வால்ட் விட்மன் வசனக் கவிதை -35 என்னைப் பற்றிய பாடல் – 28 (Song of Myself) எனது காதலிகள் .. !

This entry is part 20 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

 

Walt Whitman 

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

என்னை மூச்சுத் திணற வைப்பவர்

எனது காதலியர் !

என் உதடுகளில் முத்தமிடக்

கூடும் கூட்டம் !

நுழைந்திடுவார் தடித்த என்தோல்

துளைகளில் !

நேரடி மோதல் நேர்ந்திடும்

எனக்கு எனது

ஊர்த் தெருக்களில்,

பொதுத் தளங்களில் !

இரவில் என்முன் அமணமாய்

வருவார் !

பகலில் அழுதிடும்

பாவனைகள் !

ஆற்றோரப் பாறை இடுக்கில்

ஆட்டம் போடுவர் !

தலைக்கு மேல் கூச்சலிடுவர்

தாறுமாறாய் !

ஒளிந்து கொண்டு பூந்தோப்பில்

விளித்திடுவார்

பன்முறை என் பெயரை !

எந்நேரமும் ஒளி ஊட்டுவார்

என் வாழ்வுக்கு !

ஒட்டுப் புல்லாய்த் தொத்தி

உடலைத் தடவி

முத்தம் கொடுப்பார் அவர்

முரட்டுத் தனமாய் !

 

 

அரவமின்றி அவர்தம் இதயத்தில்

ஒரு துணுக்கு எடுத்து

உரிமையாய் எனக்களிப்பர் !

பேரளவு

ஏறிடும் என் மூப்பு வயது !

பரிவுடன் நளினமாய்க் கழியும்

இணையற்ற

மரண நாட்களே ! உமக்கு

வரவேற் பளிப்பேன் !

தன்னை மட்டு மின்றி, அதன்

பின் விளைவையும்

எடுத்துக் காட்டும்

ஒரு முன்வினை !

இருட்டு முணுமுணுப்பும்

பெருக்கிடும்

பல்வேறு விளைவுகளை

மற்றவை போல் !

இரவில் தான் கப்பலின்

கீழ்த்தள மூடியைத்

திறந்து நான்

பார்க்கிறேன் நீரில் மூழ்க்கிய

ஏற்பாடுகளை ! அவை

என்றும் விரிந்து கொண்டே போகும்

மேலும், விரியும்

அவை யாவும் செல்வது,

அப்பால் தான் ! அப்பால் தான்

எப்போதும் !

 

++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (July 30, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationகுமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருதுவணக்கம் அநிருத்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *