தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

This entry is part 15 of 34 in the series 10 நவம்பர் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 88

நான் பாடும் கானம் .. !

 image (2)

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

நான் பாடும் அந்தக் கானம்

யாரை நோக்கியோ  என்று

நான் அறியேன் !

புயல் காற்று ஓயாமல்

புலம் பெயர்ந்த பறவை போல்

உள்ளத்தை நோக்கி

ஓடி வரும் போது,

உருக்க மான அந்த

இன்னிசை

எங்கே மிதக்கிற  தென்று

நான் அறியேன் !

 

உன் முகத்தை பார்க்கும் போது

முன்பு கண்ட ஓர் கனவு

திரும்பி

புதிய காலத்துக்குப் புத்தாடை யோடு

உன்னுள்ளே  எழுந்ததா  என்று

நான் வியக்கிறேன் !

இப்படிச்  சில சமயம் தெரிகிறது :

என் வாழ்வில் இதுவரை

இன்னும் குறுக்கிடாத ஒருத்தி,

பயணத்துக்குப்

பாடல் படகைத் தேடிக் கொண்டு

என் கடற்கரை  அருகில்

வந்து விட்டாளா என்று

நான் அறியேன் !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 231   1939  ஆண்டு மார்ச் 12 இல்  தாகூர்  78 வயதினராய்  இருந்த போது எழுதப் பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  November  5 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationசீதாயணம் படக்கதை -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]90களின் பின் அந்தி –
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

    தாகூர் கவிதையில் எழுத்துரு போல்டு வடிவில் வந்து விட்டன. தயவு செய்து மாற்றுங்கள்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *