(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
காலமும், வெளியும் மெய்யென
ஞானம் வரும் இப்போது !
புல்லின் மேல் திரிந்த போது
முன்பு நான் ஊகித்தது !
படுக்கையில் நான் மட்டும் தனியே
கிடந்த போது யூகித்தது !
கடற்கரையில்
தாரகைப் பந்தல் வேலியின் கீழ்
நடக்கையில் மறுபடி என்
பாரங்கள், பந்தங்கள் அற்றுப் போயின !
என் முழங்கை கடல் தீவுகளில்
ஓய்வெடுக்கும் !
என் உள்ளங்கை
உலகக் கண்டங்களைத்
தழுவிச் செல்லும் !
என் இடுப்புச் சுற்றாடை
கரடு முரடான மலைப் பகுதியில்
உரசிச் செல்லும் !
விழித்துக் கொண்டேன் என்
உள்ளொளி யோடு !
தாரணிப் பழத் தோப்புகளைப்
பார்வை இடுகிறேன்.
விளைச்சலை நோக்குகிறேன்
கனிந்து தொங்கும்
கோடான கோடிப் பழங்களைப்
காண்கிறேன்.
கோடான கோடி பச்சைக்
காய்கறி களைக்
காண்கிறேன்.
விழுங்கிக் கொண்ட
ஆத்ம ஆவியை நோக்கி
தாவிப் பறக்கிறேன் !
என் படிப்பு முறை
கீழ்நிலை மக்கள் சூழ்நிலையில்
நடந்தேறும் !
பொருளுக்கும்
பொருளற்ற வைக்கும் என்னை
உருவாக்கிக் கொள்கிறேன்.
அடைத்துப் போட முடியாது
என்னை,
எந்த காவற் துறையும் !
தடுக்க முடியாது
என்னை
எந்த விதி முறையும் !
நங்கூரம் பாய்ச்சி யுள்ளேன்
என் கப்பலுக்கு
சிறிது காலம் மட்டும் !
என் தூதர்கள் தூரத்தில்
தொடர்ந்து பயணம் செய்கிறார்.
அல்லது திரும்பி வருகிறார்
எனக்கவர்
வெகுமதி யோடு !
வேட்டைக்குச் செல்கிறேன்
துருவத்தில்
சீல் மீன்,
மிருகக் குளிர்த்தோல்
பெறுவதற்கு !
+++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986] - Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/
Walt_Whitman [November 19, 2012] - http://jayabarathan.wordpress.
com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (May 8, 2013)
http://jayabarathan.wordpress.
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19
- மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி
- தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்
- தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்
- விளையாட்டு வாத்தியார் – 1
- ஒரு கவிஞனின் நாட்குறிப்பு
- வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
- முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5
- நீங்காத நினைவுகள் – 2
- சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்
- வனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது
- தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)
- புதிய வலை இதழ் – பன்மெய்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1
- சுமைதாங்கி சாய்ந்தால் ……..
- ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)
- மட்டக்களப்பில் வைத்து
- “ஓலைக்கிளிகள்” (அன்னையர் தினம்)….
- கொக்குகள் பூக்கும் மரம்
- ‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…
- பேரழகி
- ஒரு செடியின் கதை
- 2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.
- கல்யாணக் கல்லாப்பொட்டி
- விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.
- புகழ் பெற்ற ஏழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏழை
- அக்னிப்பிரவேசம்-33