வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. !

This entry is part 21 of 22 in the series 15 செப்டம்பர் 2013

 

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

கடந்த காலம், நிகழ் காலம்

இரண்டையும்

வெறுமை ஆக்கினேன், ஊற்றி

நிரப்பவும் செய்தேன்.

புறப்படு நீ அடுத்து வருமென்

எதிர்காலப் பக்க மடிப்பை

நிரப்பிட !

என்சொல் கேட்பவர் அங்கே

இருக்கிறார் !

என்னோ டென்ன அந்தரங்கம்

பகிர்ந்திடப் போகிறாய் ?

முகத்தை நோக்கு நான்

அந்திப் பொழுதின் பக்கத்தை

நுகர்ந்திடும் போது !

நேர்மை யாய்ப் பேசு,

யார் செவியிலும் அச்சொல்

ஏறாது !

 

நானே எனக்கு முரணாய்ப்

போவேனா ? 

அப்படியே நான் என்னிடம்

முரண் படுவதும் நியாயம் தான் !

என் இதயம் பெரிது;

பல்வேறு பழக்கம் சேமித்து  

உள்ளடக்கி வைத்துளேன்.

நெருங்கி இருப்பவை மீதென்

கருத்தைக் குவிப்பேன் !

வாசற்படியில் கால் வைத்து நான்

காந்திருக்கிறேன்.

 

அன்றையப் பணியை அன்றே

எவன் முடித்துளான் ?

இரவு உணவை முடிப்ப தெவன்

விரைவில் ?

தொடர்ந்து என்னுடன்

நடக்க

விழைவோன் யார் ?

நான் இறப்பதற்கு முன்னால்

நீ இவற்றை

எடுத்துக் கூறு வாயா ?

ஏற்கனவே தாமதம்

ஆன தென்று

நிரூபணம் செய்வாயா ?

 

++++++++++++++++++++++

தகவல்:

 1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
 2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
  Cowley [First 1855 Edition] [ 1986]
 3. Britannica Concise Encyclopedia [2003]
 4. Encyclopedia Britannica [1978]
 5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
 6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
  [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (September 12, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationசரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36தமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

 1. Avatar
  ஜி.ஜே.தமிழ்ச்செல்வி says:

  நானே எனக்கு முரணாய்ப்

  போவேனா ?

  அப்படியே நான் என்னிடம்

  முரண் படுவதும் நியாயம் தான் !

  என் இதயம் பெரிது;

  பல்வேறு பழக்கம் சேமித்து

  உள்ளடக்கி வைத்துளேன்.

  எதார்த்தத்தின் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *