அணுகுண்டு வீச்சு எனும் காலத்தின் கட்டாயம்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

ஹிரோஷிமா, நாகசாகி மேல் அணுகுண்டு வீசபட்டு இன்றுடன் 59 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. ஆண்டுகள் பல கழிந்தாலும் அந்த குண்டுவீச்சு பற்றிய சர்ச்சைகள் ஓயவில்லை. அக்குண்டுவீச்சு தவறானதே என அக்காலகட்டத்தை பற்றி அறியாத இளம் தலைமுறை நம்பிகொண்டிருக்கிறது. அதனால் அணுகுண்டுகள் வீசபட்டதற்கான காரணம், மற்றும் சூழலை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஹிரோஷிமா மேல் வீசப்பட்ட குண்டால் 80,000 முதல் 140,000 பேர் வரை பேர் மரணம் அடைந்தார்கள். நாகசாகியில் வீழ்ந்த குண்டால் 74,000 பேர் மரணம் அடைந்தார்கள். இக்குண்டுகள் வீசபட்ட சூழல் என்ன?

அணுகுண்டு விசப்பட்ட காலகட்டத்தில் ஏகாதிபத்திய ஜப்பான் ஆசியாவில் பாதியை கைப்பற்றி இருந்தது. பிலிப்பைன்ஸ், கொரியா, சீனா, மஞ்சூரியா, மலேசியா, சிங்கபூர், பர்மா எங்கும் அதன் படைகள் பரவி இருந்தன. கிழக்கே பசிபிக் தீவுபோரில் அமெரிக்கா ஜப்பானை முறியடித்து இருந்தபோதும், மேற்கே ப்ரிட்டன் இந்திய எல்லை அருகே ஜப்பானிய படைகளை தடுத்து நிறுத்தி இருந்தபோதும் ஆசியாவின் பெரும்பகுதி அன்று ஜப்பானிய படைகளிடம் தான் இருந்தது.

இப்போர் நிகழ காரணம் ஜப்பானின் ஏகாதிபத்திய வெறியே. மலேயா, பர்மா, பிலிப்பைன்ஸ் மேல் எல்லாம் படை எடுக்க ஜப்பானுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. அதேபோல் தன்னுடன் போரில் இறங்காத அமெரிக்கா மேல் பியர்ல் ஹார்பர் குண்டு வீச்சு மூலம்  போரை துவக்கியது ஜப்பான். அமெரிக்கா, ப்ரிட்டன், ரஷ்யா முதலான நாடுகள் மாபெரும் இழப்புக்கு பின் ஜெர்மனியை தோற்கடித்து இருந்தார்கள். ஜப்பானின் கடற்படை முறியடிக்கபட்டிருந்தபோதிலும் அதன் தரைப்படை மிக வலுவானதாக இருந்தது

இந்த சூழலில் ஜெர்மனியை தோற்கடித்தபின் ஜப்பானை சரணடைய வைக்கும் முயற்சிகள் துவங்கின. இப்பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்த காலகட்டத்தில் ஒவ்வொரு மாதத்திலும் சுமார் 1 லட்சம் முதல் 2.5 லட்சம் ஆசியர்கள் ஜப்பானால் கொல்லபட்டு கொண்டிருந்தார்கள். அன்றைய ஜப்பானியர்கள் மன்னருக்காக மரணமடைவதை தம் புனித கடமையாக கருதினார்கள். போரில் தோற்ற ஜப்பானிய தளபதிகள் சரணடைவதை விட தற்கொலை செய்துகொள்வதை தேசிய கடமையாக் கருதினார்கள். ஜப்பான் அருகே உள்ல ஐவோ ஜீமா மற்றும் ஓகினாவா எனும் குட்டிதீவுகளை பிடிக்கும் முயற்சியில் நேசநாடுகள் மலைக்க வைக்கும் பேராழிப்புகளை சந்தித்தன. 18,000 அமெரிக்க வீரர்கள் ஐவோ ஜிமாவை பிடிக்க நடந்த போரில் உயிரிழந்தார்கள். ஒகினாவா போரில் 78,000 உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

தான் பிடித்த நாடுகளில் ஜப்பான் ஆடிய வெறியாட்டம் மனிதரால் கற்பனையும் செய்து பார்க்க இயலாதது. சீனாவின் தலைநகர் நான்கிங்கை பிடித்து சுமார் 7 லட்சம் சீனரை படுகோரமான முறையில் கொன்று கணக்குவழக்கின்றி பாலியல் பலாத்காரங்களை நிகழ்த்தி, தலைவெட்டும் திருவிழாக்களை நிகழ்த்தினார்கள் ஜப்பானியர்கள். குடும்பம், குடும்பமாக சீனர்களை பிடித்து தந்தையை விட்டு மகளை பலாத்காரம் செய்ய சொல்லியும், மகனை விட்டு தாயை பலாத்காரம் செய்ய சொல்லியும் மறுக்கும் குடும்பத்தினர்களை சித்த்ரவதை செய்து கொன்றும் வந்தார்கள். நாங்கிங்கில் இருந்த ஜெர்மானிய நாஜி அதிகாரிகளே பதைபதைத்து சீனர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் அளவு வெறியாட்டம் அங்கே நடந்தது.

இந்த சூழலில் ஜப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் நேச நாட்டுபடைகள் இறங்கினால் கடைசிமனிதன் வரை போராட ஜப்பான் தயாராக இருந்தது. அமெரிக்க முப்படை தளபதிகள் கணிப்புபடி 12 லட்சம் அமெரிக்க வீரர்களும் 4 லட்சம் ஜப்பானியர்களில் அத்தகௌய போரில் உயிரிழப்பார்கள் என கணிக்கபட்டது. ஒப்பீட்டளவில் ஒட்டுமொத்த உலகபோரில் அன்றுவரை அமெரிக்கா 292,000 வீரர்களை இழந்திருந்தது.

சமாதானம் பேச அமெரிக்கா அனுப்பிய ஒவ்வொருவரையும் ஜப்பானியம் ராணுவம் கொன்றது. ஆசியா முழுக்க விடுவிக்கபடவேண்டும், அமெரிக்க ராணுவ மற்றும் ஜப்பானிய உயிரிழப்புகள் முடிந்தவரை மட்டுபடுத்த வேண்டும் என்ற நிலையில் அமெரிக்க அதிபர் ட்ருமன் அணுகுண்டுவீச்சை தேர்வு செய்தார்.

அணுகுண்டுவீச்சில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தபோதும் அதற்கு சமமாக அல்லது அதையும் விட அதிக அளவிலான உயிரிழப்புகள் சாதா குண்டுவீச்சிலேயே நிகழ்ந்தன. ஜெர்மானிய நகரமான ட்ரெஸ்டன் மேல் நிகழ்ந்த விமானதாக்குதலில் ஒரே நாளில் 25,000 பேர் உயிரிழந்தார்கள். டோக்கியோ மேல் நிகழ்ந்த குண்டுவீச்சில் 1 லட்சம் பேர் உயிரிழந்தார்கள். அதுபோக உலகபோரால் நிகழ்ந்த பசி, பஞ்சம், பட்டினியில் பல மில்லியன் மக்கள் உயிரிழந்தார்கள்.

இந்த சூழலில் ஜப்பானில் கால் பதிக்காமல் ஜப்பானை தரைமட்டமாக்க முடியும் என்பதை காட்ட முதலில் ஹிரோஷிமா மேல் அணுகுன்டு வீசபட்டது. அதுநாள் வரை போரால் அதிகம் பாதிக்கபடாத நகர் ஹிரோஷிமா. பெரும் துறைமுகங்களில் ஒன்று. ஜப்பானிய ராணுவ பட்டாலியனும் அங்கே இருந்தது. போரால் பாதிக்கபடாத நகர் மேல் குண்டு வீசினால், குண்டுவீச்சின் பேரழிவை ஜப்பானியர் உணர எதுவாக இருக்கும் என்ற நோக்கில் அந்நகரம் தேர்ந்தெடுக்கபட்டது. அணுகுண்டு வீசபடபோவது உறுதி என்ற நிலையில் அணுகுன்டை கட்டமைத்த விஞ்ஞானிகளில் 88 பேர் அதை தடுத்து நிறுத்த கோரி விண்ணப்பம் கொடுத்தார்கள். ஆனால் அது நிரகாரிக்கபட்டது.

ஹிரோஷிமா மேல் அணுகுன்டு விழுந்து முழு நகரமும் பற்றி எரிந்தது. கொத்து, கொத்தாக மக்கள் மடிந்தார்கள். ஆனால் அப்போதும் ஜப்பான் சரண்டைய விரும்பவில்லை. வெடித்தது அணுகுன்டா என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு இருந்தது. அதன்பின் “அணுகுண்டு ஆய்வு கமிட்டி” ஒன்றை ஜப்பானிய அரசு அவசர, அவசரமாக அமைத்தது. அக்கமிட்டி அளித்த அறிக்கையில்

1. அணுகுண்டு வீசும் டெக்னாலஜி அமெரிக்காவிடம் இல்லை
2. அப்படியே இருந்தாலும் அத்தனை ஆபத்தான அணுகுண்டை பசிபிக் கடலை தாண்டி ஜப்பானுக்கு அவர்கள் கொன்டுவந்திருக்க மாட்டார்கள்
3. ஆக வெடித்தது அணுகுண்டு அல்ல

என அறிக்கை கொடுத்தது

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரூமன் ஒரு எச்சரிக்கை விடுத்தார். அதில்

“16 மணிநேரத்துக்கு முன் ஹிரோஷிமா மேல் அணுகுண்டை வீசினோம். ஜப்பான் சரண்டைந்து போரை நிறுத்தாவிடில் ஜப்பான் கற்பனையும் செய்திராத சர்வநாசத்தை ஜப்பானுக்கு கொன்டுவருவோம்.ஒவ்வொரு நகரமும் இடிந்து தரைமட்டமாகும்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதை அடுத்து ஜப்பான் என்ன செய்வது என புரியாமல் குழம்பி நின்றது. தளபதிகள் பலரும் சரண்டைவதை எதிர்த்தார்கள். இந்த சூழலில் வெடித்தது அணுகுன்டுதான் என்பதை நிருபிக்கவும், சரண்டைய சொல்லும் தரப்பின் கருத்தை வலுப்படுத்தவும் நாகசாகி மேல் இரண்டாவது அணுகுண்டை அமெரிக்கா வீசியது.

அமெரிக்காவிடம் அன்று இருந்தது இரண்டே இரண்டு அணுகுண்டுகள் தான். ஆனால் அது ஜப்பானுக்கு தெரியாது. பெருமளவில் அணுகுண்டுகள் இருந்ததாக நம்பி ஜப்பானிய மன்னர் பேரழிவை தவிர்க்க சரணடையும் முடிவை எடுத்தார். சர்வநாசம் தவிர்க்கபட்டது. அணுகுண்டு வீசபட்டது இன்றையகாலகட்டத்தில் விமர்சிக்கப்ட்டாலும் அன்றைய சூழலில் ஐந்து கோடி பேர் உயிரிழந்த இரன்டாம் உலகபோர் இப்படி முடிவுற்றதை பாராட்டி உலக பத்திரிக்கைகள் தலையங்கம் எழுதின. பிலிப்பைன்ஸ், பர்மா, மலேயா, கொரியா, சீனாவில் பல கோடி மக்கள் ஜப்பானிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதை கொன்டாடினார்கள். பல புதிய நாடுகளும், அரசியல் அமைப்புகளும் ஆசியாவில் அதன்பின் தோன்றின. உலகம் உலகபோர் முடிந்ததை எண்ணி நிம்மதிபெருமூச்சு விட்டது.

மற்ற்படி அணுகுன்டு வீசபட்டது சரி  என என்றும் கூற முடியாது. யுத்தகளத்தின் முடிவுகள் அனைத்தும் துரதிர்ஷ்டவசமானவை. இருப்பதில் குறைந்த தீமையை தேர்ந்தெடுக்கும் நிலையே களத்தில் நிற்கும் படைகளுக்கு வருகிறது. அவ்விதத்தில் அணுகுன்டு வீச்சு சரியா, தவறா என கணிப்பதை விட அது காலத்தின் கட்டாயம் என பொருள் கொள்வதே பொருத்தமானது.

Series Navigationவெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)“ஒன்பதாம்திருமு​றைகாட்டும்சமுதாயச்சிந்த​னைகள்”
author

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //அமெரிக்காவிடம் அன்று இருந்தது இரண்டே இரண்டு அணுகுண்டுகள் தான். ஆனால் அது ஜப்பானுக்கு தெரியாது. //

    Two more Fat Man assemblies were readied. The third core was scheduled to leave Kirtland Field for Tinian on August 15,[205] and Tibbets was ordered by LeMay to return to Utah to collect it.[206] Robert Bacher was packaging it for shipment in Los Alamos on August 14 when he received word from Groves that the shipment was suspended.[207]

    en.wikipedia.org/wiki/Atomic_bombings_of_Hiroshima_and_Nagasaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *