மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
இந்தச் சூறாவளிக் காற்றின்
திசை வழியே
பூச்செடி மொட்டுக்கள் யாவும்
துண்டிக்கப் பட்டன !
அவற்றை எல்லாம் சேகரித்துச்
சமர்ப்பித்தேன்,
உன் திருப் பாதங்களில் !
மென்மை யான உள்ளங் கைகளில்
அள்ளிக் கொள் அவற்றை !
ஆமாம் நீ
அள்ளிக் கொள் !
நான் சென்ற பிறகு,
அவை யாவும்
மலர்ந்து விரியும் உனது
மடியிலே !
இனிய சோகத்துடன்
மாலை பின்னிடும்
உனது விரல்கள்
என்னை நினைவிலே
வைத்துக் கொள்ளும் !
தூங்காத குயில் ஒன்று
வீணாய்
ஏங்கி அழுதிடும்,
உணர்ச்சி பொங்கும் இரவில் !
ஜோடிப் பறவை
நெருங்கி அந்தரங்க மாய்
முணுமுணுத்து
மோக இச்சையுடன் முயங்கும்,
கிருஷ்ணனின்
திருவிளை யாட்டுப் பௌர்ணமி
தினத்தில்,
பொன்னொளியில்
மிதந்து கொண்டு !
இந்தக் காட்சிக் குறிப்புகள்
அடுத்த நாள் ஆரத்திலும்
பின்னப் பட்டுக் கிடக்கும்,
களைப்புற்ற உனது
பிற்பகற் பொழுதும் !
++++++++++++++++++++++++++++++
பாட்டு : 223 1938 ஆண்டு மார்ச் 12 இல் தாகூர் 77 வயதினராய் இருந்த போது எழுதப் பட்டது.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 22 , 2013
http://jayabarathan.wordpress.com/ss.
- மரபுப்பாடல்முதல் சிறுகதைவரை வளவ.துரையனுடன் ஒரு நேர்காணல்- பாவண்ணன்
- காற்றுவெளி மின்னிதழ் அறிவிப்பு
- மாவின் அளிகுரல்
- நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?
- “Thamilar Sangamam 2013
- சித்தன்னவாசல்
- துளிப்பாக்கள்
- மது விலக்கு தேவையா ? சாத்தியமா?
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 46 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் – வசனம்
- ரகளபுரம்
- ப மதியழகன் சிறு கவிதைகள்
- அழித்தது யார் ?
- வணக்கம் சென்னை
- தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி
- புகழ் பெற்ற ஏழைகள் 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏழை
- குழியில் விழுந்த யானை
- தீபாவளி நினைவு
- தூக்கமின்மை
- மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1
- தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !
- ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி
- கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 23
- சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)
- திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்