(1819-1892)
ஆதாமின் பிள்ளைகள் – 3
(Song of the Open Road)
(திறந்த பாதைப் பாட்டு -3)
விரியும் அண்டம்
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
விரிந்து கொண்டு போகுது அண்டம்
வலப்புறமும், இடப்புறமும்
உயிர்ப்புடன் உள்ளது முழுத் தோற்றம்,
ஓவ்வோர் அங்கமும் அதன்
உன்னத ஒளியுடன் !
தாவிப் பாயுது இசைமயம்
ஏற்புடைத் தளங்களில் !
தடைப் படுகிறது
விரும்பப் படாத இடங்களில் !
ஊர்த்தெரு வீதிகளில்
பூரிப்புக் கூச்சல்கள் !
புதுமை யூட்டும் உணர்ச்சிகள் !
பெரு வீதியில் நடக்கும் என்னை
கடக்காதே என்று நீ
தடுப்பாயா ?
துணிந்து செல்லாதே என்று
என்னை மறிப்பாயா ?,
உன்னை விட்டு அகன்றால், நான்
பாதை தவறுவேன் என்று
போதிப் பாயா ?
நான் முன்பே தயா ரென்று
நவில்வாயா ?
எதிர்ப் பில்லை எனக்கு,
மறுப்பில்லை
என்றும் என்னைப்
பின்பற்றிக் கொள்வாயா ?
பொதுப் பாதைகளே !
புறமுது காகப் புகல்வேன் :
பாதை விட்டுச் செல்ல
பயப்படேன்,
உன்மேல் நான்
காதல் கொண்டுள்ள தால் !
என்னை விட நீ
உன்னத மாய் என்னைப் பற்றி
உரைத்திட முடிவதால்.
என் கவிதைக்கும் மேலாய்
நீ எனக்கு
நெருக்க மானவன் !
தீவிரப் புரட்சிகள் யாவும்
திறந்த வெளியில் தான் பிறந்தவை !
சுதந்திர கீதங்களும்
உதித்தன அப்படித் தான் !
இப்படியே நான்
இங்கு நின்று
ஒப்பற்ற விந்தைகள்
புரியலாம் !
தெருவில் சந்திப்ப தெவராயினும்
விரும்புவேன் அவரை !
பார்ப்பவர் எவராயினும்
நேசிப்ப ரென்னை !
யாரை நான் வீதியில் நோக்கினும்
பேருவகை அடைதல் வேண்டும் !
இதுதான் நான் சிந்திப்பது.
+++++++++++++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
- Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/Walt_Whitman
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 20
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது
- கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது
- பாவண்ணன் கவிதைகள்
- ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்
- கடற் குருகுகள்
- இப்போது
- கவிதைகள்- கு.அழகர்சாமி
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- பேரிரைச்சல்
- ஆனந்த் பவன் [நாடகம்] காட்சி-4
- மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014 நாகரத்தினம் கிருஷ்ணா
- வாழ்க்கை ஒரு வானவில் – 19
- மனம்
- தெலுங்குச்சிறுகதைகள்—-ஓர் அறிமுகம்
- இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை
- தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)
- குரல்
- பேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…
- காரணங்கள் புனிதமானவை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 91
- பல்லடுக்குப் பிரபஞ்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி இருப்பதற்கு மூலாதரமான ஐந்து கோட்பாடுகள்
- தினம் என் பயணங்கள் -32 குடிபோதைக் கட்டுப்பாடு
- தொடுவானம் 32. மனதோடு கலந்த மண் வாசனை
- சிறுகதை பயிற்சி பட்டறை – 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு)