வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80
(1819-1892)

ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(Earth, My Likeness)
(I dreamed in a Dream)

1. எனக்குப் பிடித்த பூகோளம்

2. கனவுக்குள் கனவு கண்டேன்

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

1. எனக்குப் பிடித்த பூகோளம்.

நான் விரும்பும் பூமியே !
ஓய்ந்தது போல் தோன்றினும்
உருண்டு திரண்ட பெருங்கோள் நீ !
அது மட்டுமல்ல நான்
ஐயுறுவது !
ஏதோ ஒன்று உனக்குள் தீவிரமாய்
ஒடுங்கிக் கிடக்குது !
ஒருநாள் அது வெடித்து விடும்
தகுதி படைத்தது !
அதை வார்த்தையில்
அறிவிக்கும்
திறமை அற்றவன் நான் !
எனதிந்தப்
பாடல் களிலும் அவற்றை
எழுதிட இயல வில்லை !

2. கனவுக்குள் கனவு கண்டேன்

கனவுக்குள் ஒரு கனவு
கண்டேன் !
காசினியில் பிறர் எல்லாம்
தாக்கினும்
தோற்காத ஓர் நகரைக்
கண்டேன் !
அந்த நகரமே
என் நண்பர் வாழும்
புதியதோர் நகரம் !
எதுவும் மிஞ்ச வில்லை
உறுதி யான
அதன் கவர்ச்சித்
தரத்துக்கு மேலாக !
பிற நகரங் களுக்கோர்
வழிகாட்டி அது !
மனிதச் செயல்களின்
ஒவ்வோர் கண நிகழ்ச்சியும்
ஒருமணி நேரத்தில்
தெரிந்து விடும்,
கண்ணோக்கிலும்,
வாக்கு மொழியிலும் !

+++++++++++++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 18, 2014

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *