வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34

This entry is part 9 of 26 in the series 22 செப்டம்பர் 2013

(Song of Myself)

மதி மயக்கம் அடைகிறேன்.. !

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

  

 

ஒரு சிறிது கூட நான்

பண்படுத்தப் பட்டவன் இல்லை.

என்னை வேறோர் நாகரீ கத்துக்கு

மாற்றி விட இயலாது !

உலகக் கூரைகள் மேல்

எனது

அநாகரீகப் பாய்ச்சல்

அரவம் கேட்கிறது !

இரவின் விளிம்பு வழுக்கி

நிறுத்தி வைத்துள்ள தென்னை.

தூண்டி விடும் என்னை

அந்திவேளைத்

சூழ்வெளித் தூசியில்

மூழ்கிட !

காற்று போல் பிரிகிறேன்

தலை தெறிக்க ஓடும்

பரிதியின்

தளைப் பூட்டை அசைக்கிறேன்.

என் சதைகளை

சுழற்சி நடனங்களில்  

வீணாக்குவேன்.

மதி மயக்கம் அடைகிறேன்

மினுமினுக்கும்

உடைகளைக் கண்டு.

நான் விரும்பி

புல்லின் இலைகள் விளைந்த

மண்ணுக்குள்

ஒளிந்து கொள்வேன்

பொறுப்புடன் !

என்னைத் தேடினால் நான்

இருப்பேன்

உன் பூட்ஸ் கால்

தோல் அடியில் !

 

 

என்னை யாரென்று நீவீர்

அறிய மாட்டீர் !

என்ன மொழிகிறேன் என்று

புரியா துமக்கு !

ஆயினும்

உடல் நலமுடன்

உதவி செய்வேன் உமக்கு !

உமது குருதிக் கோர்

வடிகட்டி நான் !

நாரிழையும் நான்தான்.

ஓரிடத்தில்

நானில்லை ஆயின்

வேறிடத்தில்

தேடு என்னை !

எங்காவது

உனக்குக் காத்து நிற்பேன்.

 

++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (September 19, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationமுக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *