வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !

This entry is part 19 of 26 in the series 8 டிசம்பர் 2013

 walwhit

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

 

ஏலம் போடப் படுகிறது

ஓரிளம் பெண்ணின் உடம்பு !

அவள் உடல் மட்டுமா ?

இல்லை,

தன்னினம் பெருக்கும்

தாய்க் குலத்தின் தாய் உடம்புகள் !

ஆண், பெண் இருவரையும்

தாய் பெற்று வளர்ப்பவள்;

தாயிக்கு ஆண் துணையை

அளிப்பவளும் தாயே !

எப்போ தாவது

நீ ஓர் மாதின் உடம்பை

நேசித் துள்ளயா ?

எப்போ தாவது

நீ ஓர் ஆணின் உடம்பை

நேசித் துள்ளாயா ?

இவ்வை யத்திலே

இரண்டு இச்சையும் ஒன்றுதான்,

எல்லாருக்கும் ஒன்று தான்

எல்லாத் தேசங்களுக்கும்

ஒன்றுதான்

என்பதை நீ அறிவாயா ?

 

 

தூய தெனக் கூறப் போனால்

மனித உடம்பு தான்

புனித மானது !

மனித உன்னதம்,

மனித உழைப்பின் வேர்வை

கறை படாத

தனித்த மானிடச் சின்னம் !

மனிதனோ, மாதோ

தூய வலுவான நரம்பு நார்

நிமிர்த்திய அவர்

தோற்ற வனப்புக்கு

ஏற்ற நிகரில்லை, அவரது

எழில் முக அமைப்பு !

தன் ஊனுயிர் உடம்புக்கே

ஈனம்

உண்டாக்கும் ஓர் மூடனைக்

கண்டுள்ளாயா ?

அப்படிச் செய்யும்

ஓர் மூடப் பெண்ணையும்

பார்த்துள்ளாயா ?

எவர் தம்முடலை மூடுவ தில்லையோ

அவர் மூடுவ தில்லை

பிறர் உடம்பையும் !

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [Dec ember 3, 2012]

 

Series Navigationதிண்ணையின் இலக்கியத்தடம் -12தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *