக் காட்டும் !
தம்மிடம் உள்ள வற்றைச்
செம்மையாய் வெளிப் படுத்தும் !
சின்னங் களை எல்லாம்
எங்கிருந்து பெற்றன என்று
வியப்படைவேன் !
பன்முறை இந்தப் பாதையை
முன்பு நான் கடந்து
சென்றேனா ?
புறந்தள்ளி அவற்றைத்
துறந்தேனா ?
இன்றோ பிறகோ
எப்போதுமே அப்பாதையில்
முன்னடி வைப்பேனா ?
நிறையச் சேமித்து
வெளிப் படுத்தி விட்டேனா
விரைவாக ?
+++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986] - Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/
Walt_Whitman [November 19, 2012] - http://jayabarathan.wordpress.
com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (May 1, 2013)
http://jayabarathan.wordpress.
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -22 என்னைப் பற்றிய பாடல் – 16 (Song of Myself) விலங்குகள் நேர்மையானவை .. !
- சங்கல்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !
- நவீன தோட்டிகள்
- மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்
- அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்
- தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்
- புகழ் பெற்ற ஏழைகள் 5. உலகத்திலேயே அதிக நூல்களை எழுதிய ஏழை!
- “ 13 ”
- அரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்
- நிழல்
- செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)
- தெளிதல்
- ஆனந்தயாழ் – தங்கமீன்கள்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! 4
- துறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு
- இன்னொரு எலி
- கவிதைகள்
- ஒரு தாதியின் கதை
- என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)
- கரையைத் தாண்டும் அலைகள்
- பசுமையின் நிறம் சிவப்பு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -8 [இரண்டாம் அங்கம் முடிவு]
- மத நந்தன பாபா
- விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் சுழலும் பூதச் சூறாவளி கண்டுபிடிப்பு !