தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !

This entry is part 17 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

 

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 நீண்ட காலத்துக்கு முன்பு நான்

நினைத்த பாடல்

மீண்டும் என்  மனதுக்குள் வந்தது  !

எழுத வேண்டினேன் அதனை !

எங்கு நீ திரிந்தாய்  ?

எந்தப் புயல் தூக்கிச் சென்றது ?

எங்கிருந்து ஈர்த்தாய்

எல்லா வற்றையும் இழந்து

ஏகிச் சென்ற

ஒரு பூவின் நறுமணத்தை ?

இப்போது நம்பிக்கை இழந்து விட்ட

எந்த இனிய கானத்தை  

எதிர்பார்த்து நீ கேட்கிறாய் ?

 

தங்குமிடம் எல்லாம் இழந்து விட்ட

ஒருவனுக்கு

உன்னிசைக்  கானம்

ஒரு கூடு

கட்டி வைத்துள்ளது !

பிரிவுத் துயர் ஒருபோதும் தீராத  

ஒருவனுக்கு

பிணைப்புக் குரல் ஒன்றைக்  

கொடுப்பாய்   !

கண்ணீர்த்  துளிகள் அவனுக்கு

காய்ந்தவுடன்,

உன் கானத்தில் அவன் துயர்

பாடப் படும் !

கால வாகனம்

ஞாபகத்தில்  இல்லாது

கனவுகளில் நீ மிதப்பாய்

தொடுவானுக்கு அப்பால் !

 

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 21   1929 டிசம்பரில் தாகூர்  68 வயதினராய்  இருந்த

போது  எழுதப்பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 29, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபுது ரூபாய் நோட்டுகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 21
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    இனிமையும் அழகும் கொண்ட மொழிபெயர்ப்பு கவிஞர் சி .ஜெயபாரதன் அவர்களே..வாழ்த்துகள் நண்பரே!…டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *