வால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 3 of 18 in the series 26 ஜனவரி 2014

  (Children of Adam)

உருளும் கடலுக்கு அப்பால் மக்கள் ..!

(Out of the Rolling Ocean, the Crowd)

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

        

 

உருளும் கடலுக்கு அப்பால்

திரளும் மக்கள் !

மெதுவாய் விழும் துளிச் செய்தி

அது முணுமுணுக்கும் :

உன்னை நேசிப்பதாய்ச் சொல்வேன்

என்னுயிர் நீங்கும் முன்பே !

வெகு தூரத்தி லிருந்து வருகிறேன்

உன்னைக் காணவும்,

உன்னுடலைத் தொடவும் !

ஒரு தடவை

உன்னைக் காணாத வரை

என்னுயிர் நீங்காது !

உன்னை இழக்க நேரிடும் என்று

என்னிதயம் அஞ்சும் !

 

 

நாம் இன்று சந்தித்தோம்

பார்த்தோம்,

பாதுகாப்பாய் உள்ளோம்.

மீள்வோம் கடலுக்கு

இன்னலின்றி

என்னரும் காதலியே !

அந்தக் கடற் பகுதிக்கு நானும்

சொந்த மானவன்.

எந்தன் காதலியே !

நம்மைப் பிரிக்கும் இடைவெளி

அதிகம் இல்லை.

பாராய் கடற்தள வட்டப் பகுதி

வளைவை

பூரணமாய் ஒட்டி உள்ளது !

 

 

ஆயினும்

என்னையும் உன்னையும்

எதிர்க்க இயலாத

கடலே

பிரித்து வைக்கிறது !

ஒரு மணி நேரம் பிரிக்கலாம் !

நிரந்தர மாய்ப் பிரிக்காது !

பொறுமை யின்மையைத்

தவிர்ப்பாய்.

சிறு இடைவெளியை விட்டு வை.

உனக்குத் தெரியும்

ஒவ்வொரு நாள் பரிதி மறைந்ததும்

உன் பொருட்டு

காதலியே !

நான் வந்தனம் செய்வேன்

காற்றை,

கடலை, நிலத்தை என்று !

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [ January 24, 2012]

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.”ஆனைச்சாத்தன்”
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *