வால்ட் விட்மன் வசனக் கவிதை – 62 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

 

 (Children of Adam)

குடிப்பிறப்புத் தருணங்கள்

(Native Moments)

(1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

        

மோக வயப்பட்டுக் காதல் வலிச்

சோகத்தில்

மூழ்குபவன் நான் !

பூமி ஈர்ப்ப தில்லையா ?

அண்டங்கள் அனைத்தும்

ஏங்கிய வண்ணம், மற்ற வற்றைத்

தம்மை நோக்கி

இழுப்ப தில்லையா ?

அதுபோல்

என்னைச் சந்திப் போரும்

என்னை அறிந்திருப் போரும்

என்னுடல் வனப்பாலே

ஈர்க்கப் படுவார் !

 

குடிப்பிறப்புத் தருணங்கள் உண்டு

என்னைத் தேடி,

இங்கு நீ வரும் போது !

ஆஹா ! இப்போது

இங்கே நீ இருக்கிறாய் !

சிற்றின்பக் களிப்புகள் மட்டும் நீ

எனக்களிப்பாய் !

மோகத்தில் மூழ்கிட

எனக்கு மயக்க பானம் கொடுப்பாய் !

உன்னத முறையில்

கரடு முரடான வாழ்வை எனக்களிப்பாய் !

இன்று பகலில் நான்

இயற்கைக் கண்மணியின் கூட்டாளியாய்

செல்வேன்;

இன்றிரவிலும் அப்படித்தான் !

கட்டவிழ்த்த களியாட் டங்களில்

வட்டமிடும் நபரோடு

நட்புடை யவன் நான் !

நள்ளிரவில் வாலிபர் குழு புரியும்

பாலுறவில்

பங்கெடுப்பவன் நான் !

ஆடுவோருடன் நடனம்

ஆடுவேன் நான் !

குடிப்போருடன் சேர்ந்து

குடிப்பவன் நான் !

எங்கும் எதிரொலிக்கும்

எங்கள் அருவருப் பான விளிப்புகள் !

 

கீழான ஒருத்தியை

மேலான

என்னரும் தோழனுக்கு நான்

ஏற்பாடு செய்வேன் !

முரடன் அவன், சட்ட விரோதி,

படியாதவன் !

மற்றவர் தூற்றுவார் அவனை

செய்த தவறுக்கு !

இகழ்வ தில்லை நான் ஒருபோதும் !

ஏன் எனது தோழர்களை

எல்லாம்

இழக்க வேண்டும் நான் ?

நீங்கள்

வெறுத்துத் தள்ளும் நபரை

ஒதுக்குவ தில்லை நான்.

உங்கள் நடுவே

உலவி வருபவன் நான் !

உங்களது கவிஞனாய் இருப்பேன் !

மற்றவரை விட

முக்கிய மானவன் நான்

உங்களுக்கு !

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman  [February 11, 2014]

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *