தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்
தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
வரவேற்பு தொடங்கி திட்டமிட்டு வகையாக வரிசைபிரித்து, அவரவர்க்கு ஏந்த அட்டைகளைக் கொடுத்து, வழி காட்டி அமரச் செய்தது, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அழைத்துக் சென்றது அவரவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கியது என ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக நடந்தேறின.
உலகம் முழுக்க பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் இலக்கிய அமைப்புகள் பல்வேறு குழுக்களாக தங்களால் இயன்ற அளவில் தமிழ்ப்பணி செய்துவரும் நிலையில் அனைவரையும் ஒன்றினைக்கும் மாநாட்டினைக் கூட்டாமல் சொந்த ஊர் கோயில் திருவிழாவில் கூடி ஒருவருக்கொருவர் கலந்து பேசி, அளவளாவி மகிழும் இலக்கியத் திருவிழாவாக ஏற்பாடு செய்தமைதான் இந்த கூடலின் வெற்றி.
மேதகு மேளாள் குடியர•த் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொடங்கி வைத்து, திருக்குறளின் மேன்மையையும், தமிழை எல்லா நிலைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்ற அறை கூவலையும் விடுத்துச் சென்றமை எல்லோர் மனங்களிலும் நீங்காமல் நின்றுவிட்டன.
ஒவ்வொரு அமர்வும் சீரிய முறையில் திட்டமிடப்பட்டு சரியானவர்களை தேர்வு செய்து பயன்படுத்திக் கொண்டமை பாராட்டுக்குறியன.
பல்வேறு அவர்வுகள் பல தலைப்புகளில் பேசப்பட்டாலும், முதல் அமர்வு தலைப்பான “இன்றைய தேவையும் இலக்கியமும்” என்பதை மையமாக வைத்தே அனைத்து அமர்வுகளும் நடத்திச் செல்லப்பட்டன.
அறம் சார்ந்த கருத்துகள் குறைந்து வருகிற சூழலில் அறக் கோட்பாட்டை வலியுறுத்திய இலக்கியங்களை இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தமிழ்ச் சூழல் எல்லா துறைளிலும் எப்படி சீரழிந்து கிடக்கின்றது என்பதையும் ஒப்புக்காட்டி அதை மீட்டெடுக்கும் வழிகளையும் உரையாளர்கள் கூறியவை அனைவரும் பின்பற்ற வேண்டியவை.
வாசிப்பு பழக்கத்தை அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் பரப்பி, தாய் மொழியாம் தமிழை வாசிக்கவும் நேசிக்கவும் கற்றுத்தர வேண்டும் என்ற கருத்துகளும் முக்கிய இடம் பெற்றன.
திரைத் துறையிலும் தரமான படைப்புகளை உருவாக்க தமிழ் மக்கள், அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து வரவேற்று அவர்களை ஆதரிக்க முன்வரவேண்டும் என்ற கருத்தும். நல்ல படம் எது கெட்ட படம் எது என்று பிரித்து புரிந்துணரும் பக்குவத்தை தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வடையச் செய்ய வேண்டும் போன்ற கருத்துகளும் சிறப்பாக பேசப்பட்டன.
சமயத் தமிழ், ஊடகத் தமிழ் என விரிவாக அறிஞர் பெருமக்கள் பேச்சிகளில் பல புதிய தகவல்களை அறிய முடிந்தது.
நிகழ்ச்சியின் மணி மகுடமாகத் திகழ்ந்தது. “என்னைச் செதுக்கிய இலக்கியம்” எனும் தலைப்பில் அரசியல் தலைவர்களை பேச வைத்த ஏற்பாடுதான். அரசியல் மேடைகளில் நீட்டி முழக்கியவர்களை இலக்கிய மேடையில் ஏற்றிவிட்டு அவர்களின் இலக்கிய அனுபவத்தை, தாகத்தை பார்க்கின்ற பார்வையாளர்கள் மாந்த கொடுத்தமை உண்மையிலேயே ஒரு புதுமையான நிகழ்ச்சி. அவர்களும் அந்த எல்லைக்குள் நின்று (இலக்கிய வரையரைக்குள் நின்று) தங்களை பட்டை தீட்டிக் கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை ஆழமான இலக்கிய உணர்வு – வாசிப்பின் நேசிப்பு – அப்பப்பா பிரமிப்பாகத் தானிருந்தது.
குறிப்பாக வைகோ, திருச்சி சிவா, தொல் திருமாவளவன், பழ கருப்பையா ஆகியோரின் ஆற்றல் அரங்கமே அதிரும்படியாக வெளிப்பட்டது.
பழ கருப்பையாவின் ஆணித்தரமான பேச்• வள்ளலார்தான் முற்போக்கு இயக்கங்களுக்குகெல்லாம் முன்னோடி என்பதை நிறுவியது.
தொல் திருமாவளவன் அவர்களும் தான் இலக்கியத்தின் மூலம் எவ்வாரெல்லாம் செதுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை அம்மாவின் அன்பில் தொடங்கி அப்பா கொண்டு வந்த துண்டுப் பிர•ரம் என அடுக்கடுக்காக அடுக்கி, தனக்கான அங்கீகாரமாக இந்த மேடை விளங்குவதை சிலாகித்து பேசியதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இப்படி யாரையும் புரந்தள்ளாமல் தமிழ் விழாவாக இருந்தாலும் சரியான பிரிதிநிதித்துவத்தோடு சிறப்பாக நடத்தியமைக்கு பாராட்டுகள்.
ஒட்டு மொத்தமாக பார்த்தால், ஆசிரியர் திரு. மிகு. கே. வைத்தியநாதன் அவர்கள் அறிவிப்பிலும் வரவேற்பிலும் சொன்னது போல தமிழால் இனைவோம் தமிழுக்காக இணைவோம். என்ற உயரிய நோக்கத்தோடு கட்சி, மதம், சாதி என எல்லா வேறுபாடுகளையும் கடந்து, தமிழால் ஒன்றினைந்து ‘தமிழ்த்தாய்’ தேரை வடம் படித்து இழுத்து மகிழ்ந்த திருவிழா என்றால் மிகையாகாது. இதன்மூலம் மற்ற இலக்கி அமைப்புகளுக்கும் நல்ல அனுபவம். விழாக்களை எப்படி நடத்த வேண்டும். தமிழுக்கு தொண்டு செய்ய எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கும் நல்ல முன்னுதாரணமாக இந்த விழா விளங்கியது.
விழாவினை நடத்திய தினமணிக்கும், குறிப்பாக ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களுக்கும் பங்களிப்பு நல்கிய நிறுவனங்கள் அனைவருக்கும் நன்றிகள்
மு. பால•ப்பிரமணியன்
செயலர்
புதுவைத் தமிழ்ச் சங்கம்
9, சோலைநகர் முதன்மைத்தெரு
சோலை நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி 605 003

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *