மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014
                                         தைராய்டு சுரப்பியை தமிழில் கேடயச் சுரப்பி என்று மொழிபெயர்த்துள்ளனர். நமது உடலிலுள்ள நாளமற்ற சுரப்பிகளில் இது மிகவும் முக்கியமானது. இது கழுத்தின் இரு பகுதிகளிலும் ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்தது. சாதாரணமாக பார்த்தால் இது தெரியாது. வீக்கமுற்றால் நன்கு தெரியும்.

இதிலிருந்துதான் தைராக்சின் ( Thyroxin ) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நமது செல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தன்மைமிக்கது. அதை Metabolism அல்லது வளர்சிதை மாற்றம் என்று கூறுகிறோம். ஆகவே உடலின் செல்கள் சக்தியை பயன்படுத்தும் விதத்தை கட்டுப்படுத்துவது இந்த தைராக்சின்.

இந்த தைராக்சின் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரந்தால், அதையே ஹைப்பர்தைராய்டிசம் ( Hyperthyroidism ) என்கிறோம். இதை மிகைக்கேடயச் சுரப்பி நோய் என்று அழைக்கிறோம்.

ஹைப்பர்தைராய்டிசம் என் ஏற்படுகிறது?

* உணவில் அதிகமான ஐயோடின் ( Iodine )

* தையாய்டு சுரப்பி அழற்சி

* புற்று நோய் இல்லாத வளர்ச்சி

* கிரேவ்ஸ் வியாதி ( Graves Disease )

       அறிகுறிகள்

* களைப்பு

* கவனக் குறைவு

* அடிக்கடி மலம் கழித்தல்

* தைராய்டு சுரப்பி வீக்கம்

* வெப்பம் தாங்க முடியாத நிலை

* அதிகமான பசி

* அதிகமான வியர்வை

* பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறு

* ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி

* அமைதியின்மை

* பரபரப்பு

* எடை குறைதல்

* ஈரமான தோல்

* தலை முடி உதிர்தல்

* கைகள் நடுக்கம்

* அதிகமான அரிப்பு

* நெஞ்சு படபடப்பு

* வேகமான நாடித்துடிப்பு

* பிதுங்கிய கண்கள்

* தூக்கமின்மை

* உயர் இரத்த அழுத்தம்

          பரிசோதனைகள்

சில இரத்தப் பரிசோதனைகள் கட்டாயம் செய்தாகவேண்டும். அவை TSH , T4, T3, Serum Cholestrol , blood, Sugar , Radio- Active Iodine Uptake போன்றவற்றின் அளவை நிர்ணயம் செய்து நோய் உள்ளதை நிச்சயப்படுத்துகின்றன.

      சிகிச்சை முறைகள்

* தைராய்டு எதிர்ப்பு மருந்துகள்- Anti – Thyroid Medication

* கதிர்வீச்சு மருத்துவம் – Radiation Therapy

* அறுவை சிகிச்சை – Surgery

உங்களைப் பரிசோதனை செய்யும் மருத்துவர் உங்களுக்கு எத்தகைய சிகிச்சை முறை தேவை என்பதைக் கூறுவார்.

தைராய்டு வீக்கம் ஒரு வேளை புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் Fine Needle Aspiration Biopsy எனும் பரிசோதனை செய்து பார்க்கலாம். வீக்கத்தில் சிறு ஊசி மூலம் திசு எடுத்து புற்று நோய் செல் உள்ளதா என்று பார்க்கும் பரிசோதனை இதுவாகும்.

தைராய்டு வீக்கத்தில் இது போன்ற கோளாறு இருந்து சரிவர கவனிக்கப்படாவிட்டால் Thyroid Crisis என்ற ஆபத்தான தைராய்டு நெருக்கடி உண்டாகலாம். நோய்த்தொற்று, காய்ச்சல் , மன உளைச்சல் போன்றவை இதை உண்டாக்கலாம். இது உண்டானால் துரித இதயத் துடிப்பு, இருதய செயலிழப்பு, மரணம் நேரலாம்.

தைராய்டு வீக்கம் உள்ளவர்கள் இதுபோன்று ஆபத்து வராமலிருக்க, மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதே நல்லது!

( முடிந்தது )

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *