வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !

This entry is part 16 of 25 in the series 7 ஜூலை 2013

 

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

  

கூட்டத்தின் மத்தியில் எழுந்ததோர்

விளிப்புக் குரல் !

என் கூக்குரல் தான் அது;

ஆரவார மாய் முடிவாக எழும்

அலைபோல் மீறி

அடித்துக் கொண்டு !

வாரீர் என் குழந்தைகளே !

வாரீர் என் புதல்வரே !

என் புதல்வியரே !

எனது பெண்டீர்களே !

என் இல்லத் தோரே !

என் அந்தரங்கத் தோழரே !

நடத்துனர் இப்போது தன்

நரம்பின் துடிப்பை

அரங்கேற்றி

முன்விளைவை மறந்து

சென்றார்

நாணற் புல்லின் உட்புறத்தில் !

தளர்ந்த விரல்களில்

எளிதில் வாசிக்கப் படும்

முறுக்குக் கம்பிகளின்

உச்ச இசை நாண்

ஒலி தன்னை

உணர்ந்து நிறுத்துவேன்.

தாள இசை நாட்டிய மிடும்

வாத்தியக் கருவி

மூல மின்றி !

என் வீட்டைச் சேரா மாந்தரே

என்னைச் சுற்றி உள்ளார்.

 

 

பூமிக்குள் என்றும் புதைபடா

மூர்க்கர் !

குடிகாரர், பெருந் தீனியார்,

செல்வந்தர், ஏழையர் என்றுமே

இல்லாமல் போனரோ  !

என் வாழ்வும்

நீடிப்ப தில்லை

என் அண்டை வீட்டார்

புத்துயிர் பெற்றவர், போலி மனிதர்,

மெய் மனிதர்,

என்றும் நிலைத்திலார்.

நீடிப்ப தில்லை காதலும்

நிலையாய் !

என் நாடிக்குக் கீழிருக்கும்

புண்ணின் கட்டு

என்றும் ஆறுவ தில்லை.

மரணத்தின் நெளிந்த கால்கள்

முறிவ தில்லை !

 

 

இங்கு மங்கும் நடக்கிறார்

கண்களில்

நாணயம் ஏந்தி

வயிற்றுப் பசி தீர்க்கவும்,

மூளைக்குத் தாரள மாக  

ஊட்டவும் !

கட்டணச் சீட்டைத் தான்

பெற்றும், பிறருக்கு

விற்றும் செல்கிறார்

ஒருதரம் கூடப் பந்தியில்  

பங்கு கொள்ளாது !

வேர்வை சிந்துவோர் பலர்,

வேளாண்மை செய்வோர் பலர்,

கொள்ளை அடிப்போர் பலர்,

குப்பை உரத்துக்குப் பணம்

கொடுப்போர் பலர்,

உழைக்காத ஒரு சிலர் அவற்றுக்கு

உரிமைக் காரர் !

கோதுமை விலை

மித மிஞ்சிப் போகுது !

 

+++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (July 4, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationகாவல்வேர் மறந்த தளிர்கள் – 14,15,16
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *