அக்னிப்பிரவேசம்-33

This entry is part 29 of 29 in the series 12 மே 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com லேட் சந்திரனின் வீட்டிற்கு பாஸ்கர் ராமமூர்த்தி போய்ச் சேர்ந்த போது மணி எட்டு அடிக்கவிருந்தது. கூர்க்கா கேட்டிற்கு அருகில் தடுத்து நிறுத்தினான். “ரொம்ப முக்கியமான விஷயம் என்று நிர்மலா அம்மாவிட்டம் போய்ச் சொல்லு” என்றான். கூர்க்கா போய்விட்டுத் திரும்பி வந்து “வரச் சொன்னாங்க” என்றான். ராமமூர்த்தி உள்ளே போனபோது நிர்மலா உட்கார்ந்திருந்தாள். “யார் நீங்க? என்ன வேண்டும்?” என்று கேட்டாள். “நான் ஆதிலக்ஷ்மியின் மகன். […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை

This entry is part 28 of 29 in the series 12 மே 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை என்னங்க…​யோசிச்சிக்கிட்​டே இருக்கீங்க…இன்னும் ​நி​னைவுக்கு வரலீங்களா?…சரி நா​னே ​சொல்லிட​றேன்..அவங்க தாங்க தியாகச் சுடர் தில்​லையாடி வள்ளியம்​மை…என்ன ஆச்சரியப்படறீங்க….அவங்களப் பத்தித் ​தெரிஞ்சுக்குங்க.. ஆங்கி​லேயர்கள் ​தென்னாப்பிரிக்கா​வையும் உலகத்தில் உள்ள பல நாடுக​ளையும் அடி​மைப்படுத்தி அந்த நாடுகளின் வளங்க​​ளை எல்லாம் சுரண்டினார்கள். ​தென்னாப்பிரிக்கா​வை அடி​மைப்படுத்தி அங்கிருந்த உலகப் புகழ் ​பெற்ற ​வைரச்சுரங்கங்க​ளைத் ​தோண்டி எடுக்க அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களான நீக்​ரோக்க​ளைப் பயன்படுத்திக் ​கொண்டனர். உ​ழைப்புக்​கேற்ற ஊதியம் […]

விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.

This entry is part 27 of 29 in the series 12 மே 2013

5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப பேசுகிறது. அவர் எத்தனை படங்களைப் பார்த்திருக்கிறார் என்று தம்பட்டம் அடிக்க இது உதவலாமே தவிர விஸ்வரூபம் விமர்சனத்திற்கு உதவாது. ஒரு கலாசாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் ஒவ்வொரு பார்வையில் ஒவ்வொரு அழுத்தப் புள்ளியில் செயல்படும். இரண்டு படங்களை ஒப்பிட்டு இந்தப்படம் சிறந்தது, இன்னொரு படம்  சிறந்தது இல்லை என்று மதிப்பீட்டை முன்வைப்பதற்கு அவை இரண்டும் ஒரு நாட்டினைப் பற்றியது என்ற […]

கல்யாணக் கல்லாப்பொட்டி

This entry is part 26 of 29 in the series 12 மே 2013

                               -நீச்சல்காரன் “தம்பி கொஞ்சம் வாங்களேன்” என்று சுருள் பாக்கு போட்டுக்கொண்டே மாப்பிள்ளையோட அப்பா நம்ம கைய பிடிப்பாரு. நாமகூட மாப்பிள்ளை தோழனா கூப்பிடுறாரோனு கொஞ்சம் சட்டைக் காலரை திருத்திக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு “அங்கிள், கேமிராக்காரர் வந்துட்டாரா?” என்போம். “அதோ சாப்பிட்டுக் கொண்டிருக்காரு குமாரு! ” என்று வழிந்து கொண்டிருந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே “சாப்பிட்டையா!” […]

2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.

This entry is part 25 of 29 in the series 12 மே 2013

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     செந்நிறக் கோளுக்குச் செல்லும் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது ரஷ்யா, நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியச் சுற்றுளவி இவ்வாண்டு முடிவில் செந்நிறக் கோள் சுற்றப் போகுது சைனாவுக்கு முன்பாக ! சந்திரனில் முத்திரை இட்டது இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் நுணுக்கப் பந்தயம் தான் ! விந்தை புரிந்தது இந்தியா ! […]

ஒரு செடியின் கதை

This entry is part 24 of 29 in the series 12 மே 2013

பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது   நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம்   தேதி கிழித்தது இயற்கை புதுச் சேதி சொன்னது செடி   முகம் கழுவியது பனித்துளி தலை சீவியது காற்று மொட்டுக்கள் அவிழ்ந்து பூச்சூட்டியது பட்டாம்பூச்சிக் கெல்லாம் பந்தியும் வைத்தது   முதுகுத் தண்டில் பச்சைப் பூச்சிகள் கிச்சுச் செய்தது தேன் சிட்டொன்று முத்தமிட்டது   கூசுகிறதாம் சிரித்தது செடி உதிர்ந்தன சருகுக் கழிவுகள்   திமிறிய […]

பேரழகி

This entry is part 23 of 29 in the series 12 மே 2013

உயிர் பிரியும் இறுதி வினாடியில் நினைத்துப் பார்க்கிறேன் வாழ்ந்திருக்கலாமே என்று விடை பெறும் தருணத்தில் தவறவிட்டு விட்டேன் வழியனுப்பி விட்டு திரும்பி இருக்கலாம் மதுப் புட்டியில் மயங்கி விழுந்தேன் புதுப் புது கவிதைளோடு பிறகு எழுந்தேன் போதைியில் அமிழ்ந்தால் தான் எழுதுகோலில் மை கரைகிறது நதியில் நீந்துவதெல்லாம் கவிதையோடு கரை சேர்வதற்காகத்தான் கற்பனைக்காக கடிவாளத்தை கழற்றிய போது துகிலுரித்துக் காட்டினாள் அரசிளங்குமரி சுயம்வரத்தில் தோற்றால் என்ன விளக்கை அணைத்தால் படுக்கை விரிப்பும் பஞ்சு மெத்தை தான் அடுக்களைக் […]

‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 22 of 29 in the series 12 மே 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     1977-ல் பிறந்த இசை (இயற்பெயர்: ஆ.சத்தியமூர்த்தி) கோவை மாவட்டத்துக்காரர். இவர் ஒரு மருந்தாளுநர். ‘உறுமீன்களற்ற நதி’ இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 63 கவிதைகள் உள்ளன. எளிமை, நல்ல வாசிப்புத்தன்மை, கவனமீர்க்கும் தலைப்புகள், புதிய சிந்தனைகள் ஆகியவை இவர் கவிதை இயல்புகள். சக மனித விமர்சனம், யதார்த்தம், கனவுத்தன்மை, சொல் நேர்த்தி ஆகியவையும் ரசிக்கத் தக்கன.       குழந்தைகள் பற்றிய பதிவு பெரும்பாலும் சோடை போவதில்லை. ‘சௌமி குட்டி சௌமியா […]

கொக்குகள் பூக்கும் மரம்

This entry is part 21 of 29 in the series 12 மே 2013

    தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம்   ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்   வெள்ளைப் பூக்களென வந்து தங்கிச் செல்லும் கொக்குகள் இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால் கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்   இரை தேடி விடிகாலையில் தமதிரு நெடிய கிளைகளையும் வயிற்றில் பதித்துப் பறப்பவை விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள […]

“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….

This entry is part 20 of 29 in the series 12 மே 2013

  அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க‌ கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். உள்ளே பச்சை நரம்புகளில் சிவப்புக்கடல். அந்த‌ உன் கருப்பையை ஈரம் சொட்ட சொட்ட‌ என் கைப்பையில் நான் திணித்துக்கொண்டேன். அந்த‌ ப‌த்துமாத‌ இருட்டுக்குள் சூரிய‌ப்பிழ‌ம்பாய் நான் உருப்பிடிக்க‌ நீ உன்னை உலைக்க‌ள‌மாய் காய்ச்சிக்கிட‌ந்த‌தை எந்த‌ மெம‌ரி சிப்பில் இட்டு வைக்க‌ முடியும்? ம‌ல‌ட்டு டிஜிட‌ல் க‌ர்ப்பப்பையை ம‌டிப்பொறியாய் சும‌ந்து சும‌ந்து ப‌ன்னாட்டுக‌ம்பெனியின் ப‌ண‌ங்காட்டு க்யூபிகிள்க‌ளில் […]