திண்ணையின் இலக்கியத் தடம் – 23

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

மே 4, 2003 இதழ்:
எதிர்பாராத அடி- நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு- அ.முத்துலிங்கம்- “நான் நாயர் பொண்ணு. அவர் கள்ளர் ஜாதி – நடக்கற காரியமா?”

www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305043&edition_id=20030504&format=html

பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 1- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- கேரள சஸ்த்ர ஸாகித்ய பரிஷத் அறிவியலைப் பரப்பும் இயக்கம் மட்டுமல்ல SCIENCE FOR SOCIAL REVOLUTION என்ற நோக்கில் பல பிரஸ்சனைகளை அணுகிப் பணியாற்றி வருகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305044&edition_id=20030504&format=html )

அர்ஜெண்டினா ஆகி விடுமா இந்தியா? – கெரெக் பாலாஸ்ட்
உலக வங்கி, அகில உலக நிதி அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தான நிபந்தனைகளை விதிக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305048&edition_id=20030504&format=html )

நவீன எழுத்தாளனின் தலைவிதி- சுந்தர ராமசாமி- யார் உண்மையில் அறிவுவாதிகளோ , யார் தரத்திற்காகவும் மேன்மைக்காகவும் நிற்கிறார்களோ அவர்களை மக்களுக்குத் தெரியாது. யார் யாரை மக்களுக்குத் தெரியுமோ அவர்கள் மக்களின் அடிப்படை நாகரிகத்தையே சிதைத்து அந்தச் சிதைவிலேயே த்ங்கள் குறுகிய நோக்கங்களின் வெற்றியில் திளைப்பவர்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305043&edition_id=20030504&format=html )

உதிர்தலும் உருமாற்றமும்- அ.செ.முருகானந்தனின் ‘பழையதும் புதியதும்’ எனக்குப் பிடித்த கதைகள் -59- பாவண்ணன்- கார்கள் வந்த பின் மாட்டு வண்டியில் பயணிக்க வசதியுள்ளவர் விரும்பவில்லை. போர் நாட்களில் பெட் ரோல் தட்டுப்பாட்டால் கார்கள் நின்று மாட்டுவண்டிக்கும் மவுசு. ஆனாலும் மாட்டுவண்டிக்காரன் இது தற்காலிகமானதே என்று புரிந்து வைத்திருக்கிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305044&edition_id=20030504&format=html )

மே 10 2003 இதழ்:

பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 2- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- ராலேகான் சிந்தி என்னும் ஊரில் அன்னா ஹஸாரே மேற்கொண்ட முயற்சிகள் மக்கள் பங்கேற்பு எந்த அளவு மாறுதலைக் கொண்டு வரும் என்பதற்கு எடுத்துக் காட்டு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203051011&edition_id=20030510&format=html )

முதல் காஷ்மீர் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி- ஸ்ரீராம் சுந்தர் சௌலியா- மகாராஜாவின் படைகளுக்கு உடனே தளவாடங்கள் அனுப்ப படேல் கொடுத்த கட்டளை கமாண்டர் இன் சீப் மற்றும் பீல்ட் மார்ஷன் அசின்லேக் இருவராலும் உதாசீனம் செய்யப் பட்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305104&edition_id=20030510&format=html )

பிறவழிப் பாதைகள்- (சு.சமுத்திரம், பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி )- கோபால் ராஜாராம்-அவரது குரல் , கோபம் கொண்ட, தன் உரிமை என்று கேட்டுப் பெறுகிற குரல், இந்தியாவின் ஜனநாயகக் குரல். (சு.சமுத்திரத்துக்கு அஞ்சலியாக). மிசரியின் அப்பட்டமான காப்பி என்பதை மறந்து விட்டுப் பார்த்தால் (ஜுலி கணபதி) படம் ரசிக்கும்படி இருந்தது. நான் ரசித்தேன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305101&edition_id=20030510&format=html )

சாக்கியர் முதல் சக்கரியா வரை- ஜெயமோகன் – கேரளத்தைப் போன்ற ஒரு அறிவுச் சூழல் தமிழகத்தில் இல்லாமற் போனதற்கு திராவிட இயக்கங்களே காரணம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305102&edition_id=20030510&format=html )

மதமும் தம்மமும் -மதம் குறித்த பௌத்த கோட்பாடு- எச்.பீர் முஹம்மது- மதத்தின் நோக்கம் உலகத்தின் தோற்றத்தை விளக்குவது. தர்மத்தின் நோக்கம் உலகைப் புனரமைப்பது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305105&edition_id=20030510&format=html )

காலச்சுவடு மலர்- ஒரு சுயமதிப்பீடு- சுந்தர ராமசாமி- பண்பாடு சம்பந்தமாகத் தமிழன் பெருங்குழப்பத்தில் இருக்கிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305108&edition_id=20030510&format=html )

எதிர் கொள்ள மறுத்தலின் எதிரொலி – (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை – எனக்குப் பிடித்த கதைகள்-60) -பாவண்ணன்- அதிக வருமானமில்லாதவனும் கொடுமைக்காரனுமான கணவன் உதாசீனம் செய்யும் பிறந்த வீடு இவற்றுக்கு நடுவே ஒரு பாட்டுட் டீச்சராக டியூசன் எடுத்துப் போராடிய பெண்ணின் கதை. அவளது மகனின் தலைமுறையிலும் ஆணின் ஆதிக்கமும் குரூரத்தனமும் மறையாததைக் கண்டு அவள மனம் வருந்துகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305107&edition_id=20030510&format=html )

மே 18, 2003 இதழ்:
பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 2- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- அமெரிக்கவின் Wilderness என்னும் சட்டத்தின் படி காட்டுப் பகுதியில் மனிதர்கள் வசிக்கவே கூடாது. அது இந்தியாவுக்குப் பொருந்துமா?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305254&edition_id=20030525&format=html )

இலக்கிய சந்திப்பு- கனடா பகுதி -2- சுந்தர ராமசாமி- தமிழில் இப்போது உள்ள ஒரே சத்தான விஷயம் சிறு பத்திரிக்கை இயக்கமே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305252&edition_id=20030525&format=html )

மே 25, 2003 இதழ்:
சில நிகழ்வுகள்- சில பார்வைகள்: வெளி ரங்கராஜன்- கூட்டம் நடந்து முடிந்த பின் இரவில் வேறொரு தனியிடத்தில் நண்பர்களுக்குள் நடந்த தனிப்பட்ட சில சச்சரவுகளுக்கு பிரமிள் கூட்டதுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305182&edition_id=20030518&format=html )

கூவத்தில் எறியப்படாத புத்தகமும் எறியப் பட வேண்டிய பத்திரிக்கையும் -கோபால் ராஜாராம்- நடந்தது என்ன என்று விசாரிக்காமலும் விளங்கிக் கொள்ளாமலும் இலக்கியவாதிகளைப் பற்றி வதந்தியும் அவதூறும் எழுதிய இந்தியா டுடே பத்திர்க்கைக்கு கண்டனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305183&edition_id=20030518&format=html )

ஒவ்வாத மனிதர்- எழுத்தாளர் கோபி கிருஷ்ணனுக்கு அஞ்சலி- ஜெயமோகன்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305186&edition_id=20030518&format=html )

ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் – டாக்டர் வந்தனா சிவா- உலகமயமாதல், விவசாயம் நாசமாவதினால் விவசாயிகள் உயிர் குடிக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305187&edition_id=20030518&format=html )

பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல்- 3- கே ரவி ஸ்ரீநிவாஸ்- காடுகள் அழியத் தொழிற் கொள்கைகள், ஏற்றுமதிக்கான விதிகள் காரணமாகின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305188&edition_id=20030518&format=html )

இலக்கிய சந்திப்பு- கனடா- பகுதி 1- சுந்தர ராமசாமி
வணிக எழுத்துத் தான் தமிழ்ச் சமுதாயத்தைப் பாதித்துக் கொண்டு இருக்கிறது. வணிக எழுத்தாளர்களைச் சார்ந்துதான் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305182&edition_id=20030518&format=html)

அறிமுக நேர்காணல்-காஞ்சனா தாமோதரன்- மனுபாரதி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305183&edition_id=20030518&format=html )

அதிகாரமும் அடிமைத்தனமும் – (துர்கனேவின் மூமு- எனக்குப் பிடித்த கதைகள்-61) -பாவண்ணன்- காது கேட்க முடியாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான ஒரு பண்ணையடிமை ஒரு குட்டி நாயை வளர்க்கிறான். அது தொல்லை என்று அதைக் கொல்லச் சொல்கிறார்கள் முதலாளியம்மாவும் அவரது அடிவருடிகளும். தன் கையாலேயே அதைக் கொன்று பண்ணைக்குத் திரும்பாமல் சொந்த ஊருக்குப் போய்விடுகிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305181&edition_id=20030518&format=html)

ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் – அ.மாதவய்யாவின் ‘ஏணியேற்ற நிலையம்’ – எனக்குப் பிடித்த கதைகள்-62- பாவண்ணன்- சுதந்திரப் போரில் பல முறை சிறைசென்ற ஒருவர் ஜாதிபேதங்களைத் தாண்டும் விதமாக அனைத்து ஜாதியினரும் தங்கும் ஒரு ஆசிமரத்தை நிறுவுகிறார். இலவசமான உறைவிடம் உணவு என்று தந்தும் ஜாதி வெறியுடன் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவது நிற்கவில்லை. குறிப்பாக மேல்ஜாதியினர் கீழ்ஜாதியினரை மட்டம் தட்டுவதில் முனைப்பாக இருக்கின்றனர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305251&edition_id=20030525&format=html )

மே 30, 2003 இதழ்:

சுற்றுச் சூழல் அரசியல் -5- K- ரவி ஸ்ரீநிவாஸ்- மாதவ் காட்கில், குஹா எழுதிய THE FISSURED LAND என்ற நூல் இந்தியாவின் சூழல் வரலாறு குறித்த, சமூகம்- வளர்ச்சி- சூழல் வரலாறு குறித்த ஒரு விவாதத்துக்கு அடிகோலியது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20305305&edition_id=20030530&format=html )

சிறுகதை- அதன் அகமும் புறமும்- சுந்தர ராமசாமி- சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305302&edition_id=20030530&format=html )

கசப்பும் இனிப்பும்- நா.பார்த்தசாரதியின் வேப்பம்பழம்- எனக்குப் பிடித்த கதைகள்-63- வறுமையின் கோரப் பிடியில் துன்புறும் ஒரு வேலைக்காரச் சிறுமி வேப்பம்பழத்தை எடுத்துத் தின்னும் விசித்திரமான சுவை கொண்டவள். அவள் அந்தப் பழம் இனிக்கிறது என்று கூறுவாள். அவள் வாழ்க்கையும் அவ்வாறானதே.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60305301&edition_id=20030530&format=html)

ஜூன் 7, 2003 இதழ்:
பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 6- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- ஒரு அணை உருவாக்கப் படும் போதோ அல்லது பெரிய தொழிற்பேட்டை நிறுவப் படும் போதோ பாதிக்கபடும் கிராமங்கள், குடும்பங்களின் இழப்பு, சுற்றுச் சூழல் இழப்பு இவை சரியாக மதிப்பிடப் படுவதில்லை. குறைவாகவே மதிப்பிடப் படுகின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20306076&edition_id=20030607&format=html )
பொன்னீலன் சாகித்ய அகாதமி பரிசு- சுந்தர ராமசாமி- எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் சம்பிரதாயமாகப் பாராட்டிக் கொள்வது பண்பாட்டைத் தகர்ப்பதாகும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306071&edition_id=20030607&format=html )

இயற்கை விடுக்கும் செய்தி- பிரபஞ்சனின் ‘பிரம்மம்’- எனக்குப் பிடித்த கதைகள் -64- ஒரு குடும்பம் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் வீட்டு வாயிலில் நட்டு வளர்க்கும் முருங்கை மரம் நிழல் தந்து உணவு தந்து அவர்களுக்கும் மிகவும் பயன்பட்டு அவர்கள் அதை மிகவும் நேசிக்கிறார்கள். ஆனால் ஒரு பெரு மழையில் மரம் விழுந்து விடுகிறது. மிகவும் மனம் உடைந்து போகிறார்கள். சில நாட்கள் க்ழித்து அதன் அடிமரம் துளிர் விடத் தொடங்குகிறது.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306072&edition_id=20030607&format=html)

ஜூன் 15 2003:

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்: ஜெயமோகன்-
சுஜாதா நவீனத் தொழில் நுட்பத்தின் விளைவு. அவரது ஆக்கங்கள் நவீனக் கருவிகள் போன்றவை. நவீனத் தொழில் நுட்பம் உள்ளீடற்றது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306153&edition_id=20030615&format=html )

அய்யா- ஞாநி- இன்று பெரியார் ஒரு அசல் சிந்தனாவாதியா என்று ஐயம் எழுப்புவதும், தலித் விரோதி என்று நிறுவ முயற்சிப்பதும் நியாயமில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20306153&edition_id=20030615&format=html )

பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் -7 -K.ரவி ஸ்ரீநிவாஸ்- விவசாய சமூகம் இந்தியாவில், வேட்டாயாடுதல் மற்றும் சேகரிப்பு சமூகத்துடன் மோதல்களில் ஈடுபட்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20306156&edition_id=20030615&format=html )

என்னைக் கவர்ந்த என் படைப்பு- சுந்தர ராமசாமி- தமிழ் வாழ்வில் இன்றைய சீரழிந்த நிலையை ‘ஜே.ஜே- சில குறிப்புகள்’ விவாதப் பொருளாக்குகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306151&edition_id=20030615&format=html )

உடலும் பிரபஞ்சமும்- தாந்திரீகக் கோட்பாடு பற்றி சில குறிப்புகள்- எச். பீர் முகம்மது- வேதாந்தம் ஆண்மையத் தத்துவமாக இருந்தது. இதற்கு மாறாகப் பெண்ணை மையப் படுத்திய விவசாய சமூக அடிப்படையைக் கொண்டதே தாந்திரீகம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306152&edition_id=20030615&format=html)

ஜூன் 19 2003 இதழ்:
மதுரை கோயில் அரிசன ஆலயப் பிரவேசம்- 1939-தொ.பரமசிவன் – மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1939 ஜூலை பத்தாம் தேதி அரிசனங்களின் ஆலயப் பிரவேசம் நடந்தது. காங்கிரஸின் வைத்தியனாத அய்யர் இதற்கான முயற்சியை எடுத்தார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20306193&edition_id=20030619&format=html )

படைப்பின் வன்முறை- எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை- சொல் புதிது சிற்றிதழில் வெளியான ‘ நாச்சார் மடம்’ சிறுகதையைக் கண்டித்து பிரபஞ்சன், சல்மா, பஞ்சாங்கம் , பெருமாள் முருகன் உட்பட பல எழுத்தாளர்கள் கூட்டாக வெளியுட்டுள்ள ஒரு அறிக்கை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20306199&edition_id=20030619&format=html )

பழைய முடிவும் புதிய முடிவும்-ஆர்.சூடாமணியின் ரயில் -எனக்குப் பிடித்த கதைகள் -65- ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் வேவ்வேறு தலைமுறை வயது மனிதர்கள் ஒருவரால் ஒருவர் மீது தாக்கம் ஏற்பட்டு மன மாற்றம் பெறுகின்றனர்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306191&edition_id=20030619&format=html )

தமிழ்ப் படைப்புலகம்- படைப்பாளி அவன் உண்மையான படைப்பாளி என்றால் அதிகாரத்துக்கு வெளியே நிற்கிறான். நிறுவனத்துக்கு வெளியே நிற்கிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306192&edition_id=20030619&format=html )

சுஜாதா என்றொரு கதை சொல்லி-நாகரத்தினம் கிருஷ்ணா- சுஜாதாவின் எழுத்து பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினை
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306193&edition_id=20030619&format=html )

ஜூன் 26 2003 இதழ்:
பசுமைப் பார்வைகள்- சுற்றுச் சூழல் அரசியல் 8- கே.ரவி ஸ்ரீநிவாஸ்- இந்து மதம் அரசு ஆதரவுடன் பௌத்த ஜைன மதங்களை அழித்தொழிக்க முற்பட்டது
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203062610&edition_id=20030626&format=html )

மரபணு மாற்றப் பட்ட உணவும் உலகமயமாதலும் -டாம் ஹேடன்- “நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நாங்கள் சொல்வதே சரி” என்கிறார் அமெரிக்க அமைச்சர் ஆன் வெனிமான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203062611&edition_id=20030626&format=html)

எழுதப் படாத பதில் கடிதம்- யூமா வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து- எச் பீர்முகம்மது

இரவுகள் எழுப்பும் ஊழிக்காற்றில்
நெகிழும் சுடருக்குள் நிலைத்த கருவிழி
நடுங்கும் நிழல்களின் ஸ்பரிஸத்தில் அறைச் சுவர்கள்
கண் மறைந்த ஆனந்தத்தின்
ஒரு பகுதியைப் பற்றிக் கொள்ள விரும்புகின்றன
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306263&edition_id=20030626&format=html )

அரசியல் பாடும் குடும்ப விளக்கு- (புதிய மாதவியின் “ஹேராம்” கவிதைத் தொகுதியின் முன்னுரை)-நா.முத்து நிலவன்
அவள்
கண்களைப் பாடியது போதும்
கருத்தினைப் பாடுங்கள்

கூந்தலைப் பாடியது போதும்
கொள்கையைப் பாடுங்கள்

உடலைப் பாடியது போதும்
உரிமையைப் பாடுங்கள்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306265&edition_id=20030626&format=html)

உரிமையும் பருவமும்- (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’- எனக்குப் பிடித்த கதைகள் -66)- பாவண்ணன்- தேர்தலில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் சின்னத்தில் வாக்குக் குத்த வேண்டும் என்று செல்லும் மருமகள் தன்னையும் அறியாமால் மாமியார் பரிந்துரைத்த சின்னத்துக்கே வாக்களிக்கிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60306262&edition_id=20030626&format=html)

 

Series Navigationவாசிக்கப் பழ(க்)குவோமேதொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​1​​​தூமணி மாடம்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்தினம் என் பயணங்கள் – 6பிழைப்புஒரு மகளின் ஏக்கம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *