சிறுகதை பயிற்சி பட்டறை – 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு)

This entry is part 26 of 26 in the series 7 செப்டம்பர் 2014

முன்பதிவுக்கு: 9840698236 நண்பர்களே, எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் திருவண்ணாமலையில் உள்ள எழுத்தாளர் பவா செல்லத்துரையின் தோட்டத்தில் சிறுகதை பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம். தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து இந்த சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்தவிருக்கிறது. சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்: […]

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 20

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

      மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்   படங்கள் :   ​இணைக்கப்பட்டுள்ளன.           ​+++++++++++++++​  

செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail: Malar.sethu@gmail.com கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள், குங்குமம், பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது. பெண்கள் அணியும் புறப்பொருள்கள். கற்புடைய பெண்கள் அவற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது. ஆனால்…. கூந்தலோ, பிறக்கும்போதே ​பெண்ணுடன் சேர்ந்தே பிறந்து, அவள் வளரும்போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து…. அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து மறையும் தனிச் சிறப்பு […]

பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

    நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் …….எனக்குப் புரிகிறது   நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன …….எனக்குப் புரிகிறது   மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் …….எனக்குப் புரிகிறது   கடைக்காரர் சில்லரை தருகிறார் சீண்டுகின்றன விரல்கள் …….எனக்குப் புரிகிறது   எடிஎம்மில் எனக்கு முன்னால் நிற்பவர் வழிவிட்டு வழிகிறார் …….எனக்குப் புரிகிறது   ரயிலில் இடம்விட்டு எழுகிறார் இடிப்பதுபோல் நிற்கிறார் …….எனக்குப் புரிகிறது   நாற்பதைத் தாண்டியவள் நான் எனக்கே […]

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி 07.09.2014 ஞாயிறு காலை மரணமடைந்துவிட்டார். புதுக்கோட்டைக்காரர். வயது 94.அவரின் மகளார் திருமதி உஷா பஞ்சாபிகேசன் தொலைபேசியில் இது விஷயம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று இரவு ஒன்பது மணிக்கு சுகியை தாம்பரம் ஏ ஜி மருத்துவமனையில் சந்தித்தேன். காகிதப்பொட்டலம் போல் படுக்கையில் கிடந்தார். ட்ரிப்ஸ் சொட்டு சொட்டாக சென்று கொண்டிருந்தது. என்னோடு மெதுவாகப்பேசினார். தனது பேரனின் தள்ளிப்போன திருமணம் மீண்டும் 29.09.2014 நடைபெற வேண்டும். தன் இறப்பு அதுவரை நிகழாது தள்ளிப்போகவேண்டுமே எனக்கவலையோடு இருந்தேன் […]

பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

    அதிகாலையின் அமைதியில்   குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக் கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூ மூட்டைகள் பாலைச் சூடாக்க அடுப்பைப் பற்றவைக்கிறார் தள்ளுவண்டிக்காரர் திருட்டு ரயிலேறி பிழைப்புக்காக நகருக்குள் வந்தவன் இருட்டைக் கண்டு அஞ்சியபடி நடுக்கத்தோடு நிலையத்துக்குள் வருகிறான் ஆற்றின் மடியில் ஊற்றெடுப்பதைப்போல ஒரே சமயத்தில் அவன் நெஞ்சில் சுரக்கிறது நம்பிக்கையும் அச்சமும் மாற்றுடைகள் […]

ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

ஜார்ஜ் புஷ்ஷின் வெளியுறவுகொள்கையை கடுமையாக விமர்சித்து ஆட்சிக்கு வந்தார் பராக் ஒபாமா. இராக் யுத்தம், க்வாண்டாமானோ சிறை, வாரண்ட் இல்லாமல் ஒட்டுகேட்பது, மனித உரிமைகள் மீறப்படுவது என்பதில் புஷ்ஷை கடுமையாக விமர்சித்தார் ஒபாமா. இது ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு மிக பிடித்துபோனதால் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ஒபாமாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது. காந்திக்கு மறுக்கபட்ட நோபல் பரிசு, மார்ட்டின் லூதர் கிங்குக்கும் மறுக்கபட்ட நோபல் பரிசு, நெல்சன் மண்டேலா மாதிரி சாதனையாளருக்கு வழங்கபட்ட நோபல் பரிசை […]

கடற் குருகுகள்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

வெள்ளித்திவலைகளை தின்னத் திரியும் கடற் குருகுகளே! கொஞ்சம் உங்கள் பசியலைகளின் படுதாக்களை சுருட்டி வைத்து விட்டு அந்த வெள்ளிக்கொலுசுகளில் கேட்கும் ஏக்கத்தை உற்றுக்கேளுங்கள். பசிபிக் மங்கையின் பில்லியன் ஆண்டுக்கனவின் குரல் இது. நீர்ப்பிழம்புகளின் பிரளயங்களை நெளிந்து தாண்டிய‌ மானிடப்பரிணாமம் கொண்டுவந்த சேதி என்ன? ஓ! பறவைகளே கூரிய அலகுகள் எனும் கேள்விகள் கொண்டு கொத்தி கொத்தி என்ன தேடுகிறீர்கள்? இந்த மானிடம் வெளிச்சமா? வெளிச்சம் மறைக்கும் நிழலா? நிழலில் ஒதுங்கத்தான் மனிதன் கடவுளைக் கண்டெடுத்தான். மனித வெளிச்சத்தில் […]

இப்போது

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

  1 எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப் பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்!   எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை அத்தனை அன்பாய் சிரிக்கிறது. பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன். உலக உருண்டை கண்டுவிடுமோ அதன் வாய்க்குள்!   2. தொலைக்காட்சிப்பெட்டிக்குள் அனல்பறக்கும் விவாதம். ஒரு குரலின் தோளில் தொத்தியேறுகிறது இன்னொரு குரல். தன் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு உதறிவிடப்பார்த்தும் முடியவில்லை முதற் குரலால். அதற்குள் மூன்றாவது இரண்டாவதன் கால்களைக் கீழிருந்து இழுக்கத் தொடங்குகிறது. எங்கிருந்தோ கொசு […]

கவிதைகள்- கு.அழகர்சாமி

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

    (1) சிறகுகளைக் கேட்கும் நான்   எப்படி கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி மேகமாகி விடுகிறாய்?   எப்படி குன்றைக் கடக்கும் போது குன்றின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறாய்?   எப்படி ஆகாயத்தின் முடிவில்லாக் கனவின் கதவுகளைத் திறந்து முடிவில் ஒன்றுமில்லையென்கிறாய்?   எப்படி சித்தம் போக்கில் திரிந்து வெட்ட வெளியில் கற்ற ஞானத்தைக் காற்றின் பாடலாய் எழுதுகிறாய்?   எப்படி கோடுகளிழுக்காமல் பகலெல்லாம் நீ பறந்து […]