உள்ளே ஒரு வெள்ள‌ம்.

1
0 minutes, 0 seconds Read
This entry is part 22 of 29 in the series 23 ஜூன் 2013
உடைக்கவில்லை நொறுக்கவில்லை
உள்ளே நுழைந்தேன்.
துண்டு துண்டாய் உள்ளே வ‌ந்தேன்
அப்புற‌ம் ஒட்டிக்கொண்டேன்.
ச‌துர‌க‌ற்க‌ளில்
குளித்து விள‌யாடினேன்.
க‌ன்ன‌ங்க‌ளில் ம‌ஞ்ச‌ள் பூசினேன்.
மாட‌த்து காமாட்சிவிள‌க்கின்
எண்ணெய்க்குள‌த்தில்
தாம‌ரைக‌ள் பூத்தேன்
காண்டாமிருக‌ங்க‌ள்
க‌ன்றுக்குட்டிக‌ள்
மயில் தோகை அசைவுக‌ள்
எல்லாம்
நிழ‌ல்க‌ளில் வ‌ந்த‌ன‌.
ப‌க்கத்தில் ஆலிங்க‌ன‌த்துக்கு
கை நீட்டும் பாதிரிம‌ர கிளைக‌ளின்
கைக‌ளில் வ‌ளைய‌ல்க‌ளாக குலுங்கின‌
பாதிரிப்பூக்க‌ள்.
அப்போதும்
நிழ‌ல்க‌ள் க‌ரு ம‌ணிக‌ளாய்
ப‌ர‌ல்க‌ள் இறைத்த‌ன‌.
கேட்க‌வில்லையா
அந்த‌ “கேளா ஒலி”அதிர்வுக‌ளின் கேவ‌ல்க‌ள்?
புல்லைத்த‌ட‌வி
க‌ல்லை வ‌ருடி
க‌ட‌லின் உட‌லை வ‌ருடி
ப‌ச்சைக்க‌விகைக‌ளின் இலைமுக‌டுக‌ளில்
ப‌டுத்துப்புர‌ண்ட‌பின்
உட‌லைக்கிட‌த்த‌ உள்ளே வ‌ந்திருக்கிறேன்.
கூட‌த்துள்ளே ஒரு சித்திர‌ கூட‌ம்.
அஜ‌ந்தா கூந்தல் அல‌ங்கார‌ம்
உங்க‌ள் த‌ரை விரிப்பாய் ஆன‌தே
உற்று நோக்க‌வில்லையா?
இர‌ண்டு தீக்க‌ங்குக‌ளை விழியாக்கி
வேள்வி வ‌ள‌ர்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாக‌ம்
இங்கு அக்கினிக்க‌ட‌ல் ஆகிப்போன‌தில்
லேமினேட்ட‌ட் செய்ய‌ப்ப‌ட்ட
சாது க‌ர‌ப்பாம்பூச்சியாய் ஒளிவ‌ற்றிக்கிட‌க்கிறேனே.
ர‌க‌சிய‌மாய் நில‌வைப்பார்த்து அழுத‌
க‌ண்ணீர்ச்சுவ‌டுக‌ளில்
உருவ‌ம் சித‌றிக்கிட‌க்கிறேனே
அதை சேர்த்து வைத்து
கோல‌ம் போடும் மென்காந்த‌ள் விர‌ல்க‌ளை
தேடி அல்ல‌வா
இந்த‌ சிமிண்டு த‌ரைமீது
புற‌ ஊதாவும் அக‌ச்சிவ‌ப்புமாய்
கை கோர்த்து ப‌ட‌ர்ந்திருக்கிறேன்.
வா!பெண்ணே!
உன் ம‌னப்பீலிக்குள்
மாணிக்க‌ச் ச‌ல்ல‌டை ச‌ல‌ச‌ல‌க்க‌
ம‌யிற்பீலிக‌ள் சேர்த்தெடுத்து
துடைப்ப‌ம் ஆக்கி
இந்த‌ வெளிச்ச‌மும் நிழ‌லுமாய் இருக்கும்
குப்பைக‌ளை பெருக்கி விடு.
துர்வாச‌ர் ம‌ந்திர‌ம் சூரிய‌னுக்குள்
விடைத்த‌து.
சூரிய‌ன் துப்பிய முத‌ல் எச்சிலின்
உயிர்க்க‌திர் உலாவ‌ வ‌ந்த‌ தேச‌ம் இது.
மீண்டும் ஒரு புதிய‌ பார‌த‌ம் த‌ர‌
சூரிய‌னின் ப்ளாஸ்மா ப‌ட‌ர்ந்து
ஒழுகுகிற‌தோ இங்கு.
அந்த‌ இரும்புக்கிராதியின்
இலைப்பூ கொடிப்பூ ஓட்டைக‌ளின்
வ‌ழியே கோடிபிர‌காச‌ம்.
இரும்புப் பின்ன‌ல்க‌ளின் வ‌ழியே
வியாசன் விய‌ர்த்து விய‌ர்த்து
பிதுங்கி வ‌ழிந்து கொண்டிருந்தான்.
“ஏண்டி! அந்த‌ திரையைப்போடு.
உள்ளே வெக்கை தாங்க‌லை
என்ன‌த்தை த‌ரையில் உற்றுப்பார்க்கிறாய்.
காலேஜில‌ போய் நாலெழுத்து ப‌டிச்சிட்டா போதும்.
வான‌த்த‌ப் பாக்குற‌தும்
பூமியைப் பிற‌ண்ட்ற‌துமாப்போச்சு.
போ! போய் பெருக்கு..”
அம்மா ஏவினாள் இரக்கமின்றி.
மகள் கேவினாள் ச‌த்த‌மின்றி.
====================================ருத்ரா
Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது
author

ருத்ரா

Similar Posts

Comments

 1. Avatar
  சோமா says:

  துர்வாச‌ர் ம‌ந்திர‌ம் சூரிய‌னுக்குள்
  விடைத்த‌து.
  சூரிய‌ன் துப்பிய முத‌ல் எச்சிலின்
  உயிர்க்க‌திர் உலாவ‌ வ‌ந்த‌ தேச‌ம் இது. – உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *