புனைக்கதை மன்னன் ரோஆல்ட் டாஹ்ல் { ROALD DAHL}- சிறகு இரவிச்சந்திரன்
இதுவரை கேள்விப்படாத, ஆசிரியரின் பெயரில் வெளிவந்த, 20 புனைக்கதைகள் கொண்ட பாக்கெட் பதிப்பு எனக்குக் கிடைத்தது. ஜெ•ப்ரி ஆர்ச்சர், ஹிட்ச்காக் என பயணித்த என் ஆங்கில வாசிப்பு, கொஞ்சம் சந்தேகத்தோடு இதற்குள் நுழைந்தது. ஆனால் நடையின் சரளமும், பாசாங்கில்லாத விவரிப்பும் என்னைக் கட்டிப்போட்டது. ஒவ்வொன்றாக, படிக்க படிக்க, தமிழுக்கு தருவதாக ஒரு எண்ணம் வலுப்பெற்றதன் வடிவமே இந்த முயற்சி.
ரொஆல்ட் நார்விஜியன் பெற்றோர்களுக்கு பிறந்தவர். படித்து முடித்தபின், நைரோபியில் ராயல் ஏர் •போர்ஸில் சேர்ந்து, போரில், லிப்யாவில் தீவிர காயமடைந்தார். வாஷிங்டனில் 1942ல் விமான அலுவலக பணியாளராக பொறுப்பேற்ற காலத்தில், கதைகளை அவர் எழுதத் தொடங்கினார். முதல் பனிரெண்டு கதைகள் போரை அடிநாதமாகக் கொண்டவை. அவருடைய புனைக்கதைகளைப் போலவே, அவரது சிறுவர் கதைகளும் பிரபலம். நவம்பர் 1990ல் அவர் இறந்து போனார். ஆனாலும் அவரது மூச்சு இன்னமும் அவர் கதைகளின் ஊடே சுவாசித்துக் கொண்டிருக்கிறது.
மேடம் ரோஸட் ( 1945)
ஸ்டாக் மெல்ல வருடும் சுடுநீர் தொட்டியில் மல்லாக்க கிடந்தான். அவன் கையில் ஒரு ஸ்காட்ச் கோப்பை இருந்தது.
“ போதும் எழுந்திரு.. ஒரு மணிநேரத்திற்கு மேல் அதில் கிடக்கிறாய்” ஸ்ட•பி உடலில் ஆடைகள் ஏதுமின்றி படுக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவன் தன் கோப்பையிலிருந்து மெதுவாக குடித்துக் கொண்டிருந்தான். அவன் தன் குளியலுக்காக காத்திருந்தான்.
ஸ்டாக் மெல்லிய பெருமூச்சு ஒன்றை விட்டான்.” சரி.. நீரை வெளியே விடுகிறேன்” கால்களாலேயே நீர் வெளியேறும் குழாயின் அடைப்பானை நீக்கினான். எழுந்திருக்க மனமில்லாமல் நீர் வெளியேறும்வரை தொட்டியிலேயே கிடந்தான்.
“ பாதி பாலைவனத்தை நான் சுமந்து வந்திருக்கிறேன் “ வெளியேறும் கரிய நீரைப் பார்த்தபடி சொன்னான் ஸ்டாக்.
“ தொட்டியை சுத்தப்படுத்து.. நான் குளித்து ஐந்து மாதங்களாகிறது “ – ஸ்ட•பி.
லிபியாவில் இத்தாலியர்களுடன் சண்டை போட்டு விட்டு, பாலைவனக் கூடாரங்களில் பல் தேய்க்க பயன்படுத்திய தண்ணீரிலேயே சவரம், முகம் கழுவுதல் எனப் போன நாட்களில் இருந்து விடுதலையாகி, அவர்கள் இருவரும் விடுப்பில் வந்திருக்கிறார்கள்.
ஸ்டாக் படுக்கையில் ஒரு துவாலையை இடுப்பில் போட்டுக்கொண்டு கிடந்தான்.
“ என்ன செய்யப் போகிறோம் ஸ்ட•பி?”
“ பெண்கள்!.. யாரையாவது பிடித்து இரவு உணவுக்கு அழைக்க வேண்டும்”
மதிய நேரம். இன்னமும் அதற்கு நேரம் இருந்தது. அதுவரை..?
“ அதுவரை ஷாப்பிங் போகலாம்.. உனக்கு ஏதாவது பெண்களைத் தெரியுமா?”
ஸ்ட•பியும் ஸ்டாக்கும் காக்கி பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். வழியில் போய்க் கொண்டிருந்த ஒரு குதிரை வண்டியை நிறுத்தினார்கள். ஸ்டாக் தன் குளிர்க்கண்ணாடியைப் போட்டுக்கொண்டான்.
“ எனக்கும் ஒரு கூலிங்க்ளாஸ் வேண்டும் “ அந்த வணிக வளாகத்தில் ஒரு கண்ணாடி வாங்கிக் கொண்டான் ஸ்ட•பி. வெளியே வந்தவுடன் அவன் கேட்டான் ” அந்தக் கண்ணாடி விற்ற பெண்ணைப் பார்த்தாயா? சூப்பராக இருக்கிறாள்.. இரவு அவளுடன் விருந்து உண்ண வேண்டும்.. வருவாளா?”
“ வரலாம்.. எதற்கும் மேடம் ரோஸட்டிற்கு போன் போட்டுப்பாரேன்”
அவர்கள் டிம் பாரைக் கடந்து கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்து, இரண்டு விஸ்கி வாங்கிக் கொண்டு, மூலை மேசையில் உட்கார்ந்தார்கள்.
“ யார் அந்த மேடம் ரோஸட்?”
“ அருமையான பெண்மணி “
“ அப்புறம்?”
“ அவள் ஒரு மோசமான வேசி “
“ மேலே சொல்லு “
“ மேடம் ரோஸட் ஒரு பிராத்தல் நடத்துகிறாள். உலகிலேயே மிகப் பெரியது. கெய்ரோவில் உனக்கு எந்தப் பெண் வேண்டுமென்றாலும் அவளால் தர முடியும்”
“ புண்ணாக்கு”
“ நிஜம்.. அவளுக்கு ஒரு போன் போடு.. அந்தப் பெண்ணை எங்கே பார்த்தாய்? எந்தக் கடை? அவளுடைய உருவ வர்ணணையுடன் சொல்லு.. ரோஸட் அவளைக் கொண்டு வருவாள்”
ஸ்ட•பி, ஸ்டாக்கை நம்பவில்லை. ஆனாலும் ரோஸட்டைத் தேடுவது என்று முடிவு செய்தான். டிம்ம்¢டமிருந்து தொலைபேச்¢ புத்தகத்தை வாங்கிக் கொண்டான். அட! மேடம் ரோஸட்! முகவரி.. தொலைபேசி எண்..
“ கெடைச்சுதா? போ அவளுக்கு போன் போடு.. உன் பெயர் கர்னல் ஹிக்கின்ஸ் என்று சொல்லு.. அவளுக்கு பைலட்டுகளைப் பிடிக்காது.. நீ பார்த்த பெண்ணை இரவு விருந்துக்கு அழைத்துப் போக விருப்பம் என்று சொல்லு”
“ அலோ”
“ மேடம் ரோஸட்? நான் கர்னல் ஹிக்கின்ஸ்..”
“ அந்தப் பெண்ணைப் பற்றிய வ்¢வரம் சொல்லு.. பெயர் தெரியுமா? எப்படி இருந்தாள்? எங்கே பார்த்தாய்? என்ன உடை அணிந்திருந்தாள்” ரோஸட் குரல்¢ல் கடுப்பும் எரிச்சலும் தொனித்தது. இவள் விஷயமறிந்தவள்!
“ அவளது வெள்ளை உடையில் சிவப்பு பூக்கள் இருந்தன.. ஆங்! அவள் ஒரு ச்¢கப்பு பெல்ட் அணிந்திருந்தாள்..”
“ கொஞ்சம் செலவாகும்.. ஆறிலிருந்து பத்து பவுண்டுகள் வரை.. பரவாயில்லையா? எங்கே தங்கியிருக்கிறாய் கர்னல்?”
“ மெட்ரோபாலிட்டன் ஓட்டல்”
“ திரும்ப உன்னை அழைக்கிறேன்”
விஸ்கி கோப்பையை கீழே வைத்துவிட்டு, ஸ்டாக் அவன் பக்கம் த்¢ரும்பினான். புருவங்களை உயர்த்தினான்.
“ பத்து பவுண்டு ஆகும் என்கிறாள்..காரியத்தை முடிப்பாளா?”
“ அதெல்லாம் செய்வாள் அந்தத் பலே வேசி! யாராவது மாமா பையனை உடனே அந்தப் பெண்ணிடம் அனுப்புவாள். அவளுக்குத் தெரிந்தவளாயிருந்தால் காரியம் சுலபம். இல்லையென்றால் அவளிடம் அவன் பேரம் பெசுவான். மசியவில்லை என்றால் விலையை அதிகமாக்குவான். ஒரு கட்டத்தில் அவளுக்கும் ஆசை வரும். ஒப்புக்கொள்வாள். ரோஸட் அதை மூன்று மடங்காக்கி உன்னிடம் சொல்வாள். அந்தப் பெண்ணுக்கு பேசிய தொகையில் பத்து வ்¢ழுக்காடுதான் க்¢டைக்கும். மீதி எல்லாம் ரோஸட்டுக்கு.. ஏனென்றால் அவள் ஒரு மோசமான வேசி”
“ அதற்கப்புறம் அந்தப் பெண் ரோஸட்டின் கும்பலில் சேர்க்கப்படுவாள், அடுத்த முறை ரோஸட் கூப்பிடும்போது அவளால் மறுக்க முடியாது.. மறுத்தால்.. “ பெண்ணே உன் முதலாளியிடம் பேசட்டுமா? நீ அந்தக் கடையை உன் வேசித்தனத்திற்கு அலுவலகமாக மாற்றிக் கொண்டிருக்கிறாய் என்று சொல்லட்டுமா? அப்புறம் உன் வேலை போகும்! பரவாயில்லையா?” என்று மிரட்டுவாள். ஏனென்றால் அவள் ஒரு கழிசடை.. வேசி”
வெளியே வந்தார்கள். மெட்ரோபாலிட்டன் ஓட்டலை நோக்கி நடந்தார்கள்.
ஓட்டலுக்குள் நுழையும்போது ஸ்டாக் “ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?” என்றான்.
“ ஒன்பது பவுண்ட்”
“ பத்தாது.. ரோஸட் உன்னைக் கசக்கி பிழ்¢ந்து வ்¢டுவாள்.. என்ன பண்ணப் போகிறாய்?”
“ ஒன்றும் செய்யப் போவதில்லை.. மேடம் ரோஸட் போன் பண்ணும்போது பார்த்துக் கொள்ளலாம்” வரவேற்பு மேசையில் இருந்தவனிடம் கர்னல் ஹிக்கின்ஸ¤க்கு போன் வந்தால் தங்கள் அறைக்கு தரச்சொல்லிவிட்டு மேலே ஏறினார்கள்.
உடைமாற்றி ஆளுக்கு ஒரு கோப்பை மதுவுடன் அமர்ந்து கொண்டார்கள்.
“ அவளுக்கு போன் போடு. கர்னல் ஹிக்கின்ஸ் அவசரமாக ஊரை விட்டு போய் விட்டான் என்று சொல்லு”
“ அவளுக்கு என் குரல் தெரியும்.. நீதான் பேச வேண்டும்”
தொலைபேசியை வைத்து விட்டு ஸ்டாக் சொன்னான்.. “ என்னமாய் கத்துகிறாள்.. ஹிக்கின்ஸ் எந்த ரெஜிமெண்ட் என்று கேட்கிறாள். பணத்தை வசூல் பண்ணாமல் விட மாட்டேன் என்று அலறுகிறாள்”
மாலை ஆறு மணிக்கு வெளியே கிளம்பினார்கள். வழியில் வில்லியம்ஸ் என்கிற ராணுவ வீரனை பார்த்தார்கள். அவனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். இரவு வளர்ந்து கொண்டேயிருந்தது. அவர்கள் ஏகமாக குடித்திருந்தார்கள்.
“ நாம் இப்போ எங்கே போகணும்னு எனக்குத் தெரியும் “ – ஸ்ட•பி
“ எங்கே?”
“ மேடம் ரோஸட்”
“ யாரது ?” – வில்லியம்
ஆதியிலிருந்து கதையைச் சொன்னார்கள். வில்லியம் மலைத்துப் போனான்.
“ வாங்க.. போய் அந்தப் பெண்களைக் காப்பாற்றுவோம். அவர்கள் அதனால் சந்தோஷமாக ஆகி விடுவார்களா?”
“ நிச்சயமாக.. ஒரு கட்டாயத்தின் பேரில்தான் அவர்கள் அவளிடம் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.. மற்றபடி அவர்களுக்கு வேலையும் சம்பளமும் உண்டு. ரோஸட்டை நம்பி அவர்கள் இல்லை.. சந்தர்ப்பம் கிடைத்தால் அவளது பல்லை உடைக்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்”
“ ஹ¤ரே! அந்த சந்தர்ப்பத்தை அவர்களுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுப்போம்” ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டார்கள். ஒரு தெருமுனையில் அவர்கள் இறங்கிக் கொண்டார்கள். வண்டிக்காரன் வீட்டைக் காண்பித்துவிட்டு விலகிக் கொண்டான். மூன்றாவது தளத்தில், படிகள் முடியும் இடத்தில் ஒரு கதவு இருந்தது. காலிங்பெல்லை அடித்தவுடன் ஒரு பெண் குரல் ‘யாரது’ என்றது.
“ மேடம் ரோஸட் இருக்காங்களா.. நாங்க ராணுவ அதிகாரிங்க.. விமானப்படை”
கதவு திறந்தது. ரோஸட் அசிங்கமாக, குள்ளமாக, குண்டாக இருந்தாள். அவள் தலைமுடி தாறுமாறாக கலைந்திருந்தது.அவள் மூக்கு அகலமாக இருந்தது. மீன் போன்ற சின்ன உதடுகளின் மேல் லேசாக மீசை அரும்பியிருந்தது. தொளதொளவென்றிருந்த ஒரு கருப்பு கவுனில் அவள் கேவலமாக இருந்தாள்.
ஒரு நீளமான வராந்தாவின் கோடியில் இருந்தது அவளது அலுவலக அறை. ஐம்பது கஜங்கள் நீளமும் நான்கைந்து கஜங்கள் அகலமும் கொண்ட அந்த வழியில் இருப் பக்கமும் ஏழெட்டு அறைகள் இருந்தன. ஒரு அறையிலிருந்து பல பெண் குரல்கள் கேட்டன. பெண்களின் உடை மாற்றும் அறையாக அது இருக்கக் கூடும் என்று ஸ்டாக் நினைத்துக் கொண்டான்.
கடைசியாக இருக்கும் அறைக்கு போகும் வழியில் சிகப்பு கம்பளம் விரித்திருந்து. ரோஸட்டைத் தொடர்ந்து அவர்கள் போய்க் கொண்டிருக்குபோதே பெண்களின் அறையிலிருந்து ஒரு அலறல் கேட்டது.
“ நீங்கள் அந்த அறைக்குள் போங்கள்.. நான் இதோ வருகிறேன்.. “ என்று சொல்லிய படி ரோஸட் சட்டென்று திரும்பி அந்த அறைக்கு போனாள். அவர்கள் அங்கேயே நின்றபடி கவனித்தார்கள். ரோஸட் அந்த அறைக்குப் போவதற்குள், அதிலிருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் முடி கலைந்திருந்தது. மிகவும் மலிவான ஒரு பச்சை நிற, மாலை நேர உடையை அணிந்திருந்தாள். ரோஸட்டிற்கும் அந்த பெண்ணிற்கும் ஏதோ வாக்குவாதம் நடந்தது. முடிவில் ரோஸட் தன் வலது கையால் பளார் என்று அந்தப் பெண்ணின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். மீண்டும் மீண்டும் அவளை அறைந்து கொண்டே இருந்தாள். அந்தப் பெண் தன் இரு கைகளால் கன்னங்களை மூடிக் கொண்டு அழுதாள். அறைக் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளி விட்டாள் மேடம் ரோஸட்.
“ சின்னப் பிரச்சினை.. சரியாயிடிச்சு.. வாங்க உள்ளே போலாம்”
அந்த அறை விசாலமாக இருந்தது. அறை முழுவதும் சிகப்பு கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. ஓரத்தில் ஒரு சிறிய மேசை இருந்தது. நான்கைந்து நாற்காலிகள். இரண்டு மூன்று சோபாக்கள்.. ரோஸட் மேசைக்கு பின்னால் போய் உட்கார்ந்து கொண்டாள்.
ஸ்டாக் பவ்யமாக மரியாதையுடன் பேச ஆரம்பித்தான். ஸ்ட•பிக்குத் தெரியும்.. அவன் ரொம்ப மரியாதையாக பேசுகிறான் என்றால், அதிக சீற்றத்துடன் இருக்கிறான் என்று.
“ மேடம் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நாளுக்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம்.”
“ ஸ்டாக் நீங்கள் ஒரு அற்புதமான பெண் என்கிறான்” –வில்லியம்
“ அவனே நீ ஒரு மோசமான வேசி என்றும் சொல்கிறான்” – ஸ்ட•பி
சட்டென்று ரோஸட் தன் இருக்கையிலிருந்து குதித்து எழுந்தாள். “ வெளியே போ” கோபத்துடன் அவள் கத்தினாள். பரபரவென்று அறைக் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு முன்னால் ஸ்டாக் அங்கே இருந்தான். ஸ்ட•பியும் வில்லியமும் பின்னாலிருந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். வெட்டப் படப்போகும் பன்றியைப் போல அவள் அலற ஆரம்பித்தாள். அவளை அவர்கள் ஒரு சோபாவில் உட்கார வைத்தார்கள். தொலைபேசியின் ஒயரை பட்டென்று துண்டித்தான் ஸ்டாக். அறைக் கதவைத் திறந்து வெளியே வந்து, மூவரும் அதைப் பூட்டினார்கள். பூட்டிய அறைக்குள்ளிருந்து ரோஸட் அலற ஆரம்பித்தாள். கதவைப் பலமாக தாக்கிக் கொண்டிருந்தாள்.
பெண்கள் இருந்த அறைக்கு அவர்கள் போனார்கள். எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகங்களை இறுக்கமாக வைத்துக் கொண்டார்கள். கதவைத் திறந்த போது அதில் பத்து பனிரெண்டு பெண்கள் இருப்பது தெரிந்தது. ஒரே நேரத்தில் அவர்கள் பேச்சு நின்றது. எல்லோர் விழிகளும் ஸ்டாக்கை நோக்கித் திரும்பின.
“ நாங்க ராணுவ போலீஸ்.. உங்களைத் தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும்.. மேடம் ரோஸட்டிடம் ஏற்கனவே பேசி விட்டேன்.. நீங்கள் எல்லோரும் கொஞ்சம் எங்களுடன் வர வேண்டும். உங்கள் பெயர் மற்றும் விவரஙகளைப் பதிவு செய்து விட்டு அனுப்பி விடுகிறோம்.”
பல்வேறு நிலைகளில் அந்தப் பெண்கள் இருந்தார்கள். காலில் சாக்ஸ் அணிந்து கொண்டிருந்த ஒரு பெண் அதே நிலையில் அப்படியே உறைந்து போயிருந்தாள். முடியைக் கோதிக் கொண்டிருந்த மற்றொரு பெண் திரும்பி சிலை போல நின்றிருந்தாள். உதட்டுசாயக் குப்பியை பிடித்தபடி ஒரு பெண் திறந்த வாயோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ தயவு செய்து உடை மாற்றிக் கொள்ளுங்கள்.. ஒரு விஷயம்.. உங்கள் பெயர்கள் என்னிடம் இருக்கிறது.. அதனால் ஓட முயற்சிக்க வேண்டாம்..பயப்படாதீர்கள்.. இது வெறும் சடங்குதான்.. ஆபத்து ஏதுமில்லை”
மொத்தம் பதினான்கு பெண்கள் இருந்தார்கள். வில்லியம் முதலில் போனான். பெண்கள் அவனைத் தொடர்ந்தார்கள். ஸ்டாக்கும் ஸ்ட•பியும் பின்னால் வந்தார்கள். யாரும் பேசவில்லை. கறுப்பு கூந்தல் அழகி மட்டும் கொஞ்சம் தைரியமானவளாக இருந்தாள். “ சார் இதுக்கப்புறம் என்ன சார்” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். தெருவில் இறங்கி ஒரு ஐம்பது கஜங்கள் நடந்தார்கள். மூன்று ஆண்கள் பதினான்கு அழகிகள் கொண்ட அந்த அணிவகுப்பு நிலவொளியில் அட்டகாசமான காட்சியாக இருந்தது. தெருவின் திருப்பத்தில் ஒரு மதுக்கூடம் இருந்தது. சட்டென்று ஸ்டாக் நின்றான். அவனோடு அந்த வரிசையும் நின்றது.
“ பெண்களே.. உங்களை அழைத்து வந்தது என் கடமை என்றாலும், அதற்காக நாகரீகத்தை ராணுவ வீரன் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டான்.. எங்களோடு நீங்கள் ஒரு கோப்பை பீர் அருந்த வேண்டும் “
சட்டென்று அந்தப் பெண்களுக்கு எல்லாம் புரிந்தது. சிரிப்பும் கேலியும் அவர்களிடம் இருந்து வெளிவர ஆரம்பித்தது. கறுப்புக் கூந்தலழகி, தன் கைகளை ஸ்டாக்கின் கைகளோடு கோர்த்துக் கொண்டாள். உள்ளே நுழைந்தார்கள். வில்லியமும் ஸ்ட•பியும் மூன்று வட்ட மேசைகளை ஒன்றாகப் போட்டார்கள். எல்லோரும் உட்கார்ந்து கொண்டார்கள்.
“ பதினேழு பீர் “ என்றான் ஸ்டாக். எல்லோரும் பீர் குடித்துக் கொண்டிருக்கும்போது ஸ்டாக் ஒரு வெள்ளைக் காகிதமும் பென்சிலும் கேட்டான். பெண்களை ஒவ்வொருவராக அதில் தன் பெயரையும் தொலைபேச்¢ எண்ணையும் எழுதச் சொன்னான்.
“ என்னவொரு பைத்தியக்காரத்தனம் “ என்றபடி கறுப்புக் கூந்தல்காரி முதலில் தன் விவரங்களை எழுதினாள். பதினான்கு பெயர்கள் கொண்ட அந்தக் காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு ஸ்டாக் சொன்னான் “ இது ராணுவ அறிவிப்பு பலகைக்குப் போகும் “ எல்லோரும் கைத்தட்டினார்கள்.
ஸ்டாக் சொன்னான்.. “ பெண்களே நாம் கிளம்பும் நேரம் வந்து விட்டது.. ஆளுக்கு ஐந்து பெண்களை கூட்டிக் கொள்வோம். மூன்று வண்டிகள் அமர்த்திக் கொள்வோம். எனக்கு ஐந்து.. ஸ்ட•பி உனக்கு ஐந்து.. வில்லியம் உனக்கு நான்கு.. அவரவர் வீட்டில் இறக்கி வ்¢ட வேண்டும்.. யாரைக் கடைசியில் இறக்கி விட வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்”
அந்த கரிய முடிக்கார்¢ ஸ்டாக் அருகில் வந்தாள். “ நான் உங்கள் வண்டியில் தானே? என்னை கடைசியில் இறக்கி வ்¢டுவீர்களா?” வண்டியில் ஏறி அவன் அருகில் உட்கார்ந்து கொண்டாள். அவன் கைகளோடு தன் கைகளை பிணைத்துக் கொண்டாள்.
“ சரியான பித்துக்குளி நீங்கள் “
ஸ்டாக் பாடல் ஒன்றை மெதுவாக பாட ஆரம்பித்தான். வண்டி இருட்டுத் தெருக்களுக்குள் ‘கட கட ‘ என ஓட ஆரம்பித்தது.
0
- மருமகளின் மர்மம் 8
- சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.
- இயற்கையைக் காப்போம்
- தேவயானியும் தமிழக மீனவனும்…
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)
- பாசத்தின் விலை
- அதிகாரி
- மேடம் ரோஸட் ( 1945)
- அன்பு மகளுக்கு..
- தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .
- கடற்கரைச் சிற்பங்கள்
- திண்ணையின் இலக்கியத் தடம்-14
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!
- மறந்து போன நடிகை
- சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு
- காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA
- சொந்தங்களும் உறவுகளும்
- ஜாக்கி சான் 21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்
- புகழ் பெற்ற ஏழைகள் 38.கருப்புக் காந்தி எனப் போற்றப்பட்ட ஏழை…
- சீதாயணம் நாடகம் -12 படக்கதை -12
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி
- “ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை
- குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்
- நீங்காத நினைவுகள் – 26 –