மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
வெண்ணிலவின் புன்னகை
முறித்து விட்டன அதன் எதிர்ப்புகளை !
மேலேறின தூக்கும் உத்திரங்கள் !
வெள்ளைப் பூவே !*
உள்ள நறுமணத்தைப்
பேரளவில் பொழிந்து தள்ளிடு.
வானுலகத் தேனமுது !
எங்கே போக அழைக்கப் படும் என்று
தாறு மாறாய்த்
திரியும் காற்றுக்குத் தெரியாது !
பூந்தோட்டத்தில்
பக்கத்தில் எது இருப்பினும்
பாய்ந்து
சூழ்ந்து கொள்ளும் அதனைச்
சூறாவளி !
நீல வானின் நெற்றியில்
திருமணப் பெண்ணுக்குப் போல்
இன்றிரவில் மின்னும்
சந்தனத்தைக் குழைத்துப் பூசுவது !
கலைத் தெய்வத்தின்
பூந்தோட்டத்தில்
இரண்டு அன்னப் பறவைகள்
சிறகு விரித்துள்ளன !
நிலவும், நீயும் பூமியில்
பரப்பிடும்
இதுவா வானுலக நறுமணப்
பாரிஜாத மகரந்தம் ?
இந்திரன்
வாழும் மாளிகையில் சிற்சில
எழிலொளி
ஏற்றி வைத்திடும் விளக்கை
உறவு கொள்ளும்
அறையில்.
+++++++++++++++++++++++++++++
நறுமண வெள்ளைப் பூக்கள் à Fragrant Tuberose
+++++++++++++++++++++++++++++
பாட்டு : 94 தாகூர் 68 வயதினராய் ஜூன் 1929 இல் பரித்திரன் [Paritran] என்னும் நாடகத்துக்கு எழுதப்பட்டது.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 16, 2013
http://jayabarathan.wordpress.
- சூறாவளி
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 11
- மாயமாய் மறையும் விரல்கள்
- தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு.
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -11 மூன்று அங்க நாடகம்
- மருத்துவக் கட்டுரை குடல் வால் அழற்சி
- நீங்காத நினைவுகள் – 11
- புகழ் பெற்ற ஏழைகள் – 16
- தாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -33 என்னைப் பற்றிய பாடல் – 26 (Song of Myself) என் ஆன்மா உசிப்பி எழுப்பும்
- gÖdSe presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE) written & directed by Elangovan
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 29
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………28 ஆ.மாதவன் – ‘மோக பல்லவி’
- மெய்கண்டார்
- தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது – 2013 லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை.
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு – நடவடிக்கைகள் ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து …..
- தாயம்மா
- வேர் மறந்த தளிர்கள் – 20-21-22
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 19
- நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறையாக புது விண்மீனைச் சுற்றும் இரண்டு நீர்க்கோள்களைக் கண்டுபிடித்தது