புனைப்பெயரில்
முதலில், “அம்மா” என்ற சொல்லிற்கு அர்த்தம் தரும், மோடியின் அன்னைக்கு நன்றி.
அடுத்து,
மோடி என்ன செய்ய வேண்டும் என்று, நமது மகாகவி பாரதி அன்றே சொல்லிச் சொன்றுள்ளார்.
” வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் – அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். “
ஆம்,
இன்று வெள்ளிப் பனி மலையின் மீது நாம் உலாவ அல்ல சும்மா எட்டிக்கூட பார்க்க முடியாத நிலை. பாகிஸ்தான், சைனா மட்டுமல்ல….. இந்தியப் பற்றற்று வாழும் சில காஷ்மீரக் கும்பலும் தான். காஷ்மீரின் தனி அந்தஸ்தத்தை நீக்க வேண்டும்.
மேலைக் கடலில் இத்தாலிக்காரன் வந்து இங்குள்ள மீனவன குடும்பத்தின் தாலி அறுக்கிறான். கசாப் வந்து மும்பையை சிதற அடிக்கிறான்.
பள்ளித் தளம் அமைக்க ஔரங்கசீப் செய்த அட்டூழியத்தை வரைபடக் கண்காட்சி கூட வைக்க முடியா நிலை..
ஆகையால் இவற்றையெல்லாம் வென்றெடுக்க வேண்டும் மோடி.
பொருளாதார முன்னேற்றத்திற்கு விஞ்ஞானிகளும், தொழில் முனைவோரும் படும் பாட்டிற்கு பாதுகாப்பாக இருத்தல் தாண்டி, மேற் சொன்ன விஷயங்கள் முக்கியம்.
அப்போது தான்,
தளர்ந்து போய் தன்மானம் இழந்த நாம்,
நிமிர்ந்து நேர்கொண்டு பார்வை பார்த்து,
தோள் தட்ட முடியும்,,,,, “ இந்தியண்டா….” என்று.
”””’’’’’
மோடி , ஆர் எஸ் எஸ் படி தான் ஆட்சி செய்வார் என்கிறார்கள்
அது உண்மையெனில், அதை விட நல் செய்தி எதுவும் இருக்க முடியாது.
டில்லி இமாமின் வீடு தேடி போய் ஓட்டுப் பிச்சை கேட்ட சோனிக் கட்சி ஆளலாம், ஆனால், இந்த தேசத்தின் கங்கை காவிரி மைந்தர்கள் ஆளக்கூடாதா என்ன..?
இந்தியாவின் பெயரை, “இந்துஸ்தான்” என்று மாற்ற முடிந்தால் இன்னும் சந்தோஷமே.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
கீழ் கண்ட பாடலை, தமிழக சோம்பேறி பா.ஜ.கட்சியினர் , மோடிக்கு மொழி பெயர்த்துக் கொடுத்து தங்கள் பாவத்தைப் போக்குதல் நன்று.
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் \n
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
– மகாகவி பாரதியார்…
- வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7
- பயணச்சுவை! 6 . முடிவுக்கு வராத விவாதங்கள் !
- மராமரங்கள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 4
- கையறு சாட்சிகள்
- தொடுவானம் 16. இயற்கையின் பேராற்றல் காதல்.
- தனியே
- 2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது
- ‘கா•ப்கா’வின் பிராஹா -1
- தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.
- பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்
- வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்
- அந்த நாளும் ஒரு நாளே.
- நீங்காத நினைவுகள் 46
- சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி
- திண்ணையின் இலக்கியத் தடம் -35
- ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்
- மோடி என்ன செய்ய வேண்டும் …?
- விளைவு
- சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு