புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

 ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com     

45.பாப் என்ற புதிய இ​சை உல​கைப் ப​டைத்த ஏ​ழை…..

 அட​டே வாங்க….வாங்க…என்னங்க ​ரொம்ப ஆடிக்கிட்​டே வர்ரீங்க…..ஏதாவது வி​சேஷமா…அட என்னங்க ​கையக்கால உதறிக்கிட்டு அங்குட்டும் இங்குட்டும் சுத்திச் சுத்தி வந்து ஆடறீங்க… ஒங்க ஆட்டம் நல்லாத்தான் இருக்குது…ஆட்டத்​தை நிறுத்திட்டுக் ​கொஞ்சம் காரணத்​தைச் ​சொல்றீங்களா…?என்னங்க நான் ​கேட்டுக்கிட்​டே இருக்க​றேன்…நீங்கபாட்டுக்கு ஆடிக்கிட்​டே இருக்கறீங்க…இந்த ஆட்டம் நாம ஆடுற ஆட்டம் மாதிரித் ​தெரியலி​யே…? அட ​சொல்லுங்க..,என்னது….. இதுதான் பாப் இ​சை​யோடு கூடிய நடனமா…?

சரிசரி…நல்லாத்தான் ஆடுறீங்க…ஆமா நான் ​போன வாரம் ​கேட்ட வினாவிற்கு வி​டையக் கண்டுபிடிச்சுட்டீங்களா….? அட ஆமா..​ மைக்​கேல்ஜாக்ஸன் தான்..அவ​ரோட ​பேரக் ​கேட்டா​லும் அவரப் பார்த்தாலும் உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் எழுந்து நின்னு ஆட ஆரம்பிச்சுடுவாங்க…என்னது நீங்க ​மைக்​கேல் ஜாக்ஸனு​டைய ரசிகரா… அதுதான் இந்த ஆட்டமா…  ஆமா அவ​ரோட வாழ்க்​கையப் பத்தி ஒங்களுக்குத் ​தெரியுமா…? என்னது ​கொஞ்சந்தான் ​தெரியுமா…? நா​னே ​​சொல்​றேன்…கவனமாக் ​கேளுங்க……..

ஒவ்​வொரு மனிதனுக்குள்ளும் ஒரு இனந்​தெரியாத ​சோகம் உண்டு…அந்த இனந் ​தெரியாத ​​சோகங்க​ளை​யெல்லாம் மறக்க ​ஒவ்​வொரு மனிதனும் பலவாறு முயற்சி ​செய்கிறான்.. சிலர் அதில் ​வெற்றி ​பெறுகிறார்கள்….சிலர் அதிலிருந்து ​வெளிவரமா​லே​யே மடிந்து விடுகின்றனர்…அவ்வாறு ​வெற்றி ​பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ​மைக்​கேல் ஜாக்ஸன் ஆவார்.

இ​சைப்புயலின் வாழ்க்​கைப் பயணம்

இங்க பாருங்க நம் முன்​னோர்கள் வாழ்க்​கை​யைப் பயணத்துக்கு ஒப்பிடுவாங்க…. பிறந்தபோது தொட்டிலில் தொடங்குகிறது. இறக்கும்போது கட்டிலில் முடிந்துவிடுகிறதா? இல்லை. பயணங்கள் முடிவில்லாதவை. இத​னை நி​னைக்கின்ற​போது எனக்கு ​மேத்தாவின் ‘வாழ்க்கை என்பது’என்ற ஒரு கவிதைதான் நி​னைவுக்கு வருகிறது.

 

“பெட்டி படுக்கைகளை

சுமந்தபடி

ஒரு பயணம்

எப்போது சுமைகளை

இறக்கி வைக்கிறோமோ

அப்போது

சுற்றியிருப்பவர்கள்

நம்மை

சுமக்கத் தொடங்கிவிடுகிறார்கள்”

 

இதுதான் அந்தக் கவி​தை.

 

சுமைகளைச் சுமப்பதுதான் வாழ்க்கை. சுமைகளை வைத்திருக்கும் வரை நாம் வாழ்கிறோம். சுமைகளை கீழே வைத்துவிட்டால் நான்கு பேர் கடைசியில் நம்மைச் சுமக்கத் தொடங்கி விடுகிறார்கள். வாழ்க்கை என்பது சுமைகளைச் சுமப்பதுதானே? சுமைகள் இருக்கும்வரை பயணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சு​மையான வாழ்க்​கை​யைத்தான் நம்ம ​மைக்​கேல்ஜாக்ஸன் இள​மைக்காலத்துல வாழ்ந்தாரு.

 

இள​மையில் ​தொடர்ந்த துன்பம்

 

1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் நாள் இண்டியானா இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் ஜோசப் வால்டர் – கேத்ரின் எஸ்தர் என்ற ஏழைத் தம்பதியருக்கு 7-ஆவது மகனாக மைக்​கேல்ஜாக்ஸன் பிறந்தார். மைக்​கேல்ஜாக்ஸனின் தந்​தையார் ​ரொம்ப ​ரொம்பக் ​கொடு​மைக்காரரா இருந்தாரு. அதனால மைக்​கேல்ஜாக்ஸ​னோட இள​மைக்கால வாழ்க்​கை ​மிகவும் சு​மையானதாக அ​மைந்திருந்தது.

 

​மைக்​கேல்ஜாக்கஸனின் குடும்பத்தில் மொத்தம் 9 குழந்தைகள். ​மைக்​கேலின் குடும்பம் வறு​மையில் தள்ளாடியது. அவ்வாறு வறுமையின் பிடியில் சிக்கி தவித்த நிலையிலும், இளம் வயதிலேயே ​மைக்​கேல் ஜாக்ஸனுக்கு இசையின் மீதும், நடனத்தின் மீதும் அதிக நாட்டம் இருந்தது.

 

​மைக்​கேல்ஜாக்ஸனின் தந்​தை தந்தை உருக்கு ஆலையில் பணிபுரிந்தார். ​மைக்​கேல் ஜாக்ஸ​னையும் அவரது ச​கோதரர்க​ளையும் அவரது தந்​தையார் தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பார். ​மேலும் அவர்களது த​லைக​ளைச் சுவரில் மோத செய்வது உள்ளிட்ட சித்ரவதைகளுக்குத் தமது குழந்​தைக​ளை உட்படுத்துவார். இத்த​கைய ​கொடு​மைகள் ​மைக்​கேலின் வாழ்க்கையிலும் மனநிலையிலும் இறுதி வரை பாதிப்பை ஏற்படுத்தியது. இத்த​கைய ​கொடு​மையினால் ​மைக்​கேல் ஜாக்சன் குழந்தைப் பருவத்தில் தனிமையில் மிகவும் அவதிப்பட்டார்.

 

இ​சைப் புயலின் இ​சைப் பயணம்

 

பாடல் எழுதுவது, அதற்கு இசையமைப்பது, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே கொஞ்சம் நவரச நடிப்பு என அனைத்து திறமையையும் கலந்து ‘பாப்’ என்ற புதிய உலகை அவர் படைத்தார். 11-ஆவது வயதிலேயே தனது சகோதரர்களுடன் ​மைக்​கேல்ஜாக்ஸன் இணைந்து நடத்திய, ‘தி ஜாக்சன் 5’ என்ற இசை நிகழ்ச்சி, பாப் பிரியர்களை பரவசப்படுத்தியது. இதற்கு கிடைத்த மிகச் சிறப்பான வரவேற்பைப் பார்த்து ​​மைக்​கேல் ஜாக்ஸன் அதை ஆல்பமாகவும் வெளியிட்டார்.

 

இதைத் தொடர்ந்து வெளியான ‘ஐ வாண்ட் யூ பேக்’ என்ற இசை ஆல்பமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் ‌பெற்றது. இதனால் ஒட்டு மொத்த உலமும் ஜாக்சனை திரும்பி பார்க்கத் ​தொடங்கியது. அதன் பிறகு ஜாக்சனின் இசைப் பயணம் வெற்றிக்கரமாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 

இசையுலகில் 1971-ஆம் ஆண்டு முதல் தனித்து இயங்கத் ​தொடங்கிய​மைக்​கேல்ஜாக்ஸன், தனது நிகழ்ச்சிகளை ஆல்பங்களாகவும் வெளியிட்டு வந்தார். இது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் அவருக்கு பெற்றுத் தந்தது.

 

1972-ஆம் ஆண்டில் ‘காட் டு தி தேர்’, என்ற ஆல்பத்​தையும் 1979-ஆம் ஆண்டில் ‘ஆப் தி வால்’, 1982-ஆம் ஆண்டில் ‘ ‘திரில்லர்’, 1987-ஆம் ஆண்டில் ‘ ‘பேட்’, 1991-ஆம் ஆண்டில் ”டேஞ்சரஸ்’ மற்றும் 1995-ஆம் ஆண்டில் ‘ ‘ஹிஸ்டரி’ போன்ற இ​சை ஆல்பங்கள் உலகளவில் விற்பனையில் பணத்​தை வாரிக் குவித்தன.

 

பாப் இ​சை உலகின் முடிசூடா மன்னன்

 

1980-ஆம் ஆண்டுகளில் பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த நிலையில், மேற்கத்திய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் எம்.டி.வி. தனது ஒளிபரப்பைத் ​தொடங்கியது. அந்த டிவியில் ஜாக்சன் நடத்திய ‘பீட் இட்’, ‘பில்லி ஜூன்’ மற்றும் ‘திரில்லர்’ போன்ற இசை நிகழ்ச்சிகள், அவரது புகழை உலகம் முழுவதும் பரப்பியதோடு, எம் டிவியையும் குறுகிய காலத்தில் புகழ் ​பெறச் ​செய்தது.  1990-ஆம் ஆண்டுகளில் “பிளாக் ஆர் ஒயிட்’ மற்றும் “ஸ்கிரீம்’ ஆகிய நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் புகழை உச்சிக்கு எடுத்து சென்றன.

கருப்பர் இனத்தில் பிறந்தவரான மைக்கேல் ஜாக்சன் பல பிளாஸ்டிக் சர்ஜரிகள் மூலமாகக் கிட்டத்தட்ட வெள்ளையராக​வே தனது உருவத்தில் மாறிவிட்டார். ​மைக்​கேல்ஜாக்ஸன் கின்னஸ் புத்தக வெளியீட்டாளர்களால் “Most Successful Entertainer of All Time” என்று பாராட்டப்பட்டவர். இதுவரை வெளியிடப்பட்ட இசை ஆல்பங்களிலேயே முறியடிக்கப்படாத சாதனை படைத்தது ஜாக்ஸனின் “த்ரில்லர்”. அந்த ஆல்பம் மட்டும் 104 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகி எட்டாத உயரத்தில் ஜாக்ஸனை நிறுத்தியது.

சந்தித்த சரிவுகள்

8 கிராமி விருதுக​ளை  ​மைக்​கேல்ஜாக்ஸன் ஒரே இரவில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகர், நல்ல நடனக்காரர் என்ற ​தோற்றங்க​ளைத் தாண்டி மிக அருமையான இயக்குனராகவும் ​மைக்​கேல் ஜாக்ஸன் திகழ்ந்தார்.

 

மைக்​கேல் ஜாக்ஸன் கிராபிக்ஸ் பிரபலமடைந்த காலக்கட்டத்தில் அவரது ஆல்பங்களுக்கு மிகச்சரியான முறையில் கிராபிக்ஸ்களைப் பயன்படுத்தினார். கருப்பு ​வெள்​ளையில் (Black & White) அவர் பயன்படுத்திய மார்பிங் உத்தி அதன் பின்னர் பல பாப் பாடல்களிலும், திரைப்பாடல்களிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இத்த​கைய தொடர் வெற்றிகளின் காரணமாகவும், 75 கோடி ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் பெற்று, ஈடு இணையற்ற பாப் பாடகராக விளங்கிய காரணத்தாலும் கின்னஸ் புத்தகத்திலும் மைக்கேல் ஜாக்சன் இடம் பெற்றார். இத்த​னை புகழ் ​பெற்றிருந்தாலும் ​மைக்​கேல்ஜாக்ஸன் 1990-ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திக்க ஆரம்பித்தார்.

 

​மைக்​கேல் ஜாக்சனின் நடனம் மிகவும் வித்தியாசமானது. அதற்கு முன் யாரும் அதுபோன்று நடனம் ஆடியது இல்லை. மிகவும் சிக்கலான உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் விதத்தில் ​மைக்​கேல் ஜாக்ஸன் ஆடினார். ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.  ராணுவ உடை போன்ற உடைகளையே அவர் மேடையில் விரும்பி அணிவார். அவருக்கு நிறுவப்பட்ட பெரும்பாலான சிலைகள் அந்த தோற்றத்திலேயேதான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜாக்சன். பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் பலமுறை முகத்தை மாற்றியது மற்றும் பண விவகாரம் போன்றவற்றால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். தனது பண்ணை வீட்டில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தின் படியேறினார். வழக்கு விவகாரங்களுக்காகத் தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். எனினும், கடந்த 2005-ஆம் ஆண்டு வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு நிம்மதிப் ​பெருமூச்சுவிட்டார்.

 

இல்லறத்தில் ஏற்பட்ட இன்னல்கள்

 

ஒரு மனிதன் எல்லாவற்றிறிலும் நிம்மதி​யைப் ​பெற்றுவிட முடியாது. ஒன்றில் உயர்நி​லை​யை அ​டைந்தால் மற்​​றொன்றில் ​வெறு​மை​யைச் சந்திக்க ​நேரிடும். ஒரு சில​ரே எல்லாவ​கையிலும் நிம்மதி​யையும் மகிழ்ச்சி​யையும் ​பெறுவர். சிலர் ​வெளி உலகில் புகழ் ​பெற்றிருப்பர். ஆனால் அவர்களது இல்வாழ்க்​கை ​வெறு​மையானதாக அ​மைந்திருக்கும்…​சொல்லும்படியாக இராது. அது​போன்​றே மைக்கேல் ஜாக்சனின் இல்லற வாழ்க்கையும் நீண்ட காலம் இனிமையானதாக நிலைத்திருக்கவில்லை.

 

​மைக்​கேல் ஜாக்ஸன் 1996-ஆம் ஆண்டில் பிரஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 1999-ஆம் ஆண்டில் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். எனினும், மைக்கேல் ஜாக்சனில் வினோத நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்த இரு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் -2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

ஜாக்சனின் முதல் வீடியோ பில்லி ஜீன். இதுதான் “எம் டிவி’ யில் ஒளிபரப்பான முதல் கருப்பினத்தவரின் இசை வீடியோ. ஆகும். “மேடம் டுஸாட்ஸ்’ மெழுகுச் சிலை அரங்கங்களில் ஜாக்சனின் சிலைகள் இடம்பெற்றுள்ளன. ராயல்டி வழியாக அவர் பெற்ற வருமானம் ஏறத்தாழ ரூ.2,500 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

மைக்​கேல் ஜாக்ஸன் சமூகசேவைகளுக்காக தன் வருமானத்தில் பெரும் பகுதியைச் செலவு​செய்தார். அவர் தற்போது வசிக்கும் இல்லம் அமெரிக்காவில் பெரும் பிரசித்தி பெற்றது. அவரது  இல்லம் ஒரு தனி அரசாங்கம் என்று அமெரிக்க ஊடகங்கள் எழுதித் தள்ளின. அவருக்கு மனநிலை சரியில்லை என்றும் சொல்வார்கள். சர்ச்சைகளுக்கும் ஜாக்ஸன் வாழ்வில் குறையில்லை. திருமணம் – மணமுறிவு – மீண்டும் திருமணம் – மீண்டும் மணமுறிவு என்று அவரது இல்லற வாழ்க்கை அவருக்கு நிலையில்லாததாகவே அ​மைந்திருந்தது.

 

அனாதைக் குழந்தைகளுடனான தவறான உறவு, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை முன்னறிவிப்பில்லாமல் நிறுத்துவது, தேவையில்லாத விளம்பரத் ​தேடல் என்று ஜாக்ஸன் மீது அடுக்கடுக்காக (சில சமயங்களில் அபத்தமாக) குற்றங்கள் தொடர்ந்து சாட்டப்பட்டாலும் அவரது ரசிகர்கள் அதைப் பற்றி​யெல்லாம் கவ​லை​ கொள்ளவில்​லை. அவர்கள் ​மைக்​கேல் ஜாக்ஸனின் இசையையும், நடனத்தையும்…மட்டு​மே விரும்பினர். அவரது தனிப்பட்ட வாழ்க்​கை​யைப் பற்றி அவர்கள் க​வ​லைப்படவில்​லை.

 

பெற்ற சிறப்புகள்

 

மனிதாபிமான உதவிகளுக்கான விருதை, 1984-ஆம் ஆண்டில் மைக்கேல் ஜாக்சன் அ​மெரிக்க அதிபர் ரீகனிடமிருந்து பெற்றார். மைக்கேல் ஜாக்சனின் “பேட்’, “டேஞ்சரஸ்’ மற்றும் “திரில்லர்’ ஆகிய 3 ஆல்பங்களின் விற்பனையை இன்று வரை எந்த ஓர் ஆல்பமும் விஞ்சவில்லை. ​மைக்​கேல் ஜாக்சனைப் போன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடியாமல் போன பிரெஞ்சு ரசிகர் ஒருவர்,1984-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பது வியப்பிற்குரிய வருத்தத்திற்குரிய ​செய்தியாகும்.

 

ஐவரி கோஸ்ட் நாட்டில் காபோன் நகரில் கிராமத்து மக்கள் இவருக்கு உண்மையிலேயே மன்னராக முடிசூட்டினர். ​மைக்​கேல் ஜாக்ஸன் மேடைக்கு வருவதற்கு முன்பாக மது அருந்தி வருவார். “வெந்நீரில் மது கலந்து குடிப்பதால் தொண்டைக்கு இதமாகவும் பாடுவதற்கு எளிதாக இருக்கிறது’ என்றார். ஜாக்சன் வடிவமைத்த “டான்ஸர் ஷூ’ பேடன்ட் பெற்றது என்பது வியப்பிற்குரிய ​செய்தியாகும்.

 

விண்ணுல​கை எய்திய இ​சை மன்னன்

 

​     மைக்​கேல் ஜாக்ஸன் பலவாறு ​நோயால் பாதிக்கப்பட்டார். இத​னைக் ​கேள்வியுற்ற அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர். எனினும், உடல்நிலை குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாகவும், 2010-ஆம் ஆண்டு வரை லண்டனில் சுமார் 50 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரது பாப் இசையுலக ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. அ​வை ​வெறும் பரப்பு​ரையாக​​வே        அ​மைந்து விட்டன.

 

ஆம்…! பாப் இ‌சை உலகின் அழியா புகழ்பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சன், தனது 52-ஆம் வயதில் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் நாள் இயற்​கை​​யெய்தினார். இவரது இறப்பில் பல்​வேறு மர்மங்கள் நீடிப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஜாக்சனின் மரணச் செய்தி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு ​பேரிடியாக அ​மைந்தது. அவரது இறப்பு அவர்களுக்கு ஈடு ​செய்ய முடியாத இழப்பாக இருந்தது.

 

மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சிக்கு செல்லும் ரசிகர்கள், அவரது இசையை கேட்டும், நடனத்தைப் பார்த்தும் உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிடுவார்கள். சிலர் கதறி அழுவார்கள்.  அவரது ம​றைவால் உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள்  மீளமுடியாத துன்பத்தில் ஆழ்ந்தனர். பாப் இ​சைப் புயலாக விளங்கிய ​மைக்​கேல் ஜாக்ஸன் ம​றைந்தாலும் அவர் இன்றும் ​கோடான ​கோடி மக்களின் இதயத்தில் வாழ்ந்து ​கொண்டுதான் இருக்கின்றார். இ​சையுலகு உள்ளளவும் அவரது புகழ் என்றும் நி​லைத்திருக்கும்…அது என்றும் அவரது நடனத்திலும் இ​சையிலும் க​ரைந்திருக்கும்…

 

என்ன ​கேட்டுக்கிட்டீங்கள்ள…அப்பறம் என்ன ஏ​ழையப் பிறப்பது தவறல்ல..ஏழ்​மையா இருந்துட்டு இறப்பதுதான் தவறு…ஏ​ழையாப் பிறந்தாலும் உ​ழைப்பாலும் முயற்சியாலும் ஏழ்​மைநி​லையிலிருந்து மீண்டு உன்னத நி​லை​யை அ​டையலாம் என்ப​தை ​மைக்​கேல் ஜாக்ஸனின் வாழ்க்​கை நமக்கு ​தெளிவுறுத்துதில்ல…..ஏழ்​மை என்ற எண்ணத்​தை ஒதறி எறிங்க….உயர்வான எண்ணத்​தை மனசுல ​வெ​தைங்க…​வெற்றி அப்பறம் ​தொட்டுவிடும் தூரம்தான்…என்ன புரிஞ்சுக்கிட்டீங்கள்ள…புரிஞ்சுக்கிட்டீங்கன்னா வாழ்க்​கை எப்பவு​மே வசந்தம் மிக்கதா இருக்குங்க……!

 

சின்னப் ​பையன்க தங்க​ளோட அப்பாக்கிட்ட திங்கறதுக்கு வாங்கித் தாங்கன்னுதான் ​கேப்பாங்க….ஆனா …..ஒரு ​பையன் மட்டும் தன்​னோட தந்​தையிடம் படிக்கப் புத்தகம் வாங்கித் தாங்கன்னு ​கேட்டுக்கிட்​டே இருந்தான்….அவரால வாங்கித் தரமுடியல… மனசுக்குள்ளார கஷ்டம்… இருந்தாலும் அத ​வெளிக்காட்டிக்காம தனக்கிட்ட ​பைண்டிங் ​போடுறதுக்கு வந்திருந்த புத்தகங்களக் ​கொடுத்துப் படிக்கச் ​சொன்னாரு…அந்தப் ​பையன் யாரு ​தெரியுமா….? என்னது குறிப்புக் ​கொடுக்கணுமா….சரி…​சொல்​றேன்…..உலகின் முதல் ஆங்கில அகராதி​யைத் ​தொகுத்தவர் யாரு ​தெரியுமா….?..என்னது முழிக்கிறீங்க…முழிக்காதீங்க…​பொறு​மையா ​யோசிச்சுப் பாருங்க…அடுத்த வாரம் வர்​றேன்…என்ன சரியா….?………….(​தொடரும்………..46)

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *