தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !

This entry is part 3 of 29 in the series 12 மே 2013

 

 

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

 

செவிக்கினிய உன்னிசைக் கானங்கள்

பழைய நினைவு களை விழித்தெழச் செய்யும்

கண்களை நீரில் நனைய வைத்து !

மழைப் பொழிவு ஓய்ந்தவுடன்

மல்லிகைப் பூ மொட்டுகள் போல்

சோக முள்ள முறுவ லோடு

தூங்கி எழும் !

மேக மூட்ட அடர்த்தி நிழலில்

மல்லிகை மலர்களின்

மெல்லிய நறுமணம் உள்ளம் கவரும் !

விளிம்பு நிரம்பி

விழி காணாத்  தழுவலில்

அடைபட்டுக்

குடை சாய்ந்து விடும் !

 

 

 

இன்றைய ஈரக் காற்றிடையே

முன்பு நீ உரைத்த வாய்மொழி நினைவுகள்

என் செவிகளில் ஒலிக்கும்

நள்ளிராப் பொழுதில் பெய்திடும்

மழைத்துளி வீழ்ச்சி போல்  !

அந்த  இனிய வரிகள்

எழுதப்படும் ஒரு கானம் போல்

இசைந்து பொருந்திடும்,

இங்கிருந்து  உன்னை ஏந்தி

வரைந்த

சொந்தக் கால்தடப் பாதையிலும்

எந்தன் காதலிலும்  !

+++++++++++++++++++++++++

பாட்டு : 253   தாகூர்  தன் 66 ஆம் வயதில் [ஜூன் 28, 1927]  கொல்கத்தாவில் இருந்த போது எழுதியது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com]  May 6, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationமருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலிவால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *