ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .

This entry is part 16 of 23 in the series 16 ஜூன் 2013

 

மூலம் : கலீல் ஜிப்ரான்

தமிழில் : புதுவை ஞானம்.

” துவக்கத்திலிருந்தே  இருக்கிறேன் இங்கே யான்

முடியும்   நாள் வரையும் இருப்பேன் இங்கே யான்

ஏனெனில்

எனது இருப்புக்கு முடிவே இல்லை.

மனித ஆன்மாவானது கடவுளின் ஒரு அங்கமே

படைக்கும் தருணத்தில் பிரிபட்ட ஓர்  சுடரே அல்லவா ?

ஒருவரை ஒருவர் கலந்து பேசுகின்றனர் எனது சகோதரர்கள்

அதனுள்தான் அடங்கி இருக்கிறது தவறு செய்யாமையும்

மீண்டும் அதனை நினைத்து வருந்தாமையும்.

பல்லோரது பங்கேற்பு என்பது கேடயமாகும்                        யதேச்சார கொடுங்கோன்மைக்கு எதிராக

ஏனெனில்…….

ஒருவரை ஒருவர் மனம் கலந்து பேசுவதால்

எதிரிகளின் எண்ணிக்கை குறைந்து விடும்

அல்லவா ?

ஆலோசனைகளைக் கேட்டுப் பெறாதவன் மூடன

குருடாக்குகிறது அவனைத் தனது முட்டாள்தனம்

பிடிவாதக்காரனாகவும் இடையூறான

ஆபத்தானவனாயும் மாற்றிவிடுகிறது தனது

சக பயனிகளுக்கு.

ஒரு பிரச்சனையை எதிர் கொள்கையில்

தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் _ அதனைத்

தீர்மானமாக முகம் கொடுங்கள் அதுதான்

வலுவாக இருப்பதற்கான வழியாகும்.

முதியோர்களின் ஆலோசனயை நாடுங்கள்

ஏனெனில்

ஆண்டுகளைக் கண்டு அனுபவித்தவர்கள் அவர்கள்

வாழ்வின் குரலைச்  செவிமடுத்தவர்கள் அவர்கள்

அவர்களது ஆலோசனை உவப்பாய் இல்லாவிடினும்

ஏற்றுக் கொள்ளுங்கள் முழுமனதாய்

கொடுங்கோலனிடமிருந்தோ தவறிழைப்பவனிடமிருந்தோ

கபட வேடதாரியிடமிருந்தோ நாணயம் கெட்டவனிடமிருந்தோ

நல்ல ஆலோசனையை எதிர் பார்க்காதீர்கள்.

தவறிழைப்பவர்களுடன் இணைந்து சதி செய்பவர்களுக்கும்

அவர்களிடம் ஆலோசனை பெறுபவர்கட்கும் கெடுதி விளைவது நிச்சயம்.

ஏனெனில்கெடுமதியாளருடன் உடன்படுவது சிறுபிள்ளைத்தனம்.

அத்துடன் பொய்யான அவர்களது ஆலோசனை

சதிகாரத்தனமானதும் ஆகும்.

எனக்கென்று பரந்த அறிவும் துல்லியமான மதிப்பீடுகளும்

உச்சமான

அனுபவங்களும் கைவரப்பட்டால் ஒழிய மனிதர்களுக்கு ஆலோசனை

வழங்கும் பொறுப்பினை ஏற்கவே மாட்டேன்.

வாய்ப்புகள் வரும் பொழுது அவசரப்படாதீர்கள் சோம்பியும் இராதீர்கள் !

இவ்வாறாக

மோசமானதவறுகளைத் தவிர்க்க இயலும்.

நண்பரே

தீ பரவுகையில் வாளாவிருந்து விட்டு

வீணாக சாம்பலை பரப்பி

ஊதுபவன் போல செயல் படாதீர்கள்

நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்.

கடந்தது கடந்ததுதான்!

ஏனெனில்

மீட்க முடியாதவை பற்றி துயரப்படுவது மனிதனின்

மோசமான பலவீனமாகும்.

நேற்றைய எனது செயலுக்கு வருந்தினேன் யான்

இன்றைக்கு

வில்லும் முறிந்து அம்பறாத் தூணியும் போய்

தவறுகளூம் கெடுதல்களும் புரிகின்றன எனக்கு

உன்னை நேசிக்கிறேன் எனது சோதரனே!

.எங்கேகஉனது கோயிலில்  கும்பிடுகின்றனையோ

மசூதியில் மண்டியிட்டு தொழுகின்றனையோ

நீயும் நானும் தெய்வ நம்பிக்கையுள்ள குழந்தைகள்

மதங்களின்

மாறுபட்ட பாதைகள்

மேலானதோர் இருப்பின் விரிக்கப்பட்ட கரங்கள்

அனைவரையும் அணைக்கும் அவை வரவேற்கும்

ஆர்வமுடன் வழங்கிடும் ஆன்ம நிறைவை

கடவுள் கொடுத்திருக்கிறார் ஓர் ஆன்மாவை

அகண்டதோர் வெளியில் அதன் மீதேறி அடைவோம்

உறுதியான அன்பையும் சுதந்திரத்தையும்.

உனது சிறகுகளை நீயே துண்டித்துக் கொண்டு

புழுவைப்போல் நகருவதா புவியின் மீது ?

இரவின் முடிவாய்  வெளிச்சத்தை நோக்கி

வேகமாய் விரையும் என் ஆன்மா !

6.6.2013

—————

Series Navigationயதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழாவால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !
author

புதுவை ஞானம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *