மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்

author
3
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

Devaneya_Pavanar_Stamp 

ரா. பிரேம்குமார்

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும்

ஒப்பிலக்கியப் பள்ளி

தமிழ்ப்பல்கலைக் கழகம்

தஞ்சாவு+ர்-10

 

விலங்கினின்று மாந்தனை வேறுபிரிக்கும் சில கூறுபாடுகளில் தலையாயது மொழி. கல்லாத ஒருவனென்று கற்றவனை வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே. தெளிவான மொழி தெளிவான எண்ணங்களின் வெளிப்பாடு. நன்றாக எண்ணத் தெரிந்தவன் நல்ல மொழியைப் பயன்படுத்துகின்றான். இம்மொழியைத் தனது புனைபெயராகக் கொண்ட மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் தமிழியற் பணிகளும் எண்ணற்றவை. பாவாணரின் தமிழாக்கப் பணியினை இன்றைய தலைமுறையினர் அறியும் நோக்கில் அவர் நமக்கு முன்மாதிரியாகத் தமிழியக்கமாகத் திகழ்ந்தவற்றை இவண் அறியலாம்.

இளமையும் கல்வியும்

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரநயினார் கோயில் எனும் சிற்றூரில் பிறந்தார். ஞானமுத்து, பரிG+ரணம் இவர்களின் மகனாக 07.02.1902 அன்று பாவாணர் பிறந்தார். தொடக்கக் கல்வியை வடஆற்காடு மாவட்டம் ஆம்G+ர் மிசௌரி நல்லஞ்சல் லுத்தர் நடுநிலைப்பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் திருநெல்வேலி பாளையங்கோட்டைத் திருச்சபையினரின் பள்ளியில் பயின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதம் திருநெல்வேலி   தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் பட்டங்களைப் பெற்றார். 1953-ல் சென்னைப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கற்பித்தல் பணியோடு கற்றல் ஆராய்தல் நு}லாக்கம் தனித்தமிழ் இயக்கம் எனப் பல பணிகளை இறுதி மூச்சு வரை மேற்கொண்டார்.

தமிழ்க் கழகம்

தமிழைத் தூயதாக வழங்கவும் உலகப் பொது மொழியாக வளர்த்தெடுக்கவும் பாவாணரின் நெடிய குறிக்கோள்களை வென்றெடுக்கப் புதிய இயக்கம் தேவையெனப் பாவாணர் பற்றாளர்கள் கருதினார்கள். 06.10.1968 அன்று பாவாணரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இக்கழகத்தின் செய்திகளைத் தாங்கிய “முதல் மொழி” என்னும் இதழ் வெளிவந்தது. இவ்வமைப்பின் சார்பில் 1969-ல் பறம்புக்குடி 1972-ல் தஞ்சையிலும் மாநில மநாடுகள் நடைபெற்றன. பாவாணரின் குழந்தை உள்ளமும் ஓய்விலா ஆராய்ச்சியும் இவ்வமைப்பைத் தொடர்ந்து கொண்டு செல்ல இயலவில்லை.

தமிழ் வளர்ச்சி

தமிழ் வளர்ச்சி பற்றிய சிந்தனையில் பாவாணர் தமிழர்களைப் பார்த்துக் கடுஞ்சினம் கொண்டார். செந்தமிழைக் காக்கவும் தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயர்வான் என்று கருதினார்.

” தமிழுயரத் தாழ்ந்தான் தமிழன் – அவனே

தமிழுயரத் தானுயர்வான் தான்”

என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாவாணர்

”அடிமைப் பட்டும் மிடிமைப் பட்டும்

அஃறிணை யாயினிர் அனைத்தும் இழந்தீர்

எஞ்சியிருப்பது செஞ்சொல் தமிழே

அதனையேனும் அழியாது காப்பீர்”

என்று கடுங்குரல் கொடுத்தார்.

எங்கும் தமிழ்

பாவாணர் தமிழைத் துறைதோறும் ஆட்சி மொழியாக்க அறிவுறுத்தியவர். தமிழ் நாட்டில் ஆரியத்தை அகற்றித் தமிழை அரியணை ஏற்றக் குரல் கொடுத்ததை

“இது தமிழகமே இதில் காலைத் தமிழே

ஆரிய மென்னும் G+ரிய மொழியை

அகற்றித் தமிழை அரியணை ஏற்றுவீர்.”

என்று குறிப்பிடுவதால் அறியலாம். மேலும் திருக்கோயில் வழிபாட்டில் திருமண நிகழ்வுகளிலும் தமிழே இடம் பெற வேண்டுமெனக்

“கோயில் வழிபாடும் கொண்டாடும் மனமும்

வாயில் மொழி தமிழே வழங்குதல் வேண்டும்”

என்று தமிழை எங்கும் நிலைநாட்டுதல் வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

சாதியற்ற சமுதாயம்

பாவாணர் சாதியை மறந்து தமிழனாய் இணைந்து வாழ அழைத்தவர். மறைமலையடிகள் மகன் மறை. திருநாவுக்கரசு மறைமலையடிகள் வரலாற்றில் பாவாணரை அரிசன் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தார். இதையறிந்த பாவாணர், தம் மடல்வழி மடைத் திருநாவுக்கரசு! நான் அரிசனுமல்லேன் அரசனுமல்லேன் குலமற்ற தமிழன் என்று எச்சரித்து மடல் எழுதினார். மேலும் பாவாணர் (தமிழரெல்லாம் ஓரினமென்று வரலாறு, மொழிநூல், மாந்த நூல் ஆகிய மூன்றும் ஒருங்கே முழங்குகின்றன. வேற்றுமைகளை எல்லாம் விலக்கித் தமிழரையெல்லாம் ஒன்றுபடுத்தி மீண்டும் ஒரு நாட்டினமாக(Nations) அமைப்பதே தக்கதாம்.)1 என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழருள் உயர்சாதியென்று வேறுபாடு காட்டுவோரைப் பார்த்துத்

“தாழ்த்தப்பட்ட தம்மினத்தோரை

உயர்த்தப் பெற்றோர் உயர்த்தல் கடனே”

என்று வேண்டினார். பாவாணர் சாதியை மறந்து தமிழராய் வாழ அறைகூவல் விட்ட அறிஞராய்த் திகழ்ந்ததை இச்சான்றுகளின் வழி அறியலாம் .

தமிழர் ஆட்சி

சாதியற்ற தமிழரை ஒருங்கிணைக்க விரும்பிய பாவாணர் தமிழர் நலம் மேவும் கட்சிகளையும் ஒன்றிணைய வேண்டினார்.

“தமிழ்நாட்டுக்குத் தூய்மையான ஆட்சி மட்டுமின்றி வடமொழியையும் இந்தியையும் எதிர்க்க வல்லமையுள்ள ஆட்சியும் வேண்டும். ஆதலால் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் விரைந்து இணைந்துவிடல் வேண்டும்.”2

என்று இவ்விரு கட்சித் தலைவர்களுக்கும் தனித்தமிழியக்கத் தோழர்களுக்கும் மடலிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியம் ஒருகுடை நிழலில் உருவாக வேண்டும் என்ற கருத்தினைச்

“சீரிய மொழிநூல் செம்மையின் உணர்ந்தே

ஓரினமாகி உலகத் துயர்க

பசியும் பிணியும் பசையும் நீங்கி

இருதிற உடைமை ஆட்சியும்

ஒருகுடை நீழல் ஓங்குக உலகே”

என்று குறிப்பிட்டுள்ளவாறு அறியலாம்.

மேலும் பாவாணர் உலக அரசியலில் பொதுவுடைமை அரசு உருவாகும் என்ற கருத்தினராய்

“எதிர்காலத்தில் தமிழ்நாடும் இந்தியாவும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியைத்தான் மேற்கொள்ளும். அது வருமுன் நாமே வழிகாட்டித் தமிழை நிலைப்படுத்திவிட வேண்டும். பிந்தினால் ஒன்றும் இயலாது”

என்று பொதுவுடைமைச் சிந்தனையைக் கூறியுள்ளார்.

குறிக்கோள்

பாவாணரின் அன்பிற்குட்பட்ட சேலம் பி.மு. சின்னாண்டார் அவர்களுக்கு 3.2.71 அன்று எழுதிய மடலில் தான் யார்? என்ற கேள்வியை எழுப்பி விடையிறுக்கையில்

“திருவள்ளுவர் பிராமணர் ஏமாற்றை வெளிப்படுத்தத் தமிழ் நாகரிக            உயர்வை நாட்டினார். மறைமலையடிகள் தமிழ் தனிமொழியென்று காட்டினார். பெரியார் கல்லாத் தமிழரிடைத் தன்மான உணர்ச்சியை ஊட்டினார். நான் தமிழே திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்று நாட்டிப் பிராமணீயம் பேயைத் தமிழ் நாட்டினின்று ஓட்டுவேன்”.

என்று தன் குறிக்கோளைத் தெளிவுபடுத்தினார்.

படைப்புகள்

வ.எண் நூற்பெயர்கள் வெளிவந்த ஆண்டு
கிறித்தவக் கீர்த்தனம் 1924
சிறுவர் பாடல் திரட்டு 1925
செந்தமிழ்க் காஞ்சி 1937
ஒப்பியன் மொழிநூல்-முதற்பகுதி 1940
இயற்றமிழ் இலக்கணம் 1940
தமிழன் எப்படிக் கெட்டான் 1941
திராவிடத்தாய் 1944
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 1949
உயர்தரக் கட்டுரை இலக்கணம் – I 1950
உயர்தரக் கட்டுரை இலக்கணம் – II 1951

மேலும் பல நூல்கள் இயற்றியுள்ளார். பாவாணர் 15.01.1981 மறைவிற்குப் பின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 1985-ல் வெளியிடப்பட்டது. பாவாணரின் தனிப்பாடல்களைத் தொகுத்துப் பாவாணர் பாடல்கள் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரனார் அவர்கள் 2001-ல் வெளியிட்டார்.

நல்லாசிரியருக்குரிய இலக்கணம் கற்றனைத்தூறும் அறிவுடையவராகத் திகழ்தலாகும். பாவாணர் வயிறுபிழைக்க ஆசிரியப் பணி கிடைத்துவிட்டது என்று எண்ணாமல் கல்லாதது உலகளவு என்ற கவலையுடன் உலக மொழிகளில் 23 மொழிகளில் பேசவும் எழுதவும் புலமை பெற்று அறிவு அங்காப்புடையவராகத் திகழ்ந்தார். இவ்வறிவுப் பின்புலத்தோடு வேர்ச்சொல்லாய்வினை முன்னெடுத்தார். இவர் மேற்கொண்ட சொல்லாராய்ச்சியும் வரலாற்றாராய்ச்சியும் வாழ்வியல் ஆராய்ச்சியும் தமிழே உலக முதன்மை உயர்தனிச் செம்மொழியென்று உலகறியச் செய்தது புலனாகிறது.

துணை நின்றவை

 1. இரா. இளங்குமரன் – பாவாணர் மடல்கள்
 2. ஞா. தேவநேயன் – தமிழர் வரலாறு
 3. இரா. மதிவாணன் – பாவாணர் ஆய்வு நெறி
Series Navigation
author

Similar Posts

3 Comments

 1. Avatar
  Mrs.K.Chandramohan says:

  kala
  Sri Lanka.

  This article has written in a research viwe and its very usful to the research students and I wish all the best for Premkumar and I requst him to do such a research in future also.kala

 2. Avatar
  IIM Ganapathi Raman says:

  இது ஆஃத த டாபிக். மன்னிச்சுக்கோங்க.

  மதுரையில் அப்போலோ ஆசுபத்திரி சாலையில் இவரின் நினைவு மண்டபம் இருக்கிறது. ஏன் அங்கு கட்டினார்களென்று எனக்குத் தெரியாது. பக்கத்திலே கணேஷ் சினிமா கொட்டகை. மதுரையில் ஹிந்திப்படங்கள் அங்குதான் போடுவார்கள். படம் முடிந்து வரும் வேலையில் கொஞ்சம் எட்டிப்பார்க்கலாமே என்று உள்ளே சென்றேன். உள்ளேயிருந்த இருவர் என்னை வியப்பாகப் பார்த்தார்கள். நினைவு மண்டபம அவரின் பல போட்டோக்களையும் அவரெழுதிய நூல்கள் தொகுப்புகளையையும் கொண்டது. இந்த இருவரும் என்னப்பார்த்துக்கொண்டே இருந்தார்கள். சங்கடமாப்போயிற்று. தேவநேயப்பாவாணரைப்பற்றிச்சொன்னாலும் தெரியாத ஊரில் இப்படியும் ஒருவனா என்று வியந்தார்கள் போலும்!

  வெளிவரும்போது, அவர்கள் என்னிடம் நேராகவே எழுதுகோலை நீட்டினார்கள்; சார் விசிட்டர் புக்கில் எழுதிட்டுப்போங்க ! ஏனென்றால், நான் ஓடிவிடும் நிலையிலிருந்தேன்.

  எழுதினேன். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரைப் பற்றி எழுத எனக்கு எந்தத்தகுதியுமில்லை. எனவே நினைவகம் தூய்மையாகவும் அழகாகவும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. வாழ்க நும் தொண்டு என்று முடித்துவிட்டேன்.

  But it is sad to see that during his time as well as now, he was and is being attacked for his steadfast love of Tamil. What is his big CRIME that these attackers say? He said Tamil is the root of many languages and Sanskrit words found in Tamil do really have Tamil roots only. In other words, it is Tamil from which Sanskrit borrowed and not vice versa. No wonder, the Sanskrit lobby of Tamilnadu is against him.

  Love Hindi like I do, or Sanskrit. You won’t be hated. But to love Tamil is a big criminal act in Tamilnadu :-( They will tear your reputation to pieces !! Prof Deveneyar is suffering posthumously.

 3. Avatar
  IIM Ganapathi Raman says:

  //மறைமலையடிகள் மகன் மறை. திருநாவுக்கரசு மறைமலையடிகள் வரலாற்றில் பாவாணரை அரிசன் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தார். இதையறிந்த பாவாணர், தம் மடல்வழி மடைத் திருநாவுக்கரசு! நான் அரிசனுமல்லேன் அரசனுமல்லேன் குலமற்ற தமிழன் என்று எச்சரித்து மடல் எழுதினார்.//

  His low caste (pardon me for writing like this) is also one of the reasons why he is being hated by the upper castes of TN.

  குலமற்ற தமிழன் என்று தன்னை விவரித்துக்கொண்டது எனக்கு திருமழிசையாழ்வார் இப்பாசுரத்தை நினைவுபடுத்தியது. (அவரும்தான் திருநாவுக்கரசு பயன்படுத்திய சொல்லான‌அரிசனனே!

  குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
  நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
  புலன்கள் ஐந்தும் வென்றிலேன், பொறியிலேன், புனித! நின்
  இலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்று இலேன் எம் ஈசனே!

  ஆக, குலமற்றவன் என்றால் அரிசனன் என்றுதான் பொருள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *