அடுத்து வருவது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்.
8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ்ச்சூழலில் பக்தி
இயக்கத்தில் மிக முக்கியமானவர் என்பதுடன் பெண்ணியப்பார்வையில்
ஆண்டாளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு,
பெரியாழ்வார் என்கிற
விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக்
கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக்
கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை”
என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை
நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனறும் அழைக்கப்படும்
ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.
விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத
நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார் எம்பெருமானுக்கு
கட்டிய மாலையைச் சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய
தோற்றம் கண்டு “நான் அவனுக்கு இணையோ? இல்லையோ?” என்று
எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று
தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும்
முன் மாலையைக கழற்றி மீண்டும் பந்தாகச் சுருட்டி வைப்பாள். இப்படி
பல நாள் நடந்தது.
மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு
மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக்
கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை
மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண
நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்கு
இணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,
தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத்
திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,
திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். இவற்றுள்
அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு
ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மண்வாளன் என்கிறாள்.
அரங்கனும்,
“கோதையை திருவரங்கத்துத்
திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள்
கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.
ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம்
சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப்
பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச்
சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில்
உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.
ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட
பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த
சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை
பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.”
ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை
அடைந்தனர்.
ஆனாலும், பெரியாழ்வாருக்கு சந்தேகம் தீரவில்லை. நிஜமாகவே ஆண்டாளை சுவாமி கல்யாணம் செய்துகொள்வாரா, கனவில் வந்தார் என்று சொன்னால் யாரும் சிரிக்கமாட்டார்களே.. என்றெல்லாம் அவருக்குள் ஆயிரமாயிரம் சந்தேகங்கள். தயக்கத்துடன் ஆண்டாளை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
ஊர் எல்லையில் ஏராளமான வேத விற்பன்னர்கள், பொதுமக்கள். திரளாக கூடியிருப்பவர்களை பார்த்ததும் ஏதோ திருவிழா என்று நினைக்கிறார் பெரியாழ்வார். வந்திருப்பது பெரியாழ்வாரும் ஆண்டாளும் என்று தெரிந்துகொண்டதும் வேத விற்பன்னர்களும் கோயில் முக்கியஸ்தர்களும் ஓடோடி வந்து வரவேற்று வணங்குகிறார்கள். ‘‘தன்னை மணந்துகொள்ள சாட்சாத் மகாலட்சுமியே வருவதாக எங்கள் கனவில் அரங்கநாத பெருமான் நேற்று சொன்னார். மகாலட்சுமியை வரவேற்கத்தான் திரண்டிருக்கிறோம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை பெருமாள் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பதால் கல்யாண வைபவத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.
அரங்கனின் திருவுளத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறார் பெரியாழ்வார். அன்பும் காதலும் பெருக்கிட, ‘ரங்கநாதா’ என்று கூறியபடியே கருவறைக்குள் ஓடுகிறாள் ஆண்டாள். அங்கேயே ஆண்டவனுடன் ஐக்கியம் ஆகிறாள். ஆடிப்பூர நாயகியான ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களை நமக்கு தந்தருளியுள்ளார். எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இந்த பாசுரங்களில் உணர்த்தியிருக்கிறார். திருப்பாவையில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பத்து பாடல்களும் திருமண பாடல்கள் ஆகும். இப்பாடல்களை பக்தியுடன் படிப்பதால் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி சுபமங்கள பிராப்தம் கூடி வரும். என்று மக்களின் நம்பிக்கை.இன்றும் தொடர்கிறது.
–
கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்தி ருக்குமோ,
மருப்பொசித்த மாதவன்றன்
வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெண்சங்கே!
கண்ணனின் கை விட்டு நீங்காது இருக்கும் வெண்சங்கிடம் கண்ணனின் (கடவுள்) இதழின் சுவை பற்றிய அனுபவத்தைக் கேட்கின்றாள் ஆண்டாள்.
இதில் கவனிக்க வேண்டியது, கண்ணனின் ஒரு கரத்தில் வெண்சங்கு, மற்றொரு கரத்தில் திருஆழி எனப்படும் சக்கரம்.திருஆழி அவ்வபோது பகைவர்களை அழித்து கண்ணனின் கரத்திலிருந்து அகன்று மீண்டும் அவன் கரத்தில் அமரும்.ஆனால் வெண்சங்கோ ஒருபோதும் கண்ணனின் கரத்தை விட்டு அகலவில்லை. அதாவது கரத்தில் ‘நிரந்தரமாக’ இருக்கும் வெண்சங்கை வாயில் ஊதி எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது, வெண்சங்ககு.ஆக கண்ணனிடம் பிரியாமல் இருக்கும் வென்சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள் அவனின் இதழ் சுவை எப்படி என்ன? ஆண்டாளின் கற்பனையும் மொழிவளமும் அலாதியானவை..
ஆண்டாளின் பக்தி உணர்வு காதலாகிப்பிறகு அதனோடு ஒருங்கிணைந்த காமமாகி, அனைத்தும் பேதமறக்கலந்துவிட்ட நிலையில்,”வாரணமாயிரம் சூழ வலம் செய்து”மதுசூதனனின் கைத்தலம் பற்றுவதான கனவும் அவளது ஆழ்மனதில் ஏற்பட்டபின்,கரம் பிடித்த மணவாளனோடு கூடி இல் வாழ்க்கை நடத்துவதான கற்பிதப்புனைவுகளையும் அவள்,கைக்கொள்ளத்தொடங்கி விடுகிறாள்.அதற்கான தடயங்களையும் நாச்சியார் திருமொழியில் காண முடிகிறது.
சித்தாந்தங்களை கோட்பாடுகளை ஆண்டாள் உடைக்கவில்லை.
கணவன் மனைவி , தலைவன் தலைவி என்ற மரபுக்குள் நின்று
தன் உடல்வெளியை திறந்தவள் ஆண்டாள்
- இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்
- சதுரங்க வேட்டை
- வேலை இல்லா பட்டதாரி
- சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?
- நாய்ப்பிழைப்பு
- முக்கோணக் கிளிகள் – 14
- காது கேளாமை, வாய் பேசாமையைக் குணப்படுத்தும் சிகிச்சை இரகசியங்கள் ( சீனா வெற்றிகரமான தேடல் அனுபவங்கள்)
- மனம் பிறழும் தருணம்
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 13
- மருதாணிப்பூக்கள்
- இப்படியும்……
- தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை
- என்றோ எழுதிய வரிகள்
- தினம் என் பயணங்கள் -27 Miracles and Angels !
- கவிதை
- கவிதாயினியின் காத்திருப்பு
- மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு
- தொடுவானம் 26. புது மனிதன் புது தெம்பு
- பரம வீரர்கள் – கார்கில் வெற்றி தினம்
- அருளிச்செயல்களில் அறிவுரைகளும் அரசளித்தலும்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84
- மன்மதனிடம் அம்புகள் தீர்ந்துவிட்டன
- ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’
- நாடக விமர்சனம் – தெனாலிராகவன்
- திரைவிமர்சனம் – பப்பாளி
- கவனங்களும் கவலைகளும்
- மொழிவது சுகம் ஜூலை 26 2014