வாழ்க்கை ஒரு வானவில் – 17

This entry is part 5 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

 

“ஒருவேகத்துல விபரீதமா ஏதாவது செஞ்சு வம்பிலே மாட்டிக்காதே, ராமு! என்ன செய்யப்போறேஅவன் வீட்டுக்குப் போய்?” என்று சேதுரத்தினம் கவலையுடன் வினவினான்.

“ஆபத்துலசிக்கிக்கிற மாதிரி அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டேன், சேது சார். சும்மா நாலுதட்டுத் தட்டினாப் போதும். ஒண்டியாளா நான் மட்டும் அவனைச் சமாளிக்க முடியாதில்லையா? அதுக்குத்தான் உங்களையும் என்னோட துணைக்கு வரச் சொல்றேன்…” என்று ராமரத்தினம்பதில் சொன்னான்.

“நாலுதட்டுத் தட்டுறதுன்னா? அவனோட கையைக் காலை முறிக்கிற மாதிரியா?”

“பயப்படாதீங்க, சேது சார். அப்படி செஞ்சாலும் ஒண்ணும் தப்பே இல்லை. அந்தப் பொறுக்கி என் தங்கையோடஆத்மாவையே குதறி யிருக்கான். அவனைக் கொன்னே போட்டாலும் தகும். ஆனா அது மாதிரியெல்லாம் அசட்டுக் காரியம் எதுவும் பண்ற எண்ணம் எனக்கு இல்லை. கொலை பண்ணிட்டுத்தப்ப முடியாதுன்றதாலதான். இல்லேன்னா அதுக்கும் நான் ரெடிதான்! செமத்தியா நாலுசாத்துச் சாத்திட்டு வரணும். ஊமைக் காயத்துல அந்த ஆளு ஒரு பத்து நாளாவது படுத்தபடுக்கையாக் கிடக்கணும். அடிக்கக் கூடாத எடத்துல அடிச்சு, இனி அவன் எந்தப் பொண்ணுகிட்டவும் வாலாட்ட முடியாதபடி பண்ணணும். இது மாதிரி கற்பழிக்கிற பொறுக்கிகளுக்குஅப்படித்தான் தண்டனை குடுக்கணும்…” – ராமரத்தினத்தின் நெற்றி நரம்புகள்புடைத்திருந்தன. அவன் புருவங்கள் மேலும் கீழும் ஏறி இறங்கின. விழிகள் கணத்துள்சிவந்து போயின. அவன் உடம்பே அதிர்ந்துகொண்டிருந்தது.

“உணர்ச்சிவசப்படாதே, ராமு. அவனை அடிக்கிறது மட்டுமே உன்னோட நோக்கம்னா நான் நிச்சயமா உனக்குஉதவத் தயாரா யிருக்கேன். உன் சின்னத் தங்கையோட கள்ளங்கவடு இல்லாத முகத்தைப்பார்த்தப்ப எனக்கு வேதனை பிடுங்கித் திங்கிற மாதிரிதான் இருந்தது. பாவம் பொண்ணு. … ஆனா அவனை அடிக்கிறதுக்கு முந்தி நாம திட்டமிட வேண்டிய சில விஷயங்கள் இருக்கு. …”

“சொல்லுங்க…”

“அவன்தன்னந்தனியா இருக்கிற நேரம் எதுன்னு முதல்ல கண்டுபிடிக்கணும். அவன் மட்டும்தான்அந்த வீட்டில வசிக்கிறானான்னு தெரியணும்…அடிச்சது இன்னார்னு அவனால கண்டுபிடிக்கமுடியாதபடி ஏதாவது திட்டமாச் செய்யணும். ஆனா ஒண்ணு. ஆள் வெச்செல்லாம் அடிக்கக்கூடாது. நாமேதான் அடிக்கணும். அவன் எங்கேயாவது வேலை செய்யறானான்னுகண்டுபிடிக்கணும். ரெண்டு மூணு நாள் அவனை ஃபாலோ பண்ணணும். இதையெல்லாம் பண்ணினபிற்பாடுதான் அவனை அடிக்கணும்…அடிச்சது யாருன்னு அவனுக்குத் தெரியக்கூடாதுன்னாஅதுக்கு என்ன செய்யணும்னு புரியல்லே…”

“யோசிக்கலாம், சேது சார்.”

பேருந்துநிறுத்தம் வந்ததும் இருவரும் நின்றார்கள். சேதுரத்தினத்தின் பேருந்து முதலில்வந்தது. அவன் ஏறிப் போனதும் ராமரத்தினம் தன் வீடு நோக்கி நடக்கலானான்.

`தன்னைச்சூறையாடியது யார் என்பது கோமதிக்கு வேண்டுமானால் தெரியா திருக்கலாம். ஆனால் அந்தரவுடிக்குக் கோமதியைத் தெரிந்திருக்குமோ? … ஆள் இன்னான் என்பதைக்கண்டுபிடித்துவிட்டது கோமதிக்குத் தெரியக்கூடாது. …’

மறுநாள் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாக ராமரத்தினம் வீட்டை விட்டுக் கிளம்பினான்.

“என்னடாராஜா! சாயந்தரம்தான் லேட்டா வர்றேன்னா, காலையிலேயும் சீக்கிரம் கிளம்புறியே” என்றபருவதத்தின் அங்கலாய்ப்புக்கு, “என்னம்மா செய்யறது? வேலை இருக்கு!” என்று பதில்சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.

முத்துவின்வீட்டுக்கு அருகில் இருந்த தேநீர்க் கடையில் தேநீர் குடித்தபடி ராமரத்தினம் அவன்வீட்டைக் கண்காணித்தான். ஏழு மணிக்குத் தன் வீட்டைப் பூட்டிக்கொண்டு முத்து படியிறங்கியதைப் பார்த்த அவன் அங்கேயே சற்றுத் தாமதித்தான்.

இரண்டேநிமிடங்களில் அக்கடையைக் கடந்த முத்து, கடைக்காரரை நோக்கி, “வணக்கம், தலைவரே!” என்று சொல்லிவிட்டு நடக்கலானான். மெல்ல எழுந்த ராமரத்தினம் அவனைப் பின்தொடர்ந்துபோனான்.

அவன்ஏறிய பேருந்தில் தானும் ஏறி அவன் இறங்கிய இடத்தில் அவனும் இறங்கி மீண்டும் அவனைப்பின்பற்றினான். அவன் இரும்புச் சாமான்கள் விற்கும் ஒரு பெரிய விற்பனை நிலையத்துள்நுழைந்ததைக் கண்டான். கட்டடத்துள் அவன் சென்றதைப் பார்த்துவிட்டு ராமரத்தினம் அதன்எதிரிலேயே நின்று கொண்டான். சில நொடிகளுக்குப் பிறகு காக்கி சீருடையில் வெளியே வந்தமுத்து அதன் பெரிய வாசல் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். அங்கேசீருடியில் இருந்த மற்றவன் தலை யசைத்து இவனிடம் விடை பெற்றான். முத்து காவல்காரன்என்பது ராமரத்தினத்துக்கு விளங்கிற்று. காவலாளியாக இருக்கும் அவன் சில நாள்களுக்குஇரவு நேரப் பணியில் இருப்பான் என்பதால் அந்த நாள்களை எப்படியாவது கண்டுபிடிக்கநினைத்தான். அதை மட்டும் தெரிந்து கொண்டு விட்டால் தன் திட்டத்தை எந்த இடைஞ்சலும்இல்லாமல் தன்னால் செயல்படுத்த முடியும் என்று நம்பினான். பின்னர், ஓட்டலுக்குப்பயணப்பட்டான்.

அன்றுபிற்பகல் அவனது சாப்பாட்டு ஓய்வு நேரத்தில் வெளியே போய் அந்த இரும்புக் கம்பெனியின்தொலைப்பேசி இலக்கத்தைக் கண்டுபிடித்துத் தொலை பேசினான்.

“உங்ககம்பெனியில வாட்ச்மேனா இருக்கிற முத்துவுக்கு எப்பங்க நைட் ட்யூட்டி?”

“நீங்கயாரு பேசுறது?”

“அவரோடதோஸ்துங்க. நானும் ஒரு கம்பெனியில வாட்ச்மேனா யிருக்கேன். முத்துவுக்கு நைட்ட்யூட்டி இருக்கிறப்பதான் நான் அவன் வீட்டுக்குப் போய்ப் பேச முடியும். அதான்கேக்குறேங்க….”

“இருங்க.செக்‌ஷன்லே கேட்டுச் சொல்றேன்….நாளையிலேர்ந்து பதினஞ்சு நாளுக்கு அவருக்கு நைட்ட்யூட்டிங்க.”

“தேங்க்ஸ்ங்க.”

… அன்று மாலைக்கு மேல் வழக்கம் போல் ராமரத்தினம் சேதுரத்தினத்தைக் கடற்கரையில்சந்தித்தான். முத்துவைப்பற்றித் தான் சேகரித்த தகவலை அவன் சேதுரத்தினத்திடம்தெரிவித்தான்.

“நைட்ட்யூட்டியில அவனிருக்கிறப்ப நாலு சாத்துச் சாத்துறதுதான் சுலபம்.காம்பவுண்டுக்குள்ள நிறைய இரும்பு சாமான்களைப் போட்டு வெச்சிருக்காங்க. அதனாலபில்டிங்குக்கு வெளியே வாசல் கேட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கூண்டுலதான் அவன்இருப்பான். அதுக்குக் கதவெல்லாம் இல்லே. அதனால நடு ராத்திரிக்கு மேல போய் சுவர்ஏறிக் குதிச்சு நல்லா அடிச்சு நொறுக்கிடலாம்…”

“செஞ்சுடலாம், ராமு…. உனக்கு நைட் ட்யூட்டின்னு சொல்லிட்டு நீ எங்க வீட்டுக்கு வந்துடு.. இந்தாஎன் அட்ரெஸ்… என் ஃப்ரண்டு கிட்டேருந்து அவனோட பைக்கை இரவல் வாங்கிடறேன் என்ஒய்ஃப் நான் பைக் வெச்சுக்ககூடாதுன்னுட்டா. அதான். ராத்திரி பதினொரு மணிக்கு மேலரெண்டு பேருமா அதுல கிளம்பி வந்துடலாம்…”

“என்னாலஉங்களுக்குத் தொந்தரவு.”

“அதெல்லாம்ஒண்ணுமில்லே. என்ன, கொஞ்சம் ஜாக்கிரதையாச் செய்யணும்…”

“கையிலதடி கிடி ஏதவது எடுத்துண்டு போகணுமா, சேது சார்?”

“கண்டிப்பா.வெறுங்கையால அவனை அடிச்சா நம்ம கைதான் நோகும். தவிர அவன் வாட்ச்மேனாச்சே. கையிலஅவன் நிச்சயம் தடி வெச்சிருப்பான். அதனால கூர்ககா வெச்சுக்கிற தடி மாதிரி ஆளுக்குஒண்ணு வாங்கிடலாம். தலையில மட்டும் அடிச்சுடக் கூடாது…”

“ஆமாமா.”

“இன்னொருமுக்கியமான விஷயம் இருக்கு… அவன் கிட்ட பவர்ஃபுல் டார்ச் லைட் இருக்கும்.வாட்ச்மேன் இல்லையா? அதனால காம்பவுண்டுக்குள்ள ஓசைப்படாம குதிச்சதும் முதல்ல அதைஅப்புறப்படுத்தணும்.”

“நீங்கநல்லா யோசிக்கிறீங்க, சேது சார். …நாமளும் ஆளுக்கு ஒரு டார்ச்சை ஞாபகமாஎடுத்துக்கணும். இல்லையா?”

“கண்டிப்பா.”

….. அடுத்த நாள் இரவு ஒரு மணிக்கு இருவரும் முத்துவின் அலுவலகத்தைச் சென்றடைந்தார்கள்.பைக்கை அமைதிப் படுத்திவிட்டுச் சுற்றுச் சுவரின் பக்கவாட்டுச் சுவரில் மெல்ல ஏறிஇருவரும் ஓசை யின்றி உள்ளே குதித்தார்கள். முத்து தனது நாற்காலியில் உட்கார்ந்துஅதன் முதுகில் தலையைச் சரித்து உறங்கிக் கொண்டிருந்தான்.

ஏற்கெனவேதிட்டமிட்டபடி ராமரத்தினம் பின்புறத்தில் சென்று தான் எடுத்து வந்திருந்த துணியால்முத்துவின் கண்களை முதலில் கட்டினான். ராமரத்தினம் அவன் கைகளைப்பிடித்துக்கொண்டான். பின் அவன் அவனது வாயைக் கட்டினான். முத்து ஓசை எழுப்ப முயன்றுதோற்றுப் போனான். அதன் பின் கண்களையும் வாயையும் கட்டிய துணிகளின் முனைகளை இருவரும்இறுக்கி முடிச்சுப் போட்டார்கள். பிறகு சரமாரியாக அவனைத் தாங்கள் கொண்டுவந்திருந்ததடிகளால் அடித்து நொறுக்கினார்கள். அவனது மின் கைவிளக்கு சற்றுத் தொலைவில் ஒருகுட்டை மேசை மீது இருந்தது. ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர், முத்து முனகல்களுடன்சாய்ந்து விழுந்தான். அதன் பிறகு இருவரும் வெளியேறி பைக்கில் தாவி ஏறிப்பறந்தார்கள்.

இதுஒரு புதிய, சற்றும் எதிர்பாராத செயலானதால், பைக்கை ஓட்டிச்சென்றசேதுரத்தினத்துக்கும் சரி, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ராமரத்தினத்துக்கும்சரி, படபடப்பாகவும், சற்றே திகிலாகவும் இருந்தது. வழியில் ரோந்துப் போலீசார் எவரும்தென்படாததில் நிம்மதியாகவும் இருந்தது.

ஒருவழியாக வந்து சேர்ந்து, பைக்கைப் பூட்டி வாசலில் நிறுத்தி விட்டு, வீட்டுக்குள்நுழைந்து கதவைச் சாத்திக்கொள்ளும் வரை அவர்கள் தங்கள் இயல்பில் இல்லை.

பின்னர்இருவருமே சொல்லி வைத்துக்கொண்டாற் போல் பொத்தென்று கட்டிலில் விழாத குறையாகஉட்கார்ந்து போனார்கள்.

சேதுரத்தினம், “காப்பி குடிக்கலாமா, ராமு?” என்றான்.

“இந்தநேரத்துலயா! மணி ரெண்டாகப் போறது, சேது சார்!”

“அதனாலஎன்ன? கொஞ்சம் தெம்பா யிருக்கும்…” என்ற அவன் சமையற்கட்டுக்குப் போய் அடுப்பைப்பற்ற வைத்துப் பாலைக் காய்ச்சி, அதில் பொடி கலந்து இரண்டே நிமிடங்களில் நுரைததும்பிய காப்பியை இரண்டு கண்ணாடிக் கோப்பைகளில் எடுத்து வந்து ஒன்றைத் தான்வைத்துக்கொண்டு மற்றதை ராமரத்தினத்திடம் நீட்டினான். இருவரும் மவுனமாய் அதைப்பருகிவிட்டுத் தொலைக்காட்சி விளம்பரப் பாணியில் திருப்திப் புன்னகையைப்பரிமாறிக்கொண்டார்கள்.

“காப்பிநல்லா இருந்தது, சேது சார்!.”

“சரி, வா. கொஞ்ச நேரம் படுத்துக்கலாம்.”

“நான்நாளைக்கு லேட்டா ஓட்டலுக்குப் போலாம்னு இருக்கேன், சேது சார். முதலாளியோட மகன்ஆறுக்கெல்லாம் வந்துடுவார். நான் வழியிலே எங்கேருந்தாவது ஃபோன் பண்ணிப்பெர்மிஷனுக்குச் சொல்லிடறேன்,” என்ற ராமரத்தினம் இரண்டு கண்ணாடிக் கோப்பைகளையும்கழுவி வைத்தான். சேதுரத்தினம் கட்டில்கள் மீதிருந்த விரிப்புகளைச் சரி செய்தான்.பின்னர் இருவரும் படுத்துக்கொண்டார்கள்.

“இதுநமக்குப் புது அனுபவம், சேதுசார்.”

“இல்லையாபின்னே? நாளைக்கு நிச்சயமா அவன் ஹாஸ்பிடல்லே போய்ப் படுத்துக்குவான்.”

“படுத்துக்கட்டும், ராஸ்கல்… நான் அடிச்சிருக்கிற அடியிலே இனி அவனால் எந்தப் பொண்ணு கிட்டயும் தப்பாநடந்துக்க முடியாது…”

“நீஅடிச்ச அடிகளை நான் கவனிச்சேன். ஒரு அண்ணனோட ஆத்திரம் அதுலே தெரிஞ்சுது… சரி..தூங்க முயற்சி பண்ணலாம்…”

“குட்நைட்.”

“குட்மார்னிங்னு சொல்லு, ராமு. இப்ப மணி ரெண்டு!”

“ஆமாமா.குட் மார்னிங், சேது சார்.”

அதன்பிறகு இருவரும் சிறிதே நேரத்தில் கண்ணயர்ந்தார்கள்….

(தொடரும் )

Series Navigationசின்ன சமாச்சாரம்பிஏகிருஷ்ணனின் ”மேற்கத்தியஓவியங்கள்”- புத்தகமதிப்புரை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *