வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)

This entry is part 9 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

எங்கும் கடவுளைக் காண்கிறேன் .. !

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

  

 

காதினில் கேட்கிறேன்,

கடவுளைப் பார்க்கிறேன், நான்

ஒவ்வோர் வடிவிலும் !

கடவுள் அற்ப மில்லை என

ஆயினும்

புரிந்து கொள்கிறேன் !

என்னை விடப் பெரிய அதிசயப் பிறவி

ஒருவன் இல்லை

என்பது கூடப் புரிவ தில்லை

எனக்கு !

இன்றை விட உன்னத மாக

இறைவனைக் காண

நான் எதற்கு

இச்சைப் பட வேண்டும் ?

கடவுளின் ஒரு தோற்றத்தை  

நாட் பொழுதின்

ஓவ்வொரு மணியிலும் காண்கிறேன்.

ஒவ்வொரு கணத்திலும்

காண்கிறேன்.

ஆடவர், பெண்டிர் முகத்திலே

கடவுளைக் காண்கிறேன் !

என்னுடைய முகத்திலும் தெரியுது

கண்ணாடி முன்பாக !

கடவுளின் மடல்களைப் படிக்கிறேன்

ஊர்த் தெருக்களில் தொங்கும்,

ஒவ்வொன்றும்

கடவுளின் கையொப்ப மோடு !

விலகிச் செல்கிறேன்

அந்த இடத்தில் அவற்றை எல்லாம்

அப்படியே விட்டுவிட்டு !

காரணம் அறிவேன் :

யாராவது வருவார் எனக்குப் பின்பு

கண்காணிக்க

நான் எங்கு போனாலும் !

மரணத்தைப் பற்றிக் கேட்டால்

நீ கசப்போடு அறிவது, உயிர்

நிலையாமை என்பது !

என்னைப்

பயமுறுத்த நீ முயல்வது

பயனற்ற தன்மை !

 

++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (August 20, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 21அயோத்தியின் பெருமை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *