மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
வார்த்தைகள் என்னிட மில்லை
ஆசைப் பட மட்டும் நான்
அறிந்தவன் !
உறைந்து போன இதயத்தை
முறையாக விரிவாக்க
வேண்டும்,
ஒளி படாமல் போன
கரு நிலவின்
ஓர் இரவுப் பொழுது நான் !
கண்கள் போல்
எண்ணற்ற விண்மீன்கள் வானில்
மின்னிடும் !
முடிவிலா நீண்ட பாதையை
நோக்குவேன்
வீணான நம்பிக்கையில் !
ஆழ்ந்த அமைதியில்
அலை யற்ற கடல் உறக்கத்தில்
மயக்கும் தென்றலில் நீ
புல்லாங் குழல் வாசிக்கும் போது
இசை மெட்டு
மெல்ல வந்து மிதக்கும் !
நானுனக்கு அனுப்பி வைப்பேன்
நீ இசைத்த
கானத்தின் எதிரொலியை !
நம்மிடையே உள்ள
கருமை வெளியைக் கடந்து
விரைவாக
உன் கனவுக் கடற்கரையை
ஒலி அலை தொட்டதா
என்று
யாருக்குத் தெரியும் ?
++++++++++++++++++++++++++++++
பாட்டு : 226. 1939 ஆண்டில் தாகூர் 78 வயதினராய் இருந்த போது எழுதப் பட்டது. இப்பாடல் [Banihara or Wordless] வார்த்தைகளற்ற ஷெனாய் ஊதிசைக் கருவி கீதச் சேமிப்புச் சேர்ந்தது. அவற்றில் தாளத் தட்டிசையும், சொல்லமைப்பு வடிவும் [Rhythm & Word Structure] பன்முறையில் வேறுபட்டு வரும்.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] January 7, 2014
http://jayabarathan.wordpress.
- பிரம்ம லிபி
 - பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்
 - ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17
 - நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]
 - கடிதம்
 - நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’
 - புகழ் பெற்ற ஏழைகள் -41
 - அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!
 - நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்
 - எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?
 - மலரினும் மெல்லியது!
 - வால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3
 - திண்ணையின் இலக்கியத் தடம் – 17
 - வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”
 - இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்
 - நாணயத்தின் மறுபக்கம்
 - கவிதைகள்
 - தாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !
 - ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )
 - மருமகளின் மர்மம் -11
 - ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2
 - ஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்
 - நீங்காத நினைவுகள் – 29
 - மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்
 - வைரஸ்
 - திண்ணையில் எழுத்துக்கள்
 - சீதாயணம் நாடகப் படக்கதை – 1 5
 - மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது
 - என் புதிய வெளியீடுகள்