வரவேற்புரையிலேயே நூல் நயம் காணுவதைத் தொடங்கிட்டாங்க என்று ஆய்வுரை ஆற்ற வந்த முனைவர்.நா.இளங்கோ நகைச் சுவையாக அலுத்துக்கொண்டார் சென்ற 11ம் தேதி மாலை புதுவையில் நடைபெற்ற உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில்.
பதிப்பாளர் முரண்களரி யாழினி முனுசாமி வரவேற்பின் போதே தன்னைக் கவர்ந்த கவிதைகளைக் குறிப்பிட்டுத் தொடங்கதலைமை வகித்து வாழ்த்தினார் பாவேந்தரின் மைந்தர் தமிழ்மாமணி மன்னர் மன்னன்.
நூலை வெளியிட்ட ஆயிஷா.இரா.நடராசன் கவிதைகளுக்கும் நூல்களுக்கும் பெண் எழுத்தாளர்கள் தலைப்பிடும் நவீன முறைகளை உலக உதாரணங்கள் சொல்லிப் பாராட்டித் தொடங்கினார்.
வாழ்வின் நகைமுரண்களை இக்கவிதைகள் எடுத்துரைப்பதை உதாரணங்களோடு பகிர்ந்தார் இரா நடராசன்.நூலைப் பெற்றுக் கொண்ட கவிஞர் சுகிர்தராணி எழுத்தும் அதன் விளைவுகளும் எழுத்தாளர் வாழ்வோடு பிணைந்திருப்பதை உளப்பூர்வமாக எடுத்துரைத்தார்.
ஒளிச்சேர்க்கை,தேவையில்லா நிழல் போன்ற கவிதைகள் இன்றைய நிஜ வாழ்வின் பிரதிபலிப்பாக இருப்பதை சுகிர்தராணி பகிர்ந்துகொண்டார்
.
அகில இந்திய வானொலி யின் தென்மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் க.பொ .சீனிவாசன் ,புதுவை நிலைய உதவி இயக்குனர் மு.சிவப்பிரகாசம் ,கவிஞர்.தி.கோவிந்தராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நாற்காலிக் கவிதையின் நயம் உட்படப் பல கவிதைகளை விரிவாக ஆய்வு செய்தார் முனைவர் நா இளங்கோ.அபி உலகம் உட்படப் பல கவிதைகளின் அழகியலை ரசித்துப் பேசிய எஸ்.வி.வேணுகோபாலன் உலகமயமாக்கல்,
பண்பாட்டு மாற்றம்,தனிமனித இழப்பு போன்ற கூறுகளைக் கொண்ட கவிதைகளைப் பகிர்ந்தார்.
அகநாழிகை வெளியீடாக உமாமோகன் எழுதிய வெயில் புராணம் என்ற பயண அனுபவத் தொகுப்பையும் இந்நிகழ்வில் வெளியிட்டனர்.
உமாமோகனின் ஏற்புரை நன்றியுரையாகவும் அமைந்தது.
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3
- அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது
- “மணிக்கொடி’ – எனது முன்னுரை
- தொடாதே
- சீதாயணம் நாடகப் படக்கதை – 1 6
- இந்திய விஞ்ஞான மேதைகள் சி. ஜெயபாரதனின் நான்காவது விஞ்ஞான நூல் வெளியீடு
- ”புள்ளும் சிலம்பின காண்”
- தினம் என் பயணங்கள் – 1
- உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு விழா
- தாகூரின் கீதப் பாமாலை – 98 நீ அளித்த கொடை .. !
- கூட்டறிக்கை: சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
- அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2
- திருக்குறளும் தந்தை பெரியாரும்
- படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி
- தூதும், தூதுவிடும் பொருள்களும்
- மருத்துவக் கட்டுரை ஹைப்போதைராய்டிசம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை-58 ஆதாமின் பிள்ளைகள் – 3
- தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்
- கமலா இந்திரஜித் கதைகள்
- நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!
- முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை
- மருமகளின் மர்மம் – 12
- நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 42
- நீங்காத நினைவுகள் – 30
- திண்ணையின் இலக்கியத் தடம் -18
- ‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு