(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(Roots & Leaves Themselves Alone)
வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வேர்களும், இலைகளும் தமக்குள்
தனித்தே உள்ளன !
மனிதர்க்கும்
வனிதை யர்க்கும் நறுமணங்கள்,
வனத்தி லிருந்தும்,
நீர்க் குளத்தருகி லிருந்தும்
வருகின்றன !
சூரியன் காலை எழும்போது
மார்புச் சிவப்பு
காதல் நினைவில் மலர்ந்து
கை விரல்கள்
திராட்சைக்
கொடிகளை விடவும்
இறுகச் சுற்றிக் கொள்ளும் !
மறைந்த வண்ணம்,
பறவை இனம் வாய் பிளந்து
கூச்சலிடும் !
கடற் பயணிகளே !
நிலத்தடித் தென்றலும்,
நேசத் தனமும்,
அலை அடிக்கும்
கடற் கரைகளி லிருந்து
புறப்படும் உமக்காக.
பனிச்சூழ்
பெர்ரிக் கனிகள்
கூதற் பருவ காலம்
முடிந்த வுடன்
வயற்புறம் சுற்றித் திரியும்
வாலி பருக்கு
வழங்கப் படும் புதியாய் !
நீர் யாராய் இருப்பினும்,
(வசந்த காலம் வந்தவுடன்)
உன் முன்பும்
உன்னுள்ளும் வைக்கப்படும்
காதல் மொட்டுகள் !
பண்டை விதிக்குப் படிந்து தான்
விண்டு மலரும் மொட்டுகள்.
பரிதியின் கணப்பை
மொட்டு களுக்கு நீ அளித்தால்,
வாயிதழ் திறக்கும் அவை
வடிவம் பெற்று,
வர்ணம் மேவி,
வாசனை வீசும் உன்மேல் !
ஈரடிப்பில் நீ நோயுற்றால்,
மொட்டு மலராகும்,
காய்த்துக் கனி யாகும்
சாய்ந்த கிளை யாகும்
உயர் மரங்களாய் !
- வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7
- பயணச்சுவை! 6 . முடிவுக்கு வராத விவாதங்கள் !
- மராமரங்கள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 75 வேர்களும், இலைகளும் தனித்தே உள்ளன !
- முக்கோணக் கிளிகள் படக்கதை – 4
- கையறு சாட்சிகள்
- தொடுவானம் 16. இயற்கையின் பேராற்றல் காதல்.
- தனியே
- 2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது
- ‘கா•ப்கா’வின் பிராஹா -1
- தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.
- பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்
- வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்
- அந்த நாளும் ஒரு நாளே.
- நீங்காத நினைவுகள் 46
- சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி
- திண்ணையின் இலக்கியத் தடம் -35
- ஹிட்லர் பாட்டியும் ஒரு சிண்டரெல்லா தேவதையும்
- மோடி என்ன செய்ய வேண்டும் …?
- விளைவு
- சீதாயணம் படக்கதை நூல் வெளியீடு