ஆத்ம கீதங்கள் -3 குழந்தைகளின் கூக்குரல் .. ! [கவிதை -1]

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

குழந்தைகளின் அழுகுரல் கேட்கிறதா ?

என்னரும் சகோ தரரே !

வயதாகும் முன் துயர் மேவிடும் !

தம்தம் அன்னையர் மீதவர் பிஞ்சுத்

தலைகள் சாய்ந்துள !

சிறுவரின் கண்ணீர்ப் பொழிவுகள், ஆயினும்

நிறுத்தம் ஆக வில்லை !

குட்டி ஆடுகள் கதறு கின்றன

பசும்புல் வெளிகளில்;

பறவைக் குஞ்சுகள் கிறீச்சொலி எழுப்பும்

மரக் கூடுகளில்;

இளமான்கள் விளையாடும் தம்தம்

நிழல்க ளோடு !

மொட்டிளம் பூக்கள் மோதிச் செல்லும்

மேற்திசை நோக்கி !

என்னரும் சகோதரரே ! ஆனால்

சின்னஞ் சிறு குழந்தைகள்

கதறிக் கதறி அழுதிடும்

கசப்போடு !

சுதந்திர நாட்டிலே

மதலைகள் அழுதிடும் மற்றவர்

மகிழ்ந்து

விளையாடும் போது !

இளங் குழந்தைகள் வருந்திக்

கண்ணீர் சிந்தி துயர் அடைவது

ஏனென்று கேட்கிறாயா ?

அடுத்த நாளுக்குக் கிழவர் அழுவார்,

நெடுநாள் முன்பு

இழந்து விட்டதற் கேங்கி !

கானகத்தில் முதிய மரங்கள்

காயும் இலைகளின்றி !

கடந்த காலம் முடியும் பனியில்

உறைந்து போய்.

பழைய புண் மிகக் கடுப்பாய்

வலிக்குது !

பழைய நம்பிக்கை துறப்பது

மிகக் கடினம் ! ஆனால்

என்னரும் சகோதரரே !

சின்னஞ் சிறு பிள்ளைகள் தேம்பி

நிற்பது ஏனென்று நீ

கேட்கிறாயா ?

மகிழ்ந்திடும் நம் தந்தையர் நாட்டில்

தாயார் தம் மார்புகளில்

கூக்குர லோடு

சேய்கள் சாய்ந்து கிடப்பதா ?

[தொடரும்]

++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/

2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

3. http://www.online-literature.com/elizabeth-browning/

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *